பங்குனி மாத ராசி பலன் – விஹாரி வருடம்

பங்குனி மாத ராசி பலன் (மீன மாத)  ராசி பலன்கள் (14.03.2020 முதல் 13.04.2020 வரை)

கிரஹ நிலைகள் 14.03.2020 அன்று சூரியன் மீன ராசிக்கு 14.03.2020 காலை 11.23 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

மேஷ ராசி :

மேஷ ராசி

ராசிநாதன் செவ்வாய், குரு, புதன், ராகு மிகுந்த நன்மையை மாதம் முழுவதும் செய்கின்றனர். மற்ற கிரஹங்கள் அவ்வளவு சாதகமில்லை, எதிலும் ஒரு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். மாத மத்திக்கு பின் சுக்ரன் நல்ல வளத்தை செய்கிறார், திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடக்கும். புதிய வீடு வாங்குதல் அல்லது குடிபோகுதல் சிலருக்கு நடக்கலாம். தைரியம் கூடும், உத்தியோகத்தில் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், அனைத்து பிரிவினருக்கும் நன்மை உண்டாகும். இருந்தாலும் விரய சூரியன், மற்றும் 9ல் இருக்கும் கேது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் கவனம் தேவை, புதுமுயற்சிகள் வெற்றி தந்தாலும் மருத்துவ செலவும் கூடும், பணப்புழக்கம் தாராளம், நல்ல மாதம்.

சந்திராஷ்டமம் : மார்ச் 15,16,17 & ஏப்ரல் 11,12,13

குல தெய்வ வழிபாடு ஷண்முக கடவுள் வழிபாடு நன்மையை தரும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். அருகில் இருக்கும் கோவிலுக்கு தினம் செல்லுங்கள்.


ரிஷப ராசி :

இந்த மாதம் உங்களுக்கு மாதம் முழுவதும் லாபத்தில் சூரியன் மற்றும் மாத மத்தியில் செவ்வாய், ஓரளவு சுக்ரன் என்று  நன்மையை செய்கின்றனர். குரு, சனி மற்றும் புதன் மாத மத்தி வரையிலும் நன்மை இருப்பதால் கவலை வேண்டாம் சுகமான மாதம். அதிக பொருள்வரவு, சமூகத்தில் அந்தஸ்து கூடும், அரசாங்கத்தில் பலன் எதிர்பார்த்து இருப்போருக்கு ஆதரவு நிச்சயம், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், வீட்டிற்கு தேவையான வசதிகள் உண்டாகும். தொழிலில் அதிக லாபம்.பெண்கள் பங்குதாரராக இருக்கும் தொழில்களில் வெற்றி, பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறும், அரசில் வேலை பார்ப்போருக்கு எதிர்பாரா பதவி உயர்வு, கலைஞர்களுக்கு கொஞ்சம் சிரத்தையின் பேரில் முன்னேற்றம் அரசியல்வாதிகளுக்கு நற்பெயர், மாணவர்கள் பாராட்டுகளை பெறுவர், பெண்கள் விவசாயிகள் என்று அனைவருக்கும் நன்மை தரும் மாதம் என்றாலும் 8ல் கேது சில உபாதைகளை தரும் என்பதால் கொஞ்சம் கவனமும் சரியான மருத்துவசிகிச்சையை மேற்கொள்வதும் நலம் தரும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 17,18,19.

ஓம் நமசிவாய சொல்லுங்கள். நன்மைகள் இருப்பதால் அன்னதானம் செய்யுங்கள் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு செல்லுங்கள் அங்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபடுங்கள்.


மிதுன ராசி :

ஓரளவு நல்ல நிலையை உண்டாக்கும் மாதம் சூரியன் செவ்வாய், மற்றும் சனி அதிக நற்பலன்களை தருவார்கள் நினைத்த செயல்கள் நிச்சயம் நிறைவேறும். புதனும் சுக்ரனும் மாத பிற்பகுதியில் நன்மை தருவர். ஜென்மத்தில் ராகு கொஞ்சம் தொல்லை தரும். தொழிலில் வாடிக்கையாளர் ஆதரவு, பணியாளர்களுக்கு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். கொஞ்சம் சிரமம் இருக்கும்.

