நவம்பர் 24 ராசி பலன்

🕉️மேஷம்
நவம்பர் 24, 2020
கார்த்திகை 09 – செவ்வாய்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு செயல்களையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : அனுகூலம் உண்டாகும்.
கிருத்திகை : தடைகள் நீங்கும்.


🕉️ரிஷபம்
நவம்பர் 24, 2020
கார்த்திகை 09 – செவ்வாய்

பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அறக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தூர தேச பயணங்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.


🕉️மிதுனம்
நவம்பர் 24, 2020
கார்த்திகை 09 – செவ்வாய்

தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிஷம் : விழிப்புணர்வு வேண்டும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : நட்பு உண்டாகும்.


🕉️கடகம்
நவம்பர் 24, 2020
கார்த்திகை 09 – செவ்வாய்

நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். தொழிலில் புதுவிதமான யுக்திகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : காலதாமதமாகும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️சிம்மம்
நவம்பர் 24, 2020
கார்த்திகை 09 – செவ்வாய்

உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வாரிசுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் மந்தநிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : சோர்வு ஏற்படும்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


🕉️கன்னி
நவம்பர் 24, 2020
கார்த்திகை 09 – செவ்வாய்

நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். புதிய வேலைத்தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : தரிசனம் கிடைக்கும்.
அஸ்தம் : சுபிட்சம் உண்டாகும்.
சித்திரை : அன்யோன்யம் அதிகரிக்கும்.


🕉️துலாம்
நவம்பர் 24, 2020
கார்த்திகை 09 – செவ்வாய்

போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கேற்ப உயர்வு ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். காது சம்பந்தமான உடல் உபாதைகள் உண்டாகும். தொலைபேசி வழியில் சாதகமான செய்திகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளிடம் நிதானத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : உயர்வு ஏற்படும்.
சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
விசாகம் : நிதானத்துடன் இருக்கவும்.


🕉️விருச்சகம்
நவம்பர் 24, 2020
கார்த்திகை 09 – செவ்வாய்

மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் உண்டாகும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். தர்க்கம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : ஆசிகள் கிடைக்கும்.
கேட்டை : எண்ணங்கள் ஈடேறும்.


🕉️தனுசு
நவம்பர் 24, 2020
கார்த்திகை 09 – செவ்வாய்
விவாதங்களில் சாதகமான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் உயர்வு உண்டாகும். இளைய சகோதரர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். மனைகளால் இலாபம் உண்டாகும். பொருளாதார மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : மேன்மை உண்டாகும்.


🕉️மகரம்
நவம்பர் 24, 2020
கார்த்திகை 09 – செவ்வாய்

வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படும். தொழில் மாற்றம் செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பொதுத்தொண்டில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
திருவோணம் : மாற்றங்கள் ஏற்படும்.
அவிட்டம் : எச்சரிக்கை வேண்டும்.


🕉️கும்பம்
நவம்பர் 24, 2020
கார்த்திகை 09 – செவ்வாய்

போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் இலாபம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களால் தேவையற்ற சிறு உபாதைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : இலாபம் உண்டாகும்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


🕉️மீனம்
நவம்பர் 24, 2020
கார்த்திகை 09 – செவ்வாய்

பொதுநலத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி உண்டாகும். தொழில் சம்பந்தமாக சொந்த ஊர் செல்வதற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் நலத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.

ரேவதி : வாய்ப்புகள் அதிகரிக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.