டிசம்பர் 30 ராசி பலன்

மேஷம்*
டிசம்பர் 30, 2020
மார்கழி 15 – புதன்

முயற்சிக்கேற்ப பொருளாதார உயர்வு உண்டாகும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய செயல்பாடுகளில் ஆர்வமுடனும், புத்துணர்ச்சியுடனும் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : உயர்வு உண்டாகும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 30, 2020
மார்கழி 15 – புதன்

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையாக செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 30, 2020
மார்கழி 15 – புதன்

ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படும். நிதானமுடன் செயல்படுவதன் மூலம் இலாபம் உண்டாகும். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : விழிப்புணர்வு வேண்டும்.
திருவாதிரை : இலாபம் உண்டாகும்.
புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


🕉️கடகம்
டிசம்பர் 30, 2020
மார்கழி 15 – புதன்

சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியுலக அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பாராத இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : இலாபகரமான நாள்.


🕉️சிம்மம்
டிசம்பர் 30, 2020
மார்கழி 15 – புதன்

தொழில் தொடர்பான உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவு கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : இன்னல்கள் குறையும்.


🕉️கன்னி
டிசம்பர் 30, 2020
மார்கழி 15 – புதன்

பணிபுரியும் இடத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் மீதான நன்மதிப்பு மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : அங்கீகாரம் கிடைக்கும்.
அஸ்தம் : நன்மதிப்பு மேம்படும்.
சித்திரை : காலதாமதங்கள் அகலும்.


🕉️துலாம்
டிசம்பர் 30, 2020
மார்கழி 15 – புதன்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். நிர்வாகம் சார்ந்த பணிகளில் மாற்றங்களை செய்யும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். கடன் சார்ந்த விவகாரங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சுவாதி : காரியசித்தி உண்டாகும்.
விசாகம் : ஆலோசனைகள் வேண்டும்.


🕉️விருச்சகம்
டிசம்பர் 30, 2020
மார்கழி 15 – புதன்

கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. சந்தேக எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க இயலும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : வாக்குவாதங்கள் ஏற்படும்.
அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
கேட்டை : பொறுமை வேண்டும்.


🕉️தனுசு
டிசம்பர் 30, 2020
மார்கழி 15 – புதன்

மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் வெளியூர் பயணங்கள் மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️மகரம்
டிசம்பர் 30, 2020
மார்கழி 15 – புதன்

பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கோப்புகளில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவோணம் : ஆதாயம் ஏற்படும்.
அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.


🕉️கும்பம்
டிசம்பர் 30, 2020
மார்கழி 15 – புதன்

புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகம் மற்றும் இறைவழிபாடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனை சார்ந்த செயல்பாடுகளில் இலாபம் கிடைக்கும். உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.


🕉️மீனம்
டிசம்பர் 30, 2020
மார்கழி 15 – புதன்
திட்டமிட்ட முயற்சிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வீடு கட்டுவது மற்றும் வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். பெரியவர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் இலாபகரமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.