உபவாஸம்

தெய்வங்களின் உபவாஸம்

கிராம தேவதையை விட்டுட்டு பெருமாள், சிவன் ஆலயங்களுக்கு வருவோம். (பெருமாள் கோவிலில் தளிகைன்னு சொல்வாங்க சிவன் ஆலயத்தில் நைவேத்யம்னு சொல்வாங்க). அந்த தளிகை, நைவேத்யம் தினமும் நடக்கிறதா என்றால் பதில் இல்லையென்று தான் வரும். நித்யப்படி அபிஷேகத்துக்கு கூட வழியில்லாமல் எத்தனையோ ஆலயங்கள் இருக்கிறது. ஒருவேளை விளக்கெரியக் கூட எண்ணெய் இல்லாமல் இருக்கிறது. பல கோவில்களில் பூஜை பண்றதுக்கு கூட அர்ச்சகர் இல்லை. ஸ்வாமி மேல் பரிதாபப்பட்டு ஒரு சிலர் தனக்கு தெரிந்த மாதிரி அபிஷேகம் பண்ணிட்டு போறதை பல இடங்களில் பார்க்கலாம்.

ஸ்ரீவித்யா உபாஸனை

அம்பாள் உபாசனை – ஸ்ரீவித்யா உபாஸனை

அம்பாளைத் தியானிக்க முயன்று அதில் ஒரு முகமாக ஈடுபட முடியாதபோது நம் குறையெல்லாம் தெரிகிறது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ‘இந்தக் குறைகளைப் போக்கம்மா’ என்று அவளிடம் பிரார்த்தித்துக் கொள்ள முடிகிறது. என்னிடம் எப்போதெல்லாம் தோஷம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அம்பாளிடம் முறையிட்டு அந்த தோஷம் இனியாவது இல்லாமலிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

புஷ்பலதாம்பிகை

உள்ளூர் கோவில்கள்

வெகுதொலைவில் இருக்கும் ஆலயங்களை சென்று தரிசிக்கும் நீங்கள் உங்கள் ஊர் ஆலயங்களை உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களையும் வாரம் ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்து விட்டு வரலாம். நம் உறவினர்கள் என்னப்பா உள்ளூர்ல இருந்துகிட்டே என்னை பார்க்க வரமாட்டேங்கிறியே என்று சொல்வார்கள் அது போலத்தான் நம் ஊர் தெய்வங்களும். இவன் உள்ளூரில் இருந்து கொண்டே நம்மை பார்க்க வரமாட்டேங்கிறானே நாம் ஏன் இவனுக்கு நல்லது செய்யணும் என்று ஒரு கணம் நினைத்து விட்டால் போதும் உங்கள் வாழ்க்கை கேள்விக்குறிதான். தெய்வம் அவ்வாறு நினைக்காது என்பது வேற விஷயம்.

சோளிங்கர் நரசிம்மர் கோவில்

அந்த அமிர்தவள்ளித் தாயார் முன் நின்று மனம் உருக முழு நம்பிக்கையோடு அம்மா உன் குழந்தை நான் வந்திருக்கிறேன். எனக்கு உன்னை விட்டால் யார் இருக்கா? என்னுடைய குறையை யாரிடம் போய் நான் சொல்ல முடியும்? நீ தான் என்னோட குறையை தீர்த்து வைக்கணும்னு சொல்லி உங்க பிரச்சினையை சொல்லுங்க. அவ கண்டிப்பா தீர்த்து வைப்பான்னு நம்பிக்கையோட அவ கிட்டே சொல்லுங்க. உங்க அம்மா கிட்டே நீங்க எப்படி பேசுவீங்களோ அந்த உரிமையில் பேசுங்க. அவ கண்டிப்பா பண்ணுவா. எந்த அம்மாவும் தன்னோட குழந்தை கஷ்டப்படறதை பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டா. லோகத்தில் எந்த அம்மாவும் கெட்ட அம்மா கிடையாதுன்னு பெரியவா சொல்லியிருக்கார்.

அறுபத்து மூன்று நாயன்மார்கள்

நம்ம ஆளுங்க கோவிலுக்கு போயிட்டு வருவதை இப்ப ரொம்ப ஈஸியாகவும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் மாற்றி விட்டார்கள். பல ஊர்ல பெரிய கோவில்களில் பிரகாரத்தை சுற்றி இவங்க நடந்து வர்றதை பார்த்தா கோவிலுக்கு ஸ்வாமி “அறுபத்து மூன்று நாயன்மார்கள்”

வலைத்தளமும் புராணங்களும்

வலைத்தளமும் புராணங்களும்

ஒரு உபன்யாஸகர் என்றால் அவருக்கு வேதம், இதிகாசம், சமஸ்கிருதம் மற்றும் இதர ஸ்லோகங்கள் அத்துப்படியாகி இருக்க வேண்டும்.

தொழில் நுட்பமும் உபாஸனையும்

இன்றைய ஆன்மீக உலக நவீன தொழில்நுட்பத்தால் சிலரிடம் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. நிறைய உபன்யாஸங்கள், பஜனைகள், சொற்பொழிவுகள், ஸ்தோத்திர வகுப்புகள், பல லைவ் புரோகிராம்கள் இவையெல்லாம் லாக்டவுனால் கிடைத்த நன்மைகள்னு சொல்லிக்கலாம். இவையெல்லாம் சில “தொழில் நுட்பமும் உபாஸனையும்”

தெய்வம் பேசுமா??

எனக்கு என்னமோ இந்த கேள்வியே தப்புன்னு தோணுது. முதலில் தெய்வம் கிட்டே நாம பேசறோமோன்னு தான் கேட்பேன். வீட்டில் ஸ்வாமி கும்பிடறோம். பூஜை பண்றோம். எல்லாம் பண்றோம். ஆனா வீட்டில் நம்ம ஸ்வாமி நம்ம “தெய்வம் பேசுமா??”

அகரம் காசி விஸ்வநாதர் ஆலயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி சாலையில் உள்ளது வல்லநாடு என்ற ஊர். அங்கிருந்து சுமார் 2 அல்லது 3 கிமீ தொலைவில் மேற்கில் உள்ளது  அகரம்  சின்னஞ்சிறு கிராமம். இந்த ஊரில் ஓடிக் “அகரம் காசி விஸ்வநாதர் ஆலயம்”