நவம்பர் 17 ராசி பலன்

🕉️மேஷம்
நவம்பர் 17, 2020
கார்த்திகை 02 – செவ்வாய்

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மனைவிவழியில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் ஈடேறும். வழக்கு விவகாரங்களில் எண்ணிய தீர்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : எண்ணங்கள் ஈடேறும்.
கிருத்திகை : தீர்ப்பு கிடைக்கும்.


🕉️ரிஷபம்
நவம்பர் 17, 2020
கார்த்திகை 02 – செவ்வாய்

மற்றவர்களிடம் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்க்கவும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : மனக்குழப்பங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : நெருக்கடியான நாள்.


🕉️மிதுனம்
நவம்பர் 17, 2020
கார்த்திகை 02 – செவ்வாய்

கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மருத்துவ செலவுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
திருவாதிரை : அறிமுகம் உண்டாகும்.
புனர்பூசம் : செலவுகள் குறையும்.


🕉️கடகம்
நவம்பர் 17, 2020
கார்த்திகை 02 – செவ்வாய்

தடைபட்டு வந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தொழிலில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.
பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : திடீர் யோகம் உண்டாகும்.


🕉️சிம்மம்
நவம்பர் 17, 2020
கார்த்திகை 02 – செவ்வாய்

தனவரவுகள் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். போட்டி, பொறாமைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : தனவரவுகள் மேம்படும்.
பூரம் : துரிதம் ஏற்படும்.
உத்திரம் : பதவி உயர்வு கிடைக்கும்.


🕉️கன்னி
நவம்பர் 17, 2020
கார்த்திகை 02 – செவ்வாய்

புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் சாதகமாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாக இருக்கும். வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️துலாம்
நவம்பர் 17, 2020
கார்த்திகை 02 – செவ்வாய்

புதுவிதமான எண்ணங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பதவி உயர்வும் கிடைக்கும். மனதில் ஒருவிதமான குழப்பமான சூழல் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : ஆலோசனைகளை கேட்கவும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.


🕉️விருச்சகம்
நவம்பர் 17, 2020
கார்த்திகை 02 – செவ்வாய்

குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். தடைபட்டு வந்த சுபச்செயல்கள் கைகூடும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வாடிக்கையாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.
கேட்டை : அமைதி வேண்டும்.


🕉️தனுசு
நவம்பர் 17, 2020
கார்த்திகை 02 – செவ்வாய்

உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். செய்யும் பணியில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வாகனச் சேர்க்கை உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : கலகலப்பான நாள்.
பூராடம் : அன்பு அதிகரிக்கும்.
உத்திராடம் : திருப்தியான நாள்.


🕉️மகரம்
நவம்பர் 17, 2020
கார்த்திகை 02 – செவ்வாய்

நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலைக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : தனவரவுகள் கிடைக்கும்.
திருவோணம் : உயர்வான நாள்.
அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


🕉️கும்பம்
நவம்பர் 17, 2020
கார்த்திகை 02 – செவ்வாய்

தர்க்க விவாதங்களினால் கீர்த்தி உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளினால் சாதகமான சூழல் அமையும். பதவி மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : புத்துணர்ச்சி ஏற்படும்.


🕉️மீனம்
நவம்பர் 17, 2020
கார்த்திகை 02 – செவ்வாய்

தாயாரின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

ரேவதி : நெருக்கம் உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.