பிப்ரவரி 09 ராசி பலன்

🕉️மேஷம்
பிப்ரவரி 09, 2021
தை 27 – செவ்வாய்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் சாதகமாக அமையும். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நன்மையளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் திடீரென குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : நம்பிக்கை மேம்படும்.


🕉️ரிஷபம்
பிப்ரவரி 09, 2021
தை 27 – செவ்வாய்

உத்தியோகம் தொடர்பான முடிவுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் குழப்பமும், காலதாமதமும் உண்டாகும். சுரங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : விழிப்புணர்வு வேண்டும்.


🕉️மிதுனம்
பிப்ரவரி 09, 2021
தை 27 – செவ்வாய்

எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக கிடைக்கும். வாக்குவன்மையால் இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய எடுத்த முயற்சிகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : முயற்சிகள் மேம்படும்.
புனர்பூசம் : தடைகள் அகலும்.


🕉️கடகம்
பிப்ரவரி 09, 2021
தை 27 – செவ்வாய்

அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை சாதகமாக முடிப்பீர்கள். தனவரவுகள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான மனக்கவலைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : இழுபறிகள் அகலும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


🕉️சிம்மம்
பிப்ரவரி 09, 2021
தை 27 – செவ்வாய்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
பூரம் : தாமதங்கள் குறையும்.
உத்திரம் : ஆதாயம் கிடைக்கும்.


🕉️கன்னி
பிப்ரவரி 09, 2021
தை 27 – செவ்வாய்

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும். தனவரவுகள் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாழ்க்கைத்துணைவரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

🕉️துலாம்
பிப்ரவரி 09, 2021
தை 27 – செவ்வாய்

மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை பகிர்வதன் மூலம் தெளிவு கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகள் தொடர்பான எண்ணங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் பழுப்பு

சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
சுவாதி : மாற்றமான நாள்.
விசாகம் : காலதாமதம் உண்டாகும்.


🕉️விருச்சிகம்
பிப்ரவரி 09, 2021
தை 27 – செவ்வாய்

புதிய ஒப்பந்தங்களின் மூலம் லாபம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். உறவினர்களின் மூலம் எதிர்பாராத அலைச்சல்களும், செலவுகளும் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை கவனத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : லாபம் மேம்படும்.
அனுஷம் : சிந்தித்து செயல்படவும்.
கேட்டை : ஒற்றுமை அதிகரிக்கும்.


🕉️தனுசு
பிப்ரவரி 09, 2021
தை 27 – செவ்வாய்

வாக்கு சாதுர்யத்தின் மூலம் ஆதரவு கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நெருக்கடியான சூழ்நிலைகள் மறைந்து சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் நிம்மதியும், புத்துணர்ச்சியும் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனம் மற்றும் மனைகளின் மூலம் லாபம் உண்டாகும். தொழில் அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.


🕉️மகரம்
பிப்ரவரி 09, 2021
தை 27 – செவ்வாய்

மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது. தொழில் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும்.
திருவோணம் : குழப்பங்கள் அகலும்.
அவிட்டம் : இழுபறிகள் நீங்கும்.


🕉️கும்பம்
பிப்ரவரி 09, 2021
தை 27 – செவ்வாய்

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். பாதியில் நின்ற காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். உறவினர்களின் ஆதரவின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
சதயம் : நட்பு கிடைக்கும்.
பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.


🕉️மீனம்
பிப்ரவரி 09, 2021
தை 27 – செவ்வாய்

மாணவர்கள் எதிர்பார்த்த மேற்படிப்பு தொடர்பான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் எண்ணிய செயல்கள் நிறைவேறும். அரசாங்கத்தின் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவின் மூலம் நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : மேன்மை உண்டாகும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.