பிலவ வருஷம் ஆடி மாதம் ராசி பலன்கள்

நாளது 16.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 04:53:34 மணிக்கு (சூரிய உதயாதி நாழிகை 26:26:24 வினாடிக்கு) மிதுனத்தில் இருந்து சூரிய பகவான் கடக ராசியில் அடியெடுத்து வைக்கிறார்  கடக ராசியில் 17.08.2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01:17:17 மணிவரை சஞ்சரிக்கிறார். அதற்கான பலா பலன்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

கிரஹ நிலைகள் மாதம் பிறக்கும் நேரத்தில் :

லக்னம் : தனூர்- மூலம் 2,  சூரியன்: கடகம்-புனர்பூசம் 4,  சந்திரன்: கன்னி ஹஸ்தம்3,   செவ்வாய் : கடகம் – ஆயில்யம்4

புதன்: மிதுனம்– திருவாதிரை 2, குரு(வ) : கும்பம்-சதயம் 1,  சுக்ரன்: கடகம் – ஆயில்யம் 4,  சனி(வக்ரம்):  மகரம் –  திருவோணம் 3

ராகு: ரிஷபம் – ரோஹிணி 2,   கேது: விருச்சிகம் –  அனுஷம் 4

பொதுவாக இந்த மாதம் : இந்த மாதத்தின் நாயகன் சந்திரன் அவர் பலமாக தன் நக்ஷத்திரத்தில் லக்னத்துக்கு 10ல் இருக்கிறார்.  அதே நேரம் சனி ஆட்சியாகவும் வக்ரியாகவும் பலமாக இருப்பதும் கலப்படமான பலனை தரும். இந்த மாதம் தமிழ்நாட்டை பொருத்தவரை (வராஹமிகிரர் படி இந்தியா மகர ராசி)  கேது சனியை பார்ப்பதால் கிருமியால் தொல்லை அதிகரிக்கும். கொஞ்சம் குழப்பங்கள் ஆட்சியாளர்கள் சிரமப்பட நேரிடலாம். மக்களுக்கு வியாதி மற்றும் பொருளாதார பாதிப்புகளும் இருக்கும். அதே நேரம் சூரியன், புதன் குரு, ராகு நன்மைகளை செய்வதால் கஷ்டங்களை தீர்க்கும் வழியும் உண்டாகும். மழையினால் பாதிப்பும், விவசாயம், விலைவாசி, பால் பொருட்கள் மட்டுமல்லாது இரும்பு வஸ்துகள் தொடர்பு துறைகளும் பாதிப்படையும். அண்டை நாடுகளால் தொல்லை பணப்புழக்கம் குறைவு  இருந்தாலும் சூரியன் மற்றும் சுக்ரன் ஓரளவு நன்மையை தந்து பரவாயில்லை என சொல்லும்படி இருக்கும்.

இந்த மாதம் நன்மை பெறும் நக்ஷத்திர காரர்கள் :

மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை, ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம், கிருத்திகை, உத்திராடம், பரணி, பூராடம், திருவாதிரை ஸ்வாதி, சதயம்

மற்றவர்கள் கொஞ்சம் நிதானம் தேவை; முக்கியமாக சிம்ம ராசி காரர்கள் பொறுமை அவசியம்.

மேஷம் : (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய) :

பொதுவில் ஜூலை 20க்கு பின் 5ம் இடம் செல்லும் ராசிநாதன் மற்றும் சுக்ரன் ஓரளவு நன்மை செய்வதும், 4ல் சுகஸ்தானத்தில் சூரியன் இருந்து பத்தாமிடம் பார்ப்பது. பொருளாதாரம் உயர்வை தரும், தேவைகள் பூர்த்தியாகும் உத்தியோகம் சொந்த தொழில் என்று அனைவருக்கு பெரிய பலன்கள் இல்லை எனினும் ஓரளவு சமாளிப்பீர்கள், கடந்தகால தவறுகளுக்கு ப்ராயசித்தம் தேடும் வாய்ப்பு வரும். நண்பர்கள் உறவினர்களை விட வாழ்க்கை துணை பிள்ளைகள் மூலம் அதிக நன்மை உண்டாகும். தீர்த்த யாத்திரைகள் அமையும், சிலருக்கு புதுவீடு போகுதல், இடமாற்றம் உத்தியோக மாற்றம் இருக்கும்.20.07.21க்கு பின் ராசிநாதனின் லாபத்தை நோக்கிய பார்வை சில திடீர் பொருள்வரவு பண வரவு என்று கொடுக்கும். மற்ற கிரஹங்கள் வலுவில்லை பெரிய கெடுதல் இல்லை ஆனால் 8ல் கேது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மனதை காயப்படுத்தும் இறை தியானம் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் பலன் தரும். பொதுவில் ஓரளவு நன்றாக இருக்கும் கவனம் தேவை.

அஸ்வினி : நக்ஷத்திரநாதன் கேது சனியின் நக்ஷ்த்திரகாலில் சனிபகவான் பத்தில் ஆட்சி, கடந்த மாதம் போல ஜீவன வகையில் குறை இருக்காது ஆனாலும் 2ல் ராகு குடும்பத்தில் சலனத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் மேலும் குரு வக்ரம் அடைந்து 7ம் இடம் 5ம் இடம் பார்ப்பது பெரிய நன்மை தரும் என சொல்ல இயலாது.  5க்குடைய சூரியன் 4ல் இருப்பது எதிர்பார்த்த திருமணம், குழந்தை பாக்கியம் தள்ளி போக வாய்ப்பு தரும். ஆனாலும் ராசிநாதன் செவ்வாய் 5ல் செல்லும் போது ஓரளவு கைகூட வாய்ப்பு. உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை நிதானம் பொறுமையுடன் பதில் சொல்ல வேண்டும் மௌனம் நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: 19.07.21 இரவு 08.45 மணி முதல் 20.07.21 இரவு 7.05 மணி வரை, மற்றும் 16.08.21 அதிகாலை 04.25 மணி முதல் 17.08.21 அதிகாலை 03.16 மணி வரை

பரணி : நக்ஷத்திரநாதன் சுக்ரன் ராசிக்கு 2,7 க்குடையவர் 17.07.21 முதல் 11.08.21 வரை சிம்மராசியில் சஞ்சாரம் ராசிநாதன் செவ்வாயுடன் மேலும் 5க்குடைய சூரியன் சுகஸ்தானத்தில் ஜீவனகாரகனை பார்த்தபடி, பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் அடையும், குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் ராகு சந்திரனின் நக்ஷத்திரகாலில் இருந்து சுகத்தை தருவதால் எதிலும் வெற்றி உண்டாகும். வேலை சிலருக்கு கிடைக்கும் பயணங்களால் நன்மை உண்டாகும். அனைத்து பிரிவினருக்கு பணவரவு தாராளம், மகிழ்ச்சி அதிகரிக்கும். சின்ன சின்ன சங்கடங்கள் இருந்தாலும் தீர்ந்துவிடும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள் அதே நேரம் சிக்கணம் தேவை முன் யோசனை அல்லது நலம் விரும்பிகள் பெரியோர்கள் ஆலோசனைப்படி எதிலும் முடிவு எடுப்பது நன்மை தரும். பொதுவில் பரவாயில்லை மாதம்.

சந்திராஷ்டமம்; 20.07.21 இரவு 07.05 மணி முதல் 21.07.21 மாலை 05.32 மணி வரை

கிருத்திகை 1ம் பாதம் : நக்ஷத்திராதிபதி 4ல் ராசிநாதன் செவ்வாயும் 20.07.21 முதல் 5ல் பெரிய முன்னேற்றம் இல்லை பரவாயில்லை அதே நேரம் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். சிக்கனம் தேவை, 6ல் சந்திரன் மாத ஆரம்பத்தில். குழப்பத்துடன் ஆரம்பிக்கும். சூரியன் பயணிக்கும் நக்ஷத்திராதிபதிகள், குரு,சனி, புதன் இவை மூன்றுமே உதவும் நிலையில் இல்லை மேலும் 2ல் இருக்கும் ராகுவும் 8ல் கேதுவும் மன உளைச்சல் உடல் உபாதைகள் வைத்திய செலவு என கொடுப்பார். கவனம் நிதானம் பொறுமை யோசித்து செயல்படுவது அவசியம் வெகு சுமாரான மாதம்.

சந்திராஷ்டமம்; 21.07.21 மாலை 05.32 மணி முதல்  22.07.21 மாலை 04.06 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : தக்ஷினாமூர்த்தி, சாஸ்தா வழிபாடு. தான தர்மம் செய்தல் நன்மை தரும்.

