நவம்பர் 10 ராசி பலன்

🕉️மேஷம்
நவம்பர் 10, 2020
ஐப்பசி 25 – செவ்வாய்

வாக்கு சாதுர்யத்தின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதிற்கு விரும்பிய நிகழ்வுகளின் மூலம் மனமகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சுபகாரியங்களில் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும். புத்திரர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : பாராட்டுகளை பெறுவீர்கள்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.


🕉️ரிஷபம்
நவம்பர் 10, 2020
ஐப்பசி 25 – செவ்வாய்

மனதிற்கு நெருக்கமானவர்களிடம் பகை உணர்வுகளை மறந்து நட்புடன் பழகுவது நன்மை அளிக்கும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : நட்புடன் பழகவும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் தோன்றும்.


🕉️மிதுனம்
நவம்பர் 10, 2020
ஐப்பசி 25 – செவ்வாய்

ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : ஒற்றுமை உண்டாகும்.
திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : மாற்றமான நாள்.


🕉️கடகம்
நவம்பர் 10, 2020
ஐப்பசி 25 – செவ்வாய்

இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வாகனப் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் நன்மை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கைகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : அனுபவம் கிடைக்கும்.
ஆயில்யம் : நன்மை ஏற்படும்.


🕉️சிம்மம்
நவம்பர் 10, 2020
ஐப்பசி 25 – செவ்வாய்

குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். கண் பார்வை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வித்தியாசமான கனவுகளின் மூலம் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மகம் : புரிதல் ஏற்படும்.
பூரம் : தீர்வு கிடைக்கும்.
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


🕉️கன்னி
நவம்பர் 10, 2020
ஐப்பசி 25 – செவ்வாய்

வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு ஏற்பட்டு மறையும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும். மற்றவர்களுக்காக உதவிகளை செய்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். மலைப்பிரதேசம் தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படுவீர்கள்.
சித்திரை : புதுவிதமான நாள்.


🕉️துலாம்
நவம்பர் 10, 2020
ஐப்பசி 25 – செவ்வாய்

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்த காரியங்கள் சில மன போராட்டங்களுக்கு பின்பு நிறைவேறும். பொறுமையுடன் செயல்பட்டால் எண்ணிய வெற்றி கிடைக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
சுவாதி : ஆதரவாக செயல்படுவார்கள்.
விசாகம் : கவனம் வேண்டும்.


🕉️விருச்சகம்
நவம்பர் 10, 2020
ஐப்பசி 25 – செவ்வாய்

உத்தியோகத்தில் இழந்த இடத்தை மீண்டும் பெறுவீர்கள். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
விசாகம் : தடைகள் அகலும்.
அனுஷம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
கேட்டை : அன்யோன்யம் அதிகரிக்கும்.


🕉️தனுசு
நவம்பர் 10, 2020
ஐப்பசி 25 – செவ்வாய்

வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வாகனப் பராமரிப்பு செலவுகள் நேரிடலாம். தைரியத்துடன் பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : ஆதாயம் உண்டாகும்.
பூராடம் : அனுபவம் கிடைக்கும்.
உத்திராடம் : புகழ் பெறுவீர்கள்.


🕉️மகரம்
நவம்பர் 10, 2020
ஐப்பசி 25 – செவ்வாய்

பிள்ளைகளால் மனவருத்தங்கள் ஏற்படும். முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஞாபகமறதியால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தொழில் தொடர்பான முடிவுகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : மனவருத்தங்கள் ஏற்படும்.
திருவோணம் : சாதகமற்ற நாள்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.


🕉️கும்பம்
நவம்பர் 10, 2020
ஐப்பசி 25 – செவ்வாய்

மனதில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். பிள்ளைகள் சாதகமாக இருப்பார்கள். சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு செயல்களில் வெற்றி கிடைக்கும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : நம்பிக்கையான நாள்.
சதயம் : வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி : பிரச்சனைகள் தீரும்.


🕉️மீனம்
நவம்பர் 10, 2020
ஐப்பசி 25 – செவ்வாய்

நினைத்த எண்ணங்கள் ஈடேறும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகமும், நட்பும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.
ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.