தேவையா hashtag சேலஞ்கள் ?

பேஸ்புக் ஆகட்டும் இல்லை வேறு எந்த சோஷியல் மீடியா ஆகட்டும் பொதுவாய் ஒரு தலைப்பை அல்லது ஒரே பொருளில் எழுதப்படும் அணைத்து பதிவுகள் / ட்வீட்கள்/ போட்டோ இவற்றை பார்க்க இந்த hashtag (#) உபயோகிக்கின்றன. இது அந்த தலைப்பை பின்தொடர்பவர்களுக்கு வசதியாக இருக்கும். அடுத்து சில நாட்களோ மாதமோ கழித்து அந்த தலைப்பை தேட வசதியாக இருக்கும். ஆரம்பத்தில் பேஸ்புக்கில் இருந்த hashtag பிரச்சனைகளால் நடுவில் நிறுத்தப்பட்டிருந்தது. இப்ப மீண்டும் அந்த வசதி வந்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்கட்டும்.

இப்பொழுது ட்விட்டர் ஆகட்டும் / பேஸ்புக் ஆகட்டும் இந்த ட்ரெண்டிங் போட்டோஸ்னு ஹேஸ்டேக் போட்டுபோடறாங்க. இதில் முக்கிய விஷயம் பலரும் மறப்பது அல்லது பெரிதாய் முக்கியத்துவம் கொடுக்காமல் விடுவது இந்த போட்டோக்கள் அனைத்தும் எளிதாக பலரும் பார்க்க இயலும். அதுமட்டுமல்ல எளிதாய் தங்கள் மொபைலிலோ அல்லது கணிணியிலோ சேமித்து வைக்கலாம். சில விஷமிகள் அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அடுத்தது நீங்கள் ஒருமுறை இணையத்தில் ஒரு படத்தை பதிவேற்றம் செய்தாலே அது நிரந்தரமாக இணையத்தில் சுற்றி வரும் , நீங்கள் அந்த படத்தை நீக்கினாலும். அதற்கு முக்கிய காரணம் தேடுபொறிகளின் crawl engines. ஆனால் இதை நீங்கள் தடுக்கலாம். அதற்கு கீழே உள்ளதை செய்யவும்.

If you don’t want search engines outside of Facebook to link directly to your profile, you can adjust this setting from your privacy settings.To turn this setting on or off:

  1. Click  in the top right of Facebook.
  2. Select Settings & Privacy > Settings.
  3. In the left column, click Privacy.
  4. Click “Edit” next to Do you want search engines outside of Facebook to link to your profile?.
  5. Review your current settings and make your selection.

முதலில் ஒரு ட்ரெண்ட் உருவானால் எதனால் அது உருவாக்கப்படுகிறது என யோசிக்கவும். பொதுநல விஷயங்கள் என்பது வேறு கணக்கு. ஆனால் இந்த மாதிரி Hashtag சேலஞ்களில் பங்கேற்கும் முன் பலமுறை யோசித்துவிட்டு நாளை பிரச்சனை வந்தால் சமாளிப்பேன் என்றால் பங்கேற்கவும் இல்லையெனில் அமைதியாக ஒதுங்கிவிடவும்.

இதன் நடுவில் மிகப்பெரிய காமெடி என்னவென்றால் ஆதார் கார்ட் எங்கள் ப்ரைவசியை பாதிக்கிறது என குரல் கொடுத்த போராளிகள் பலரும் இந்த ட்ரெண்டில் பங்கேற்றுள்ளனர் என்பதே.

#bewareofhashtag

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.