ப்லவ வருடம்  கார்த்திகை மாத ராசி பலன்கள்

ப்லவ வருடம்  கார்த்திகை மாத ராசி பலன்கள்

பதிவுகளை உடனக்குடன் பெற

இன்றைய பஞ்சாங்கம்

வருகிற 16.11.2021 பிற்பகல் 01.02.53 மணிக்கு சூரியபகவான் துலாம் ராசியில் இருந்து  விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் விருச்சிக ராசியில் 16.12.2021 பிற்பகல் 03.44.10 மணி வரை சஞ்சரிக்கிறார்.

இது லஹரி அயனாம்ஸத்தை ஒட்டி திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. 

வாக்கியப்படி 16.11.2021 இரவு 08.48 மணிக்கு பெயர்ச்சிஆகிறார்.

ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் திருக்கணித பஞ்சாங்கப்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சந்திரன் 26:20:47
ராகு 07:34:02
லக்னம் 10:49:58கிரஹ சஞ்சாரங்கள் விவரம் 
குரு – கும்பம் – : 20.11.2021 புதன் – விருச்சிகம் –  21.11.2021 செவ்வாய் – விருச்சிகம் – 05.12.2021  சுக்ரன் – மகரம் – 08.12.2021 புதன் – தனூர் – 10.12.2021

குரு 29:33:39 சனி 13:48:12
சுக்ரன் 15:37:40சூரியன் 00:00:00  கேது 07:34:020செவ்வாய்  17:18:43  புதன் 22:32:28

கிரஹ பாத சாரங்கள் : கார்த்திகை மாத பிறப்பின் போது

லக்னம் – கும்பம் – சதயம் – 2 

சூரியன் –  விருச்சிகம் – விசாகம் 4

சந்திரன் – மீனம் – ரேவதி – 3

செவ்வாய் – துலாம் – ஸ்வாதி 4

புதன் –  துலாம் – விசாகம் – 1

வியாழன் -மகரம் –  அவிட்டம் 2

சுக்ரன் –  தனூர் –  பூராடம் – 1

சனி – மகரம் – திருவோணம் -2

ராகு – ரிஷபம் – கிருத்திகை – 4

கேது – விருச்சிகம் – அனுஷம் – 2

கிரஹ வலிமைகள் :

ஸூரியன் 1.23%   கேதுவில் கிரணம் 

மிக வலுவான கிரஹம் செவ்வாய் மற்றும் கேது.

சந்திரன், குரு,புதன், சுக்ரன் இவை மத்ய பலனை கொடுக்கும்

வலுவற்ற கிரஹம் சனி மற்றும் ராகு

இவை மாதம் பிறக்கும் போது உள்ள நிலை. ஒவ்வொரு கிரஹமும் அந்த மாத்தத்தில் சஞ்சார நிலை கொண்டு வலிமை மாறுபடும்

இவற்றை கணக்கில் கொண்டு பலன் சொல்லப்படுகிறது.

மேஷம் (அஸ்வினி 4 பாதம், பரணி 4 பாதம், கார்த்திகை 1பாதம் முடிய) :

பொது : உங்கள் ராசி அதிபதி பலமாக இருக்கிறார் நல்ல நிலையில் இருக்கிறார் இந்த மாதம் உங்களுக்கு செவ்வாய், சுக்கிரன்  மற்றும் குரு இவர்களால் எண்ணங்கள் பூர்த்தியாகும் செயல்கள் வெற்றி அடையும் மற்றும் இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும் ராசிக்கு 7-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தடைபட்டு வந்த அல்லது தாமதமாகிக் கொண்டிருந்த திருமணம் கைகூடும் மேலும் 5ஆம் இடத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும் ராசிக்கு 11ல் குரு இருப்பதால் பொருளாதார ரீதியான நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் புதிய வேலைக்கு முயற்சித்தால் அது கிடைத்தால் போன்றவை இந்த மாதத்தில் நடக்கும் அதே போல சொந்தத் தொழில் செய்யும் அனைவருக்கும் நல்ல லாபம் வங்கி உதவி போன்றவை கிடைக்கும் தொழில் போட்டிகள்  மறையும் மற்ற அனைத்து பிரிவினருக்கும் பெண்கள் உட்பட பொருளாதார ரீதியாக நல்ல நிலை மற்றும் இல்லத்தில் மகிழ்ச்சி வெளியூர் பயணங்களால் சந்தோஷம் புனித யாத்திரை விருந்து கேளிக்கைகள் என்று இந்த மாதம் மகிழ்ச்சியாக இருக்கும் பொதுவில் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் மாதமாக அமையும்

அஸ்வினி : நட்சத்திர அதிபதி கேது பகவான் அவர் ஏழாம் இடம் நோக்கி நகர்கிறார் அதனால் வாழ்க்கை துணைவர் வகையில் முன்னேற்றம் இருக்கும் அதேபோல செவ்வாய் மற்றும் சுக்கிரன் சாதகமான நிலை சூரியன் பரவாயில்லை என்பது மாதிரியான நிலை உங்களுடைய தேவைகள் உத்தியாகும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் எதிர்பாராத செலவுகளும் உண்டாகும் ஜீவன வகையில் நன்மை அதிகம் மருத்துவரீதியில் செலவுகள் குறைவு என்று இந்த மாதம் மகிழ்ச்சியாக இருக்கும்  முயற்சிகள் வெற்றி அடையும்

சந்திராஷ்டமம்: 03.12.21 பகல் 01.06 மணி முதல் 04.12.21 காலை 11.29 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்று வழிபடுவது விநாயகர் அகவல் படிப்பது நன்மை தரும் முடிந்த வரையில் தானதர்மங்கள் அதிகம் செய்யுங்கள் நல்ல பலன் உண்டாகும்

பரணி: உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரன் மண்டபத்தில் இருக்கிறார் இந்த மாதத்தில் 9 10 இந்த இடங்களில் சஞ்சாரம் செய்கிறார் இரண்டுமே உங்களுக்கு பொருளாதார நிலை உத்தியோகம் சொந்தத் தொழில் இவற்றில் முன்னேற்றம் வீடு தேவைகள் பூர்த்தியாகும் எதிர்பார்த்த எண்ணங்கள் செயலுக்கு வருதல் கடன் போன்ற சுமைகள் குறைதல் மற்றும் விவசாயம் சார்ந்த வருமானம் அதிகரித்தல் போன்றவை நடக்கும் மேலும் இந்த மாதத்தில் திருமணத்தை எதிர்பார்ப்புக்கு திருமண பாக்கியம் கைகூடும் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகி முன்னேற்றத்திற்கான பாதை உண்டாகும் நன்மை தரும் மாதம்

சந்திராஷ்டமம்: 04.12.21 காலை 11.29 மணி முதல் 05.12.21 காலை 09.50 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : மகாலட்சுமியை வழிபடுதல் லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லுங்கள் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று தாயார் சன்னதியில் விளக்கு ஏற்றுதல் நன்மை தரும் அன்னதானம் வஸ்திரதானம் இரண்டும் முடிந்தவரையில் செய்யுங்கள் நன்மை உண்டாகும்

கார்த்திகை 1ம் பாதம் : உங்கள் நட்சத்திர நாதர் சூரியபகவான் எட்டில் மறைவு கேதுவின் கிரணம் அடுத்த இருபது நாளைக்கு அவருடைய செயல்பாடுகள் மந்தமாக இருக்கும் உங்களுக்கு ராசி அதிபதி செவ்வாய் மற்றும் குரு மற்றும் சுக்கிரன் புதன் இவர்கள் நன்மை தருவதால்  பொருளாதார நிலை நன்றாக இருக்கும் உத்தியோகம் சொந்தத் தொழில் இவற்றில் கடுமையாக உழைப்பு இருக்கும் எதிர்பார்த்த வருமானம் இருக்காது அதனால் கொஞ்சம் யோசித்து செயல்படுவது நன்மை தரும் பெரிய அளவில் துன்பம் இல்லை என்றாலும் சின்னச் சின்ன சங்கடங்கள் இருந்து கொண்டிருக்கும் கேதுவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது அதனால் செயல்பாடுகள் ஒரு மனநிலையை கொடுத்துக் கொண்டிருக்கும் ஓரளவுக்கு பரவாயில்லை என்கிற மாதம் நிதானம் பொறுமை அவசியம்

சந்திராஷ்டமம்: 05.12.21 காலை 09.50 மணி முதல் 06.12.21 காலை 08.14 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : சூரிய நாராயணரை வழிபடுவது காலை வேளையில் உரிய நமஸ்காரம் செய்வது அருகில் உள்ள கோயிலில் விளக்கேற்றுவது நன்மை தரும் முடிந்த அளவு ஏழை எளியவர்க்கு தேவைப்படும் உதவிகளை செய்வது அன்னதானம் செய்வது நன்மை தரும்

ரிஷபம் (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி 4 பாதம், மிருகசீர்டம் 1,2 பாதங்கள் முடிய):

பொது : உங்கள் ராசி அதிபதி டிசம்பர் 8 வரை தனுரிலும் அதன் பின் மகரத்திலும் சஞ்சரிக்கிறார்.இது நன்மையான நிலை, மேலும் குரு,ராகு, செவ்வாய், புதன் நன்மை தருவதாக அமைகின்றது பொருளாதாரம் நன்றாக இருக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட தடை தாமதம் விலகும். மேலும் 2ம் இடம் குரு பார்வை பெறுவதால் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி, கடன் தொல்லையில் இருந்து விடுபடுதல், எதிரிகள் விலகுவர். திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் கைகூடும். சிலருக்கு வீடு வாகன யோகங்கள் கைகூடும். அதே நேரம் கேதுவின் பார்வை 6ல் அதனால் வைத்திய செலவுகளும் உண்டாகும். மற்றபடி பெரிய தொல்லை இல்லை உத்தியோகம் ஜீவனவகையில் ஓரளவு நல்ல பலன் சொந்த தொழிலில் வருமானம் கூடும். சமூகத்தில் மதிப்பு உண்டாகும். நற்பலன்கள் அதிகம் இருந்தாலும் சில விரோதங்கள் வரும் அதனால் மன உளைச்சல், செலவு என இருக்கும். வைத்திய செலவும் இருக்கும். கவனம் தேவை

கார்த்திகை 2,3,4 பாதங்கள் : உங்கள் நக்ஷத்திர நாதர் சூரியன் 7ல் கேதுவில் கிரணம் கொஞ்சம் ஏற்றம் இறக்கம் பொருளாதார மந்த நிலை, செலவுகள் அதிகரித்தல், செயல்பாடுகளில் இழுபறி என்று இருந்தாலும் மற்ற செவ்வாய் சுக்ரன், சஞ்சாரங்கள், குரு பார்வை என ஓரளவு நன்மை உண்டாகும். வெகு சுமார் மாதம் எதையும் யோசித்து நிதானித்து செயல்படுதல் வார்த்தைகளில் கவனம் என்று இருக்கவேண்டும்.