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய):

ராசியாதிபதி சுக்கிரன் நாலாவது வீடான சிம்மத்தில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 11 வரை சஞ்சரிக்கிறார் அதோடு சூரியன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் மேலும் புதன் இரண்டாம் வீட்டில் ஆட்சியாக இருக்கிறார் சனி ஒன்பதில் பலமாக இருக்கிறார் பொதுவாக இந்த கிரக நிலைகள் நல்ல அமைப்பை காட்டுகிறது மேலும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் செலவுகள் கட்டுப்படுதல் விருந்து கேளிக்கைகள் தீர்த்த யாத்திரைகள் மற்றும் உறவுகளின் மேன்மை நண்பர்களின் உதவிகள் இப்படி எல்லாம் ஆக நன்மையான விஷயங்கள் அதிகப்படியாக நடக்கிறது உத்யோகத்தில் உயர்ந்த நிலை பதவி உயர்வு சம்பளம் விரும்பிய இடமாற்றம் தேவைகள் நிறைவேறுதல் நன்மைகள் அதிகம் நடக்கும் சொந்தத் தொழில் செய்வோருக்கும் அப்படியே வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டாள் இந்த மாதம் நன்றாக இருக்கும் மேலும் ராசியில் ராகு இருப்பதாலும் குரு பத்தில் இருப்பதாலும் செலவுகள் முக்கியமாக மருத்துவ செலவுகள் தாய் தந்தை வழி செலவுகள் என்று இருக்கும் அதேநேரம் இந்த மாதம் வருமானம் அதிகம் மகிழ்ச்சியும் அதிகம் என்பதால் செலவுகள் பெரிதாக தெரியாது திருமணம் குழந்தை பாக்கியம் வீடு என்ற முயற்சிகள் இந்த மாதம் நிறைவேறும் கவலை வேண்டாம் நன்றாக இருக்கிறது

கிருத்திகை 2,3,4 பாதங்கள் : நக்ஷத்திர நாதனான சூரியன் மூன்றாம் இடத்தில் இருப்பதால் மனோதிடம் அதிகமாக இருக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் தேவைகள் நிறைவேறும் அதேபோல் செவ்வாய் சந்திரன் சுக்கிரன் புதன் சனி என்று இவர்கள் பலமாகவும் நன்மை தருவதாகவும் இருப்பதால் இந்த மாதத்தில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் மேலும் ஜீவன ஸ்தானம் நன்றாக இருப்பதால் உத்தியோகம் சொந்த தொழில் வருமானம் மிக நன்றாக அமையும் களத்திர பாவம் ஏழாமிடம் நன்றாக இருப்பதால் எதிர்பார்த்திருந்த திருமணம் கைகூடும் ஐந்தாமிடம் குருவின் சம்பந்தம் இருப்பதால் புத்திர பாக்கியம் சிலருக்கு உண்டாகும் பொதுவில் பெரிய கெடுதல்கள் எதுவும் இல்லை சில மருத்துவ செலவுகள் மற்றும் சுபச்செலவுகள் என்று இருக்குமே தவிர மனக்கஷ்டங்கள் இருக்காது நல்ல மாதம்

சந்திராஷ்டமம்; 21.07.21  மாலை 05.35 மணி முதல் 22.07.21 மாலை 04.08 மணி வரை

ரோஹிணி : நட்சத்திர நாதன் சந்திரன் மாத ஆரம்பத்தில் லக்னத்திற்கு பத்தில் இருப்பது நன்மை தருவதாகும் பொருளாதாரம் மேம்படும் எதிர்பார்ப்புகள் திட்டங்கள் நிறைவேறும் சூரியன் புதன் சுக்கிரன் சனி செவ்வாய் இவர்கள் நன்மை செய் செய்கிறார்கள் அதனால் இந்த மாதத்தில் என்ன திட்டமிடுகிறார்கள் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம் மேலும் கேதுவால் மருத்துவ செலவுகள் தந்தை வழியில் அல்லது குழந்தைகள் வழியில் உண்டாகலாம் மேலும் ஜாதகரீதியாக குரு பலம் பெற்று இருப்பவர்கள் சில உபாதைகளை கடன்தொல்லை அல்லது உடல் ரீதியான உபாதைகள் மற்றும் உறவுகள் நட்புகள் மூலம் தொல்லை வேலை பார்க்கும் இடத்தில் சொந்த தொழிலில் சில சின்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மனம் வருத்தமடையும் கவலை வேண்டாம் பொறுமையாக இருந்தால் அவை தவிர்த்து விடலாம்.

சந்திராஷ்டமம்: 22.07.21 மாலை 04.08 மணி முதல் 23.07.21  பகல் 02.56 மணி வரை

மிருகசீரிடம் 1,2 பாதங்கள் : நட்சத்திர நாதன் செவ்வாய் ஜூலை 20 முதல் நாலாம் வீடான சிம்மத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல உடல் உபாதையை கொடுப்போம் மருத்துவ செலவுகளை உண்டாகும் மற்ற கிரகங்கள் சூரியன் சுக்கிரன் புதன் சனி குரு இவர்கள் ஓரளவுக்கு நன்மை செய்கிறார்கள் உங்களுடைய தனிப்பட்ட ஜாதகம் பலமாய் இருந்தால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை மேலும் பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கும் காரணம் சுக்கிரன் மற்றும் சூரியன் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது இந்த மாதம் பரவாயில்லை என்று சொல்லும் படியாக இருக்கும் வருமானம் வரும் அதேநேரம் வைத்திய செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும் கவனம் தேவை ஆரோக்கியத்தில் மற்றபடி நன்றாக இருக்கும்

சந்திராஷ்டமம் : 23.07.21 பகல் 02.56 மணி முதல் 24.07.21 பகல் 01.59 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : மகாலக்ஷ்மி வழிபாடு, லக்ஷ்மி ஸ்தோத்திரங்கள் படித்தல்,. முடிந்த அளவு அன்னதானம் செய்வது நன்மை தரும்.

மிதுனம் : (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய) :

உங்க ராசிக்கு செவ்வாய் சுக்கிரன் ராகு கேது நிறைய நன்மைகள் தருகிறார்கள் குரு பரவாயில்லை அதேபோல் அஷ்டம சனி படுத்தாது எல்லாரும் சொல்கிறார்களே தவிர அது பெரிய துன்பத்தைத் தராது உங்களுக்கு ராசிநாதன் புதன் பரவாயில்லை அப்படிங்கற மாதிரி தான் இருக்கிறார் செவ்வாய் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வாகன யோகங்கள் வீடு யோகம் கிடைக்கும் சுக்கிரன் ஆடை ஆபரணச் சேர்க்கை மற்றும் கேளிக்கைகள் அதேபோல் திருமணம் குழந்தை பாக்கியம் மற்ற விசேஷங்கள் வீட்டில் நடக்க காரணமாய் இருக்கிறார் அதேபோல சுபச் செலவுகளை தருகிறார் கேது நோய்களை அகற்றி குறைக்கிறார் மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சொந்தத் தொழில் செய்பவர்கள் என்று அனைவரும் வருமானம் பெருகுவதை பார்ப்பார்கள் கவலை இல்லை ஓரளவுக்கு நன்மை தரக்கூடியதாக இந்த மாதம் அமைகிறது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துங்கள்

மிருகசீரிடம் 3,4 பாதங்கள் :  உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாய் ஜூலை 20 முதல் மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பது நன்மை தரும் அதேசமயம் சனி பகவான் எட்டில் சஞ்சரிப்பது வழியாக அது மருத்துவ செலவுகளை அல்லது உடல் உபாதைகளை கொடுத்துக் கொண்டிருக்கும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை மற்றபடி பொருளாதாரம் நன்றாக இருக்கும் செலவுகள் இருந்தாலும் சுப செலவுகளாக அது அமையும் இந்த மாதத்தில் உங்கள் தேவைகளை சரியாக திட்டமிட்டு நடத்தினால் வெற்றி உண்டாகும் பொதுவில் உங்களுக்கு இந்த மாதம் பரவாயில்லை என்று தான் இருக்கும் பெரிய துன்பங்கள் இருக்காது உத்தியோகத்தில் வருமானத்தில் குறைவு இருக்காது நல்ல மாதம்

