நவம்பர் 19 ராசி பலன்

🕉️மேஷம்*
நவம்பர் 19, 2020
கார்த்திகை 04 – வியாழன்

பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அஸ்வினி : எண்ணங்கள் நிறைவேறும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : சுபிட்சமான நாள்.


🕉️ரிஷபம்
நவம்பர் 19, 2020
கார்த்திகை 04 – வியாழன்

பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் புதிய நம்பிக்கையும், உடல் ஆரோக்கியமும் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : இன்னல்கள் குறையும்.
மிருகசீரிஷம் : ஆரோக்கியம் மேம்படும்.


🕉️மிதுனம்
நவம்பர் 19, 2020
கார்த்திகை 04 – வியாழன்

உடன்பிறந்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடத்தில் பகையை மறந்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். மாணவர்கள் விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.


🕉️கடகம்
நவம்பர் 19, 2020
கார்த்திகை 04 – வியாழன்

குடும்பத்தில் தனவரவுகள் மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பெரிய நபர்களின் சந்திப்புகள் மாற்றத்தை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : தனவரவுகள் மேம்படும்.
பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : சுறுசுறுப்பான நாள்.


🕉️சிம்மம்
நவம்பர் 19, 2020
கார்த்திகை 04 – வியாழன்

குடும்ப உறுப்பினர்களிடம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படலாம். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
உத்திரம் : பொறுமை வேண்டும்.


🕉️கன்னி
நவம்பர் 19, 2020
கார்த்திகை 04 – வியாழன்

வெளியூர் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் இன்னல்கள் குறையும். ஆடம்பர செலவுகளின் மூலம் கையிருப்பு குறைவதற்கான வாய்ப்புகள் நேரிடும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : மாற்றங்கள் ஏற்படலாம்.
சித்திரை : கவனம் வேண்டும்.


🕉️துலாம்
நவம்பர் 19, 2020
கார்த்திகை 04 – வியாழன்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நுட்பமான செயல்பாடுகளின் மூலம் இலாபம் கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உடன்பிறப்புகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சுவாதி : இலாபம் கிடைக்கும்.
விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


🕉️விருச்சகம்
நவம்பர் 19, 2020
கார்த்திகை 04 – வியாழன்

மனதில் புதிய தைரியத்துடன் திட்டமிட்ட காரியங்களில் செயல்படுவீர்கள். சகோதரர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். தொழில் தொடர்பான புதிய சிந்தனைகளும், அதை சார்ந்த உதவிகளுக்கான எண்ணங்களும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : தைரியம் மேம்படும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️தனுசு
நவம்பர் 19, 2020
கார்த்திகை 04 – வியாழன்

நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த செயல்கள் நிறைவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அலுவலகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பெரியோர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனமும், பொறுமையும் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : தனவரவுகள் கிடைக்கும்.
பூராடம் : இழுபறிகள் அகலும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


🕉️மகரம்
நவம்பர் 19, 2020
கார்த்திகை 04 – வியாழன்

சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடனாக கொடுத்த சில பொருட்கள் திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் உதவிகள் மூலம் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். தேவையற்ற எண்ணங்களின் மூலம் குழப்பமும், அலைச்சலும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவோணம் : வாய்ப்புகள் ஏற்படும்.
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️கும்பம்
நவம்பர் 19, 2020
கார்த்திகை 04 – வியாழன்

எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். பொன், பொருள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தம்பதியர்களுக்கிடையே அன்பும், புரிதலும் மேம்படும். கூட்டாளிகளின் மூலம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : மாற்றமான நாள்.
சதயம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.


🕉️மீனம்
நவம்பர் 19, 2020
கார்த்திகை 04 – வியாழன்

வியாபாரம் தொடர்பான பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், அறிமுகமும் ஏற்படும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பெரியோர்களின் ஆதரவின் மூலம் எண்ணங்கள் ஈடேறும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட்டால் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
ரேவதி : இலாபம் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.