சந்திராஷ்டமம்: 05.12.21 காலை 09.50 மணி முதல் 06.12.21 காலை 08.14 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : சூரிய நாராயணரை வழிபடுவது காலை வேளையில் உரிய நமஸ்காரம் செய்வது அருகில் உள்ள கோயிலில் விளக்கேற்றுவது நன்மை தரும் முடிந்த அளவு ஏழை எளியவர்க்கு தேவைப்படும் உதவிகளை செய்வது அன்னதானம் செய்வது நன்மை தரும்

ரோஹிணி: நட்சத்திர அதிபதி சந்திரன் ஆரம்பத்தில்  லாபஸ்தானத்தில் இருக்கிறார்  மேலும் சுக்கிரன் குரு செவ்வாய் புதன் மற்றும் ராகு இவர்கள் நன்மை அதிகம் செய்கிறார்கள் அதனால் பொருளாதார ஏற்றம் நன்றாக இருக்கும் செலவுகளை சமாளித்து விடுவீர்கள் அதேபோல் முயற்சிகளில் வெற்றி எளிதாக இருக்கும் இல்ல தேவைகள் பூர்த்தியாகும் உத்யோகத்தில் ஜீவனத்தில் விரும்பிய பதவி உயர்வு சம்பள உயர்வு இடமாற்றம் புதிய வேலை வெளிநாட்டு வாய்ப்பு இவை கிடைக்கும் சொந்தத் தொழில் செய்வோர் கணக்குகளை சரியாக வைத்துக்கொண்டால் போதும் வருமானம் பெருகும் வங்கி அரசு உதவிகள் கிடைக்கும் பொதுவில் அனைவருக்கும் நன்மைகள் அதிகரிக்கும் மாதமிது சங்கடங்கள் என்பது எதிர்பாராத செலவுகள் மருத்துவ செலவுகள் என்று இருக்கும் தாய் தந்தை வழியில் மருத்துவ செலவு அதிகரிக்கலாம்

சந்திராஷ்டமம்: 06.12.21 காலை 08.14 மணி முதல் 07.12.21 காலை 08.44 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : குபேர லட்சுமி அஷ்டலட்சுமி வழிபாடு பலன் தரும் தாயார் சன்னதியில் விளக்கேற்றி ஸ்லோகம் சொல்லி வழிபடுவது கோயில் உழவாரப்பணி செய்தாலும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் நல்ல பலன் தரும்

மிருகசீரிடம் 1,2 பாதங்கள் : உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய் மிக வலுவாக இருக்கிறார் உங்கள் தேவைகள் விரைந்து பூர்த்தியாகும் சேமிப்பு அதிகரிக்கும் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் கடந்தகால தடைகள் விலகி உங்கள் முயற்சிகள் வெற்றியை பெறும் திருமணம் குழந்தை பாக்கியம் வீடு வாகனம் என்று எதிர்பார்த்தோர்க்கு அது கைகூடிவரும் உத்யோகத்தில் நல்ல நிலை உண்டாகும் சொந்த தொழில் விரிவாக்கம் கைகூடும் பொதுவில் இந்த மாதம் நன்மைகள் அதிகம் உண்டாகும் மாதமாக இருக்கு வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும்

சந்திராஷ்டமம்: 07.12.21 காலை 08.44 மணி முதல் 08.12.21 அதிகாலை 04.43 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பழனி முருகன் சுவாமிமலை போன்ற ஆறு படை வீட்டுக்கு சென்று வழிபடுவது முருகப்பெருமானுக்கு செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்ய பால் போன்ற பொருள்கள் தருவது நன்மை தரும் அங்க குறைபாடு உள்ளோர்க்கு உதவி செய்தல் மற்றும் அன்னதானம் போன்றவை நன்மையை அதிகரிக்கச் செய்யும்

மிதுனம் (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை 4 பாதம், புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய):

பொது: ராசிநாதன் 5 6 7 இந்த இடங்களில் இந்த மாதம் சஞ்சரிக்கிறார் பலன்களை கலந்து தருகிறார் ஆனால் சுப பலன் தருவோர் சுக்கிரன் குரு ராகு மற்றும் செவ்வாய் பொருளாதாரம் மிக நன்றாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபநிகழ்ச்சிகளும் நடக்கும் போட்ட திட்டங்கள் கைகூடும்  ஜீவன வகையில் நிறைந்த ஆதாயம் உத்தியோகத்தில் நல்ல நிலை எதிர்பார்த்த பதவி சம்பளம் இடமாற்றம் கிடைக்கும் புதிய வேலைக்கு முயற்சித்தால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் சிலருக்கு திருமணம் கைகூடும் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் சிலர் புது வீடு வாகனம் வாங்குவர் சொந்த தொழில் செய்வோருக்கும் வருமானம் பெருகும் இடைஞ்சல்கள் விலகும்.  பொதுவாக பல கிரகங்கள் அனுகூல நிலையில் ஆனால் கேதுவும் சூரியனும் கொஞ்சம் மன உளைச்சல், வைத்திய செலவுகள் நிதானம் தவறுதல், மன தைரியம் குறைதல் போன்றவற்றை  உண்டாக்குவார் இருந்தாலும் இயல்பாகவே எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவர் என்பதால் பெரிய பாதிப்புகள் இருக்காது ஆரோக்கியம் குடும்ப அங்கத்தினர் ஆரோக்கியம் என்று கவனமாக இருந்தால் வைத்தியச் செலவுகள் குறையும் பொதுவாக இந்த மாதம் 90 சதவீதம் நன்மைகள் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கலாம் 

மிருகசீரிடம் 3,4 பாதங்கள் : உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாய் வலுவாக இருக்கிறார் லாபாதிபதி யும் கூட அதனால் பொருளாதார ஏற்றம் நன்றாக இருக்கும் வருமானம் பெருகும் உத்தியோகம் சொந்த தொழில் என எல்லாவற்றிலும் மேம்பட்ட நிலை ஏற்படும் இல்லத்தில் சுப நிகழ்வுகள் மற்றும் கடந்த காலத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி கடந்த கால முயற்சிகள் திருமணம் குழந்தை பாக்கியம் வீடு குடி போகுதல் போன்ற எண்ணங்கள் இந்த மாதத்தில் ஈடேறும் அதேநேரம் சூரியன் வலுவாக இருப்பதால் உடல் ஆரோக்கியம் அல்லது மனதில் அதைரியம் ஏற்பட வாய்ப்புள்ளது குடும்ப அங்கத்தினர்கள் வைத்தியச் செலவை உண்டாக்கலாம் செலவுகள் இருக்கலாம் அதேநேரம் வருமானமும் சரியாக இருக்கும் பொதுவில் நல்ல மாதம்

சந்திராஷ்டமம்: 07.12.21 காலை 08.44 மணி முதல் 08.12.21 அதிகாலை 04.43 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : ஆதிசிவன், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் சுவாமியை வழிபடுதல் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று சிவஸ்துதி சிவாஷ்டகம் போன்றவற்றை படித்து விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் மேலும் உடல் ஊனம் உள்ளவர்களுக்கு சரீர  ஒத்தாசைகள் அன்னதானம் போன்றவற்றை செய்வதும் நல்ல பலன் தரும்

திருவாதிரை: நட்சத்திர நாதன் ராகு பகவான் பதினொன்றாம் இடத்தின் பலனை கொடுக்க இருக்கிறார் மேலும் புதன் சுக்கிரன் குரு செவ்வாய் மற்றும் சனி என அனைத்து கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக செயல்படுவதால் கடந்த காலத் திட்டங்களை நிறைவேற்றலாம் உங்களது எண்ணங்கள் ஈடேறும் பொருளாதார வகையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் உத்யோகத்தில் நல்ல நிலை சொந்த தொழிலில் லாபம் அதிகரித்தல் இப்படி பண வரவு அதிகமாகும் அதனால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும் திருமணம் குழந்தை பாக்கியம் வீடு வாகன யோகங்கள் என்று நன்றாகவே இருக்கும் அதேநேரம் கேது மற்றும் சூரியன் குடும்ப அங்கத்தினர்கள் குழந்தைகள் இவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்வார் ஒரு சமயம் மனதில் அதைரியம் தோன்றும் இருந்தாலும் ராகு பார்ப்பதால் அது சரியாகிவிடும் பொதுவில் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக அமையும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்

சந்திராஷ்டமம்: 08.12.21 அதிகாலை 04.43 மணி முதல் 09.12.21 அதிகாலை 04.29 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : காலபைரவர் தட்சணாமூர்த்தி இரண்டு சுவாமிகளையும் வழிபடுதல் அஷ்டமி நாளில் பைரவரை வணங்குதல் கோயிலில் விளக்கேற்றுதல் போன்றவை நன்மை தரும் உங்களால் இயன்ற அளவு தான தர்மங்களை செய்யுங்கள்

புனர்பூசம் 1,2,3 பாதங்கள் : நட்சத்திர அதிபர் குரு பகவான் ஒன்பதில் பிரவேசம் ராசியைப் பார்ப்பது மூன்றாம் இடத்தை பார்ப்பது நன்மை தரும் மனதில் புத்துணர்ச்சி உண்டாகும் மேலும் செவ்வாய் புதன் ராகு சுக்கிரன் இவர்களும் தங்கள் பங்குக்கு நன்மை அதிகம் தருவதால் இந்த மாதம் உங்களுக்கு மிகச் சிறப்பாக இருக்கும் போட்ட திட்டங்கள் நிறைவேறும் கடந்த காலத்தில் தாமதமாக இருந்த திருமணம் குழந்தைபாக்கியம் இவை இந்த மாதத்தில் நிறைவேறும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது ஜீவன வகையில் மிகுந்த நன்மை உண்டாகும் உத்தியோகத்தில் நல்ல நிலை இருக்கும் சொந்த தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள் பொதுவில் இந்த மாதம் அதிக நன்மை தரும் மாதமாக அமைகிறது

சந்திராஷ்டமம்: 09.12.21 அதிகாலை 04.29 மணி முதல் 10.12.21 இரவு 03.49 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : சீதா லக்ஷ்மி சமேத கோதண்டராமர் பெருமாளை சேவித்தால் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது பிறரின் பசி தீர்ப்பது முடிந்தவரை தர்மங்களை அதிகம் செய்வது மிகுந்த நன்மையை தரும்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம் 4பாதங்கள், ஆயில்யம் 4 பாதங்கள்):