சந்திராஷ்டமம் : 23.07.21 பகல் 02.56 மணி முதல் 24.07.21 பகல் 01.59 மணி வரை

திருவாதிரை:  உங்கள் நட்சத்திர நாதன் ராகு பகவான் ராசிக்கு 12ல் இருந்து நன்மைகளை சுப செலவுகளை தருகிறார் மேலும் செவ்வாயும் சுக்கிரனும் குருவும் அதேபோல் ஆறில் இருக்கும் கேதுவும் பல நன்மை தருவதால் பெரிய சங்கடங்கள் ஏதும் இல்லை பொருளாதாரம் நன்றாகவே இருக்கும் கேளிக்கைகள் ஆடம்பர பொருள்கள் ஆபரணச் சேர்க்கை என்று நன்றாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் ஜீவன வகையில் நன்றாக இருப்போம் திருமணம் குழந்தை பாக்கியம் புது வீடு குடி போகுதல் வாகனம் என்று வளமாக இருக்கும் இந்த மாதம் சிறப்பான மாதம் குருவும் சனியும் சூரியனும் சில உடல் உபாதை அல்லது மருத்துவர்கள் குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகள் என்று கொடுத்தாலும் அதை சமாளிக்கும் மனோதிடம் செவ்வாயால் ஏற்படும் இந்த மாதம் நன்றாக இருக்கும்

சந்திராஷ்டமம்: 24.07.21 பிற்பகல் 01.59 மணி முதல் 25.07.21 பிற்பகல் 1.24 மணி வரை

புனர்பூசம் 1,2,3 பாதங்கள் :. உங்கள் நட்சத்திர நாதர் குரு பகவான் ஒன்பதில் வகிரியாகம் ராகுவின் நட்சத்திர காலில் இருப்பதால் பெரிய பாதிப்புகளை செய்யமாட்டார் தந்தை வழியில் சில மருத்துவ செலவுகள் இருக்கலாம் பொருளாதாரம் நன்றாக இருக்கும் செவ்வாய் சுக்கிரன் ராகு கேது மற்றும் சந்திரன் இவை உங்களுக்கு இந்த மாதத்தில் வருமானத்தை பெருக்கி தருகிறது அது சொந்த தொழில் மூலமாக வரலாம் அல்லது உத்தியோகத்தில் உயர்வு வரலாம் அல்லது வேறு வகையிலும் வருமானம் வரலாம் அதனால் இந்த மாதம் வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம் மேலும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை செலவுகள் கட்டுப்படும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் சமுதாயத்தில் நல்ல நிலை இருக்கும் மகிழ்ச்சியான மாதம்

சந்திராஷ்டமம்:  25.07.21 பிற்பகல் 01.24 மணி முதல் 26.07.21 பிற்பகல் 01.16  மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : காளி/துர்க்கை வழிபாடு எல்லை தெய்வ வழிபாடு நன்மை தரும். ஏழைகளுக்கு பயன் படும் உதவிகளை செய்வது அன்னதானம் நன்மை தரும்.

கடகம் : (புனர்பூசம் 4ம்பாதம், பூசம், ஆயில்யம் முடிய) :

மாத ஆரம்பத்தில் உங்கள் ராசி அதிபதி மூன்றாம் வீட்டில் இருப்பது நன்மை உண்டாகும் மேலும் இரண்டு மற்றும் மூன்றில் சுக்கிரன் சஞ்சரிப்பது நன்மை தரும் மேலும் வலுவான கிரகங்கள் ராகு சனி இவை ஒரு பக்கம் நன்மை தந்தாலும் கடும் முயற்சிக்கு பிறகு வெற்றிகள் உண்டாகும் காரணம் ராசியில் இருக்கும் சூரியன் எட்டில் இருக்கும் குரு ஐந்தில் இருக்கும் கேது இவை கெடுதலை செய்கிறது உடல்ரீதியான படுத்தல் குழந்தைகளால் கஷ்டம் இல்லத்தில் யாருக்காவது மருத்துவ செலவு சொரி சிரங்கு அடிபடுதல் அல்லது மனதுக்கு துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்கள் என்று நிறைய இருக்கும் ஒரு பக்கம் பணவரவு இருக்கும் மறுபக்கம் செலவும் இருக்கும் ஜீவன வகையில் ஓரளவே இருக்கும் உத்தியோகத்தில் முன்னேற்றம் என்பது கடுமையான முயற்சிக்கு பிறகு சொந்தத் தொழிலிலும் அரசு உதவி அல்லது வங்கிக் கடன் கிடைப்பதில் இழுபறி இருக்கும் தொழிலாளர்கள் விரோதம் வரலாம் பொதுவில் ஓரளவு நன்மையும் பெரும்பாலும் கெடுதலும் இருப்பதால் இந்த மாதம் மிக சுமாரான மாதம் எதிலும் கவனமாகவும் தகுந்த ஆலோசனை பெற்று எந்த முடிவுகளையும் எடுப்பது நல்லது குடும்பத்தாரோடு அனுசரித்து போவது மற்றும் எவரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது 

புனர்பூசம் 4ம் பாதம் : நட்சத்திர நாதன் குரு பகவான் ஓரளவு நன்மை செய்தாலும் ஐந்தில் இருக்கும் கேது ஏழாம் இடத்தை பார்ப்பது மனைவி வழியில் அல்லது வாழ்க்கை துணை வழியில் மருத்துவச் செலவுகள் மனக்கசப்புகள் இருந்துகொண்டிருக்கும் சுக்கிரன் மற்றும் சனி மிகுந்த நன்மை தருகிறார்கள் பொருளாதாரம் நன்றாக இருந்தாலும் செலவுகளும் அதற்கேற்றபடி இருக்கும் மேலும் உடல் உபாதைகள் அல்லது குடும்பத்தினரின் மருத்துவ செலவுகள் அதேபோல் பெண்களால் மனவருத்தங்கள் இப்படி சில தடங்கல்கள் அல்லது கஷ்டங்கள் இருந்துகொண்டிருக்கும் உத்யோகத்தில் கடுமையான உழைப்பு முயற்சிக்கு பின் வெற்றி கிடைக்கும் சொந்த தொழில் ஓரளவுக்கு நன்றாக இருக்கும் பொதுவில் எதிலும் கவனமாக இருப்பது நன்மையைத் தரும் 

சந்திராஷ்டமம்:  25.07.21 பிற்பகல் 01.24 மணி முதல் 26.07.21 பிற்பகல் 01.16  மணி வரை

பூசம் :  நட்சத்திர நாதன் சனி பகவான் வக்கிர யாக உங்கள் ராசியை பார்க்கிறார் இது ஒரு விதமான பலத்தைத் தரும் முயற்சிகளில் வெற்றியைத் தரும் மேலும் சுக்கிரன் ராகு குரு பார்வை பெற்ற புதன் இவர்கள் அதிக நன்மையை செய்கிறார்கள் சனிபகவானுக்கு கேதுவின் பார்வை படுவதால் வாழ்க்கைத் துணைவருக்கு அல்லது கூட்டாளிகள் தொழில் கூட்டாளிகள் இவர்களுக்கு சில சங்கடங்கள் வரும் அதனால் உங்களுக்கு செலவு உண்டாகும் திருமணம் போன்ற முயற்சிகள் மிகுந்த பிரயத்தணத்துக்கு பிறகு நடைபெறும் பொதுவில் வருமானம் நன்றாக இருக்கும் செலவுகளும் அதற்கு தகுந்தார்போல் இருக்கும் எதையும் யோசித்து அல்லது பெரியோர்களின் ஆலோசனைப்படி நடப்பது நன்மை தரும் நிதானம் தேவை

சந்திராஷ்டமம்:   26.07.21 பிற்பகல் 01.16 மணி முதல்  27.07.21 பிற்பகல் 01.34   மணி வரை

ஆயில்யம்:  உங்கள் நட்சத்திர நாதன் சூலை 25 வரை பன்னிரண்டிலும் அதன்பின் ராசியிலும் சஞ்சரிப்பது கெடுதல் தராது எனினும் நன்மை இல்லை சுக்கிரன் ராகு மற்றும் சனி நல்லது செய்கிறார்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் புத்தி கூர்மை இருப்பதால் எதையும் யோசித்து செய்தீர்கள் இருந்தாலும் வக்ர குரு கெடுதலை செய்கிறார் அல்லது அவர் முயற்சிக்குத் தடையாக இருக்கிறார் கேது பகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து மன வருத்தங்கள் அல்லது குழந்தைகள் மூலம் கஷ்டங்கள் கொடுக்கிறார் மேலும் பெயர் புகழ் அந்தஸ்து இவற்றுக்கு கெடுதலை தருகிறார் மற்றபடி ஓரளவுக்கு பரவாயில்லை சமாளித்து இந்த மாதத்தை அடைந்து விடுவீர்கள் புதிய முயற்சிகளை ஒத்திப் போடுவது நல்லது இந்த மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்

சந்திராஷ்டமம்:   27.07.21 பிற்பகல் 01.34 மணி முதல் 28.07.21 பிற்பகல் 02.24   மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : பிள்ளையார், தக்ஷிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.  ஏழைப்பெண் குழந்தைகள் படிக்க , திருமணம் போன்ற உதவிகளை செய்வது பலன் தரும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய):

