பிப்ரவரி 12 ராசி பலன்

🕉️மேஷம்
பிப்ரவரி 12, 2021
தை 30 – வெள்ளி

குடும்பத்தில் பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் மேம்படும். மூத்த சகோதரர்களிடம் எதிர்பார்த்த ஆதரவான சூழல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளும், செயல்பாடுகளும் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.


🕉️ரிஷபம்
பிப்ரவரி 12, 2021
தை 30 – வெள்ளி

வியாபாரம் தொடர்பான தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

கிருத்திகை : திருப்தியான நாள்.
ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.


🕉️மிதுனம்
பிப்ரவரி 12, 2021
தை 30 – வெள்ளி

உத்தியோகம் தொடர்பான முடிவுகளில் பொறுமையுடன் செயல்படவும். வாகனம் தொடர்பான பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். வாரிசுகளால் ஏற்பட்ட மன அழுத்தங்களுக்கு தீர்வு கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : மாற்றமான நாள்.
புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.


🕉️கடகம்
பிப்ரவரி 12, 2021
தை 30 – வெள்ளி

செயல்பாடுகளில் பொறுமையுடனும், அமைதியுடனும் இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதில் குழப்பங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விஷயங்களுக்கு கோபங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகளை செய்யும்போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : அமைதி வேண்டும்.
பூசம் : குழப்பமான நாள்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.


🕉️சிம்மம்
பிப்ரவரி 12, 2021
தை 30 – வெள்ளி

குடும்பத்தில் சுபச்செய்திகள் கிடைக்கும். உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : சோர்வுகள் நீங்கும்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.


🕉️கன்னி
பிப்ரவரி 12, 2021
தை 30 – வெள்ளி

முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலையாட்களின் ஒத்துழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் சிலருக்கு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அஸ்தம் : லாபம் அதிகரிக்கும்.
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.


🕉️துலாம்
பிப்ரவரி 12, 2021
தை 30 – வெள்ளி

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், கலகலப்பும் அதிகரிக்கும். தனவரவுகள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். நுட்பமான சிந்தனைகள் மூலம் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : கலகலப்பான நாள்.
சுவாதி : தனவரவுகள் மேம்படும்.
விசாகம் : பாராட்டுகள் கிடைக்கும்.


🕉️விருச்சிகம்
பிப்ரவரி 12, 2021
தை 30 – வெள்ளி

மனதில் எண்ணிய எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவதற்கான முயற்சிகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். கடன் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நெருக்கமானவர்களுக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மூலம் அலைச்சல்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : முயற்சிகள் மேம்படும்.
அனுஷம் : வாக்குவாதங்கள் மறையும்.
கேட்டை : விட்டுக்கொடுத்து செல்லவும்.


🕉️தனுசு
பிப்ரவரி 12, 2021
தை 30 – வெள்ளி

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதளவில் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சிலருக்கு வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். உத்தியோக உயர்வு தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : வெற்றி கிடைக்கும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.


🕉️மகரம்
பிப்ரவரி 12, 2021
தை 30 – வெள்ளி

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது மேன்மையை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பின் மூலம் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
திருவோணம் : நன்மை உண்டாகும்.
அவிட்டம் : மேன்மையான நாள்.


🕉️கும்பம்
பிப்ரவரி 12, 2021
தை 30 – வெள்ளி

உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
சதயம் : அனுகூலமான நாள்.
பூரட்டாதி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


🕉️மீனம்
பிப்ரவரி 12, 2021
தை 30 – வெள்ளி

உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுகளின் மூலம் நன்மை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கௌரவ பதவிகள் கிடைக்கும். உபரி வருமானத்தின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : கலகலப்பான நாள்.
உத்திரட்டாதி : லாபம் அதிகரிக்கும்.
ரேவதி : ஆதாயம் உண்டாகும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.