பொது : மாதம் பிறக்கும் போது உங்கள் ராசிநாதன் சந்திரன் 9லும், சனி மற்றும் , சுக்கிரன் ராகு இவர்கள் அதிக நற்பலன்களை தருகிறார்கள் ராகு 10க்கு உடைய பலனை தருகிறார் பொருளாதார ஏற்றம் நன்றாக இருக்கும் அதேநேரம் கேது மற்றும் சூரியன் மன அழுத்தம் எதிரிகளால் தொல்லை பெயர் கெடுதல் குழந்தைகளால் மன வருத்தம் என்று கொஞ்சம் இருந்து கொண்டிருக்கும் மேலும் ஜீவன வகையில் சிறு பாதிப்புகள் இருக்கும் உழைப்புக்கேற்ற வருமானம் இருக்காது ஆனால் இருக்கின்ற பணம் போதும் என்ற அளவில் வாழ்க்கை இருக்கும் சொந்த தொழிலில் லாபம் இல்லை ஆனால் நஷ்டம் வராது அதேபோல உடல் ரீதியான பிரச்சனைகள் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு குடும்ப அங்கத்தினர்கள் மூலமும் வைத்தியச் செலவுகள் உண்டாகும் பொதுவில் நன்மை தீமை சரி அளவு என்ற ரீதியில் இந்த மாதம் இருக்கும் சிக்கனம் நிதானம் பொறுமை அவசியம் பொதுவில் நன்றாக உழைத்தீர்கள் ஆனால் பலன் சுமாராக இருக்கும் எதையும் யோசித்து செயல்படுவது நன்மை தரும் மேலும் செவ்வாயின் நான்காம் இடம் சஞ்சாரம் பொருளாதாரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் கவனமாக செயல்படுவது நல்லது புதிய முயற்சிகளை தொடங்கும் முன் ஆலோசனை செய்வது நல்லது இந்த மாதம் சுமார் மாதம் கவனமுடன் இருந்தால் கெடு பலன்கள் குறைவாக இருக்கும்

புனர்பூசம் 4ம் பாதம் : உங்கள் நட்சத்திர நாதன் குருபகவான் எட்டாம் இடம் செல்கிறார் அது பெரிய நல்ல பலன்களை தராது எனினும் கெடுதல் இல்லை பார்வையால் நன்மை செய்கிறார் குடும்ப ஸ்தானத்தை 7-ஆம் பார்வையாக பார்ப்பதால் பொருளாதாரத்தில் நல்ல நிலை இருக்கும் தேவைகள் பூர்த்தியாகும் ஓரளவுக்கு முயற்சிகளில் வெற்றி உண்டாகும் உத்யோகத்தில் எதிர்பார்த்த அளவு இருக்காது எனினும் பரவாயில்லை என்னும் படியாக இருக்கும் இந்த மாதம் கொஞ்சம் நிதானித்து செயல்பட்டால் கெடுபலன்கள் இருக்காது பல கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருக்கிறது கவனமுடன் செயல்படவும்

சந்திராஷ்டமம்: 09.12.21 அதிகாலை 04.29 மணி முதல் 10.12.21 இரவு 03.49 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : சீதா லக்ஷ்மி சமேத கோதண்டராமர் பெருமாளை சேவித்தால் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது பிறரின் பசி தீர்ப்பது முடிந்தவரை தர்மங்களை அதிகம் செய்வது மிகுந்த நன்மையை தரும்

பூசம் : உங்கள் நட்சத்திர நாதன் சனி பகவான் ஆட்சியாக இருக்கிறார் அவர் உங்களுக்கு பார்வையாலும் நன்மை செய்கிறார் திருமண வாய்ப்புகளை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும் வரன் அமையும் மேலும் குருவின் 12ம்  இட பார்வை நன்மை தருவதால் மகிழ்ச்சியான மண வாழ்க்கை என்பதாக திருமணம் அமையும் பொதுவில் செவ்வாய் சுக்கிரன் ராகு  புதன் இவர்கள் நன்மை அதிகம் தருவதால் பொருளாதாரம் நன்றாக இருக்கும் செயல்பாடுகளில் முன்னேற்றம் இருக்கும் உத்யோகத்தில் உயர்ந்த நிலை இருக்கும் பணவரவு அதிகம் இருப்பதால் போட்ட திட்டங்கள் எளிதில் நிறைவேறும் அதேநேரம் சூரியன் கேது சம்பந்தம் மன வலிமையை குறைக்கும் உடல் ரீதியான தொந்தரவுகள் குடும்ப அங்கத்தினர்களின் வைத்திய செலவு என்று இருக்கும் சில எதிர்பாராத தேவையற்ற செலவுகளும் இருக்கும் இந்த மாதம் நன்மை தீமை கலந்த மாதமாக உங்களுக்கு அமைகிறது

சந்திராஷ்டமம்: 10.12.21 இரவு 03.49 மணி முதல் 11.12.21 இரவு 03.35மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : ஆஞ்சநேயர் ஸ்ரீராமர் இவர்களை வழிபடுவது ராம நாமம் சொல்லுவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது என்று செயல்பட்டால் நல்ல பலன் உண்டாகும் முடிந்தவரையில் தான தர்மங்களை செய்வதும் நன்மை தரும்

ஆயில்யம் : உங்கள் நட்சத்திர அதிபர் புதன் இந்த மாதம் 4, 5 ,6 இடங்களில் சஞ்சாரம் செய்கிறார் மேலும் குரு  எட்டில் மறைவு கெடுதல் இல்லை என்றாலும் பெரிய நன்மையும் இல்லை சனிபகவான் மற்றும் சுக்கிரன் ராகு செவ்வாய் ஓரளவுக்கு நல்ல பலனை தருவதால் இந்த மாதத்தை நன்றாக ஓட்டிவிடலாம் பொருளாதாரம் பரவாயில்லை உத்யோகத்தில் சொந்தத் தொழிலில் பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும் மாதாந்திர வருமானம் தொடர்ந்து இருக்கும் கொஞ்சம் பெயர் புகழ் விடும் வகையில் சில சங்கடங்கள் உண்டாகும் வார்த்தை விடுவதில் கவனம் வாதம் செய்வதை நிறுத்துவது என்று கொண்டால் இதைத் தவிர்த்துவிடலாம் குடும்பத்தாரோடும், மற்றவர்களோடும் ஒத்துப்போவது விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும் பொதுவில் வெகு சுமாரான மாதம்

சந்திராஷ்டமம்: 11.12.21 இரவு 03.35 மணி முதல் 12.12.21 இரவு 03.47 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : அழகியவல்லி தாயார் சமேத வடிவழகிய நம்பி அன்பில் சுந்தர்ராஜ பெருமாளை சேவிப்பது கோயிலுக்கு சென்று விளக்கேற்றுவது முடிந்த வரையில் தான தர்மங்களை செய்வது நன்மை தரும்

சிம்மம் (மகம் 4பாதம், பூரம் 4பாதம், உத்திரம் 1ம் பாதம் முடிய):

பொது : உங்கள் ராசிக்கு ஏழில் குரு வந்து ராசியை பார்க்கிறார் இது ஒரு சிறப்பான பலன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மேலும் மூன்றில் இருக்கும் செவ்வாய் வலுவான மன திடத்தையும் செயல்பாடுகளில் வெற்றியையும் கொடுக்கிறது மேலும் சுக்கிரன் அண்ட் சனி இவர்கள் பொருளாதார நிலையில் நன்மை செய்கிறார்கள் உத்தியோகத்தில் உயர்ந்த நிலை சொந்தத் தொழிலில் புதிய வாய்ப்புகள் வருமானம் பெறுதல் மேலும் ராகு சிறப்பான பலனை தருகிறார் வருவாய் இரட்டிப்பாகும் கடந்த கால முயற்சிகள் வெற்றியை தரும் தாமதமான திருமண வாய்ப்புகள் இப்போது நடைபெறுவதற்கான நேரம் மேலும் இந்த குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு மிகுந்த சாதகத்தை கொடுக்கிறது காரணம் லாபத்தையும் மூன்றாம் இடத்தையும் பார்க்கிற விசேஷ பார்வை உங்கள் வருமானத்தைப் பெருக்குவதோடு இதுவரை இருந்துவந்த கவலைகள் சங்கடங்கள் யாவும் தீர்ந்து ஒரு மன உறுதி உண்டாக காரணமாக இருக்கிறது அனைத்து பிரிவினருக்கும் அவர்களின் கடந்தகால முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகி இந்த மாதம் அவர்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும் இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் புதிய வரவுகள் நடந்து மகிழ்ச்சி அதிகரிக்கும் சிலருக்கு வீடு வாகன யோகங்கள் உண்டாகும் நேரம் இது வரும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இந்த மாதத்தில் மிகுந்த நன்மைகளை பெறுவீர்கள் கேதுவால் மற்றும் சூரியன் இவர்களால் மன உளைச்சல்கள் எதிர்பாராத செலவினங்கள் என்று இருக்கும் ஆகவே கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும் இருந்தாலும் இந்த மாதம் நல்ல மாதமாக அமையும் கவலை வேண்டாம்

மகம் :  உங்கள் நட்சத்திர அதிபதி கேது நன்றாக இல்லை அதனால் எதையும் யோசித்து செயல்படுவது நன்மை தரும் குரு மற்ற கிரகங்கள் பெரும்பாலும் நன்மை செய்கிறது வருமானம் பெருகும் இல்லத்தில் திட்டமிட்டபடி எல்லாம் செயல்பாட்டுக்கு வரும் மகிழ்ச்சி அதிகரிக்கும் அதே வேளையில் எதிரிகள் மறைமுகமாக தாக்குவார்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது எல்லோருடனும் அனுசரித்துப் போவது நன்மை தரும் ஆகவே பொறுமையும் நிதானமும் கவனமும் அவசியம் ஒரு பக்கம் பொருளாதாரம் நன்றாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அதற்கு ஈடான செலவினங்களும் இருப்பதால் மிகுந்த யோசனையுடன் செயல்படுவது நன்மை தரும்

சந்திராஷ்டமம் : 12.12.21 இரவு 03.47 மணி முதல் 13.12.21 அதிகாலை 04.29 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :  அய்யனார் சாஸ்தா துர்கை போன்ற எல்லை தேவதைகளை வழிபடுவது கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றுவது முடிந்தவரையில் அன்னதானம் கல்வி தானம் இவற்றைச் செய்வது நன்மை தரும்

