நவம்பர் 1 ராசிபலன்

🕉️மேஷம்
நவம்பர் 01, 2020
ஐப்பசி 16 – ஞாயிறு

நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
கிருத்திகை : தீர்வு கிடைக்கும்.


🕉️ரிஷபம்
நவம்பர் 01, 2020
ஐப்பசி 16 – ஞாயிறு

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். இறை வழிபாட்டில் ஈடுபட்டு வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். மனதில் கற்பனை திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : கற்பனை அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
நவம்பர் 01, 2020
ஐப்பசி 16 – ஞாயிறு

நுட்பமான செயல்பாடுகளால் செல்வாக்கு மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : செல்வாக்கு மேம்படும்.
திருவாதிரை : குழப்பங்கள் விலகும்.
புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.


🕉️கடகம்
நவம்பர் 01, 2020
ஐப்பசி 16 – ஞாயிறு

பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூசம் : சுபமான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️சிம்மம்
நவம்பர் 01, 2020
ஐப்பசி 16 – ஞாயிறு

ஆராய்ச்சி தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். சிறுதூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான தருணங்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : கலகலப்பான நாள்.
உத்திரம் : இலாபம் அதிகரிக்கும்.


🕉️கன்னி
நவம்பர் 01, 2020
ஐப்பசி 16 – ஞாயிறு

மனதில் தேவையற்ற குழப்பங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவுகளில் காலதாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் உரையாடும்போது பேச்சில் கவனம் வேண்டும். மனதில் நினைத்த காரியங்கள் தாமதமாக முடிவடையும். பெரியோர்களிடம் பொறுமையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : குழப்பமான நாள்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : பொறுமையுடன் செயல்படவும்.


🕉️துலாம்
நவம்பர் 01, 2020
ஐப்பசி 16 – ஞாயிறு

புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மகிழ்வீர்கள். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.
சுவாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
விசாகம் : உறவுகள் மேம்படும்.


🕉️விருச்சகம்
நவம்பர் 01, 2020
ஐப்பசி 16 – ஞாயிறு

வியாபாரத்தில் கூட்டாளிகளால் இலாபம் அதிகரிக்கும். உறவினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகளிடம் ஆரோக்கியமான விவாதங்கள் தோன்றும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். செயல்பாடுகளில் செயல்திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : இலாபம் அதிகரிக்கும்.
அனுஷம் : விவாதங்கள் தோன்றும்.
கேட்டை : மகிழ்ச்சி உண்டாகும்.


🕉️தனுசு
நவம்பர் 01, 2020
ஐப்பசி 16 – ஞாயிறு

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவடையும். தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்களால் இலாபம் அதிகரிக்கும். பொது மக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் ஏற்படும். இழுபறியான காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : இலாபம் அதிகரிக்கும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.


🕉️மகரம்
நவம்பர் 01, 2020
ஐப்பசி 16 – ஞாயிறு

உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : திருப்திகரமான நாள்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : தெளிவுகள் கிடைக்கும்.


🕉️கும்பம்
நவம்பர் 01, 2020
ஐப்பசி 16 – ஞாயிறு

இளைய சகோதரிகளுடன் ஒற்றுமை மேம்படும். தடைபட்டு வந்த பல காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். உறவினர்களிடத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆராய்ந்து பார்த்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : ஒற்றுமை மேம்படும்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


🕉️மீனம்
நவம்பர் 01, 2020
ஐப்பசி 16 – ஞாயிறு

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும். வீட்டிற்கு தேவையான புதிய சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளும், முயற்சிகளும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ரேவதி : உறவுகள் மேம்படும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.