தினசரி ராசிபலன் செப்டம்பர் 11

🕉️மேஷம்
தினசரி ராசிபலன் செப்டம்பர் 11

ஆவணி 26 – வெள்ளி
பணி தொடர்பான செயல்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனை அபிவிருத்திக்கான சிந்தனைகள் தோன்றும். அக்கம்-பக்கத்து வீட்டாரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : அபிவிருத்தி ஏற்படும்.

கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.

🕉️ரிஷபம்
தினசரி ராசிபலன் செப்டம்பர் 11

ஆவணி 26 – வெள்ளி
குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது சிந்தித்து செயல்படவும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். உடல் சோர்வினால் செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மனம் மகிழ்வீர்கள்.
ரோகிணி : இன்னல்கள் குறையும்.

மிருகசீரிஷம் : ஆடைச்சேர்க்கை உண்டாகும்.

🕉️மிதுனம்
தினசரி ராசிபலன் செப்டம்பர் 11

ஆவணி 26 – வெள்ளி
செய்தொழிலின் மேன்மைக்காக புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் தேவையற்ற குழப்பங்கள் தோன்றும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். புதிய வாகனச்சேர்க்கை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
திருவாதிரை : குழப்பங்கள் தோன்றும்.

புனர்பூசம் : புகழ் உண்டாகும்.

🕉️கடகம்
தினசரி ராசிபலன் செப்டம்பர் 11

ஆவணி 26 – வெள்ளி
தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வெளியூர் சம்பந்தமான தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். தலைமை பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
புனர்பூசம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பூசம் : இலாபம் அதிகரிக்கும்.

ஆயில்யம் : கவனம் வேண்டும்.

🕉️சிம்மம்
செப்டம்பர் 11, 2020
ஆவணி 26 – வெள்ளி
உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய கலைகளின் மீது தனிப்பட்ட ஈர்ப்பு ஏற்படும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : குழப்பங்கள் நீங்கும்.

உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.

🕉️கன்னி
செப்டம்பர் 11, 2020
ஆவணி 26 – வெள்ளி
புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் இட்டு அதனை நிறைவேற்ற முயற்சிகளை செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நல்லதொரு சகாயம் உண்டாகும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

🕉️துலாம்
செப்டம்பர் 11, 2020
ஆவணி 26 – வெள்ளி
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சுவாதி : அறிமுகம் உண்டாகும்.

விசாகம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

🕉️விருச்சகம்
செப்டம்பர் 11, 2020
ஆவணி 26 – வெள்ளி
பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியுடனும், அனுகூலமாகவும் நடந்து கொள்ளவும். கூட்டாளிகளுக்கிடையே மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசாகம் : அமைதி வேண்டும்.
அனுஷம் : மனக்கசப்புகள் ஏற்படும்.

கேட்டை : காலதாமதம் நேரிடும்.

🕉️தனுசு
செப்டம்பர் 11, 2020
ஆவணி 26 – வெள்ளி
மனைவியின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும். நண்பர்களுடன் இணைந்து புதிய செயல்களை செய்வதன் மூலம் தனலாபம் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். மனதில் நினைத்த சில காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மூலம் : ஆதாயம் ஏற்படும்.
பூராடம் : தனலாபம் உண்டாகும்.

உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.

🕉️மகரம்
செப்டம்பர் 11, 2020
ஆவணி 26 – வெள்ளி
நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். சர்வதேச தொழில் சார்ந்த செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அமைவதற்கான சூழல் உண்டாகும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : எண்ணங்கள் ஈடேறும்.

அவிட்டம் : எச்சரிக்கை வேண்டும்.

🕉️கும்பம்
செப்டம்பர் 11, 2020
ஆவணி 26 – வெள்ளி
தொழில் சம்பந்தமான புதிய நுட்பங்களை கற்பீர்கள். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செவித்திறனில் ஏற்பட்டுள்ள உபாதைகள் குறையும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : நுட்பங்களை கற்பீர்கள்.
சதயம் : சாதகமான நாள்.

பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.

🕉️மீனம்
செப்டம்பர் 11, 2020
ஆவணி 26 – வெள்ளி
தர்க்க விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். பயணங்களால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
உத்திரட்டாதி : இலாபகரமான நாள்.
ரேவதி : உறவு மேம்படும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.