பூரம் : உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரன் ஐந்தில் வலுவாக இருக்கிறார் மேலும் இந்த மாத கடைசியில் ஆறில் பயணிக்கிறார் இரண்டுமே உங்களுக்கு சாதகம் மேலும் குரு பகவான் எழில் வருவது லாபத்தை பார்ப்பது உங்களுக்கு உற்சாகத்தையும் வருமானத்தையும் தருகிறது மேலும் செவ்வாய் புதன் ராகு இவர்களும் நன்மையை அதிகம் செய்கிறார்கள் அதனால் பொருளாதாரத்தில் நல்ல நிலை இருக்கும் உத்தியோகம் சொந்தத் தொழில் போன்றவையும் நல்ல ஏற்றம் இருக்கும் பொதுவாக இல்லத்தில் தேவைகள் பூர்த்தியாகி கடந்த கால முயற்சிகள் தடைப்பட்டு தாமதப்பட்டு வந்தது தற்போது நிறைவேறும் அதேநேரம் சூரியன் கேது இணைவு உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும் இல்லத்தில் வைத்திய செலவுகளை ஒருபக்கம் வைத்துக்கொண்டிருக்கும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும் பொதுவில் உங்களுக்கு நல்ல மாதம்

சந்திராஷ்டமம் : 13.12.21 அதிகாலை 04.29 மணி முதல் 14.12.21 அதிகாலை 05.42 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : கோதை நாயகி சமேத ரங்கமன்னர் பெருமாளை வழிபடுவது கிருஷ்ணருக்கு வெண்ணெய் சாத்துவது அருகில் உள்ள கோயில்களில் விளக்கேற்றி வழிபடுவது நன்மையை செய்யும் மேலும் அன்னதானம் செய்வதும் சரீர ஒத்தாசை வயோதிகர் இயலாதோர் ஆகியோர்களுக்கு செய்வதும் நன்மை அதிகரிக்க செய்யும்

உத்திரம் 1ம் பாதம் : உங்கள் நட்சத்திர நாதர் சூரிய பகவான் கேதுவின் ரணமாய் விடுவது ஒரு வித பலவீனத்தை தரும் குரு சுக்கிரன் ராகுல் செவ்வாய் மற்றும் என்று பெரும்பாலான கிரகங்கள் நன்மை செய்தாலும் கேதுவால் அவை விழலுக்கு இறைத்த நீர்போல் ஆகி விடும் வாய்ப்பு உள்ளது பொறுமையும் நிதானமும் பெரியோர்களின் ஆலோசனையும் கொண்டு செயல்பட்டால் அவற்றை தடுத்து விடலாம் பொதுவில் பணவரத்து அதிகரிக்கும் உத்தியோகத்தில் தொழிலில் நல்ல நிலை இருக்கும் ஆனாலும் உறவுகளில் நட்புகள் விரோதம் ஏற்படவும் அதனால் பணவிரயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது வைத்தியச் செலவுகளும் இருந்துகொண்டிருக்கும் எதிலுமே கவனமுடன் செயல்பட்டால் பெரிய பாதிப்புகள் இல்லை இந்த மாதம் பரவாயில்லை என்று சொல்லும் மாதம்

சந்திராஷ்டமம் : 17.11.21 இரவு 12,18 மணி வரை &    14.12.21 அதிகாலை 05.42 மணி முதல் 15.12.21 காலை 07.23 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : தேனினும் இனிய மென்மொழியாள் சமேத பதஞ்சலி மனோகர சுவாமியை வழிபடுவது சிவ ஸ்லோகங்கள் சொல்வது திங்கள் கிழமைகளில் சிவன் கோயிலுக்கு அபிஷேகத்துக்கு பால் கொடுப்பது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்களை விடாமல் செய்யுங்கள் 

கன்னி 🙁உத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம் 4 பாதம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய):

பொது : உங்கள் ராசிநாதன் ஓரளவுக்கு நன்மை மாத பிற்பகுதியில் செவ்வாய் மூலம் நல்ல பலன் அதேபோல் சுக்கிரன் மூலம் நல்ல பலன் மேலும் ராகுவால் ஓரளவுக்கு நன்மை என்று இந்தமாதம் பரவாயில்லை அப்படிங்கிற மாதிரி இருக்கு காரணம் குரு பகவான் பார்வையால் மட்டும் நன்மை செய்கிறார் சனி பகவான் ஓரளவுக்கு நன்மை செய்கிறார் என்று சொல்லலாம் மற்றபடி பெரும்பாலான கிரகங்கள் அனுகூலமற்ற நிலையில் இருக்கிறது இருந்தாலும் உங்கள் 12-க்குடைய சூரியன் மூன்றாமிடத்தில் இருந்து ஒரு அளவு கஷ்டத்தை குறைக்கிறார் கடுமையான உழைப்பும் வாதங்களை தவிர்ப்பதும், பொறுப்பு ஏற்றுக் கொண்டு செயல்படுவதும் நிதானம் என்ற நிலையும் இருந்தால் இந்த மாதத்தை கடந்துவிடலாம் பொதுவாக கஷ்டம் அதிகம் இல்லை ஆனால் நன்மையும் இல்லை அதனால ஓரளவுக்கு ஓட்டி விடலாம் முயற்சிகளை விடாது செய்து வாருங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தில் கிரக நிலைகள் கோச்சார தசைகள் நன்றாக இருந்தாள் நன்மைகள் அதிகம் இருக்கும் எதையும்  கலந்து ஆலோசித்து செய்வது நன்றாக இருக்கும் பரவாயில்லை என்று சொல்லும்படியான மாதம்

உத்திரம் 2,3,4 பாதங்கள் : உங்கள் நட்சத்திர அதிபதி சூரியன் கேதுவுடன் இணைவு அதனால் சில எதிர்பாராத செலவுகள் கவலைகள் வந்து சேரும் அதேநேரம் மற்ற கிரகங்கள் ஓரளவுக்கு நன்மை செய்வதால் பொருளாதாரம் பரவாயில்லை என்கிற மாதிரி ஒரு முன் ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் செலவுகளை கட்டுப்படுத்தலாம் வருமானமும் ராகுவால் வருவதற்காக சாத்தியக்கூறுகள் இருக்கு அதேநேரம் மற்ற கிரகங்கள் பரவாயில்லை என்பது மாதிரி இருப்பதால் செலவுகளும் கையை கடிக்கும் திட்டங்களை செயல்படுத்த கடுமையான உழைப்பு தேவைப்படும் பொறுமை நிதானம் நல்லோர்களின் ஆலோசனை இவை இருந்தால் இந்த மாதம் பரவாயில்லை என்று ஓட்டிவிடலாம்

சந்திராஷ்டமம் : 17.11.21 இரவு 12,18 மணி வரை &    14.12.21 அதிகாலை 05.42 மணி முதல் 15.12.21 காலை 07.23 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : தேனினும் இனிய மென்மொழியாள் சமேத பதஞ்சலி மனோகர சுவாமியை வழிபடுவது சிவ ஸ்லோகங்கள் சொல்வது திங்கள் கிழமைகளில் சிவன் கோயிலுக்கு அபிஷேகத்துக்கு பால் கொடுப்பது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்களை விடாமல் செய்யுங்கள் 

ஹஸ்தம்: உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரன் மாத துவக்கத்தில் எழில் பார்வையால் நன்மை,  மேலும் சனி பகவான் பார்வையால் குடும்பத்தில் பொருளாதாரத்தை நிலை நிறுத்துகிறார் சுக்கிரன் புதன் ராகு மற்றும் செவ்வாய் நல்ல பலனை தருகிறார்கள் குரு பார்வையால் நன்மை செய்கிறார் ஒரு அளவுக்கு உத்தியோகம் சொந்தத் தொழில் ஜீவனம் என்று நன்றாகவே இருக்கும் சிலருக்கு மருத்துவ செலவுகள் அல்லது எதிர்பாராத இனங்களில் செலவுகள் வரும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும் தகுந்த ஆலோசனை பெற்று எந்த செயலையும் செய்வது நல்லது உங்களுக்கு இந்த மாதம் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும் அதேநேரம் செலவுகளும் வருவதால் யோசித்து செயல்படுவது நன்மை தரும்

சந்திராஷ்டமம் : 17.11.21 இரவு 12.18 மணி முதல் 18.11.21 இரவு 02.28 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :  மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனையும் உங்கள் குல தெய்வத்தையும் வழிபடுவது கோயிலில் விளக்கு ஏற்றுவது பசித்தோருக்கு உணவிடுவது வாயில்லா ஜீவன்களுக்கு உணவு இடுவது போன்றவை நல்ல பலனை தரும் மன நிம்மதியையும் தரும்

சித்திரை 1,2 பாதங்கள் : உங்கள் நட்சத்திர அதிபர் செவ்வாய் இரண்டிலும் மூன்றிலும் ஆக சஞ்சாரம் அதனால் உங்கள் செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும் மேலும் குரு பார்வை சனி பார்வை மற்றும் சுக்கிரன் புதன் ராகு இவர்கள் நன்மை தருவது பொருளாதாரம் நன்றாக இருக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றியை தரும் தடைபட்ட திருமணம் போன்றவை கைகூடிவரும் ஒருபக்கம் செலவுகளும் அதிகரிக்கும் இருந்தாலும் இரட்டிப்பு வருமானம் ராகுவால் உண்டாவதால் செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பீர்கள் உங்களுக்கு வரும் வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொண்டால் நல்ல உழைப்பாளியான உங்களுக்கு இந்த மாதம் சிறப்பாக அமையும்

சந்திராஷ்டமம் : 18.11.21 இரவு 02.28 மணி முதல் 19.11.21 அதிகாலை 04.52 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பகவதி அம்மன் நாகாத்தம்மன் என்ற பெயருடைய அம்மனை வழிபட்டால் அந்தக் கோயில்களுக்குச் சென்று விளக்கேற்றுவது அங்கு வறியவர்களுக்கு உணவிடுவது கோயில் உழவாரப் பணி மற்றும் தர்ம கைங்கரியங்கள் செய்வது நன்மையை தரும்

துலாம்🙁 சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி 4 பாதம், விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய):

