நவம்பர் 07 ஐப்பசி 21 ராசி பலன்

நவம்பர் 07 ஐப்பசி 21 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய

🕉️மேஷம்
நவம்பர் 07, 2021

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


🕉️ரிஷபம்
நவம்பர் 07, 2021

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். கலகலப்பான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.
ரோகிணி : நெருக்கடிகள் குறையும்.
மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.


🕉️மிதுனம்
நவம்பர் 07, 2021

ரகசிய செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கால்நடை வளர்ப்பு தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவமும், அலைச்சல்களும் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். தீர்வுகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவாதிரை : லாபம் மேம்படும்.
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️கடகம்
நவம்பர் 07, 2021

வியாபாரத்தில் முதலீடு செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். செய்கின்ற முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதுமை பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

புனர்பூசம் : இடமாற்றம் உண்டாகும்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : சிக்கல்கள் நீங்கும்.


🕉️சிம்மம்
நவம்பர் 07, 2021

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : மாற்றம் உண்டாகும்.
பூரம் : தாமதங்கள் குறையும்.
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️கன்னி
நவம்பர் 07, 2021

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விளையாட்டு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடலளவிலும், மனதளவிலும் புதுவிதமான பொலிவுடனும், தன்னம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமைக்கேற்ற உயர்வுகள் ஏற்படும். முயற்சிகள் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
அஸ்தம் : தன்னம்பிக்கையான நாள்.
சித்திரை : உயர்வுகள் ஏற்படும்.


🕉️துலாம்
நவம்பர் 07, 2021

வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றம் ஏற்படும். தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது நன்மையை ஏற்படுத்தும். மனதிற்குள் புதுவிதமான நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவும் கிடைக்கும். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். வரவுகள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : திருப்தியான நாள்.
சுவாதி : நம்பிக்கை பிறக்கும்.
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.


🕉️விருச்சிகம்
நவம்பர் 07, 2021

பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். பணி நிமிர்த்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சிறு மாற்றம் செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பரந்த மனப்பான்மையின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பொலிவில் மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மாற்றம் உண்டாகும்.
அனுஷம் : லாபம் அதிகரிக்கும்.
கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.


🕉️தனுசு
நவம்பர் 07, 2021

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இனம் புரியாத எண்ணத்தின் மூலம் சோர்வுகள் உண்டாகும். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
பூராடம் : லாபம் மேம்படும்.
உத்திராடம் : சோர்வு உண்டாகும்.


🕉️மகரம்
நவம்பர் 07, 2021

மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் சார்ந்த இன்னல்கள் நீங்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். புத்துணர்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : இன்னல்கள் நீங்கும்.
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


🕉️கும்பம்
நவம்பர் 07, 2021

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மாற்றமான சூழ்நிலைகளின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். ஆராய்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : அனுபவம் உண்டாகும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


🕉️மீனம்
நவம்பர் 07, 2021

கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி : மேன்மையான நாள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.