நூறு ஜோதிட வார்த்தைகள் தொடருக்கு என் போலிஸ் நண்பர் ராம்கி எடுத்துக் கொடுத்த வார்த்தை திரேக்காணம். அவர் ஆங்கிலத்தில் Drekkanam என்பதாகத்தான் அனுப்பியிருந்தார்.ஒரு ராசியின் 30 பாகை ( degree ) ஐ மூன்று சமமாகப் பிரித்துக் கொண்டு பலன் சொல்லுவது.
அதாவது 36 திரேக்காணங்கள் மூன்று மூன்றாக 12 சுற்று என்று பொருள் கொண்டால் புரிந்து கொள்வது சுலபம்அதாவது திரேக்காணம் என்பது ராசி மண்டலத்தினை 36 பகுதிகளாகக் கொண்டு, ஒரு திரேக்காணம் என்பது 1/36 என்பதாக பொருள் கொண்டால் இன்னமும் கொஞ்சம் சுலபமாக இருக்கும்ஒரு ராசியின் முதல் பத்து டிகிரி திரேக்காணப் பகுதிக்கு அந்த ராசியின் அதிபதியே திரேக்காணத்தில் அதிபதி இரண்டாம் பத்து டிகிரிக்கு அந்த ராசியிலிருந்து ஐந்தாமிடம் எதுவோ அந்த ராசியின் அதிபதி, மூன்றாம் பத்து டிகிரிக்கு அந்த ராசியிலிருந்து ஒன்பதாம் ராசியின் அதிபதிஅதாவது திரேக்காணமும் திரிகோணம் என சொல்லப்படும் 1, 5, 9 ம் இடங்களும் தொடர்புடையவைசர ராசிகளுக்கு 1-5-9 வது ராசிகளும்ஸ்திர ராசிகளுக்கு 9-1-5 வது ராசிகளும்உபயராசிகளுக்கு 5-1-9 வது ராசிகளும் திரேக்காண லக்கினம் என இன்னமும் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.
திரேக்காணம் என்பது ராசிக் கட்டத்தில் இருக்கும் மூன்றாம் பாவகத்தின் நீட்சி என்று தான் சொல்ல வேண்டும். மூன்றாம் பாவகத்தைக் கொண்டு எதைக் கணிக்கலாம் என்பதைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம் உடன்பிறந்தவர்கள், அவர்கள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி, எதிர்ப்பு பயணம், முயற்சி, தைரியம், பேச்சு, எழுத்து எனும் கம்யூனிகேஷன் தொடர்பான ஆற்றல், நேர் மறைச் சிந்தனை தொடர்பான ஆற்றல்மேல் கைப் பகுதி, ஆயுதங்களைக் கையாளுதல் என கொள்ளலாம் இதைக் கொண்டு திரேக்காண கட்டத்தை கவனித்தால்
லக்கினத்தைக் கொண்டு : உடன் பிறந்தவருடன் இருக்கும் உறவின் பலம்
இரண்டாம் பாவகத்தைக் கொண்டு : உடன் பிறந்தவர் மூலம் கிடைக்கும் ஆதாயம் நஷ்டம்
மூன்றாம் பாவகத்தைக் கொண்டு : முயற்சிகளில் வெற்றி ஆதாயம் நான்காம் பாவகத்தைக் கொண்டு : உடன் பிற்ந்தவர் மூலம் கிடைக்கும் உள்ள ஆத்ம மகிழ்ச்சி
ஐந்தாம் பாவகத்தைக் கொண்டு , திட்டமிடல், உடன் பிறந்தவர் குறித்த எண்ணம்
ஆறாம் பாவகத்தைக் கொண்டு , செயலில் தடை
ஏழாம் பாவகத்தைக் கொண்டு , பாலுணர்வு முயற்சிகளில் ஆதாயம்
எட்டாம் பாவகத்தைக் கொண்டு , ஆயுள்
ஒன்பதாம் பாவகத்தைக் கொண்டு , அதிர்ஷ்டம்பத்தாம் பாவகத்தைக் கொண்டு , எப்படியான முயற்சிகள் ஆதாயம் தரும்
பதினோராம் பாவகத்தைக் கொண்டு ; ஆதாயத்தின் எல்லை
பன்னிரெண்டாம் பாவகத்தைக் கொண்டு ; காரியத் தோல்வி, காரியத்தினால் நஷ்டம்
திரேக்காணத்தில் முக்கியமானது 22 திரேக்காணம். இது மரணத்தினைக் குறிக்கும் திரேக்காணம். திரேக்காணம் குறிக்கும் உறுப்புகள் என்பதும் தனியே உண்டு. ஆயுத திரேக்காணம், பாச திரேக்காணம், நிகள திரேக்காணம், சர்ப்ப திரேக்காணம் என இதன் பிரிவுகளைக் கொண்டு அந்தந்த தசா புத்தி காலங்களில் உண்டாகும் நற்பலன் தீய பலன் சொல்லலாம். ஜாதகருக்கான வர்க்க அட்டவணைகளில் திரேக்காணம் எளிமையானதும் அதே சமயம் மிகவும் ஆழமானதும், பலன்களை சொல்ல உதவியானதும் ஆகும்.