பொது : உங்கள் ராசிநாதன் 3,4ம்  இடங்களில் இந்த மாதம் சஞ்சாரம் அவர் பணவரவையும் ஆடை அணிகலன் சேர்க்கையையும் கொடுக்கிறார் விருந்து கேளிக்கைகள் என்றும் இருக்கிறது மேலும் குரு ஐந்தில் இருந்து உங்கள் ராசியை பார்க்கிறார் மேலும் பாக்கியத்தையும் பார்க்கிறார் இதனால் பொருளாதாரம் ஏற்றம் பெறும் உங்கள் ராசியிலும் இரண்டிலும் செவ்வாய் சஞ்சாரம் உத்தியோகம் சொந்த தொழில் போன்றவற்றில் ஏற்றத்தைத் தரும் எதிர்ப்பார்த்த பதவி சம்பள இடமாற்ற நிகழ்வுகள் உண்டாக வாய்ப்பு அதிகம் தொழில் விரிவாக்கம் அதன் மூலம் பணவரவு அதன்மூலம் பேர் புகழ் என்றும் நன்றாக இருக்கும் இந்த மாதத்தில் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் குருவின் பார்வையால்இதுவரை தாமதமாகி வந்த திருமணம் இப்போது கைகூடும் சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும் வீடு பழுது பார்த்தல் அல்லது புதிய வீடு வாங்குதல் வாகனம் வாங்குதல் போன்றவை சிலருக்கு உண்டாகும் ஏழில் ராகு ராசியில் கேதுவும் (அந்த ராசிகளுக்கான பலனை இப்பொழுதே தருகிறார்கள்)  நன்மையான நிலையை கொண்டிருப்பதால் வாழ்க்கை துணைவர் மூலம் வருமானம் பெருகும் மற்றும் மற்ற கிரகங்கள் சாதகமாகவே இருப்பதால் பல வழிகளிலும் வருமானம் மற்றும் மகிழ்ச்சி எல்லாம் வந்து சேரும் சூரியன் இரண்டில் இருப்பது வலுவற்ற நிலை இருந்தாலும் கேது விலகி விடுவதால் அரசாங்க வழியில் நன்மை கிடைக்க சாத்தியக்கூறுகள் உள்ளது பொதுவில் இந்த மாதம் உங்கள் முயற்சிகளை வெற்றியாகும் மாதமாக அமையும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நீடிக்கும் பெற்றோர் வகையில் மருத்துவச் செலவுகள் மற்றும் பிள்ளைகள் வழியில் கல்வி சம்பந்தப்பட்ட செலவுகள் என்று இருக்கும் ஆனாலும் வருவாய் அதிகம் இருப்பதால் அதை ஈடு செய்து விடுவீர்கள் நல்ல மாதம் இந்த மாதம்

சித்திரை 3,4 பாதங்கள்: உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய் வலுவான நிலையில் மேலும் குருவின் பார்வை இருப்பதாலும் மற்ற கிரகங்கள் சுக்கிரன் புதன் ராகு மற்றும் சந்திரன் இவர்களும் நன்மை அதிகம் செய்வதால் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும் வருமானத்தில் ஏற்றம் வரும் உத்தியோகம் ஜீவன ஸ்தானம் சொந்தத் தொழில் போன்றவற்றில் நல்ல நிலையில் இருக்கும் இல்லத்தின் தேவைகள் பூர்த்தியாகும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் இருக்கும் சுப நிகழ்வுகள் மூலம் புதிய வரவுகள் மகிழ்வைத் தரும் பொதுவில் இந்த மாதம் மிக நன்றாக உங்களுக்கு இருக்கிறது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

சந்திராஷ்டமம் : 18.11.21 இரவு 02.28 மணி முதல் 19.11.21 அதிகாலை 04.52 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பகவதி அம்மன் நாகாத்தம்மன் என்ற பெயருடைய அம்மனை வழிபட்டால் அந்தக் கோயில்களுக்குச் சென்று விளக்கேற்றுவது அங்கு வறியவர்களுக்கு உணவிடுவது கோயில் உழவாரப் பணி மற்றும் தர்ம கைங்கரியங்கள் செய்வது நன்மையை தரும்

ஸ்வாதி 4 பாதங்கள் : உங்கள் நட்சத்திர அதிபதி ராகு எட்டில் இருக்கிறார் ஆனால் அவர் ஏழு உண்டான பலனை தருகிறார் அது நன்மையாக அமையும் வாழ்க்கை துணைவர் மூலம் வருமானம் பெருகும் மற்ற கிரகங்களில் குரு பகவான் 5ல் இருப்பது நன்மையைத் தரும் பார்வையாலும் நன்மை தருகிறார் சுக்கிரன் புதன் செவ்வாய் மற்றும் சந்திரன் இவர்களும் உங்களுக்கு அதிக அளவில் நன்மை செய்கிறார் உத்தியோகத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு விரும்பிய இடமாற்றம் எல்லாம் கிடைக்கும் சொந்தத் தொழில் செய்வோர் அதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண்பார்கள் வருமானம் அதிகரிப்பதால் வீடு வாகன யோகங்கள் சிலருக்கு அமையும் பொதுவில் இந்த மாதம் நன்றாகவே இருக்கிறது செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மகிழ்ச்சி அதிகம் என்பதால் வைத்திய செலவுகள் இருக்காது அல்லது குறைவாக இருக்கும் பொதுவில் மிக நல்ல மாதம் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

சந்திராஷ்டமம் : 19.11.21 அதிகாலை 04.52 மணி முதல் 21.11.21 காலை 07.25மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : நரசிம்மரை வணங்குவது நன்மை தரும் துர்க்கை சாஸ்தா இவர்களை வணங்குவதும் நல்ல பயனை தரும் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது ஸ்லோகங்கள் சொல்வது நன்மை தரும் முடிந்த அளவு பிறர் தேவையை பூர்த்தி செய்யுங்கள் வறியவர்களுக்கு உதவுங்கள் நன்மை உண்டாகும்

விசாகம் 1,2,3 பாதங்கள் : உங்கள் நட்சத்திர அதிபதி குரு பகவான் ஐந்தில் வாசம் அதனால் மிக ஏற்றமான பலன்கள் உண்டாகும் பார்வையாலும் நன்மை செய்கிறார் அதேபோல் ராகு சுக்கிரன் செவ்வாய் புதன் சனி என்று பல கிரகங்கள் நன்மை செய்கின்றன சூரியனும் மாத கடைசியில் நல்லதை செய்கிறார் கேதுவால் சில விரயங்கள் சில மன அழுத்தங்கள் உண்டாகலாம் ஆனாலும் செவ்வாயின் பலத்தால் அவை விலகி விடும் அல்லது தீர்ந்துவிடும் பொதுவில் இந்த மாதம் ஜீவன வகையில் நன்மைகள் அதிகம் பொருளாதாரம் நன்றாக இருக்கும் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இந்த மாதத்தை பயன்படுத்திக் கொண்டால் வரும் மாதங்களில் நன்மையாகவே அமையும்

சந்திராஷ்டமம் : 21.11.21 காலை 07.25 மணி முதல், 22.11.21 காலை 09.57 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பால முருகனாக காட்சிதரும் கோயில்களுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு முடிந்த அளவு கார்த்திகை போன்ற நாட்களில் விரதம் இருங்க கந்தப் பெருமானின் ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டால் நன்மைகள் அதிகம் உண்டாகும் அன்னதானம் இவை இந்த மாதம் செய்ய ஏற்ற காலமாகும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்யுங்கள்

விருச்சிகம்🙁 விசாகம் 4ம்பாதம், அனுஷம் 4பாதம், கேட்டை 4 பாதங்கள் முடிய):

பொது: உங்கள் ராசிநாதன் 12ல் ராசியில் என்று சஞ்சாரம் மேலும் ராகு கேது இவர்கள் 6 12 க்குடைய பலன்களை தருவார்கள் முன்னதாகவே என்பதால் அது மிகுந்த உற்சாகத்தையும் உங்களுடைய இதுநாள் வரையிலான உழைப்புக்கு கிடைத்த பலனாகவும் அமையும் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்து இனிமேல் நல்ல காலம் என்பது போல் தைரிய ஸ்தானத்தில் இருக்கும் சனிபகவான் மற்றும் பார்வையால் குருபகவான் நன்மைகளை தருகிறார் தடங்கல்கள் விலகிவிடும் குறைகள் அகன்றுவிடும் கடந்த காலங்களில் ஏற்பட்ட சோகங்கள் மறைந்துவிடும் என்று சொல்லும்படியாக மற்ற புதன் சுக்கிரன் சந்திரன் இவர்கள் நல்ல பலனை தருகிறார்கள் பொதுவாக இந்த மாதம் பொருளாதார ரீதியாகவும் மகிழ்ச்சி தருவன மாதிரியாகவும் பல விஷயங்கள் நடக்கும் உத்யோகத்தில் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது சொந்தத் தொழில் செய்வோர் நல்ல நிலையை லாபத்தை பெறுவார்கள் ஆறில் ராகு மறைமுக வருமானத்தை தருவதால் மற்ற அனைத்து பிரிவினருக்கும் இந்த மாதம் பயனுள்ள மாதமாக அமையும் நல்ல பல சூழல்கள் அடுத்தடுத்து வரும் ராகு கேது பெயர்ச்சி குருவின் சஞ்சார பார்வை நிலைகள் இவை மிகுந்த நன்மையை செய்வதால் இந்த மாதம் உங்கள் கவலைகள் நீங்கி விடும் துன்பங்கள் குறைந்து விடும் நல்ல மாதமாக இருக்கிறது இல்லத்தேவைகள் பூர்த்தியாகும்,  

விசாகம் 4ம் பாதம் : உங்கள் நட்சத்திர அதிபதி குரு பகவான் பார்வையால் நன்மை செய்கிறார் மற்றும் ராசிநாதன் செவ்வாய் ராகு கேது சுக்கிரன் புதன் சந்திரன் இவர்களும் அதிகப்படியான நன்மை செய்கிறார்கள் சூரியன் சில இக்கட்டான சங்கடங்களை தொழிலில் உத்தியோகத்தில் மற்ற முயற்சிகளில் தருவார் ஆனாலும் அவை தானாக விலகி விடும் சனிபகவானின் மனோதிடம் உங்களிடம் இருக்கும் அதனால் முயற்சிகளை விடாமல் தொடர்வீர்கள் அதில் வெற்றியும் பெறுவீர்கள் இந்த மாதம் உங்களுக்கு நல்ல மாதமாக அமையும்

சந்திராஷ்டமம் : 21.11.21 காலை 07.25 மணி முதல், 22.11.21 காலை 09.57 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பால முருகனாக காட்சிதரும் கோயில்களுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு முடிந்த அளவு கார்த்திகை போன்ற நாட்களில் விரதம் இருங்க கந்தப் பெருமானின் ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டால் நன்மைகள் அதிகம் உண்டாகும் அன்னதானம் இவை இந்த மாதம் செய்ய ஏற்ற காலமாகும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்யுங்கள்

அனுஷம் 4பாதங்கள் : உங்கள் நட்சத்திர அதிபர் சனி பகவான் தைரிய ஸ்தானத்தில் இருப்பதால் மனோதிடம் கூடும் குருவின் பார்வை நல்ல பலனை தருகிறது மேலும் ராகு கேது இவர்களோ மற்ற சுக்கிரன் புதன் செவ்வாய் சந்திரன் என்று பல கிரகங்கள் நன்மைகளை அதிகம் செய்வதால் துன்பங்கள் அனைத்தும் விலகி உங்கள் முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும் பொருளாதார ஏற்றம் இருப்பதால் இல்லத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் சுப நிகழ்வுகளும் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிறைவேறும் காலமாக இது அமையும் பொதுவில் நல்ல மாதம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