ராசிநாதன் சூரியன் பன்னிரண்டில் சஞ்சரிப்பது செலவுகளை அதிகரிக்கச் செய்யும் அதேநேரம் சுக்கிரன் சனி இவை மூன்றும் வருமானத்தைப் பெருக்கும் இரட்டை வருமானத்தை தரும் சனி பகை வென்று கடனை அடைத்து செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் சுக்கிரன் ஆடம்பரப் பொருட்கள் ஆபரணச்சேர்க்கை விருந்து கேளிக்கைகள் என்று மகிழ்ச்சியை கொடுக்கும் குருவானவர் ஏழில் இருந்து ஓரளவுக்கு கெடுதல் செய்யவில்லை நன்மை தருகிறார் சில முயற்சிகளை அவர் வெற்றியைத் தருகிறார் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் திருமண கை கூடுவதற்கு உதவி செய்கிறார் அதேபோல் வருமானம் உத்தியோகத்தில் இருந்தோ அல்லது சொந்தத் தொழில் இருந்தோ அல்லது வேறு விதத்திலோ வந்தவண்ணம் இருக்கும் மற்ற கிரகங்கள் அவ்வளவு நன்மையை செய்யவில்லை செவ்வாய் சூரியன் புதன் கேது சந்திரன் இவர்கள் உஷ்ணத்தை மனக்கலக்கம்,  சண்டை சச்சரவுகளை செய்கிறார்கள் மேலும் எல்லோருடனும் விரோதம் உண்டாக காரணமாய் இருக்கிறார்கள் அதனால் எதிலும் கவனத்துடன் முன்யோசனையுடன் நடந்தால் பெரிய துன்பங்கள் இல்லை நாளில் இருக்கும் கேது சுகத்தை தடுக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும் வீடு தாயார் வாகனம் போன்றவற்றால் விரையம் ஏற்படும் மற்றபடி 60% நன்மையும் 40 சதவிகிதம் பரவாயில்லை அது கெடுதல் இல்லை ஆனால் பரவாயில்லை விரயம் என்றபடி இருக்கும் இந்த மாதம் உங்களுக்கு பரிட்சை மாதம் மிகுந்த கவனத்துடன் இருப்பது நன்மை தரும் கோபத்தை தவிர்ப்பது மௌனமாய் இருப்பது வெற்றியை தரும்

மகம் : நட்சத்திர நாதன் கேது நாலாம் இடத்தில் சஞ்சரிப்பதும் ஆறாம் இடத்தை பார்ப்பதும் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தும் உடல் உபாதைகளை உண்டாக்கும் மேலும் புதன் சிந்திக்கும் திறனை குறைக்கும் மற்றபடி ராகு சுக்கிரன் சனி இவர்கள் நன்மை தருவதால் ஓரளவுக்கு சமாளித்து விடுவீர்கள் பொதுவாக யாருடனும் வாக்குவாதம் செய்வது நல்லதல்ல அவசரப்பட்டு அடுத்தவருக்கு உத்தரவாதம் தருவது அல்லது கையெழுத்துப் போடுவது போன்றவை தவிர்ப்பது நல்லது மேலும் பெரியோர்கள் ஆலோசனை படியும் குடும்பத்தை கலந்து கொண்டோம் எந்த ஒரு முடிவையும் எடுப்பது இந்த மாதம் உங்களுக்கு நன்மை தரும் மரமாக மாறிவிடும் கொஞ்சம் கவனம் தேவை நிதானம் தேவை

சந்திராஷ்டமம்: 28.07.21 பிற்பகல் 02.24 மணி முதல் 29.07.21 பிற்பகல் 03.42  மணி வரை

பூரம்:   நட்சத்திர நாதன் ராசியிலும் இரண்டிலும் ஆக இந்த மாதம் சஞ்சரித்து ஓரளவு பொருளாதாரத்தை உயர்த்தினாலும் முயற்சிகளில் வெற்றி தந்தாலும் சூரியனும் கேதுவும் சில தொல்லைகளை தருவார்கள் அது பொருளாதார விரயம் மற்றும் மனக்கசப்பு ஏற்பட வழிவகுக்கும் எதிலும் ஆடம்பரம் வேண்டாம் காரணம் சுக்கிரன் ஆடை ஆபரணச் சேர்க்கை விருந்து கேளிக்கை என்று கொடுத்தாலும் அதில் கவனமாக இருந்தால் கேதுவால் கெடுதல் ஏற்படாமல் தடுக்கலாம் பெரியவர்கள் குடும்ப அங்கத்தினர்கள் ஆலோசனைப்படி நடப்பது இந்த மாதம் கெடுதலை குறைத்து ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்லும்படி வைக்கும் கவனம் தேவை

சந்திராஷ்டமம் : 29.07.21 பிற்பகல் 03.42 மணி முதல் 30.07.21 மாலை 05.28 மணி வரை

உத்திரம் 1ம் பாதம்: நட்சத்திர நாதன் ராசிநாதனான சூரியன் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதும் கேது நாளில் சுகஸ்தானத்தில் இருப்பதும் மருத்துவ செலவு மனவுளைச்சல் தாயார் வாகனங்கள் வீடு போன்ற விஷயங்களில் தடைகள் செலவுகள் மற்றும் எல்லோருடனும் விரோதம் காரணமாக இருக்கும் ராகு சுக்கிரன் சனி இவர்கள் பொருளாதாரத்தை நன்கு வைத்து இருந்தாலும் குருவின் பார்வை நன்மை தந்தாலும் கொஞ்சம் கவனம் இருந்து யோசித்து திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டால் நன்மை உண்டாகும் பொதுவாக பண விஷயம் நன்றாக இருக்கும் ஆனால் அதேநேரம் செலவுகளும் அதிகம் இருக்கும் முக்கியமாக மருத்துவ செலவுகள் உங்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் கவனத்துடன் நிதானத்துடன் செயல்படுவது நன்மை தரும் இந்த மாதம் சுமாரான மாதம்

.

ந்திராஷ்டமம்: 30.07.21 மாலை 05.28 மணி முதல் 31.07.21 இரவு 07.37 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : ப்ரதோஷ , நந்தி வழிபாடு, சிவ வழிபாடு பலன் தரும். முடிந்த அளவு தர்மங்களை செய்வது சரீர ஒத்தாசை போன்றவை நன்மை தரும்.

கன்னி: (உத்திரம் 2,3,4 பாதங்கள் , ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய ) :

கவலையை விடுங்கள் எத்தனை துன்பங்களை அனுபவித்து இருப்பீர்கள் இந்த மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதம் உங்கள் ராசி அதிபதி புதன் மற்றும் பதினொன்றில் இருக்கும் சூரியன் மற்றும் சுக்கிரன் மூன்றில் இருக்கும் கேது என்று இவர்கள் நன்மையை வாரி வழங்குகிறார்கள் பொருளாதாரம் மிக உயர்ந்த நிலையை அடையும் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் அதிகரிக்கும் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேறும் உத்தியோகத்தில் நல்ல உயர்வு புதிய வேலை கிடைத்தால் சொந்தத் தொழில் முன்னேற்றம் வங்கிக் கடன் கிடைத்தால் ஏற்கனவே இருந்த கடைகள் வீடு வாகன யோகம் இல்லத்தில் சுப செலவுகள் திருமணம் குழந்தை பாக்கியம் இப்படி பல நன்மைகள் நிறைய இருக்கும் மேலும் மனதில் உற்சாகமும் தெளிவும் உண்டாகும் பயம் அகலும் அதேநேரம் 6-ல் இருக்கும் குரு மற்றும் சந்திரன் செவ்வாய் இவர்கள் மனக் கலக்கத்தையும் வழக்குகளில் சிக்கிவிடும் தன்மையையும் கொடுப்பார்கள் வீண் விரயங்களை கொடுப்பார்கள் அதனால் மிகுந்த கவனத்துடன் நல்லவர்களின் ஆலோசனைப்படி எதையும் யோசித்து செயல்படுவது பிரச்சனைகளிலிருந்து விடுபட வழி செய்யும் பொதுவில் கொஞ்சம் கவனமாக இருந்தால் இந்த மாதம் மிகுந்த நன்மையை அடையலாம் பெரிய துன்பங்கள் இல்லை என்றாலும் கவனம் தேவை

உத்திரம் 2,3,4 பாதங்கள் : இந்த மாதம் பரவாயில்லை என்று சொல்லலாம் என நட்சத்திராதிபதி சூரியன் லாபத்தில் இருக்கிறார் தங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் தொழில் உத்தியோகத்தில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் அதேநேரம் வீண் வாக்குவாதம் அல்லது வாக்கு கொடுப்பது அல்லது கவனக்குறைவு இவற்றால் அவதிப்பட நேரிடும் அதனால் வாய்ப்புகளைப் பயன்படுத்தும் போது புத்தி சாதுரியம் மற்றும் தகுந்த ஆலோசனைப்படி நடப்பது நன்மைதரும் பொதுவில் இந்த மாதம் பரவாயில்லை என்று சொல்லும்படி இருக்கும்

