தெய்வம் பேசுமா??

எனக்கு என்னமோ இந்த கேள்வியே தப்புன்னு தோணுது. முதலில் தெய்வம் கிட்டே நாம பேசறோமோன்னு தான் கேட்பேன்.

வீட்டில் ஸ்வாமி கும்பிடறோம். பூஜை பண்றோம். எல்லாம் பண்றோம். ஆனா வீட்டில் நம்ம ஸ்வாமி நம்ம குலதெய்வம் உட்கார்ந்திருக்கிறது அப்படின்னு நாம நம்பமாட்டேங்கிறோம்.

முதலில் அந்த நம்பிக்கையை உங்க மனசில் கொண்டு வாங்க. நாம கும்பிடற தெய்வம் நமக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கு அப்படின்னு நம்பிட்டு தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளை நீங்க வெளியில் போயிட்டு வந்ததில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்த வரை நடந்த நிகழ்ச்சிகளை தெய்வத்திற்கு முன்னாடி உட்கார்ந்து வாய் விட்டு சொல்லுங்க. உங்க அம்மா கிட்டே பேசும் போது  எப்படி நீங்க வெட்கப்படறதோ பயப்படறதோ இல்லையோ அதே மாதிரி ஸ்வாமி கிட்டே பேசுங்க. வெளியில் நடந்த ஸ்வாரஸ்யமான நிகழ்ச்சிகள், நீங்க வெளியிலோ பேங்கிலோ சண்டை போட்ட சமாச்சாரமா இருந்தா கூட பரவாயில்லை எல்லாவற்றையும் சொல்லுங்க. பல பிரச்சினைகளை முகனூலிலோ வாட்ஸ் அப்பிலோ பதிவு செய்தால் தீர்வு கிடைக்கும்னு நம்பிக் கொண்டு இருக்கும் நீங்க உங்க வீட்டில் இருக்கும் ஸ்வாமி கிட்டே சொன்னால் தீர்வு கிடைக்காதுன்னு நினைத்தால் எப்படி?

வீட்டில் வயதானவர்களோ, குழந்தைகளோ இருந்தால் நாம வெளியில் போயிட்டு வந்தால் நமக்கு எதாவது வாங்கிட்டு வந்திருப்பானோ அப்படின்னு நினைப்பாங்க. நம்ம வீட்டில் இருக்கும் ஸ்வாமியும் அப்படித்தான் நினைக்குமாம். அது மாதிரி எதாச்சும் வாங்கிட்டு வாங்க. பத்து ரூபாய்க்கு பழமோ பூவோ எதோ ஒன்னு வாங்கிட்டு வாங்க. எது வாங்கிட்டு வந்தாலும் ஸ்வாமி கிட்டே சொல்லிட்டு நீங்க உபயோகம் பண்ணிக்கோங்க. வாங்கிட்டு வரலைனா கூட என்னால இன்னிக்கு வாங்கிட்டு வர முடியலை. நாளைக்கு மறக்காம வாங்கிட்டு வரேன்னு ஒரு வார்த்தையை ஸ்வாமி முன்னாடி உட்கார்ந்து சொல்லுங்க.

உங்க கஷ்டம், சந்தோஷம், அழுகை, ஆதங்கம், ஆத்திரம், மற்றவர்கள் உங்களுக்கு செய்த துரோகம் இப்படி எல்லா விஷயத்தையும் ஸ்வாமி கிட்டே நீங்க மனம் விட்டு பேசினா உங்களுக்கும் சுமை இறங்கின மாதிரி இருக்கும். தெய்வத்திற்கு எதை எப்போ பண்ணனும்னு நல்லாவே தெரியும். முதலில் நம்ம வீட்டில் ஸ்வாமி இருக்கு அப்படிங்கறதை நம்புங்க. அது போதும்.

நீ என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் நான் உன்னை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பேன் என்று பகவான் சொல்லியிருக்கிறது உண்மை என்று காலப்போக்கில் உங்களுக்கு கண்டிப்பாக புரியும்.

About Author

2 Replies to “தெய்வம் பேசுமா??”

  1. அருமை. நம் வீட்டிம் நம் தெய்வம் இருப்பதை நாமே உணராமல் இருந்தால் எப்படி?

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.