சந்திராஷ்டமம் : 22.11.21 காலை 09.57 மணி முதல் 23.11.21 பிற்பகல் 12.18 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : சனீஸ்வரனை வழிபடுவது திருக்கச்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் செல்வது கோயிலில் விளக்கு ஏற்றுவது போன்ற செயல்கள் நன்மையை தரும் மேலும் உடல் பாதிப்பு உடையவர்களுக்கு சரீர ஒத்தாசைகள் செய்வதும் அன்னதானம் போன்ற தர்மங்களை செய்வதும் நன்மை தரும்

கேட்டை 4 பாதங்கள் : உங்கள் நட்சத்திர அதிபதி புதன் 12 ஒன்று 2 தானங்களில் இந்த மாத சஞ்சாரம் செவ்வாயும் வலுவான நிலையில் தைரிய ஸ்தானத்தில் சனி பகவான் பார்வையால் நன்மை செய்யும் குரு அடுத்த ராசிபலனை முன்னாடியே தரும் இராகு கேதுக்கள் என்று பல கிரகங்கள் நன்மை செய்வதாக அமைவதால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும் கடந்தகால முயற்சிகள் தற்போது வெற்றியைத் தரும் தாமதமாகும் திருமணம் குழந்தை பாக்கியம் இவைகள் இப்போது உண்டாக வாய்ப்பு உள்ளது குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் வருமானம் பெருகும் உத்தியோகம் சொந்தத் தொழில் என்று எதுவானாலும் நல்ல நிலையே காணப்படுகிறது அதனால் ஏற்றம் பெறுவீர்கள் செலவுகள் சில சங்கடங்கள் இருந்தாலும் அதை சமாளிக்கும் தைரியம் இருப்பதால் அவற்றைக் கடந்து நல்ல நிலையை பெறுவீர்கள் இந்த மாதம் சிறப்பான மாதம்

சந்திராஷ்டமம் : 23.11.21 பிற்பகல் 12.18 மணி முதல் 24.11.21 பிற்பகல் 02.20 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாளை சேவிப்பது ஆஞ்சநேயரை வழிபடுவது ராம நாமம் சொல்வது கோயில்களில் விளக்கு ஏற்றுவது அன்னதானம் கல்வி தானம் போன்றவை செய்வது என்று இருந்து வந்தால் கோயில் உழவாரப் பணி செய்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும் 

தனூர்(மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம், உத்திராடம் 1ம் பாதம் முடிய):

பொது: உங்கள் ராசிநாதன் குருபகவான் பார்வையால் நன்மை செய்கிறார் மேலும் செவ்வாய் ராகு சுக்கிரன் சந்திரன் புதன் சனி இவர்கள் அனைவருமே பலத்த நன்மை செய்வதால் இந்த மாதம் உங்களுக்கு மிக நன்றாக இருக்கும் தாமதமாகிக் கொண்டிருந்த திருமணம் கைகூடும் நிலை பொருளாதார ஏற்றம் குடும்பத்தில் மகிழ்ச்சி கணவன் மனைவி ஒற்றுமை சுபச் செலவுகள் அதிகமாகும் மற்றும் கேதுவால் லாபங்கள் இரட்டிப்பு வருமானம் என்று இந்த மாதம் இருக்கும் மேலும் பொருளாதார நிலை நன்றாக இருப்பதால் சிலருக்கு வீடு வாகன யோகங்கள் அமையும் சுக்கிரன் திருமணத்தை மட்டும் அல்லாது ஆடை ஆபரண சேர்க்கை சுபச்செலவுகள் மற்றும் குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி என்று செய்வதால் பெரும்பாலான நாட்கள் மகிழ்ச்சியாகவே அமையும் தந்தை வழியில் மருத்துவ செலவுகள் பிள்ளை வழியில் மருத்துவச் செலவுகள் என்று இருந்தாலும் அவற்றை சமாளித்து விடுவீர்கள் நண்பர்களால் உறவினர்களால் ஓரளவு நன்மை உண்டாகும் அதேநேரம் வாக்குவாதம் செய்கிறார்கள் எனில் அதனால் கஷ்டங்கள் உண்டாகும் பொறுமை அவசியம் பொதுவில் ஏற்றமான மாதமாக இந்த மாதம் அமையும் தேவைகள் பூர்த்தியாகும் நீண்டகால திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்

மூலம் 4 பாதங்கள் : உங்கள் நட்சத்திர அதிபதி கேது லாபத்தை நோக்கி நகர்வதால் அதற்குண்டான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் மேலும் குரு சனி சுக்கிரன் ராகு செவ்வாய் புதன் சந்திரன் என்று அனைத்து கிரகங்களும் நன்மைகளை தருவதால் பொருளாதார ஏற்றம் நன்றாகவே இருக்கும் கலைத்துறையில் எழுத்துத்துறையில் கல்வித் துறையில் இருப்பவர்கள் பிரகாசிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் உத்தியோகம் சொந்தத் தொழில் இரண்டிலுமே நல்ல முன்னேற்றம் இருக்கும் மற்ற பிரிவினர் அனைவருக்கும் ஜீவனத்திற்கு கஷ்டம் வராது சூரியனால் சில உடல் பாதிப்புகள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் பாதித்தல் அதனால் வைத்திய செலவு என்று இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள் இந்த மாதம் அருமையான வாய்ப்புகள் வரும் மாதம் பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம்

சந்திராஷ்டமம் : 24.11.21 பிற்பகல் 02.20 மணி முதல் 25.11.21 பிற்பகல் 03.58 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பிள்ளையார் மற்றும் பார்வதி தேவி இவர்களை வழிபடுவதும் அம்மன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுவதும் முடிந்தால் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய பால் பொருட்கள் கொடுப்பது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யவும்

பூராடம் 4 பாதங்கள்: உங்கள் நட்சத்திர அதிபதி சுக்கிரன் ராசியில் பலமாய் சனி செவ்வாய் புதன் கேது  இவர்களும் சந்திரனும் அதிக நன்மை தருகிறார்கள் பொருள் வரவு அதிகரிக்கும் பணப்புழக்கம் தாராளம் செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும் கடந்த கால முயற்சிகள் திருமணம் குழந்தை பாக்கியம் வீடு வாங்குவது போன்ற முயற்சிகளில் தற்போது சாத்தியமாகும் நிலை உள்ளது வாய்ப்புகள் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் முன்னேற்றம் காணலாம் பண வரவு அதிகமாகும் செலவுகள் இருந்தாலும் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆடை ஆபரணச் சேர்க்கை வந்து சேரும் அதேபோல் விருந்து கேளிக்கைகள் சுற்றுலா பயணம் என்று சென்று வருவீர்கள் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் புதிய வாகனம் சிலருக்கு அமையும் இந்த மாதம் நன்மை தரும் மாதமாக உங்களுக்கு அமைகிறது

சந்திராஷ்டமம் : 25.11.21 பிற்பகல் 03.58 மணி முதல் 26.11.21 மாலை 05.04 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : உறையூர் கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது தாயார் சன்னதியில் விளக்கேற்றுவது முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது கோயில் உழவாரப் பணி போன்று செய்வது நன்மை தரும்

உத்திராடம் 1ம் பாதம் : உங்கள் நட்சத்திர அதிபதி சூரியன் பன்னிரண்டில் கொஞ்சம் பலமற்று இருப்பது சில சங்கடங்களை தேவையற்ற செலவுகளை கொடுக்கும் ஆனாலும் மற்ற கிரகங்கள் நன்மை தரும் விதத்தில் அமைந்திருப்பதால் பொருளாதாரம் நன்றாக இருக்கும் இருந்தாலும் அது சுப செலவுகளாக இருக்கும் மேலும் சனி சுக்கிரன் ராகு சந்திரன் செவ்வாய் இவர்கள் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி தரும் வகையில் இருப்பார்கள் அதனால் உத்தியோகத்தில் சொந்த தொழிலில் ஜீவனத்தில் கஷ்டம் வராது எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தியாகும் மகிழ்ச்சி குடும்பத்தில் ஒற்றுமை என்று இருந்தாலும் சிலருக்கு திருமண வாய்ப்புகள் தேடி வரலாம் அதேநேரம் இப்படி சுகமாக மகிழ்ச்சியாக வாய்ப்புகள் இருந்தாலும் மன அழுத்தம் அல்லது உறவுகளால் நண்பர்களால் சங்கடங்கள் ஏற்படும் சில வீண் விரயங்களும் இருப்பதால் கொஞ்சம் கவனமாக நிதானித்து செயல்படுவது நல்லது பொதுவில் இந்த மாதம் நன்மையை அதிகம் தரும் மாதம் என்றாலும் உங்கள் நட்சத்திர நாதர் வலுவற்று போனதால் விரயங்கள் அதிகமாகும் நிதானித்து செயல்படுவது நன்மை தரும்

சந்திராஷ்டமம் : 26.11.21 மாலை 05.04 மணி முதல் 27.11.21 மாலை 05.46 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : உண்ணாமுலை தாயார் சமேத அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று வழிபடுவது பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவது நன்மை தரும் அன்னதானம் வஸ்திர தானம் செய்வதும் முதியோர் இயலாதோர் ஆகியோருக்கு சரீர ஒத்தாசை செய்வதும் நன்மை தரும்

மகரம்🙁உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம் 4 பாதம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய) :

பொது : ராசிநாதன் உங்கள் ராசியில் ஆட்சியாக பலமாக மேலும் குடும்ப வாக்கு தனம் இந்த தானத்தில் குரு பகவான் பார்வையாலும் நன்மை தருகிறார் மற்ற செவ்வாய் சுக்கிரன் புதன் இவர்களும்  நன்மை அதிகம் தருவதால் இந்த மாதம் நல்ல மாதமாக அமைகிறது சூரியன் வலுவற்ற நிலையில் இருந்தாலும் கெடுதல் செய்யவில்லை என்பதால் அதுவும் ஒரு லாபமாக மாறுகிறது கேது பகவான் பத்தாமிடம் நோக்கி நகர்வது இரட்டிப்பு வருவாயை தருகிறது பொருளாதாரம் மிக நன்றாக இருக்கும் இல்ல தேவைகள் பூர்த்தியாகும் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும் கடந்த கால முயற்சிகள் இப்பொழுது பலன் தர ஆரம்பிக்கும் எதிர்கால திட்டங்கள் இப்பொழுது செயல்பட ஆரம்பிக்கும் அதன்மூலம் உத்தியோகம் சொந்தத் தொழில் ஜீவன வகை  இவைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் திருமணம் குழந்தை பாக்கியம் வீடு வாகன யோகம் விரும்பிய இடமாற்றம் என்று இந்த மாதம் உங்களுக்கு நன்றாகவே அமையும் அதேநேரம் ஆறுக்குடைய புதன் தற்போது ஆரோக்கிய ரீதியான செலவுகளை தருவார் ஆனாலும் அது கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுவாக இந்த மாதம் உங்களுக்கு நன்மை அதிகம் தரும் மாதமாக இருப்பதால் விரைய செலவுகள் சுகமாக இருக்கும் பெரிய துன்பங்கள் கிடையாது