சந்திராஷ்டமம்: 30.07.21 மாலை 05.28 மணி முதல் 31.07.21 இரவு 07.37 மணி வரை

ஹஸ்தம் : நட்சத்திர அதிபதி சந்திரன் ராசியில் இருப்பதால் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சலனங்களும் ஒரு பக்கம் இருந்து கொண்டிருப்போம் பணவரவு நன்றாக இருக்கும் காரணம் சூரியன் சுக்கிரன் புதன் கேது சனி இவர்கள் நன்மை செய்வதால் உத்யோகத்தில் சொந்த தொழிலில் வருமானம் அதிகரிக்கும் அதேநேரம் கவனக் குறைவு இருந்தால் சில சங்கடங்களை சந்தித்து அதனால் பொருள் இழப்பு வருமான இழப்பு என்று ஏற்படலாம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது பெரியோர்கள் சொல்படி நடப்பது மற்றும் முன்யோசனையுடன் நடப்பதும் நன்மை தரும்

சந்திராஷ்டமம்: 31.07.21 இரவு 07.37 மணி முதல் 01.08.21 இரவு 10.02 மணிவரை

சித்திரை 1,2 பாதங்கள் :  நட்சத்திர அதிபதி செவ்வாய் பன்னிரண்டில் வருவது அவ்வளவு நன்மை தருவது அல்ல மேலும் ராகு மற்றும் குரு சங்கடங்களை தருவதாக இருக்கிறது கடுமையாக உழைப்பீர்கள் அதற்கு வருமானம் நன்றாக வரும் பெயர் நன்றாக இருப்போம் வாழ்க்கையில் தெளிவு நன்மைகள் நிறைய இருக்கும் அதே நேரம் உடல் உபாதைகள் மனச்சோர்வு வருமானத்தை செலவு செய்யும்படி மருத்துவ செலவு அல்லது வழக்குகள் என்று உண்டாகும் கவனமாக இருந்தாள் யாருடனும் வாக்குவாதம் அல்லது எதிர் வாதம் செய்யாமல் இருந்தால் நன்மை உண்டாகும் சிறந்த ஒன்று இந்த மாதம் கொஞ்சம் சுமார் மாதம் பொருளாதார ரீதியாக நன்றாக இருந்தாலும் மற்ற விஷயங்கள் அவ்வளவு நன்மை தராததால் வரவும் செலவும் சரியாக இருக்கிற போல் தோன்றும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்

சந்திராஷ்டமம்: 01.08.21 இரவு 10.02 மணி முதல் 02.08.21 இரவு 12.36 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : வள்ளி தெய்வானை சேமேத முருக பெருமான், திருச்செந்தூர் வேலவன் வழிபாடும், சஷ்டி கவசம் படிப்பது தான தர்மங்களை செய்வது நலம் தரும்.

துலாம் : (சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய) :

இந்த மாதம் மிகச் சிறப்பான மாதம் காரணம் ராசியாதிபதி சுக்கிரன் லாபத்தில் வருகிறார் 7-க்குடையவர் லாபத்தில் பெரும்பாலான கிரகங்கள் புதன் சூரியன் குரு சந்திரன் சனி நன்மை தருகிறது அதனால் பொருளாதார ஏற்றம் உத்தியோகத்தில் உயர்ந்த நிலை வீடு வாகன யோகங்கள் மருத்துவச் செலவு முற்றிலுமாக நீங்குதல் அதேபோல் இந்த மாதம் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் மற்றும் கனவுகள் சரியாக இருக்கும் மெய்ப்படும் மேலும் குரு பார்வை உங்களை பலப்படுத்தும் மனோதிடத்தை கொடுக்கும் தொழில் உத்தியோகத்தில் உயர்ந்த நிலை ஏற்படும் வங்கி கடன்கள் கிடைக்கும் அரசாங்க உதவி கிடைக்கும் வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக இருக்கும் மனைவி வழியில் வருமானம் பெருகும் திருமணம் குழந்தை பாக்கியம் வீடு வாகனம் என்று கடந்த காலங்களில் முயற்சித்து கொண்டிருந்தவர்களுக்கு அது கைகூடிவரும் வேளை இது கவலை வேண்டாம் பெரிய தொல்லைகள் ஏதும் இல்லை இரண்டில் கேது எட்டில் ராகு இது சில சங்கடங்களை கொடுக்கும் நீங்கள் உங்கள் நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் உத்தியோகத்தில் உடன் வேலை செய்பவர்கள் அதேபோல் பொதுவெளியில் மற்றவர்களிடம் கவனமாக இருந்தாலும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தாலும் உங்கள் மனதில் உள்ள அபிப்பிராயங்களை சொல்லாமல் இருந்தாலும் உங்களுக்கு அவர்களால் பெரிய தொல்லை இல்லை பொதுவாக இந்த மாதம் மருத்துவ செலவுகள் வீண் விரயச் செலவுகள் சுத்தமாக நீங்கும் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் செயல்களில் உற்சாகம் உண்டாகும் மிகச்சிறப்பான உங்களுக்கு அமையும்

.

சித்திரை 3,4 பாதங்கள் : உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய் லாபத்தில் வருகிறார் நீங்கள் நினைத்தது நிறைவேறும் ஆடம்பரப் பொருட்கள் ஆபரணச் சேர்க்கை விருந்து கேளிக்கைகள் மகிழ்வுகள் என்று நன்றாகவே இருக்கும் அதேபோல் சனி உங்கள் எதிரிகளை உங்களிடமிருந்து விலக்கி வைப்பார் உங்கள் திட்டங்கள் கைகூடும் புதிய முயற்சிகள் புதிய தொழில் ஆரம்பிப்பது அல்லது வேலைக்கு முயன்றால் வெளிநாடு போன்ற முயற்சிகள் வெற்றியடைய வாய்ப்பு அதிகம் வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் சேமிப்பு அதிகமாகும் சந்தோஷம் அதிகமாகும்

சந்திராஷ்டமம்: 01.08.21 இரவு 10.02 மணி முதல் 02.08.21 இரவு 12.36 மணி வரை

ஸ்வாதி : உங்கள் நட்சத்திர அதிபதி ராகு பகவான் எட்டில் இருந்தாலும் கெடுதல் செய்யவில்லை உங்களுக்கும் உங்களுடைய எதிரியை காட்டி கொடுப்பார் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும் நண்பர்கள் நீங்கள் நல்லவர் என்று நினைப்பவர்கள் தொழில் கூட்டாளிகள் உத்தியோகத்தில் உடன் வேலை செய்பவர்கள் மேலதிகாரிகள் பெண்கள் இவர்களிடம் மிக கவனமாக இருக்க வேண்டும் அப்படியிருந்தால் மற்ற கிரகங்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் அனைத்து சந்தோஷங்களும் பூரணமாக இருக்கும் கவனமாக யோசித்து பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நன்மை தரும் பெற்றோர்கள் சொல்வதை கேட்பது நன்மை உண்டாகும்

.

சந்திராஷ்டமம்: 02.08.21 இரவு 12.36 மணி முதல் 03.08.21 இரவு 03.08 மணி வரை

விசாகம் 1,2,3 பாதங்கள் :  உங்கள் நட்சத்திர அதிபதி குருபகவான் ஐந்தில் வக்ரியாக இருந்தாலும் பார்வையால் மிகுந்த நன்மை தருகிறார் அதே நேரம் ராகு பகவான் உங்களுக்கு தொல்லை கொடுப்பார் நண்பர்கள் மூலம் அல்லது உறவினர்கள் மூலம் அல்லது உடன் வேலை செய்பவர்கள் மூலம் தொழில் கூட்டாளிகள் மூலம் அதனால் கவனம் தேவை 2ல் இருக்கும் கேது குடும்பத்தில் அங்கத்தினர் இடையே ஒற்றுமையை குறைக்கும்படி செய்வார் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது பொருளாதார ரீதியாக மிக நன்றாக இருந்தாலும் நிறைய கிரகங்கள் நன்மை செய்தாலும் கவனமாகவும் நிதானமாகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவது நன்மையை உண்டாக்கும் இந்த மாதம் உங்களுக்கு பரவாயில்லை என்ற மாதம் 

சந்திராஷ்டமம்: 03.08.21 இரவு 03.08 மணி முதல் 04.08.21 அதிகாலை 05.31 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : நரசிம்மர் , நரசிம்ம ஸ்லோகம் சொல்வது, விளக்கேற்றி வழிபடுவது நலம் தரும். முடிந்த அளவு ஏழை எளியோருக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதும் நன்மை தரும்.

