தனூர் ராசி (மூலம், பூராடம், உத்திராடம் 1 பாதம் முடிய) :
ராசிநாதன் ராசியில், சனிபகவான் 2ம் இடம் செல்கிறார், அங்கு புதன் சூரியன் நன்மை செய்கின்றனர். பணப்பிரச்சனைகள் அனைத்தும் தீரும், அதேநேரம் ஜென்மத்தில் இருக்கும் கேது , 7ல் இருக்கும் ராகு, விரயத்தில் மாத முற்பகுதிவரை இருக்கும் செவ்வாய் என்று நல்ல பலன்களை குறைக்கும் வேலையை செய்கின்றனர். எதிலும் ஒரு எச்சரிக்கை உணர்வு தேவை, அவசரப்படுதல், வார்த்தைகளிய விடுதல் இவை துன்பத்தை தரும், பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்தவும், உத்தியோகம்/தொழில் இவற்றில் சக ஊழியரோடு அனுசரித்து செல்வது நன்மை தரும், மனம் நிம்மதியற்று இருக்கும், கேது குரு சம்பந்தம் எதிலும் ஒரு விரக்தியை கொடுக்கும், முயற்சிகளில் சோம்பல் தனத்தை அல்லது தைரியமின்மையை கொடுக்கும், எதிலும் நிதானமாக செயல்படுவது தியானப்பயிற்சிகளில் ஈடுபடுவது போன்றவை நன்மையை தரும், அவசரம் வேண்டாம். இந்த மாதம் பெரும்பாலும் சோதனைகளை அதிகம் கொடுப்பதால் பெரிய நன்மைகள் என்று ஏதுமில்லை, பெண்களால் தொந்தரவுகள் வரலாம். அக்கம்பக்கத்தவர், குடும்ப உறுப்பினர்கள் செய்யும் தொழிலில் கூட்டாளி கீழே வேலை செய்பவர், உத்தியோகத்தில் மேலதிகாரி, உடன் வேலை செய்வோர் என்று யாராக இருந்தாலும் வார்த்தைகளை நிதானித்து பேசுவது அனுசரித்து போவது இவை நன்மை தரும். இந்த மாதம் உங்களுக்கு சுமார் மாதம் எதிலும் கவனம் தேவை.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 8,9,10