நவம்பர் 25 ராசி பலன்

🕉️மேஷம்*
நவம்பர் 25, 2020
கார்த்திகை 10 – புதன்

புதிய தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். பொதுக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : வெற்றிகரமான நாள்.
பரணி : வரவுகள் உண்டாகும்.
கிருத்திகை : தேவையான உதவிகளை செய்வீர்கள்.


🕉️ரிஷபம்
நவம்பர் 25, 2020
கார்த்திகை 10 – புதன்

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் பொருட்சேர்க்கை ஏற்படும். தாய்மாமன் உறவினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான முயற்சிகளின் மூலம் நன்மை உண்டாகும். இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.
ரோகிணி : பொருட்சேர்க்கை ஏற்படும்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.


🕉️மிதுனம்
நவம்பர் 25, 2020
கார்த்திகை 10 – புதன்

கெளரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : மதிப்புகள் உயரும்.
திருவாதிரை : கீர்த்தி உண்டாகும்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


🕉️கடகம்
நவம்பர் 25, 2020
கார்த்திகை 10 – புதன்

கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பணிகளில் திறமைகள் வெளிப்படும். பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : வெற்றி கிடைக்கும்.
ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.


🕉️சிம்மம்
நவம்பர் 25, 2020
கார்த்திகை 10 – புதன்

புதிய நபர்களின் பேச்சுக்களை நம்ப வேண்டாம். தம்பதியர்களுக்கிடையே தேவையற்ற பிரச்சனைகளால் அமைதி குறையும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். செயல்பாடுகளின் தன்மை அறிந்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மகம் : அமைதி குறையும்.
பூரம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.


🕉️கன்னி
நவம்பர் 25, 2020
கார்த்திகை 10 – புதன்

எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிகளில் பொறுப்புகள் உயரும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயங்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.
அஸ்தம் : உறவு மேம்படும்.
சித்திரை : பொறுப்புகள் உயரும்.


🕉️துலாம்
நவம்பர் 25, 2020
கார்த்திகை 10 – புதன்

உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். புத்திரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். கால்நடைகளால் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : மேன்மையான நாள்.


🕉️விருச்சகம்
நவம்பர் 25, 2020
கார்த்திகை 10 – புதன்

பொதுக்கூட்ட பேச்சுக்களில் ஈடுபட முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தாயாரின் ஆதரவுகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : இலாபம் அதிகரிக்கும்.
கேட்டை : துணிச்சல் உண்டாகும்.


🕉️தனுசு
நவம்பர் 25, 2020
கார்த்திகை 10 – புதன்

சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான செயல்பாடுகளால் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : கீர்த்தி உண்டாகும்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.


🕉️மகரம்
நவம்பர் 25, 2020
கார்த்திகை 10 – புதன்

மனதில் இனம்புரியாத தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : மனக்குழப்பங்கள் நீங்கும்.
திருவோணம் : ஒற்றுமை மேம்படும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️கும்பம்
நவம்பர் 25, 2020
கார்த்திகை 10 – புதன்

பிறமொழி பேசும் மக்களின் சிலரால் நன்மை உண்டாகும். ஜாமீன் கையெழுத்து போட்டு மற்றவர்களுக்கு கடன் வாங்கி தருவதை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களை பற்றிய எண்ணங்கள் தோன்றும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : நன்மை உண்டாகும்.
சதயம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.


🕉️மீனம்
நவம்பர் 25, 2020
கார்த்திகை 10 – புதன்

பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பயணங்களால் இலாபம் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.
உத்திரட்டாதி : இலாபகரமான நாள்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.