இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகளைக் குறித்து வரிசையாக எழுதி வருகிறேன். நட்சத்திர பொது குணங்கள் வரிசையில் இன்று மகம்.
இலவு முருக்கு அலர்விழியும் தொண்டைதூ
துளை போல் செவ்விதழார் மாதே
பலதிசை யில் சஞ்சாரப் பிரியமுளன்
சௌந்தரியன் பாண்மிகுந்த
புலவன் முழுக்குப் பிரியன் சுகந்தபரி
மளப்ப்ரியன் பொண்ணும் உள்ளான்
வலதுபுறம் மறு உடையன் நியாயன் அற்ப
நித்திரையன் மகத்தினானே
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகளைச் சொல்லும் அலங்காரப் பாடல்
பயணத்தில் விருப்பம் உக்ள்ளவர்கள்,
அழகுள்ளவர்கள்,
இசையில் தேர்ச்சி இருக்கும்,
நீரில் மூழ்கி நீராடுவதில் விருப்பமிருக்கும்,
நறுமணப் பொருட்கள் மீது லயிப்பு இருக்கும்
,,
நகைகளின் பிரியம் இருக்கும்,
நியாயம் தவறாதவர்,
வலது பக்கத்தில் மரு இருக்கும்..
மிக முக்கியம் இவருக்கு தூக்கம் குறைவாக இருக்கும்
9840656627