குருவும் அதிசாரமாய் 8ல் செல்வது கொஞ்சம் செலவுகள், சில மன சஞ்சலங்களையும் தரும். இருந்தாலும் சூரியன் சுக்ரன் பொருளாதாரத்தை மேம்படுத்தவர், கலைஞர்கள், பெண்கள் விவசாயிகள் ஓரளவு நல்ல  நிலையை காண்பார்கள் கடின உழைப்பு தேவைப்படும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு தாய் வழியில் சீதனம் மாதிரி பொருள் வர வாய்ப்பு சிலருக்கு திருமண வாய்ப்பு தேடிவரலாம். குடும்பத்தில் ஓரளவு குதூகலமும் பண புழக்கமும் இருக்கும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 19,20,21.

ராகு-கேது மற்றும் துர்கைக்கு அர்ச்சனை செய்யுங்கள், அம்பாளை வழிபடுங்கள், குல தெய்வ வழிபாடு நன்மையை தரும். அன்னதானம், வஸ்த்ர தானம் சரீர உதவி போன்றவற்றை இந்த மாதம் செய்யுங்கள்.


கடக ராசி :

9ல் இருக்கும் சூரியனும், 7ல் இருக்கும் சனியும் அதிசாரமாய் 7க்கு வரும் குருவும் நன்மை செய்கின்றனர். சுக்ரன் முற்பாதியில் நன்மையும் புதனால் பிற்பாதியில் நன்மையும் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும் இனிய அனுபவும் உண்டாகும். சந்திரனின் சஞ்சாரம் அவ்வப்போது தொல்லை தரும் அதுபோல 6ல் இருக்கும் கேது மிகுந்த சிரமங்களை அல்லது மன உளைச்சலை தரும் கவனம் தேவை. சொந்த தொழில் செய்வோர் கணக்குவழக்குகளை சரியாக வைத்து கொள்ளவும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் முற்பகுதியில் கிடைத்த மேலதிகாரிகளின் ஆதரவு மாத பிற்பகுதியில் எதிராக மாறக்கூடும். பொறுமை தேவை சக ஊழியர்களுடன் அனுசரித்து போவது நல்லது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும் ஏப்ரல் 1க்கு பிறகே நல்ல நிலை.  அரசியல்வாதிகள் மாணவர்கள் கொஞ்சம் பரவாயில்லை நன்மைகள் இருக்குமே தவிர கஷ்டங்கள் இருக்காது.  விவசாயிகளுக்கு திடீர் செலவுகள் உண்டாகும் வழக்கு விவரங்களில் அசட்டையாக இருக்க கூடாது. பெண்களுக்கு நன்மை தரும் மாதமாக இருக்கு இருந்தாலும் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நலம்.

சந்திராஷ்டமம் : மார்ச் 21,22,23

மஹாலக்ஷ்மீ, அம்பாளை வழிபடுங்கள், அம்பாள் அல்லது பத்ரகாளி கோவிலில் எலுமிச்சை விளக்கேற்றுங்கள், ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். முடிந்தால் தாயாருக்கு புடவை சாற்றுங்கள்.


சிம்ம ராசி :

ராசிநாதன் சூரியன் 8ல் அதனால் ஆரம்பத்தில் குடும்பத்தில் குழப்பம், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, எல்லாவற்றிலும் தடங்கல் என்று இருக்கும். இருந்தாலும் 7ல் இருக்கும் புதன் நல்ல யோசனையை கொடுத்து சரியாக்கும், மற்ற கிரஹங்கள் ஓரளவு சாதகம்,  உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நிலையில் திருப்தி இருக்கும். தொழில் செய்வோர்கள் அதிக உழைப்பின் பேரில் வருமானம் உண்டாகும். பொருளாதாரம் சுமார். அரசுவகையில் தொடர்புள்ளோருக்கு பிரச்சனை வரலாம். 

பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்து பணி செய்ய வேண்டும் மாத பிற்பகுதியில் உடன் வேலை செய்பவரால் தொல்லை வரலாம், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காணவேண்டி வரும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். விவசாயிகள் ஓரளவு லாபம் உண்டாகும். புதிய சொத்து முயற்சியை தள்ளி போடுங்கள். வழக்கு விவரங்களில் மெத்தனம் கூடாது.   பெண்கள் பொறுமையுடன் இருந்தால் அடுத்தவர் அன்பை பெறலாம்.

சந்திராஷ்டமம் : மார்ச் 24,25,26

கால பைரவருக்கு பூஜை செய்யுங்கள். ருத்ரம், சமகம் படியுங்கள், முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள். சிவ நாமத்தை உச்சரித்து கொண்டிருங்கள்.


