நவம்பர் 18 ராசி பலன்

🕉️மேஷம்
நவம்பர் 18, 2020
கார்த்திகை 03 – புதன்

தனவரவுகளின் மூலம் இன்னல்கள் குறையும். பெற்றோர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : இன்னல்கள் குறையும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.


🕉️ரிஷபம்
நவம்பர் 18, 2020
கார்த்திகை 03 – புதன்

மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளால் பதற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். அறிமுகமில்லாத புதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். மற்றவர்கள் கூறுவதை காட்டிலும் தீர விசாரித்து பொறுமையுடன் செயல்படுவது எதிர்காலத்திற்கு நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : பதற்றமான நாள்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.


🕉️மிதுனம்
நவம்பர் 18, 2020
கார்த்திகை 03 – புதன்

தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்புகள் நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.
புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.


🕉️கடகம்
நவம்பர் 18, 2020
கார்த்திகை 03 – புதன்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும். சபைகளில் ஆதரவும், இலாபமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : இலாபம் கிடைக்கும்.


🕉️சிம்மம்
நவம்பர் 18, 2020
கார்த்திகை 03 – புதன்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். தொழில் தொடர்பான பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.

உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.

🕉️கன்னி
நவம்பர் 18, 2020
கார்த்திகை 03 – புதன்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளும், ஆசிகளும் மனதிற்கு நம்பிக்கையை அளிக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களின் மூலம் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அஸ்தம் : அங்கீகாரம் கிடைக்கும்.
சித்திரை : திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.


🕉️துலாம்
நவம்பர் 18, 2020
கார்த்திகை 03 – புதன்

மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கூட்டாளிகளின் மூலம் இலாபம் உண்டாகும். புதிய தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் குழப்பமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : விருப்பங்கள் நிறைவேறும்.
சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
விசாகம் : குழப்பமான நாள்.


🕉️விருச்சகம்
நவம்பர் 18, 2020
கார்த்திகை 03 – புதன்

உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நிதானம் வேண்டும். கூட்டாளிகளின் மூலம் இலாபமும், புதுவிதமான அனுபவமும் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.


🕉️தனுசு
நவம்பர் 18, 2020
கார்த்திகை 03 – புதன்

தொழில் வளர்ச்சிக்கான எண்ணங்களும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். சுப நிகழ்வுகளின் மூலம் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் விவேகத்துடன் செல்லவும். வாரிசுகளின் மூலம் ஆதரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : துரிதம் உண்டாகும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


🕉️மகரம்
நவம்பர் 18, 2020
கார்த்திகை 03 – புதன்

சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்களில் அலைச்சல்களுக்கு பின்பு ஆதரவான பலன்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆடம்பர செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அவிட்டம் : சிந்தனைகள் தோன்றும்.


🕉️கும்பம்
நவம்பர் 18, 2020
கார்த்திகை 03 – புதன்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களிடம் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : உற்சாகமான நாள்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.


🕉️மீனம்
நவம்பர் 18, 2020
கார்த்திகை 03 – புதன்


தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நெருக்கடிகள் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.