உத்திராடம் 2,3,4 பாதங்கள்: உங்கள் நட்சத்திர அதிபர் சூரியன் லாபத்தில் இருந்தாலும் சேதுவில் கிரணம் ஆகிவிடுவதால் மாத முற்பகுதியில் பெரிய நன்மைகள் ஏதும் அவரால் இல்லை இருந்தாலும் கெடுதல் இல்லை மற்ற கிரகங்கள் பெரும்பாலும் நன்மைகளை வாரி வழங்குவதால் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் அதனால் இல்ல தேவைகள் மற்ற தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் எதிர்பார்ப்புகள் ஈடேறும் உழைப்பதில் வல்லவரான நீங்கள் உங்கள் செயல்பாடுகளை சரியான பாதையில் எடுத்து வைத்து முன்னேற்றத்தை காண்பீர்கள் என்பது உறுதி உத்தியோகம் சொந்தத் தொழில் ஜீவன வகை என்று உங்களுக்கு நன்மை தருவதாகவே அமையும் வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் இந்த மாதத்தை சிறப்பான மாதமாக நீங்கள் மாற்றிவிடலாம்

சந்திராஷ்டமம் : 26.11.21 மாலை 05.04 மணி முதல் 27.11.21 மாலை 05.46 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள்: உண்ணாமுலை தாயார் சமேத அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று வழிபடுவது பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவது நன்மை தரும் அன்னதானம் வஸ்திர தானம் செய்வதும் முதியோர் இயலாதோர் ஆகியோருக்கு சரீர ஒத்தாசை செய்வதும் நன்மை தரும்

திருவோணம் 4 பாதம் : உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரன் மாத ஆரம்பத்தில் மூன்றில் மற்ற கிரகங்கள் நன்மை தருவதாக அமைகிறது சனி மற்றும் குரு அதிக நன்மையை செய்கிறார்கள் குடும்ப ஸ்தானத்தில் குரு இருப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சுபச்செலவுகள் திருமணம் போன்ற நிகழ்வுகள் நடக்கும் புது வரவுகளால் இல்லம் செழுமை அடையும் கடந்த கால திட்டங்கள் தற்போது நடைமுறைக்கு வந்து உங்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித்தரும் உத்தியோகத்தில் நல்ல நிலை இருக்கும் சொந்த தொழிலில் வருமானம் பெருகும் படியாக உங்கள் செயல்பாடுகள் அதற்கு செவ்வாய் மற்றும் கேது உதவுகிறார்கள் இந்த மாதம் மிக அருமையான வாதம் சரியான  செயல்பாடுகள் முன்னேற்றத்தை தரும் என்பது உறுதி வெற்றி பெறுவீர்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும்

சந்திராஷ்டமம் : 27.11.21 மாலை 05.46 மணி முதல் 28.11.21 மாலை 05.56 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் குலதெய்வம் மற்றும் உங்கள் இஷ்ட தெய்வம் இவர்களை வழிபட்டால் மேலும் பிறந்த ஊரின் தெய்வம் அந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடுவது விளக்கேற்றுவது அன்னதானம் வஸ்திர தானம் செய்வது கல்வி தானம் செய்வது போன்றவை உங்கள் முயற்சிகளில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் தருவது உறுதியாகும்

அவிட்டம் 1,2 பாதங்கள் : உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய் வலுவாக 10, 11ம் இடங்களில் சஞ்சாரம் செய்கிறார் மேலும் ராசியில் சனிபகவானும் இரண்டில் குருபகவானும் அதிக நன்மைகளை செய்கிறார் தேவைகள் பூர்த்தியாகும் பொருளாதாரம் மிக நன்றாக இருக்கும் செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவி ஒற்றுமை குடும்பத்திலுளோரோடு அனுசரித்து போகுதல் நன்மையை தரும் இல்லத்தில் சுப நிகழ்வுகளால் மனம் மகிழும் புனித யாத்திரை தீர்த்த யாத்திரை போன்றவை செய்வீர்கள் தெய்வ தரிசனம் உங்களுக்கு கிடைக்கும் இந்த மாதம் அதிகப்படியான நன்மைகள் தரும் மாதமாக உங்களுக்கு அமைகிறது கஷ்டங்கள் குறைவாக இருக்கும்

சந்திராஷ்டமம் : 28.11.21 மாலை 05.56 மணி முதல் 29.11.21 மாலை 05.38 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனை வழிபடுவது மற்றும் சிவனை வழிபடுவது நன்மை தரும் பிரதோஷ நாளில் நந்தி வழிபாடு நலம் தரும் முடிந்தவரையில் தான தர்மங்களை செய்வது நல்லது

கும்பம்🙁 அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4 பாதம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய):

பொது: உங்கள் ராசிநாதன் சனி பகவான் விரயத்தில் ராசியில் குரு பகவான் ஆனாலும் உங்களுக்கு நன்மை தருபவர்களாக இருப்பவர்கள் சுக்கிரன் கேது புதன் மற்றும் சந்திரன் பகை கிரகங்கள் அவ்வளவு நன்மை தரவில்லை பொதுவாக சனி குரு பார்வையால் ஓரளவு நன்மை செய்கிறார்கள் குரு பகவான் 5,7,9 இந்த இடங்களை பார்ப்பதால் பொருளாதார ஏற்றம் குழந்தைகளால் மகிழ்ச்சி பேர் புகழ் நன்றாக இருக்கும் வருமானம் அதிகரித்தல் வாழ்க்கை துணைவர் சந்தோஷம் உண்டாதல் என்று நன்றாக இருக்கும் அதேநேரம் உத்தியோகம் ஜீவன ஸ்தானம் சொந்தத் தொழில் இவற்றில் கடுமையான உழைப்பு ஆனால் பலன் சொற்பம் பரவாயில்லை என்று சொல்லும்படியாக வருமானம் வந்து கொண்டிருக்கும் அதே நேரம் சூரியன் மற்றும் செவ்வாயால் உடல் உபாதைகள் மருத்துவ செலவுகள் தேவையற்ற சஞ்சலங்கள் வீண் விரயங்கள் இப்படி சென்று கொண்டிருக்கும் பெரிய முன்னேற்றம் என்பது இல்லை ஆனால் ஓரளவுக்கு சமாளித்து விடும்படி இருக்கும் வாழ்க்கையில் கடுமையான உழைப்பு பொறுமை நிதானம் இவற்றை கொண்டால் இந்த மாதம் பரவாயில்லை என்று கடந்துவிடலாம் வருத்தம் தரும் சில நிகழ்வுகள் மேலும் வீண் விவாதங்கள் வரும் மனக்கசப்புகள் இவற்றைத் தவிர்க்க பொறுமை நிதானம் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது பிறர் யோசனையை கேட்பது என்று இருந்தால் கெடுதல்கள் குறையும்.  சில மகிழ்ச்சியான விஷயங்களும் இருக்கிறது 5ம் இடத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும் பேர் புகழ்,வருமானம் கூடும் மகிழ்ச்சி அதிகரிக்கும் அதேபோல் சனி பகவான் ஒன்பதாம் இடத்தை பார்ப்பது சில பாக்கியங்களை கொண்டு வந்து தரும் பெரும்பாலும் நன்மைகள் தீமைகள் இரண்டும் சம அளவில் இருக்க வாய்ப்புகள் உள்ளது தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால  நன்மை அதிகரிக்க செய்யும் மற்றபடி பரவாயில்லை என்று சொல்லும்படியான மாதம் இது

அவிட்டம் 3,4 பாதங்கள் : உங்கள் நட்சத்திர அதிபர் செவ்வாய் 9 மற்றும் 10ம் இட  சஞ்சாரம் இது நன்மை தருவதாக அமைகிறது மேலும் சுக்கிரன் புதன் சூரியன் சந்திரன் இவர்களும் ஓரளவு நன்மை செய்கிறார்கள் குரு பார்வையால் நன்மை தருகிறார் அதாவது உங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற செய்கிறார்கள் அதேபோல பொருளாதாரம் நன்றாக இருக்கும்படி செய்கிறார்கள் ராகு சனி மற்றும் கேது இவர்கள் உடல் ரீதியான மனரீதியான சங்கடங்களை தருகிறார்கள் அதனால் வைத்திய செலவு அதிகரிக்கும் விரும்பத்தகாத செயல்களால் மன சங்கடங்கள் உண்டாகும் உறவுகள் நண்பர்கள் எதிரிகளாக மாற வாய்ப்புள்ளது பொறுமை நிதானம் முன்யோசனை இப்படி இருந்தால் வெற்றி அதிகம் இருக்கும் துன்பங்களில் இருந்து விடுபடலாம் பொதுவில் பரவாயில்லை என்பதான மாதமாக இந்த மாதம் அமைகிறது

சந்திராஷ்டமம் : 28.11.21 மாலை 05.56 மணி முதல் 29.11.21 மாலை 05.38 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனை வழிபடுவது மற்றும் சிவனை வழிபடுவது நன்மை தரும் பிரதோஷ நாளில் நந்தி வழிபாடு நலம் தரும் முடிந்தவரையில் தான தர்மங்களை செய்வது நல்லது

சதயம் 4 பாதங்கள்: உங்கள் நட்சத்திர அதிபதி ராகு மூன்றாம் இடம் நோக்கி வருவது அதற்குண்டான பலன்களைத் தருவது என்பதால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் வருமானம் பெருகும் மேலும் குரு பார்வை சுக்கிரன் செவ்வாய் புதன் இவர்கள் ஜீவன வகையில் நன்மை செய்கிறார்கள் வீடு வாகனம் போன்ற விஷயங்கள் கை கூட வாய்ப்புள்ளது பொருளாதார ஏற்றம் இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சில உறவுகள் மற்றும் நட்புகளால் வீண் விரயம் மன சங்கடம் இவை உண்டாகும் பெற்றோர் வழியில் வைத்திய செலவுகள் இருக்கும் பொதுவில் விரையும் ஒரு அளவு கூட இருக்கும் இந்த மாதம் நன்மை தீமை சரி அளவில் இருக்கும் மாதமாகும்

