நீதிபதிக்கு வழங்கப்பட்ட நீதி

ஒருமுறை , அரசரின் காவலர்கள் ஒரு திருட்டுக் குழுவை துரத்தி கொண்டு சென்றனர். அந்த திருடர்கள் காட்டிற்குள் புகுந்தனர். அங்கே மரத்தின் கீழே ஒரு முனிவர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்ததை கண்டு அங்கே இருந்த அவரது ஆசிரமத்தில் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை பாத்துக்க வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின் அங்கே வந்த காவலர்கள், ரிஷியிடம் அந்த கொள்ளையர்களை பற்றி விசாரித்தனர். அப்பொழுதுதான் தியானத்தில் இருந்து எழுப்பப்பட்ட ரிஷிக்கு அங்கே நடந்த எந்த விஷயமும் தெரியவில்லை எனவே அவர்களின் கேள்விக்கு அவர் எந்த பதிலும் தரவில்லை. அதற்குள் அவர் ஆசிரமத்தை சோதனையிட்ட காவலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அங்கே பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு, கொள்ளைக் கூட்ட தலைவன்தான் ரிஷி வேடம் போட்டிருப்பதாக எண்ணி அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அரசனின் முன் விசாரணைக்கு இது வந்தபொழுது, அரசன் அந்த ரிஷியை கழுவில் ஏற்ற உத்தரவிட்டான்.

அதைத் தொடர்ந்து ரிஷி மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டார். ஆனாலும் அவரது தவ வலிமையால் உயிர் இழக்கவில்லை . இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மற்ற ரிஷிகள் அங்கு கூடத் துவங்கினர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மன்னனும் அங்கே விரைந்தான். அங்கே சென்ற பின் விஷயத்தை முழுவதும் அறிந்த மன்னன், தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ரிஷியை கழுவில் இருந்து விடுவித்து மீண்டும் மன்னிப்புக் கேட்டான். மன்னன் மேல் எந்த கோபம் இல்லாத ரிஷியும் அவரை மன்னித்தார். ஏனெனில் மன்னனாக அவன் தன் கடமையை செய்ததாக அவர் கருதினார்.

ரிஷி, தனக்கு ஏன் இந்த நிலை வந்தது என அறிய விரும்பினார் , அதற்காக அவர் தர்மராஜனை காண சென்றார். ” நான் இது வரை எந்த உயிரினத்தையும் துன்புறுத்தியதில்லை. அப்படி இருக்க , இத்தகைய துன்பத்தை நான் அனுபவிக்க என்ன காரணம் ” ? என தர்மராஜனிடம் அவர் வினவினார்.

” ரிஷிகளில் சிறந்தவரே ! நீங்கள் சிறுவனாக இருந்த பொழுது நிறைய பூச்சிகளையும் , புழுக்களையும் கொன்று மகிழ்ந்துள்ளீர்கள். அதன் விளைவே, நீங்கள் இந்த துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது ! “

இதைக் கேட்டவுடன் மிக கோபம் கொண்ட ரிஷி ” ஓ தர்மராஜா ! அறியா வயதில் தெரியாமல் செய்த தவறுகளுக்கு இத்தகைய கொடிய தண்டனையா ? தர்மராஜனே , நீ தர்மத்தை அறிவாயோ ? நீ மீண்டும் பூமியில் பிறக்கவேண்டியவன் . எனவே மனித பிறவி எடு” என தர்மராஜனுக்கு சாபம் இட்டார். மேலும், அப்பொழுதில் இருந்து சிறு வயதில் சிறுவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள் கர்மப் பலனில் சேராது என்றும் கூறினார்.

ரிஷி மாண்டவ்யரின் சாபத்தின் விளைவாய், தர்மராஜா , வேத வ்யாஸருக்கும் அம்பாலிக்காவின் வேலைக்காரிக்கும் மகனாக பிறந்து ” விதுரன் ” என அறியப்பட்டார். திருதராஷ்டிரனின் அமைச்சராக இருந்த விதுரன், எல்லா காலத்திலும் தர்மத்தின் பக்கமே இருந்தார். பாஞ்சாலி அரசவையில் அவமானப்படுத்தபொழுது அதன் பின்விளைவுகளை அறிந்த விதுரர் , இளவரசர்களை கட்டுப்படுத்த திருதராஷ்டிரனிடம் கெஞ்சியும் பலனின்றி போனது !!!

About Author

4 Replies to “நீதிபதிக்கு வழங்கப்பட்ட நீதி”

  1. அருமை எழுத்து நட்டை நன்று

  2. Arumai..!! Correctu thaane..!!theriyama seincha thappukku namakku thandanai thararu aana politicos seiyyara arajagathukku asalta maranthupudrapla

  3. விதுரர் பொது தர்மத்தின் பக்கம் இருந்தாரா என்பது சந்தேகமே. திருதராஷ்டிரன் தர்மத்தின் பக்கம் செல்லவில்லை என்பத்ற்கு தகுந்த உந்துதல் இருக்கிறது. பலராமன் போல் விதுரர் முற்றுமாக ஒதுங்கி (ரெண்டுங்கெட்டான்?) இருக்கவுமில்லை. வியிரரின் தார்மீகம் குருட்டு அரசனுக்கு கண்ணாக இரிந்தது மட்டுமே.

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.