தினசரி பூஜை – 15

கலஶ பூஜா:

வீட்டுப்பூஜைக்கு பஞ்சபாத்திரத்தில் இருக்கும் நீரையே பயன்படுத்தி பஞ்ச பாத்திரத்துக்கு பூஜை செய்யலாம். பெரிய பூஜைகள் என்றால் தனியாக கலசம் வைத்துக்கொள்ளலாம். பஞ்ச பாத்திரத்தில் நீரை விட்டு, சந்தனம் இட்டு, கொஞ்சம் மங்களாக்‌ஷதை சேர்த்துக்கொண்டு, வலது உள்ளங்கையால் அதை மூடிக்கொண்டு ஸ்லோகம் சொல்லவும்.

க³ங்கே³ ச யமுனே சைவ கோ³தா³வரீ ஸரஸ்வதீ |
நர்மதே³ ஸிந்து⁴ காவேரீ ஜலேஸ்மின் ஸன்னிதி⁴ம்ʼ குரு ||

கங்கை முதலான நதி தேவதைகளை பிரார்த்தித்து இந்த நீரில் இருப்பாயாக என்று வேண்டிக் கொள்கிறோம். அப்படி வந்து விட்டதும் பூஜை செய்கிறோம். பூக்களோ அல்லது மங்களாக்‌ஷதையோ…

க³ங்கா³ய நம​: யமுனாய நம​: கோ³தா³வர்யை நம​: ஸரஸ்வத்யை நம​: நர்மதா³யை நம​: ஸிந்த⁴வே நம​: காவேர்யை நம​: புஷ்பை​: பூஜயாமி

அவ்வளோதான். அடுத்த படிக்கு போகலாம். வலம்புரி ஶங்கு என்றால் தனியாக பூஜிக்கலாம். இல்லை என்றால் தேவையில்லை.

ஶங்க² பூஜா:

சூத்திரம்:
(கலஶோத³கேன ஶங்க²ம்ʼ பூரயித்வா) (கலச நீரால் சங்கை நிரப்பி) சந்தனம் இட்டு, முன் போல் கையால் மூடிக்கொண்டு,

ஸ்லோகம்:
ப்ருʼதி²வ்யாம்ʼ யானி தீர்தா²னி ஸ்தா²வராணி சராணி ச |தானி தீர்தா²னி ஸ²ங்கே²(அ)ஸ்மின் விஸ²ந்து ப்³ரஹ்மஸா²ஸனாத்

பொருள்: எந்த நீர் மண்ணில் ஓடிக்கொண்டோ நிலையாகவோ இருக்கிறதோ அவை சங்கில் ப்ரம்ஹாவின் கட்டளையால் இருக்கட்டும்.

த்வம்ʼ புரா ஸாக³ரோத்பன்னோ விஷ்ணுனா வித்⁴ருʼத​: கரே | தே³வைச்ச பூஜித​: ஸர்வை​: பாஞ்சஜன்ய நமோஸ்துதே ||

பொருள்: நீ கடலில் பிறந்தாய். விஷ்ணுவால் ஏந்தப்பட்டாய்; எல்லா தேவர்களும் உன்னை பூஜிக்கிறார்கள். பாஞ்ச ஜன்யமே உனக்கு நமஸ்காரம். ஸ்லோகம் முடிந்ததும் முன் போல் பூஜிக்கலாம். ஶங்க² முத்திரை காட்டலாம்.

சூத்திரம்:
ஶங்க² ஜலேன பூஜோபகரனானி த்³ரவ்யாணி ஆத்மானம்ʼ ச த்ரி: ப்ரோக்ஷ்ய, புன: ஶங்க²ம்ʼ பூரயித்வா…


(சங்கு நீரால் பூஜை திரவியங்களையும் தன்னையும் மும்முறை ப்ரோக்ஷித்துக்கொண்டு மீண்டும் சங்கை நீரால் நிரப்பி…)

அடுத்து….

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.