சந்திராஷ்டமம் : 29.11.21 மாலை 05.38 மணி முதல் 30.11.21 மாலை 04.56 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் காலபைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடுகள் மற்றும் எல்லை தெய்வங்கள் வழிபடுதல் போன்றவை நன்மை தரும் கோயிலில் விளக்கு ஏற்றுதல் உழவாரப்பணி என்ன செய்வது முடிந்த அளவு அன்னதானம் செய்வது இவை நன்மை தரும்

பூரட்டாதி 1,2,3 பாதங்கள்: உங்கள் நட்சத்திர அதிபர் குரு பகவான் ராசியில் கட்டிப் போட்டதுபோல் உங்கள் நிலை இருக்கும் ஆனால் பார்வையில் நன்மை தருகிறார் குருபகவான் அதேபோல சுக்கிரன் புதன் ராகு சந்திரன் இவர்களும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள் பொருளாதாரரீதியாக நன்மை தருகிறார்கள் ஆடை ஆபரணச் சேர்க்கை சிலருக்கு வீடு வாகன யோகம் திருமணம் புத்திரபாக்கியம் போன்றவைகள் நடத்தல் என்று மகிழ்ச்சியாகவே இருக்கும் மேலும் பிள்ளைகளால் பெருமை உண்டாகும் வாழ்க்கைத் துணைவரால் நன்மை உண்டாகும் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும் ஜீவன வகையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் உத்தியோகத்தில் உயர்ந்த நிலை சொந்த தொழிலில் நல்ல நிலை என்று நன்றாகவே இருக்கும் சில சமயம் வாதங்கள் செய்வதால் அல்லது அவசரப் படுவதால் சில சங்கடங்கள் வீண் விரயங்கள் உண்டாகும் கவனம் தேவை பொதுவில் நன்மைகள் அதிகம் உள்ள மாதம்

சந்திராஷ்டமம் : 30.11.21 மாலை 04.56 மணி முதல் 01.12.21 பிற்பகல் 03.50 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் ரங்க நாயகி சமேத திரு அரங்கநாதர் வழிபாடு பெருமாள் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுவது கோயில் கைங்கரியங்கள் செய்வது முடிந்த அளவு அன்னதானம் போன்ற தர்மங்களை செய்வது ஏழை எளியோருக்கு ஒத்தாசை செய்வது அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது நன்மைகளை தரும் 

மீனம்🙁 பூரட்டாதி 4ம்பாதம், உத்திரட்டாதி 4 பாதம், ரேவதி 4 பாதம் முடிய):

பொது : உங்கள் ராசிநாதன் விரயத்தில் மறைந்தாலும் லாபத்தில் சனிபகவானும் மற்றும் சுக்கிரன் செவ்வாய் புதன் என்றோ நன்மைகள் அதிகம் தரும்படியான கிரகநிலைகள் காணப்படுகிறது பொதுவாக 2ம் இடத்திற்கு வரும் ராகுவின் நிலை பரவாயில்லை என்றபடி இருக்கும் உத்யோகத்தில் ஜீவன வகையில் சொந்தத் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் 8க்கு உண்டான பலனைத் தரும் கேது பகவான் சில சங்கடங்களை பொருளாதார நெருக்கடியை கொடுத்தது வீண் விரயங்களை கொடுத்து பரவாயில்லை என்று சொல்லும்படியாக இந்த மாதத்தை நகர்த்துவார். மற்ற கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும் விரும்பிய பதவி கிடைத்தாலும் பொருளாதாரம் நன்றாக இருப்பது போல் தோன்றும் ஆனால் கேது இங்கு பலமாக இருப்பதால் சூரியனை பிடிப்பதால் செயல்பாடுகள் மந்தமாக இருக்கும் அதனால் விரயங்கள் ஏற்பட்டு பொருளாதாரம் பற்றாக்குறை என்ற லெவலில் இருக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி பொறுமை நிதானம் முன்யோசனை இவற்றைக்கொண்டு மேலும் உங்கள் நலம் விரும்பிகள் ஆலோசனைகளை பெற்று செயல்படுவது நன்மையைத் தரும் இல்லத்தில் சுப நிகழ்வு நடக்கும் நீண்ட காலமாக திருமண ஏற்பாடுகளில் தாமதம் இருந்து வந்த நிலை மாறி தற்போது திருமணம் கைகூடும் அதேபோல் சொந்தத் தொழில் செய்வோருக்கு கடந்த காலங்கள் கசப்பான அனுபவங்களை தந்திருக்கும் அவை மாறி இந்த மாதம் ஓரளவுக்கு வருமானம் ஈட்டும் படியாக அமையும் அதேநேரம் தொழிலாளர் நல கணக்கு வழக்குகளில் சரியாக வைத்திருத்தல் அரசாங்கத்தின் அனுபவத்தை பெறுதல் என்று இருந்தால் தொழில் முன்னேற்றம் நன்றாக இருக்கும் பொதுவில் இந்த மாதம் நன்மைகள் அதிகம் என்றாலும் கவனத்துடன் இருந்தால் தீமைகள் குறைய வாய்ப்புள்ளது

பூரட்டாதி 4ம் பாதம் : உங்கள் நட்சத்திர அதிபர் 12ல் விரையம் ஆனாலும் பார்வையில் நன்மை தருகிறார் மேலும் லாபத்தில் சனிபகவான் ஆட்சியாக உங்கள் பொருளாதார நிலையை உத்தியோகத்தில் முன்னேற்றத்தை சொந்தத் தொழிலில் வளத்தை செயல்படுத்துகிறார் மற்ற கிரகங்களும் சாதகமாக இருக்கிறது அதேநேரம் கேது வலுவாக இருப்பது நல்லதல்ல வைத்தியம் போன்ற செலவுகளும் வீண் விரயங்களும் கொடுக்கும் பொருளாதாரத்தை மந்தமாக செய்யும் நிலையை உண்டாக்கும் கவனத்துடன் செயல்படுவது அவசியம் எல்லாம் கிடைக்கிறதே என்று அசட்டையாக இருப்பது துன்பத்தைக் கொடுக்கும் நிதானித்துச் செயல்படுவது நலம் விரும்பிகள் யோசனை கேட்பது நன்மையை தரும்

சந்திராஷ்டமம் : 30.11.21 மாலை 04.56 மணி முதல் 01.12.21 பிற்பகல் 03.50 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் ரங்க நாயகி சமேத திரு அரங்கநாதர் வழிபாடு பெருமாள் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுவது கோயில் கைங்கரியங்கள் செய்வது முடிந்த அளவு அன்னதானம் போன்ற தர்மங்களை செய்வது ஏழை எளியோருக்கு ஒத்தாசை செய்வது அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது நன்மைகளை தரும் 

உத்திரட்டாதி 4 பாதம்: உங்கள் நட்சத்திர அதிபர் லாபத்தில் அதனால் நன்மைகள் அதிகம் உண்டாகும் உத்தியோகத்தில் ஜீவன வகையில் பொருளாதார ஏற்றம் நன்றாகவே இருக்கும் சொந்தத் தொழில் செய்வோர் நல்ல ஏற்றத்தை பெறுவர் அதேநேரம் கேது கெடுதல் செய்வதால் செலவுகளும் அதிகரிக்கும் முன்யோசனையுடன் செயல்படுவது நன்மை தரும் இல்லத்தில் சுப நிகழ்வுகளும் தாமதமான திருமணம் கைகூடும் நாள்பட்ட வியாதிகள் பூரண குணமடைவது ஒரு பக்கம் நடக்கும் உங்கள் செயல்பாடுகளால் உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள் சொந்த தொழில் செய்வோர் வங்கி அரசு உதவிகளை பெறுவர் ஆனால் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இவர்களின் நலன் காப்பது அவசியம் வீண் விவாதம் செய்வது அல்லது அசட்டையாக இருப்பது நன்மை தராது கவனத்துடன் நடப்பதும் தகுந்த ஆலோசனை பெற்று எந்த ஒரு செயலை செய்வதும் நன்மை தரும் பொதுவாக இந்த மாதம் உங்களுக்கு நன்மை அதிகம் கவனமாக செயல்பட்டால் கெடுதல்கள் வெகுவாக  குறைய வாய்ப்புள்ளது

சந்திராஷ்டமம் : 01.12.21 பிற்பகல் 03.50 மணி முதல் 02.12.21 பிற்பகல் 02.35 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் தனுஷ்கோடி ராமர் வழிபாடு அனுமன் வழிபாடு நன்மையைச் செய்வோம் ராம நாமம் நல்ல பலனைத் தரும் அருகில் உள்ள கோயில்களில் விளக்கேற்றி வழிபடுவது முடிந்தவரை தான தர்மங்கள் செய்வதும் நன்மை உண்டாகும்

ரேவதி 4 பாதம்: உங்கள் நட்சத்திர அதிபர் புதன் 8,9, 10ம் இடங்களில் சஞ்சரிப்பது நன்மை தரும் சனிபகவான் லாபத்தில் அமர்ந்து பொருளாதாரத்தை உயர்த்துகிறார் தேவைகள் பூர்த்தியாகும் வீடு வாகன யோகங்கள் சிலருக்கு உண்டாகும் உத்தியோகத்தில் நல்ல நிலை இருக்கும் பொதுவாக குருவின் பார்வையும் நன்மை செய்வதால் மற்ற சுக்கிரன் செவ்வாய் இவர்களும் நல்ல பலன் தருவதால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் திருமண வாய்ப்புகள் தேடி வரும் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் பொதுவில் நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதம் கேதுவால் சில சங்கடங்கள் உண்டானாலும் அவை தானாக தெரிந்து விடும் நிலை இருக்கிறது அதனால் இந்த மாதம் சிறப்பான மாதமாக உங்களுக்கு அமையும்

சந்திராஷ்டமம் : 02.12.21 பிற்பகல் 02.35 மணி முதல் 03.12.21 பிற்பகல் 01.06 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் பூமிதேவி சமேத லவன வர்ஜித வெங்கடேசன் ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாளை வழிபடுவது திருவோண விரதம் இருப்பது பெருமாள் கோயிலில் விளக்கு ஏற்றுவது நன்மை தரும் முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள் ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்யுங்கள் நன்மை அதிகரிக்கும்

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி(ரவி சாரங்கன்)

ஜோதிடர்,

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Land Line : 044-35584922

ஃபோன் நம்பர் : 8056207965 (வாட்ஸப்)

Email ID : mannargudirs1960@hotmail.com

!!ஸுபம்!!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.