கன்யா ராசி :

புதன் சூரியன், செவ்வாய் மிகுந்த  நன்மை செய்வார்கள், அதிசார குருவும், பிற்பகுதியில் சுக்ரனும் நல்ல பலனை தருவதால், புதிய முயற்சிகளில் வெற்றி, இல்லத்தில் மங்கள நிகழ்வுகளால் சந்தோஷம் சமூகத்தில் மதிப்பு கூடுதல், கணவன் மனைவி இடையே அன்பு கூடும், 4ல் இருக்கும் கேதுவால் உடல் நிலை கொஞ்சம் பாதிக்கப்படும் கவனம் தேவை. பணப்புழக்கம் தாராளம், சேமிப்பை துவங்குங்கள், தொழில்/வியாபாரத்தில் எதிரிகள் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

பணியாளர்களுக்கு நல்ல மாதம் , ஊதிய உயர்வு அல்லது அதற்கு ஈடான வரவு சிலருக்கு பதவி உயர்வு என்று இருக்கும். உஷ்ண சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு பெருகும் பாராட்டுகள் கிடைக்கும், அரசியல்வாதிகள் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். விவசாயிகள் காய்கறிகள் பழங்கள் மூலம் அதிக வருவாயை காண்பர். பெண்களுக்கு சந்தோஷமான மாதம் இது.பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். நன்மை தரும் மாதம் இது.

சந்திராஷ்டமம் :  மார்ச் 27,28,29

ராம நாமத்தை உச்சரித்து கொண்டிருங்கள். ராமதூதனை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள். அடுத்தவருக்கு சரீர உதவிகளை செய்யுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.


துலா ராசி :

6ல் இருக்கும் சூரியன், 5ல் இருக்கும் புதன், ராசிநாதன் சுக்ரன் மற்றும்  ராகு அதிக நற்பலனை தருவர். எதிரிகளை வீழ்த்துவீர்கள், பொருளாதாரம் மேம்படும், சமூக அந்தஸ்து கூடும். பணவரவு தாராளம், விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சனி மற்றும் குரு சஞ்சாரம் மன உளைச்சல், அலைச்சல் கொஞ்சம் இருக்கும். குரு பார்வை ஓரளவு பலன் தரும். தொழிலதிபர்கள் அடிக்கடி ப்ரயாணம் செய்ய வேண்டிவரும் கூட்டாளியுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும், திடீர் பணவரவு உண்டாகும்.  பணியாளர்கள் கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி வரும் ஆனாலும் அதிகாரிகள் ஆதரவு செல்வாக்கை உயர்த்தும். சிலருக்கு பதவி உயர்வு மாத பிற்பகுதியில் வரும்.

மார்ச் 28ல் சுக்ரன் இடம் மாறுவதால் கலைஞர்களுக்கு கடந்தமாதம் வரை இருந்த துன்பம் விலகி சந்தோஷம் ஏற்படும். அரசியல் வாதிகள் சீரான வளர்ச்சியை பெறுவர். தொண்டர்களின் ஆதரவு இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் வரும். புதிய சொத்துக்கள் சிலர் வாங்கலாம். பெண்களுக்கு நல்ல காலம் திருமண தடை இருந்தவர்களுக்கு அது நீங்கி திருமணம் கைகூடும். ஆடை ஆபரணங்கள் சேரும் மகிழ்ச்சி பெருகும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 29,30,31

மஹாலக்ஷ்மி கோவிலுக்கு சென்று தாயார் சன்னதியில் விளக்கேற்றி வழிபடுங்கள். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். காக்கைக்கு எள் சாதம் வையுங்கள்.


விருச்சிக ராசி :

ராசிநாதன் 3ல் உச்சம், தைரியம் கூடும், 5ல் சூரியன் பொருள் வரவை உண்டாக்கும். திருமண முயற்சிகளில் இருப்போருக்கு வெற்றி உண்டாகும். சுக்ரன் புதன்  இருவராலும் அதிக நன்மை உண்டாகும். புதன் மாதஆரம்பத்திலும் பின் கடைசியிலும் பலன் தருவார். 2ல் கேது கொஞ்சம் தொல்லை கொடுத்தாலும் குரு பார்வை அதை சரிசெய்யும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்தோருக்கு அது கிடைக்கும். தொழில் பின் தங்கிய நிலை இருந்துவந்தது இனி மாறும். திடீர்வருமானம் மாத மத்தியில் கிடைக்கும்.  பணியாளர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு இதுவரை இருந்துவந்த வேலை பளு குறைதல் ஏப்ரலில் முன்னேற்றம் உண்டாவதற்கான சம்பவம் நடக்கும்.  கலைஞர்களுக்கு விடாமுயற்சியின் பலனாய் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய பதவி கிடைக்க அதிக வாய்ப்பு. மானவர்கள் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் வரும். பெண்களுக்கு மகிழ்ச்சி ஆடை ஆபரண சேர்க்கை பணவரவு என்று சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. இந்த மாதம் மகிழ்ச்சி அதிகம் இருக்கும்