விருச்சிகம் : (விசாகம் 4, அனுஷம், கேட்டை முடிய):

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ல் வருவது ஓரளவுக்கு நன்மை தரும் சந்திரன் மாத ஆரம்பம் லாபத்தில் இருப்பதால் கணிசமான அளவு வருமானத்தை கொண்டு வரும் மேலும் மூன்றாம் இடத்தில் இருக்கும் சனி பகவான் மிகுந்த நன்மைகளையும் மன திடத்தையும் கொடுக்கிறார் சுக்கிரனும் குருவும் ஓரளவுக்கு நன்மை செய்கிறார்கள் அதேபோல மாத ஆரம்பத்தில் புதபகவான் ஜூலை 25-ம் தேதி வரை நன்மை தருகிறார் தெய்வ அனுகூலத்தை கொண்டு வருகிறார் மற்றபடி பொருளாதாரம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும் கோபத்தைக் குறைத்துக் கொண்டால் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டால் நன்மை உண்டாகும் அவசரப்படுவது மனதை திடப்படுத்திக் கொள்வது வீண் சஞ்சலங்கள் இவற்றைத் தவிர்க்க இறை தியானம் உதவும் பொதுவாக இந்த மாதத்தை சமாளிக்க எவ்வளவு பணம் தேவையோ அவ்வளவு வருவதற்கான வழிகள் உண்டு அதே நேரம் மற்ற கிரகங்கள் அனுகூலமாக இருப்பதால் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் ஆத்திரப்பட்டு வார்த்தைகளை விட்டால் அதனுடைய பலன் மோசமாக இருக்கும் பொறுமை நிதானம் தேவை இந்த மாதம் சுமாரான மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாருடனும் வாக்குவாதம் செய்யக் கூடாது உங்களுக்கு இடப்பட்ட வேலைகளை நேர்மையுடன் செய்ய வேண்டும் கோபம் கூடாது சொந்தத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடமும் தொழிலாளிகளிடம் விரதம் கொள்ளல் ஆகாது அது கெடுதலான பயனைத் தரும் அதேபோல் அரசாங்கத்துடன் மோதக் கூடாது எதிர்பார்ப்புகள் நிறைவேற தாமதம் ஆகலாம் ஆனால் கடவுள் நம்பிக்கையுடன் உண்மையாக முயற்சித்தால் ஓரளவு வெற்றி உண்டாகும் சுமாரான மாதம்

விசாகம் 4ம் பாதம் :  உங்கள் நட்சத்திர அதிபதி குருபகவான் நாலாம் இடத்தில் இருப்பது பெரிய நன்மை தருவதாக இல்லை மேலும் கெடுதல் இல்லை பார்வையால் ஓரளவு உங்கள் தேவைகளை நிறைவேற்றுகிறார் அதேபோல் சுக்கிரனும் மன மகிழ்ச்சியை கொடுக்கும் கேளிக்கை விருந்துகள் நண்பர்களால் நன்மை உறவுகளால் மகிழ்ச்சி என்று கொடுக்கிறார் இருந்தாலும் புதிய முயற்சிகள் வெற்றிபெற கடுமையான உழைப்பு தேவை அதேபோல இறை நம்பிக்கையும் தேவை இந்த மாதம் மிக சுமாரான மாதம்

சந்திராஷ்டமம்: 03.08.21 இரவு 03.08 மணி முதல் 04.08.21 அதிகாலை 05.31 மணி வரை

அனுஷம் 4 பாதங்கள் :  உங்கள் நட்சத்திர அதிபதி சனி பகவான் 3ல் இருப்பது நன்மை அதிகரிக்கச்செய்யும் உங்கள் திட்டங்கள் செயல்படும் மிகுந்த கஷ்டங்களை கடந்த காலத்தில் அனுபவித்து இருப்பீர்கள் அதற்கான நல்ல பலன் இப்போது கிடைக்கும் அதே நேரத்தில் கொஞ்சம் கவனமுடனும் வார்த்தைகளை விடுவதில் எச்சரிக்கையாகவும் விரோத போக்கை கடைப்பிடிக்காமல் கோபம் இல்லாமல் அமைதியாக செயல்பட்டால் இந்த மாதம் நன்மை தரும்படி  மாற்றிவிடலாம்

சந்திராஷ்டமம்: 04.08.21 அதிகாலை 05.31 மணி முதல் 06.08.21 காலை 07.34 மணி வரை

கேட்டை 4 பாதங்கள் : உங்கள் நட்சத்திர அதிபதி புதன் எட்டில் இருந்து மாத ஆரம்பத்தில் தெய்வ அனுகூலத்தை கொடுத்து உங்கள் கஷ்டத்தை போக்குகிறார் அதேபோல் சூரியன் சுக்கிரன் சனி இவர்களும் நன்மை செய்கிறார்கள் ஓரளவுக்கு பரவாயில்லை என்றபடி இருக்கும் குருபகவான் பார்வையால் நன்மை தருகிறார் பொருளாதாரம் வளர்ச்சியாக இருக்கும் அதே நேரம் கவனமுடன் செயல்படுவது வாக்குவாதங்களை தவிர்ப்பது பெரியவர்களை கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுப்பது உத்யோகத்தில் சொந்தத் தொழிலில் கவனமாக இருத்தல் இவை நன்மை தரும் இந்த மாதம் பரவாயில்லை என சொல்லும்படியான மாதம்

சந்திராஷ்டமம்: 06.08.21 காலை 07.34 மணி முதல் 07.08.21 காலை 09.12 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : சிவன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும். தானதர்மங்கள் செய்வது துன்பத்தை குறைக்கும்.

தனூர்: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய):

இந்த மாதம் உங்களுக்கு நன்மை தரும் கிரகம் சுக்கிரன் மற்றும் ராகு ஜூலை 25க்கு பின் புதன் எட்டாமிடத்தில் சஞ்சரிப்பது மிகுந்த நன்மை தரும் மற்ற கிரகங்கள் ஓரளவுக்கு பரவாயில்லை பெரிய கெடுதல்கள் இல்லை ஆனாலும் சில தடுமாற்றங்கள் சில விரும்பாத இடமாற்றங்கள் அல்லது சில தேவையில்லாத விஷயங்கள் இவை உண்டாக வாய்ப்புகள் உண்டு பொதுவாக பொருளாதாரம் நன்றாக இருக்கும் உத்யோகத்தில் சொந்தத் தொழிலில் நன்றாகவே இருக்கும் வருமானம் வரும் மேலும் கலைஞர்கள் பத்திரிக்கை துறையில் இருப்பவர்கள்  எழுத்துத் துறையில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு சில சிரமங்கள் இருக்கும் மற்றபடி பெரிய கெடுதல்கள் இல்லை வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துங்கள் மேலும் குடும்ப அங்கத்தினர்களோடு வாக்குவாதம் அல்லது வீண் விவாதம் வேண்டாம் உறவுகளை அரவணைத்துச் செல்லுங்கள் அதேநேரம் மனதில் பட்டதை அப்படியே ஒப்பிக்காநமக்குதீர்கள் அது உங்களுக்கு சங்கடத்தை தரும் பொதுவாக இந்த மாதத்தில் வருமானத்தை சேமிக்க பழகுங்கள் அப்படி செய்யும் பொழுது உங்களுடைய அடுத்த சில மாதங்களுக்கு தேவைகள் நிறைவேறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் பொதுவாக இந்த மாதம் நன்மை தருவதாக இருக்கிறது

மூலம் 4 பாதங்கள் : நட்சத்திர அதிபr கேது பகவான் பன்னிரண்டில் இருக்கிறார் சுப விரயச் செலவுகளை தருகிறார் மேலும் செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஓரளவுக்கு நன்மை செய்கிறது அதனால் உங்கள் எண்ணங்கள் திட்டங்கள் நிறைவேறும் மற்றும் கேது இரண்டாம் வீட்டில் இருக்கும் சனி பகவானை பார்ப்பது குடும்பத்தில் சிறு சிறு சலனங்களை ஏற்படுத்தும் பொதுவாக மற்ற கிரகங்கள் நன்மை செய்வதால் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை அதே நேரம் முயற்சிகளை செய்யும்போது கவனம் மற்றும் தகுந்த ஆலோசனை இருந்தால் இந்த மாதம் நன்றாகவே இருக்கும்

.

