திருமண பொருத்தம் பார்க்கும்போது தோஷங்கள் பற்றி விளக்கம்

முந்தைய தொடரில் தோஷங்களை பற்றி சொல்லி இருந்தேன் ஒரு கிரஹம் 7 அல்லது 8ல் இருப்பதாலேயே தோஷத்தை செய்யாது என்று ஆனாலும் பலருக்கு புரிவதில்லை அதனால் தோஷங்கள்விரிவாக விளக்க முயற்சிக்கிறேன்.

கொஞ்சம் கவனமாக படிக்கவும்

ராகு,செவ்வாய், சனி சூரியன் இந்த நான்கு மட்டும் தான் தோஷத்தை செய்யும்.

இந்த நாலு கிரஹமும் லக்னம் , சந்திரன், சுக்ரன் இவற்றுக்கு 1,2,4,7,8,12 வீடுகளில் (ராசிகளில்) இருந்தால் தோஷம்

லக்னம் , சந்திரன், சுக்ரன் இவற்றை முதல் வீடாக கொள்ளவும்

1,2,4 நாலுவீடுகளில் மேற்படி கிரஹம் இருந்தால் 3 பாயிண்ட் தோஷம்

7ம் வீட்டில் இருந்தால் 5 பாயிண்ட் தோஷம்

8ம் வீட்டில் இருந்தால் 6 பாயிண்ட் தோஷம்

12ம் வீட்டில் இருந்தால் 1 பாயிண்ட் தோஷம்

ராகு 1 தோஷத்தை தரும்

சூரியன் 2 தோஷத்தை தரும்

சனி 3 தோஷத்தை தரும்

செவ்வாய் 4 தோஷத்தை தரும்.

ராகு 1ல் இருந்தால் 3*1= 3 தோஷம் இது போல மற்றவையும். இது லக்னத்தில் இருந்து மட்டும்

இதே சந்திரனிலிருந்து என்றால் 3-50% = 1.5 தோஷம்

சுக்ரனில் இருந்து எனில் 3*.75% =2.25 தோஷம்

கிரஹம் உச்ச வீட்டில் இருந்தால் தோஷம் 0

மூல திரிகோண வீட்டில் இருந்தால் 0.25% தோஷம் தான் (மேற்படி தோஷங்களில் 0.25% மட்டுமே)

ஆட்சியில் இருந்தால் மேற்படி தோஷங்களில் 0.50% மட்டுமே

நட்பு வீட்டில் இருந்தால் 0.75%

பகை வீட்டில் இருந்தால் 1% தோஷம்

நீசத்தில் இருந்தால் 1.25% தோஷம்

இதை மனதில் வைத்து கொள்ளுங்கள். மாங்கல்ய தோஷமும் இப்படி தான்

மாங்கல்ய தோஷம் பெண்ணுக்கு மட்டும் பார்ப்பார்கள் லக்னத்துக்கு 2ம் வீடு 8ம் வீடு பாபர்கள் சேர்க்கை பார்வை இல்லாமல் இருக்க வேண்டும் அப்படி பாபர்கள் சம்பந்தம் இருந்தால் ஹெவி தோஷம் என்கிறார்கள் இதுவுமே

அந்த பாப கிரஹ வலிமை ஷட்பலம் இருக்கும் இடம் அதற்கு உச்சமா, ஆட்சியா நட்பா பகையா, மற்றும் அந்த கிரஹம் என்ன காரகத்தை (செயலை அதாவது செவ்வாய் எனில் சகோதர காரகன் என சொல்லப்பட்டாலும் ஒவ்வொருவருக்கும் வேறு வேலையை அது செய்யும்) என்றெல்லாம் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

சர்ப தோஷம் என்பது ராகு கேது வலிமை , கால சர்ப தோஷம் என்பது எல்லா கிரஹங்களும் ராகு கேதுவுக்குள் அடங்கிவிடுவது இது துன்பத்தை தரும் என்பர்

இதுவுமே அதே கால்குலேஷன் தான்

ஷட் பலம் என்பது ஒரு கிரஹத்தின் 6 வித பலங்கள் ஆகும்

ஒரு கிரஹத்தின் ஸ்தான பலம்,கால பலம், திக்கு பலம், ஷேஷ்டாபலம், திருக் பலம், நைசர்கிக (இயற்கையான) பலம் இவை சேர்ந்தது ஷட் பலமாகும்.

ராகு, செவ்வாய், சனி, சூரியன் 7ல் அல்லது 8ல் இருக்கு இவற்றின் ஷட்பலம் 60% க்கு மேலிருந்தால் நிச்சயம் தோஷம் கிடையாது என்பது தோஷ விதிகளில் உள்ளது.

மேலே உள்ள ஜாதகத்தில் லக்னத்துக்கு 7ல் செவ்வாயும் 8ல் ராகுவும் இருக்கு

சந்திரனுக்கு 8ல் செவ்வாய் இருக்கு, சுக்ரனுக்கு 8ல் சனி இருக்கு

இங்கே ராகு உச்ச வீட்டில் இருக்கு அதனால் தோஷம் கிடையாது, ஒருவேளை இங்கு செவ்வாய் இருந்தால் ஆட்சி வீடு ½ தோஷம் ஆனாலும் செவ்வாயின் ஷட்பலம் 60% மேற்படின் சுத்தமாக தோஷம் இல்லை இப்படி மற்ற சனி, சூரியனுக்கும் பார்த்து முடிவு செய்யனும்

2, 8 வீடுகளில் ராகு கேது இருப்பதும் தோஷம் இல்லை என்பதை இதே முறையில் உறுதி செய்யலாம்.

அடுத்து புனர்ப்பு தோஷம், ஒரு ராசியில் சனி சந்திரன் சேர்க்கை இருந்தாலே இந்த தோஷம் இது திருமணத்தை மட்டுமல்ல அனைத்து விஷயங்களையும் தாமதம் செய்யும் என்று ஒரு பாடம்.

ஆனால் இந்த சனியும் சந்திரனும் 4 டிகிரிக்குள் இணைந்தால் மட்டுமே. ஒரு ராசி 30 டிகிரி சனி 6 டிகிரியில் சந்திரன் 22 டிகிரியில் இருந்தால் இந்த தோஷம் இல்லை

இது ஒருபுறம் ஒருவேளை 4 டிகிரிக்குள் இருந்தால் சந்திரன் மற்றும் சனியின் தன்மை காரகம், ஷட் பலம் கிரஹம் இருக்கும் ராசி அதிபதியின் வலு என்று அனைத்தும் பார்த்தே முடிவு செய்ய வேண்டு.

அதனால் அனைவருக்கும் அடியேன் சொல்வது நீங்களாக ஒரு முடிவுக்கு வந்து தோஷம் இருக்கு வேண்டாம் என தவிர்க்காதீர்கள் ஜோதிடர் அனைத்தும் சரிபார்த்து சொல்லட்டும் தோஷம் இருக்கு இல்லை என என்பது அடியான் அபிப்ராயம்.

அன்புடன்

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.