சந்திராஷ்டமம் : மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1,2

குல தெய்வத்தை வழிபடுங்கள். இதுவரை இருந்துவந்த கஷ்டங்கள் நீங்குவதால் பெருமாள் கோவிலுக்கு சென்று ந்ருஸிம்ஹருடன் சேர்ந்த சக்ரத்தாழ்வாரை வணங்குங்கள். தீபம் ஏற்றுங்கள்


தனூர் ராசி:

ராசிநாதன் குரு அதிசாரமாய் மகரத்துக்கு சென்று பலன் தருவார், மாதமத்தியில் புதனால் நன்மை உண்டாகும். செவ்வாய் சில லாபங்களை தரும், மற்ற கிரஹங்கள் அனுகூலம் இல்லை. பயணங்கள் இருக்கும். பெரியோர் ஆதரவு நண்பர்களின் உதவி என்று நன்றாக இருக்கும். மாத மத்தியில் பொன் பொருள் வந்து சேரும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழிலதிபர்கள் சீரான வளர்ச்சியை காண்பர். அரசாங்கத்தோடு தொடர்புடையோருக்கு அனுகூலமற்ற நிலை இருக்கிறது. வரவு செலவு கணக்கை சரி செய்து கொள்ளவும். தொழில் ரீதியாக அடிக்கடி ப்ரயாணம் மேற்கொள்ள நேரிடும். 

பணியாளர்கள் ஆரம்பத்தில் வேலை பளுவும், பிற்பகுதியில் அதிக நன்மையும் உண்டாகும். கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். சிலர் வேலைவிஷயமாய் குடும்பத்தை விட்டு பிரியலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைத்து சந்தோஷம் ஏற்படும். மாணவர்கள் உற்சாகத்துடன் படிப்பர் ஆசிரியர்கள் ஆதரவு இருக்கும். அரசியல்வாதிகள் ப்ரதிபலனை எதிர்பாராமல் உழைப்பர் அதன் பலன் கிட்டும். விவசாயிகள் தங்களின் உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவர்.  கால்நடையால் ஆதாயம் உண்டு.  பெண்களுக்கு அனைவரின் ஆதரவு உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாத ஆரம்பம் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

 சந்திராஷ்டமம் :  ஏப்ரல் 3,4,5

துர்கை, அம்பாளை வணங்குங்கள், அன்னதானம் செய்யுங்கள், நெய்விளக்கு ஏற்றுங்கள். அம்பாள் சன்னதியில் சிறிது நேரம் அமர்ந்து அம்பாளை மனதில் தியானித்து கொள்ளுங்கள்.


மகர ராசி :

தைரியஸ்தானத்துக்கு செல்லும் சூரியனால் பராக்ரமம் அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணலாம். புதன், சனி குரு, சூரியன் சுக்ரன், செவ்வாய் என்று அனைத்து கிரஹங்களும் சாதகமான நிலையில் இருக்கிறது. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உறவுகளின் ஆதரவு உண்டு. கோவில்களுக்கு செல்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், சிலருக்கு திருமண ப்ராப்தம் கூடிவரும், தொழிலதிபர்கள் மாத பிற்பகுதியில் அதிக லாபத்தை அடைவர் அரசுவகையில் எதிர்பார்ப்புகள் தாமதம் உண்டாகும். பணியாளர்களுக்கு ராகு சாதகமற்று இருப்பதால் பணிச்சுமை கூடும். இருப்பினும் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். கலைஞர்கள் அதிக ஆதாயம் அடைவர்.

புதிய ஒப்பந்தங்கள் நன்மையை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக வளர்ச்சி காண்பர். அரசியல்வாதிகளுக்கு சிறப்பான நியலை விரும்பிய பதவி கிடைக்கும். விவசாயிகள் சீரான மகசூல், புதிய சொத்து வாங்குதல் என்று இருக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வரும். பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதம் இது. புதிய ஆபரணங்கள் ஆடைகள் வாங்கலாம். சந்தோஷமான அனுபவங்கள் கூடும். பொதுவில் இந்த மாதத்தில் சேமிப்பை அதிகரித்து கொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 5,6,7

ஞாயிற்று கிழமைகளில் பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். அருகில் மாரியம்மன் கோவில் அல்லது அம்பாள் கோவில் இருந்தால் சென்று ஒரு அர்ச்சனை செய்து கொள்ளவும். தானங்கள் நிறைய செய்யுங்கள். அன்னதானம், பாசிப்பயறு தானம் இவற்றை செய்வது நன்மையை தரும்.