சந்திராஷ்டமம்: 07.08.21 காலை 09.12 மணி முதல் 08.08.21 காலை 10.24 மணி வரை

பூராடம் 4 பாதங்கள் : நட்சத்திர அதிபர் சுக்கிரன் ராசிக்கு ஒன்பதில் மற்றும் பத்தில் வருகிறார் அப்படி வரும்போது நன்மைகள் நிறைய நடக்கும் அதுபோல் குருவும் மற்றும் புதனும் பொருளாதார நிலையை மேம்படுத்துவார்கள் மற்றும் ராகுவால் சில நன்மைகள் நடக்கும் அதாவது எதிரிகள் மறைவர் நோய்கள் அகலும் கடன் தொல்லை தீரும் பொதுவில் நன்மைகள் அதிகம் இந்த மாதம் இருப்பதால் உங்களுடைய திட்டங்களை சரியாக வகுத்துக்கொண்டு செயல்படுத்தினால் வெற்றி அடைவீர்கள்

சந்திராஷ்டமம்: 08.08.21 காலை 10.24 மணி  முதல் 09.08.21 காலை 11.04 மணி வரை

உத்திராடம் 1 பாதம் :  நட்சத்திர அதிபர் சூரியன் எட்டில் இருப்பது நல்லதல்ல ஆனால் அவரால் கெடுதல் பெரிதாக விளையாது வழக்குகள் இருந்தால் அது தீரும் அதேநேரத்தில் வாக்குகளில் கவனம் தேவை செயல்களிலும் கவனம் தேவை மேலும் பல கிரகங்கள் நன்மை செய்வதால் இந்த மாதம் உங்களுக்கு தேவையானவை கிடைக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது அதேபோல குடும்பத்தாருடன் அனுசரித்துப் போவதும் உறவுகளிடம் பகைமை கொள்ளாமல் இருப்பதும் நன்மை பயக்கும்

சந்திராஷ்டமம்: 09.08.21 காலை 11.04 மணி முதல் 10.08.21 காலை 11.16 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : ராம நாமத்தை சொல்லுதல், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நன்மை தரும். உடலால் இயலாதவர்கள், முதியவர்கள் தேவை அறிந்து உதவி செய்தல் நல்ல பலனை தரும்.

மகரம்: (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய) :

ராசி அதிபதி சனி பகவான் ராசியில் இருக்கிறார்  பொதுவாக ஜனன ராசி யில் சனி இருந்தால் கெடுபலன்கள் அதிகம் இருக்கும் என்பார்கள் ஆனால் இங்கு அவர் ஆட்சியாக இருப்பதால் கெடுபலன்கள் இல்லை மேலும் பதினொன்றில் இருக்கும் கேது ராசியைப் பார்ப்பது பலத்தையும் வலுவையும் தரும் மேலும் எட்டில் இருக்கும் சுக்கிரன் &  6,7,8ல் சஞ்சரிக்கப் போகும் புதனும் பொருளாதார அபிவிருத்தியை தருவார்கள் இரண்டாம் வீட்டில் வக்ரியாக இருக்கும் குரு பகவான் பணவரவை அதிகரித்து குடும்பத்தில் சந்தோஷத்தை உண்டாக்குவார் தாமத திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் மற்றும் குடும்பத்தில் மகிழ்வு சுப நிகழ்வு இவை கைகூடும் 5ல் இருக்கும் ராகுவால் சின்ன சின்ன பாதிப்புகள் புகழ் அதிகாரம் அந்தஸ்து இவற்றில் பாதிப்பு குழந்தைகளால் சின்ன பிரச்சனைகள் உண்டாகலாம் ஆனால் அவை உடனே சரியாகும் மேலும் மற்ற கிரகங்கள் பெரிய நன்மையை தரவில்லை இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு குரு உடைய அனுகூலம் இருப்பதால் கெடுதல்கள் இல்லாமல் இந்த மாதம் நன்றாக இருக்கும் வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள் உத்தியோகம் சொந்தத் தொழில் மற்றும் ஜீவனம் வரும் வழி சரியாக இருக்கும் வருமானம் வந்து கொண்டு இருக்கும் தேவைகள் பூர்த்தியாகும் ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்லும் மாதம் கொஞ்சம் முன் யோசனையும் பெரியோர்களின் ஆலோசனையும் கேட்டு நடப்பது நன்மை தரும்

உத்திராடம் 2,3,4 பாதங்கள்: நட்சத்திர அதிபர் சூரியன் 7இல் இருப்பதால் வாழ்க்கைத் துணைவர் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரலாம் அல்லது வாழ்க்கை துணையோடு மன பிணக்கு ஏற்படலாம் கொஞ்சம் நிதானம் தேவை மேலும் எட்டில் வரும் செவ்வாய் சுக்கிரன் இவை இரண்டும் சில சங்கடங்கள் பயணத்தால் சிறுசிறு பாதிப்புகளை தரும் கவனமாக இருத்தல் அவசியம் முக்கியமாக சேமிப்பு நன்மை தரும் வரும் வாய்ப்புகளை பயன் படுத்தும் போது அதில் வெற்றி கிடைக்கும் 

சந்திராஷ்டமம்: 09.08.21 காலை 11.04 மணி முதல் 10.08.21 காலை 11.16 மணி வரை

திருவோணம் 4 பாதங்கள் : நட்சத்திர அதிபர் சந்திரன் மாத பிறப்பின்போது ஒன்பதில் இருக்கிறார் அது நன்மைகளை கொடுக்கிறது மேலும் புதன் குரு இவர்கள் பண வரவை அதிகரிக்கச் செய்வர் அதேபோல இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார் சிலருக்கு திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும் புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும் கேளிக்கை விருந்துகள் நடக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி அதிகம் தரும் மாதமாக அமைகிறது

சந்திராஷ்டமம்: 10.08.21 காலை 11.16 மணிமுதல் 11.08.21 காலை 11.00 மணி வரை

அவிட்டம் 1,2 பாதங்கள் : நட்சத்திர அதிபர் செவ்வாய் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் அதனால் மனக்கிலேசம் பயணங்களால் தொல்லைகள் வழக்குகளில் சிக்குதல் மற்றும் உடல் உபாதைகள் இவை உண்டாகலாம் ஆனாலும் குருவின் பார்வை பெறுவதால் இவை தவிர்க்கப்படும் மேலும் கேதுவும் புதனும் நன்மை தருவதாலும் பொருளாதார ஏற்றம் நன்றாக இருக்கும் ஜீவன ஸ்தானம் நன்மை தரும் இந்த மாதம் பெரிய கெடுதல் இல்லை என்றாலும் பயணத்தின் போதும் மற்ற புதிய செயல்களை துவங்கும் போதும் கவனம் தேவை அதேபோல வார்த்தைகளை கையாள்வதில் கவனம் தேவை  

சந்திராஷ்டமம்: 11.08.21  காலை 11.00 மணி முதல் 12.08.21 காலை 10.20 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : திருப்ப்தி வேங்கடாஜலபதி, நாராயண நாமம் சொல்வது, முடிந்த அளவு ஏழைபெண்குழந்தைகள் படிக்க உதவி, ஆடை அன்னம் இவை நன்மை தரும்.

கும்பம் : (அவிட்டம் 3,4 பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) :

ராசி அதிபதி சனியை விட பத்தாம் வீட்டில் இருக்கும் கேது ஆறில் இருக்கும் சூரியன் மற்றும் ஜூலை 25க்கு பின் ஆறாம் வீட்டுக்கு வரும் புதன் ஏழாம் வீட்டில் இருக்கும் சுக்கிரன் இவர்கள் மிகுந்த நன்மையை தருகிறார்கள் அதேநேரம் ராசியில் இருக்கும் குரு பகவான் இடமாற்றம் அல்லது கொஞ்சம் பொருளாதார கட்டுப்பாட்டைத் தருகிறார் செலவுகள் அதிகரிக்கும் கொஞ்சம் மனக்கிலேசம் ஏற்படும் அதேபோல் ராகுவும் தூக்கத்தை கெடுத்து விடுவார் ஆனால் பெரும்பாலும் கிரகங்கள் அதிக நன்மையை தருகிறது வலுவான கிரகங்கள் செய்வதால் பெரிய அளவில் தொல்லைகள் இருக்காது மற்றும் ஏழில் வரும் செவ்வாய் கெடுதலை செய்யாது இருந்தாலும் வாழ்க்கை துணைவர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை பொதுவாக இந்த மாதத்தில் சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடக்க வாய்ப்பு உள்ளது திருமணம் குழந்தைப்பேறு புது வீடு குடி போகுதல் என்று நன்மையும் இருக்கும் சில உறவுகளால் மன கசப்பும் இருக்கும் இந்த மாதம் நன்மை தீமை இரண்டும் சரிசமமாக இருப்பதால் எதிலும் யோசித்து நிதானித்து செயல்பட வேண்டும் கிரகங்கள் பரஸ்பரம் சமமாக இருப்பதால் கெடுதல் செய்யும் கிரகம் கெடுதலையும் நன்மை செய்யும் கிரகம் நன்மையையும் வழங்குகிறது அதனால் 50% நன்மை உண்டாகும் கவலை வேண்டாம் கொஞ்சம் நிதானித்து யோசித்து செயல்படுவது தொல்லைகளில் இருந்து காக்க உதவும் மற்றபடி இந்த மாதம் பரவாயில்லை

