ப்லவ வருடம் ஆவணி மாதம் ராசி பலன்கள்

ஆவணி மாதம் ராசி பலன்கள்

மாதம் பிறக்கும் போது கிரஹங்களின் நிலை – நக்ஷத்திரம்

லக்னம் – 24:58:43 – ரிஷபம் – மிருகசீரிடம் -1

சூரியன் – 00:00:00 – சிம்மம் – மஹம் – 1

சந்திரன் – 15:38:02 – விருச்சிகம் – அனுஷம் – 4

செவ்வாய் – 17:10:33 – சிம்மம் – பூரம் –  2

புதன் – 14:40:44 – சிம்மம் – பூரம் – 1

குரு (வக்ரம்) – 03:29:29 – கும்பம் – அவிட்டம் – 4

சுக்ரன் – 06:36:03 – கன்னி – உத்திரம் – 3

சனி (வக்ரம்) – 14:57:53 – மகரம் – திருவோணம் – 2

ராகு – 13:26:23 – ரிஷபம் – ரோஹிணி – 2

கேது – 13:26:23 – விருச்சிகம் – அனுஷம் – 4

நற்பலன் பெறும் நக்ஷத்திரங்கள் :

கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், உத்திரம், ஸ்வாதி, கேட்டை, உத்திராடம், சதயம், ரேவதி

மத்திம பலனை பெறும் நக்ஷத்திரங்கள் :

அஸ்வினி, ரோஹிணி,புனர்பூசம், மஹம், ஹஸ்தம், விசாகம், மூலம், திருவோணம், பூரட்டாதி

மற்ற நக்ஷத்திரங்கள் பிறந்த ஜாதக கட்ட கிரஹ நிலை பொறுத்து ஓரளவு நன்றாக இருக்கும்.

பொதுவில் இந்த மாதம் நாட்டில் மழை சுமார், விளை பொருள் ஏற்றம், ஆட்சியாளர்களுக்கு தொந்தரவு, பண வரவு சுமார் செலவு அதிகம், கொஞ்சம் குழப்பங்கள் இருக்கும் ஆனாலும் சமாளித்துவிடுவார்கள், வியாதியின் தாக்கம் செப்டம்பர் 23ம் தேதிவரை கொஞ்சம் கடுமையும் இருக்கும். மக்களிடம் பீதி இருக்கும். பொதுவில் சில நல்ல நிகழ்வுகள் மக்கள் பயன் அடையும் வகையில் அரசு செயல்பாடும் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். புதிய திறமையாளர்கள் (அனைத்து துறைகளிலும்) மதிக்கப்படுவார்கள். பெரும்பாலும் நன்மை அதிகம்.

மேஷம் : (அஸ்வினி , பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய):

உங்கள் ராசி நாதன் செவ்வாய் செப்டம்பர் 6ஆம் தேதி வரை சிம்மத்தில் இருக்கிறார் அதன்பின் கன்னிக்கு செல்கிறார் பொதுவாக ராசிக்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய் இருப்பது நல்லதல்ல ஆனால் இங்கு ஐந்தில் சூரியன் ஆட்சியாக வருவதாலும்  செவ்வாய்க்கு சிம்மம் நட்பு வீடு என்பதாலும் கெடுபலன்கள் இல்லை மேலும் உங்களுக்கு இந்த மாதம் சனி மற்றும் செவ்வாய் தவிர பல கிரகங்கள் மாதா ஆரம்பம் வரை அதாவது செப்டம்பர் 6 ஆம் தேதி வரை பெரிய நன்மைகள் எதுவும் செய்யவில்லை சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் மற்றும் மாத கடைசியில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் அதேபோல பொருளாதார நிலை ஓரளவு இருந்துகொண்டிருக்கும் அதாவது பெரிய கஷ்டங்கள் இல்லை நிலைமை சமாளிக்கும் அளவுக்கு இருக்கும் புதிய திட்டங்கள் எதையும் செப்டம்பர் 6ஆம் தேதிக்கு பிறகு வைத்துக் கொள்வது நல்லது சிலருக்கு இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது சந்திராஷ்டம நாள் மட்டும் அல்லாது இந்த மாதத்தில் பெரும்பாலான நாள் கொஞ்சம் கவனமாகவும் நிதானத்துடன் யோசித்து செயல்படுவது நல்லது குடும்ப அங்கத்தினர்களுக்கு உடல்ரீதியான மருத்துவ செலவுகள் இருக்கலாம் மேலும் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம் பொதுவாக இந்த மாதம் மிக சுமாராக இருப்பதால் எதிலேயும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லோர்களின் பேச்சுப்படி நடப்பது என்று கொண்டால் பரவாயில்லை என்ற மாதிரி மாதம் கடந்து விடும்