கும்ப ராசி :

புதன்,சுக்ரனாலும் செவ்வாயாலும் நிம்மதி பெருமூச்சு விடலாம். ராசியாதிபதி சனியும் நற்பலனை தருவார். குருபகவான் பார்வையால் நன்மை தருவார். ஓரளவு நிறைவை தரும் மாதமாக அமையும். மற்ற கிரஹங்களால் அனுகூலம் இல்லை எனினும் தொந்தரவு இருக்காது.  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகம் இருக்கும். உறவினரிடம் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மாதமத்தியில் பணவரவு, கூட்டாளிகள் மூலம் நன்மை என்று உண்டாகும்.  பணியாளர்கள் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பணிச்சுமை குறையும். கடின உழைப்பு நல்ல பலனை தரும். கலைஞர்கள் புகழ் பாராட்டை பெறுவர் புதிய ஒப்பந்தங்களால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் உழைப்புக்கேற்ற பலனை பெறுவர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பார்கள் பெற்றோர் வழிகாட்டுதலில் முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு பொருளாதாரத்தில் குறைவிருக்காது. விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். கால் நடை மூலம் நல்ல பலன் உண்டாகும். பெண்கள் சிறப்பான நிலை பெறுவர். மாத மத்தியில் ஆடை அணிகலன் வாங்கலாம். மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 7,8

திருப்பதி பெருமாளை வணங்குங்கள். கோவிந்த நாமத்தை சொல்லிக் கொண்டிருங்கள். இதுவரை இருந்துவந்த துன்பங்கள் மறைவதால் மகிழ்ச்சியுடன் தான தர்மங்களை செய்யுங்கள்.


மீன ராசி :

குரு, சனி, செவ்வாய், சுக்ரனால் அதிக நன்மை. புதன் ஓரளவு நன்மை தரும். மற்ற கிரஹங்களால் பாதிப்பு இருக்காது. பொருளாதார ஏற்றம் இருக்கும். அரசாங்கத்தின் சலுகை கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். திருமணத்தை எதிர்பார்த்து இருப்போருக்கு ஏப்ரலில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகி இருக்கும், பணப்புழக்கம் தாராளம்,  உடல் நிலை திருப்தி அளிக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். தொழில்/வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். எதிரிகள் தொல்லை அகலும். தொழில்ரீதியான பயணம் வெற்றியை தரும். பணியாளர்களுக்கு விருப்பப்படி இடமாற்றம் கிடைக்கும். எதிர்பாரா நன்மையும் கிடைக்கும், அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.  அதிகாரிகள் ஆதரவு பதவி உயர்வு என்று சிறப்பாய் இருக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றம் உண்டு. ஒப்பந்தங்கள் எளிதாக கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய பதவி உண்டாகும் பொருளாதாரம் கூடும். மாணவர்கள் தேர்வுக்கான அக்கறையுடன் படிப்பர் நல்ல மதிப்பெண் பெறுவர். விவசாயிகள் வருமானம் உயரும் புதிய சொத்துக்கள் வாங்க கொஞ்சம் காலம் பொறுமை காக்க வேண்டும். அவசர பட கூடாது. பெண்கள் அக்கம்பக்கத்தினர் அன்பை பெறுவர் பெரியோர்களின் ஆசீர்வாதம் இருக்கும். சமூகத்தில் நற்பெயர் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 8,9, 10

நரசிம்மரை வழிபடுங்கள். ந்ருஸிம்ஹ ஸ்லோகங்களை சொல்லுங்கள். மாதம் முழுவதுமே லாபம் தருவதாய் அமைவதால் எளியோருக்கு ஏழைகளுக்கு உதவுங்கள் அன்னதானம் செய்யுங்கள்

குறிப்பு : ராசிபலன்கள் பொதுவானவை. உங்களுடைய சரியான முழுபலனையும் அறிந்து கொள்ள உங்கள் ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன் பெறுவது சிறந்த ஒன்று.

சர்வே ஜனா சுகினோ பவந்து!

உங்கள் அன்பன்
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)
ஜோதிடர்
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

D1, Block 1, அல்சா கிரீன் பார்க்

ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு, நேரு நகர்

குரோம்பேட்டை, சென்னை – 600 044
044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
mannargudirs1960@gmail.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.