அவிட்டம் 3,4 பாதங்கள் : நட்சத்திர அதிபதி செவ்வாய் எழில் நன்மை செய்வதாக இருக்கிறார் வாழ்க்கை துணைவர் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் பாதிப்பது போல் தெரிந்தாலும் சூரியன் ஆறாம் இடத்தில் இருப்பதால் வியாதிகள் மருத்துவ செலவுகள் குறையும் அதேபோல ஜீவனாதிபதி நன்றாக இருப்பதால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும் திட்டங்கள் வெற்றியடையும் பெரிய பாதிப்புகள் இந்த மாதம் இல்லை அதனால் தைரியமாக புது முயற்சிகளில் இறங்கலாம்

சந்திராஷ்டமம்: சந்திராஷ்டமம்: 11.08.21  காலை 11.00 மணி முதல் 12.08.21 காலை 10.20 மணி வரை

சதயம் :  நட்சத்திர அதிபதி ராகு நாலாம் வீட்டில் இருக்கிறார் அவரால் பெரிய கெடுதல் இல்லை காரணம் பத்தாம் வீட்டில் இருக்கும் கேது இருவித வருவாயை தருவதால் பொருளாதார மேம்பாடு இருப்பதால் பெரிய தொல்லைகள் நீங்கும் மனதில் உறுதி உண்டாகும் மேலும் சூரியன் அளப்பரிய நன்மை செய்வதால் கடந்த காலத் திட்டங்கள் நிறைவேறும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் நன்மை உண்டாகும் மாதம்

சந்திராஷ்டமம்: 12.08.21 காலை 10.20 மணி முதல் 13.08.21 காலை 09.18 மணி வரை

பூரட்டாதி 1,2,3 பாதங்கள் : நட்சத்திர அதிபதி குரு பகவான் ராசியில் வக்கிரமாக இருப்பதால் இடமாற்றம் பொருளாதார நிலைகள் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம் கவனமாக செயல்பட்டால் பெரிய பாதிப்புகள் இல்லை அதேநேரம் சூரியன் கேது சுக்கிரன் புதன் இவர்கள் நன்மை தருவது ஒருவிதத்தில் தொல்லைகளைப் போக்கும் மனதில் கொஞ்சம் பயம் இருக்கும் இறைவழிபாடு அதை போக்கும் பொதுவில் பரவாயில்லை என்று சொல்லும்படியாக மாதம் இருக்கும் கவனமாகவும் வருமானத்தை சேமிக்கும் வழக்கத்தையும் கொண்டால் நன்மை உண்டாகும்

சந்திராஷ்டமம்: 13.08.21 காலை 09.18 மணி முதல் 14.08.21 காலை 08.02 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : வேணுகோபாலன், ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுவது, பிறருக்காவும் ப்ரார்த்திப்பதும், முடிந்த உதவிகளை ஏழை எளியோருக்கு செய்வதும் நன்மை தரும்.

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய):

ராசி அதிபதி குரு பகவானை விட பதினொன்றாம் வீட்டில் இருக்கும் சனி மூன்றாம் வீட்டில் இருக்கும் ராகு நான்காம் வீட்டில் இருக்கும் புதன் ஆறில் இருக்கும் செவ்வாய் இவர்கள் அதிக நன்மையை செய்கிறார்கள் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும் வியாதிகள் தணியும் எதிரிகள் தொல்லை நீங்கும் வழக்குகள் சாதகமாக இருக்கும் எண்ணியிருந்த திட்டங்கள் நிறைவேறும் அதேபோல் புதிய வீடு புதிய வாகனம் வாங்கும் நிலை உண்டாகும் உத்தியோகத்தில் உயர்வு பண வரவு சொந்தத் தொழிலில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் நிவர்த்தி  மற்றும் தெளிவான ஒரு நிலை மனோதிடம் இவை உண்டாகும் குரு பகவான் 12ல் இருப்பதால் சுப செலவுகள் உண்டாகும் இல்லத்தில் திருமணம் குழந்தைப் பேறு இவை உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளது மேலும் கேது சுக்கிரன் இவர்கள் கொஞ்சம் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவார்கள் வீண் விரயங்கள் உண்டாகும் கவனமாக செயல்பட்டால் வெற்றி உண்டாகும் பொதுவில் நன்மைகள் அதிகம் இருக்கும் வாய்ப்புகள் நல்லபடியாக இருக்கும் அதை சரியாக பயன்படுத்தி செயல்பட்டால் தொல்லைகள் குறைவாக மாறிவிடும் இந்த மாதம் நன்மைகள் அதிகம் இருக்கு கொஞ்சம் கஷ்டங்களும் இருக்கு பெரியோர்கள் அதனை ஆலோசனைப்படி நடப்பது நன்மை தரும்

பூரட்டாதி 4ம் பாதம் :  நட்சத்திர அதிபதி குரு பகவான் பன்னிரண்டில் இருந்தாலும் சனி ராகு புதன் செவ்வாய் மற்றும் சந்திரன் இவர்கள் ஓரளவுக்கு நன்மையைத் தருவதால் பொருளாதார மேன்மை தருவதால் ஜீவன ஸ்தானத்தில் நன்மை ஏற்படுவதால் இந்த மாதம் நன்றாக இருக்கும் பெரிய கஷ்டங்கள் வராது அதேநேரம் இடமாற்றம் உண்டாவதற்கு வாய்ப்புகள் உள்ளது பயணத்தின் போது கவனம் தேவை கேது உடல் பாதிப்பு மன பாதிப்பு இவற்றை தருவார் அதனால் கொஞ்சம் நிதானித்து செயல்படுவது நல்லது

சந்திராஷ்டமம்: 13.08.21 காலை 09.18 மணி முதல் 14.08.21 காலை 08.02 மணி வரை

உத்திரட்டாதி 4 பாதங்கள் :  நட்சத்திர அதிபதி சனி பகவான் லாபத்தில் இருப்பது உங்களது கடந்த காலத் திட்டங்களை செயல்படுத்தும் புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை உடன் கிடைக்கும் அதேபோல் உத்தியோகத்தில் பணி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் காணும் புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த மாதத்தில் அதை செயல்படுத்தலாம் அதற்கான உதவிகள் கிடைக்கும் பொதுவில் பெரிய கெடுதல்கள் எதுவும் இல்லை ஆனாலும் பெரியோர்கள் ஆலோசனைப்படி நடப்பது நன்மை தரும்

சந்திராஷ்டமம்:  14.08.21 காலை 08.02 மணி முதல் 15.08.21 காலை 06.33 மணி வரை

ரேவதி : நட்சத்திர அதிபதி புதன் நாலில் வாகன யோகங்கள் பயணத்தினால் நன்மை அளப்பரிய சந்தோஷம் என்று கொடுக்கிறார் அதேபோல் சனி மற்றும் ராகு மற்றும் செவ்வாய் நன்மைகள் தருகின்றனர் அதனால் பொருளாதார மேன்மை உத்தியோகம் சொந்த தொழிலில் உயர்வு வருமானத்தில் லாபம் சேமிப்பு என்று நன்றாக இருக்கும் அதேபோல் விருந்து கேளிக்கைகள் இல்லத்தில் சுப நிகழ்வுகள் திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம் உண்டாக இப்படி எல்லாம் நன்றாகவே இருக்கும் இந்த மாதம் நன்மை அதிகம் இருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் செயல்படுத்திக் கொள்ளலாம் அதேநேரம் கவனமும் தேவை பயணத்தின் போதும் மற்ற விஷயங்களை முடிவு எடுக்கும் போதும் ஆலோசனைக்கு ஆலோசித்து நடப்பது நல்லது பொதுவில் இந்த மாதம் நன்மை அதிகம்

சந்திராஷ்டமம்: 15.08.21  காலை 06.33 மணி முதல் 16.08.21  அதிகாலை 04.23 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : விக்நேஸ்வரர் வழிபாடு, விநாயகர் அகவல் படிப்பது,  தான தர்மங்களை அதிகம் செய்வதும் நன்மை தரும். ப்ரதோஷம் நந்தி வழிபாடு நன்மை தரும்.

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி(ரவி சாரங்கன்)

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு

ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்

குரோம்பேட்டை, சென்னை – 600 044

ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)

Email ID : mannargudirs1960@gmail.com

!! சுபம் !!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.