நவம்பர் 23 ராசி பலன்

🕉️மேஷம்
நவம்பர் 23, 2020
கார்த்திகை 08 – திங்கள்

வாதத்திறமையின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் இலாபம் உண்டாகும். நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : பாராட்டுகளை பெறுவீர்கள்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.


🕉️ரிஷபம்
நவம்பர் 23, 2020
கார்த்திகை 08 – திங்கள்

மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களின் ஆலோசனைகள் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
நவம்பர் 23, 2020
கார்த்திகை 08 – திங்கள்

நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களுக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.


🕉️கடகம்
நவம்பர் 23, 2020
கார்த்திகை 08 – திங்கள்

நெருக்கமானவர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்லவும். வாழ்க்கைத்துணைவருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : வீண் பேச்சுக்களை தவிர்க்கவும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : விழிப்புணர்வு வேண்டும்.


🕉️சிம்மம்
நவம்பர் 23, 2020
கார்த்திகை 08 – திங்கள்

எந்தவொரு செயல்களிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அமைதியும், ஒற்றுமையும் நிலவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
மகம் : சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : ஒற்றுமை உண்டாகும்.


🕉️கன்னி
நவம்பர் 23, 2020
கார்த்திகை 08 – திங்கள்

எதிர்பாராத வழியில் சுபவிரயங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவசாயப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.
அஸ்தம் : புத்துணர்ச்சியான நாள்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️துலாம்
நவம்பர் 23, 2020
கார்த்திகை 08 – திங்கள்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். பிள்ளைகளின் மூலம் அலைச்சல்கள் நேரிடலாம். திட்டமிட்ட காரியங்களில் சில இடையூறுகள் ஏற்பட்டு அகலும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செயல்களின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : கவலைகள் நீங்கும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : தீர்வு கிடைக்கும்.


🕉️விருச்சகம்
நவம்பர் 23, 2020
கார்த்திகை 08 – திங்கள்

செய்யும் முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
கேட்டை : பொருட்சேர்க்கை உண்டாகும்.


🕉️தனுசு
நவம்பர் 23, 2020
கார்த்திகை 08 – திங்கள்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப உயர்வு கிடைக்கும். உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : உயர்வான நாள்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.


🕉️மகரம்
நவம்பர் 23, 2020
கார்த்திகை 08 – திங்கள்

பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் காரியசித்திகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : ஏற்ற, இறக்கமான நாள்.
திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.


🕉️கும்பம்
நவம்பர் 23, 2020
கார்த்திகை 08 – திங்கள்

உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். புதிய தொழில் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அவிட்டம் : அலைச்சல்கள் ஏற்படும்.
சதயம் : உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.


🕉️மீனம்
நவம்பர் 23, 2020
கார்த்திகை 08 – திங்கள்

வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் பணிகள் நிறைவடையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : எதிர்ப்புகள் குறையும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : தனவரவுகள் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.