அடுத்து இன்னும் நேரம் ஒத்துக்கக்கூடியவர்களுக்காக. சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அவரவர் வசதிக்கு தகுந்தபடி.
ஷோடோபசார பூஜை.
போன முறை ஐந்து வித வழிகளில் வழிபட்டோம் இல்லையா? இப்போது 16. ஷோடச என்பது 16 ஐ குறிக்கிறது.
இந்த தொடுப்பும் பயனாகும் http://tinyurl.com/8j2foar
இவை: 1. (த்யானம்,) ஆவாஹனம், 2. ஆசனம், 3. பாத்யம், 4. அர்க்யம், 5.ஆசமனீயம், 6. ஸ்நாநம்; 7.வஸ்த்ரம், 8.உபவீதம், (ஆபரணம்) 9.கந்தம் ஆகியன சமர்பித்தல், 10. புஷ்ப அர்சனை; 11.தூபம், 12. தீபம், 13.நிவேதனம், 14.தாம்பூலம், 15. நீராஜனம், (ஸ்வர்ண புஷ்பம், மந்திர புஷ்பம்,) 16.பிரதக்ஷிண நமஸ்காரம்.
தேவை ஸ்வாமியின் பிரதிமை அல்லது அதற்கான பொருள். ஸ்வாமியின் வடிவத்தில் ப்ரதிமை இருக்கும். இவை இல்லாமல் இன்னும் சில விஷயங்களில் ஸ்வாமியை ஆவாஹணம் செய்யலாம். ஸ்படிகத்துண்டில் சூரியனை ஆவாஹணம் செய்யலாம். சோனா நதி தீரத்தில் கிடைக்கும் சிவப்பு கல்லான சோனா பத்ரத்தில் பிள்ளையாரை; ஸ்வர்ணரேகா என்னும் தங்க ore இல் அம்பாள், சாளிக்ராமத்தில் விஷ்ணு, பாணபத்ரம் என்னும் நர்மதை நதிக்கரையில் கிடைக்கும் கல்லில் சிவன் – இப்படி சிலவற்றில் தேவ ஆவாஹணம் செய்யலாம்.
- (த்யானம்,) ஆவாஹனம்: எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியை த்யானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஸ்வாமிக்கும் ஒரு த்யான ஸ்லோகம் உண்டு. அதை கற்றுக்கொண்டு அதை சொல்லி த்யானிக்க வேண்டும். அப்படி தெரியாவிட்டால் மனதால் தீவிரமாக அந்த ஸ்வாமியை நினைத்து பூஜை செய்யணும் பிரதிமையிலோ அல்லது படத்திலோ வர வேண்டும் என நினைக்க வேண்டும். இப்படி அமர்த்துவது ஆவாஹணம்.
- ஆசனம். த்யானத்தால் வந்துவிட்ட ஸ்வாமிக்கு அமர ஆசனம் தர வேண்டும்.
- பாத்யம். இது கால்களில் நீர் வார்த்தல்.
- அர்க்யம். கைகளில் நீர் வார்த்தல்.
- ஆசமனீயம். கை கால்கள் சுத்தம் செய்து கொண்டால் மூன்று முறை நீர் அருந்த வேன்டும் என்பது சாத்திரமானதால் இந்த ஆசமனத்தை சம்ர்பிக்க வேண்டும்.
- ஸ்நாநம். குளிப்பாட்ட வேண்டும். இங்கேதான் அபிஷேகம் வருகிறது. 7.வஸ்த்ரம். குளித்த பின் உடை உடுத்திவிட வேண்டும். 8.உபவீதம். முப்புரி நூலை அணிவிக்க வேண்டும். பழக்கத்தில் ஆபரணங்கள் அணிவித்தலும் உள்ளது. 9.கந்தம் அதாவது சந்தனம் தடவி விட வேண்டும்.
- புஷ்ப அர்ச்சனை. விதித்து இருப்பது 8 பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்வது மட்டுமே. ஏனோ மற்ற உபசாரங்களை பின்னுக்கு தள்ளி விட்டு இது மட்டும் பிரபலமாகி விட்டது. 108, 1008 என்றும் பெருகி விட்டது. 11.தூபம். தசாங்கம் அல்லது ஊதுவத்தியால் நறுமண புகை காட்டுதல்.
- தீபம். நெய் அல்லது எண்ணை தீபம் காட்டுதல். 13.நிவேதனம்: ஏதோ ஒன்று உண்ணும் பொருளை காட்டுவது.- உலர் திராட்சை, கற்கண்டு போன்றவை சுலபமாக பூஜை செய்ய உகந்தவையாக இருந்தாலும் நாம் உண்ணக்கூடியவற்றை இறைவனுக்கு நிவேதனம் செய்து பின் உண்ணுதலே நல்லது. சாதாரணமாக உப்பு சேர்க்காதவற்றையே நிவேதனம் செய்வர். 14.தாம்பூலம்: உணவுக்குப்பின் தாம்பூலம் எடுத்துக்கொள்வது மரபாக இருக்கிறது. இந்த நல்ல பழக்கம் விட்டுப்போய்விட்டது.
- நீராஜனம், (ஸ்வர்ண புஷ்பம், மந்திர புஷ்பம்,) அதாவது சூடம் என்னும் கர்பூரம் எரியவிட்டு அதை காட்டுதல். தங்க காசையோ, தங்கத்தால் பூவையோ சமர்பித்தலும், மந்திரங்கள் சொல்லி பூக்களை சொறிவதும் கூட இந்த இடத்தில் செய்யப்படுகிறது.
16.பிரதக்ஷிண நமஸ்காரம்: பூஜை அறை அமைப்பதை பொருத்து ஸ்வாமியை வலமாக சுற்றி வந்து கீழே விழுந்து வணங்குவது.
இன்னும் வரும்.இவற்றை மேலும் விரிவாக காணலாம்.