 அஸ்வினி நட்சத்திரகாரர்களே உங்களுக்கு உங்கள் நட்சத்திராதிபதி கேது எட்டில் இருப்பதால் அவர் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஜீவன வகையில் கொஞ்சம் நெருக்கடி இருக்கும் சிக்கனம் அவசியம் மேலும் புதிய முயற்சிகள் திருமணம் அல்லது மற்ற சுப நிகழ்ச்சிகள் உங்களுக்கு இந்த மாதம் மிகுந்த முயற்சிக்குப் பின் நடைபெறும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது உங்களுக்கு எதிர்பாராத வரும் பிரச்சனைகளை கண்டு நிதானம் தவறாமல் இருப்பது நல்லது புதிய முயற்சிகள் தள்ளிப்போடுவது நல்லது இந்த மாதம் ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்லும் படியாக இருக்கிறது

 சந்திராஷ்டமம் :   செப்டம்பர் 12ஆம் தேதி பகல் 01.02  மணி முதல் செப்டம்பர் 13ஆம் தேதி பகல் 11 24 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் :  சாஸ்தா அய்யனார் கோயிலில் விளக்கு ஏற்றவும் தினமும் மனதில் சாஸ்தா அல்லது அய்யனார் நாமத்தைச் சொல்லவும் முடிந்தவரையில் அன்னதானம் வஸ்திர தானம் செய்யவும்

 பரணி நட்சத்திர காரர்களே உங்கள் நட்சத்திர அதிபதி சுக்கிரன் மாதக்கடைசியில் பலன் தருகிறார் இவர் ஓரளவுக்கு உங்களுக்கு நன்மை செய்கிறார் அதனால் பொருளாதார ரீதியாக பிரச்சனை இல்லை கவனமாக இருந்தாலும் சில சமயங்களில் கேதுவினால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம் அதன்மூலம் உங்கள் பிரச்சனைகள் தீவிரமாக ஆகவே எதிலும் நிதானமாக இருப்பது யோசித்து பேசுவது நன்மை தரும் மேலும் இரண்டில் இருக்கும் ராகு உங்களுக்கு வார்த்தை தடுமாற்றம் அல்லது தவறான வார்த்தைகளை பிரயோகிக்க செய்துவிடும் அதனால் பெரியோர் சொல்படி நடப்பது சிக்கனமாக இருப்பது செலவுகளை குறைத்துக் கொள்வது குடும்பத்தினருடன் மோதாமல் இருப்பது வாக்குவாதங்களை தவிர்ப்பது இவை உங்களுக்கு நன்மை தரும் மற்றபடி இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம் இது கொஞ்சம் சிரமத்தை தரும் இந்த மாதம் சுமார் மாதம்

 சந்திராஷ்டமம் :  உங்களுக்கு ஆகஸ்ட் 17  இரவு 01.41 மணி வரை மற்றும் செப்டம்பர் 13 பிற்பகல் 11 24  மணி முதல் செப்டம்பர் 14 காலை 9 48 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் :  மகாலட்சுமி அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடலாம் மேலும் லட்சுமி அஷ்டோத்திரம் சொல்வது நல்லது முடிந்தவரை தானதர்மங்கள் செய்வது நன்மை தரும்

 கிருத்திகை 1ஆம் பாதம் :  உங்களின் நட்சத்திர அதிபதி சூரியன் ஐந்தில் பலமாக இருப்பதால் உங்களுக்கு இந்த மாதம் சில வெற்றிகள் கிடைக்கும் மேலும் சனி பகவான் மக்களாக இருந்தாலும் பத்தில் இருந்தபடி பொருளாதார ஏற்றம் உத்தியோகத்தில் உயர்வு எங்கும் மகிழ்ச்சி புதிய முயற்சிகளில் வெற்றி என்று தருவார் மற்ற கிரகங்கள் ஓரளவு நன்மை செய்கிறது செப்டம்பர் 6ஆம் தேதிக்கு பின் பரவாயில்லை நல்ல முன்னேற்றம் என்ற ரீதியில் இருக்கும் அதே நேரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும்

 சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 17 நள்ளிரவு 01.41 மணி  முதல் ஆகஸ்ட் 18 நள்ளிரவு 12 13 மணி வரை மற்றும் செப்டம்பர் 14 காலை 9 48 மணி முதல் செப்டம்பர் 15 காலை 8 16 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் :  முருகன் பாலசுப்பிரமணியர் கோயிலில் விளக்கேற்றுவது சஷ்டி கவசம் படிப்பது நன்மை தரும் செவ்வாய்க்கிழமைகளில் முருக நாமம் சொல்வது நன்மை உண்டாகும் மேலும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்ய வேண்டும் இது உங்கள் வம்சத்தை முன்னேற்றத்தையும்

ரிஷபம் : (கிருத்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) ::

உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 5-ல் இருக்கிறார் ஒரு 5 நிமிடம் நல்லதில்லை ஆனாலும் அவர் பணத்தட்டுப்பாடு இல்லாமல் செய்கிறார் மேலும் சூரியன் நான்கில் ஆட்சியாக இருக்கிறார் அது ஒரு சிறப்பைத்தரும் சுகஸ்தானம் மற்றும் தாயார் வழியில் நன்மை என்று தரும் அதுபோல 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் உத்தியோகம் சொந்தத் தொழில் இவற்றில் முன்னேற்றம் ஏற்படும் பொதுவாக அங்கு குருவும் இருப்பதால் பத்தி வகிரியாகம் இருந்தாலும் அவர் விடுதலை செய்யவில்லை பொருளாதாரம் நன்றாக இருக்கும் உத்தியோகத்தில் உயர்வு புதிய வேலை முயற்சி வெற்றி பெறுதல் இருப்பிட மாற்றம் அல்லது தொழில் நிமித்தமாக வேறு ஊரில் வசித்தல் என்பது உங்கள் எண்ணம் ஆக இருந்தால் அது நிறைவேறும் மேலும் உங்களுக்கு செவ்வாய் ஆனது 5-ஆம் இடத்துக்கு மாரி சில நன்மைகளை தருகிறார் பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு வருவதால் உங்கள் புகழ் நல்ல நிலை அடையும் மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள் பெரிய சங்கங்கள் தானாக விலகும் கல்வியில் உயர்ந்த நிலையிருக்கும் மேல்படிப்பு படிக்க நினைப்பவர்கள் எண்ணம் ஈடேறும் விரும்பிய படிப்பு கிடைக்கும் மேலும் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் அதற்கான முயற்சிகள் வெற்றி பெறும் பொதுவாக லக்னத்தில் ராகு ஏழில் கேது நன்மை தராது என்பார்கள் ஆனால் பாவ படி ராகு பதினொன்றில் கேது ஆறில் என்பதாகக் கொண்டாள் அவர்கள் நன்மைகளையே செய்கிறார்கள் மற்ற கிரகங்களும் பெரும்பாலும் உங்களுக்கு நன்மை செய்வதால் இந்த மாதம் மகிழ்ச்சியான மாதமாக இருக்கும் உங்களுடைய புதிய முயற்சிகள் வெற்றி பெறும் பணப்புழக்கம் தாராளம் வீடு வாகனம் இவை சிலருக்கு அமையும் திருமணத்தை எதிர் பார்த்தவர்கள் அது ஈடேறும் மேலும் குழந்தை பாக்கியம் உண்டாவதற்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது அதனால் இந்த மாதத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளவும்

 கிருத்திகை 2,3,4 :  உங்கள் நட்சத்திர நாதன் சூரிய பகவான் நாளில் ஆட்சியாக இருப்பது மேலும் உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் வலுவாக ஐந்தில் இருப்பதும் பின் ஆறு ஆட்சியாக அமர்வதும் நன்மைகளை தரும் மேலும் உங்களுக்கு பெரும்பாலான கிரகங்கள் நன்மை செய்வதால் உங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் அனைத்து துறையினருக்கும் இந்த மாதம் அவர்களின் எண்ணங்கள் ஈடேறும் அதற்காக அவர்களின் முயற்சிகள் பலன் தரும் அதனால் மகிழ்ச்சி அதிகமாகும் நன்மை தரும் மாதமாக இது இருக்கிறது

 சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 17 நள்ளிரவு 01.41 மணி  முதல் ஆகஸ்ட் 18 நள்ளிரவு 12 13 மணி வரை மற்றும் செப்டம்பர் 14 காலை 9 48 மணி முதல் செப்டம்பர் 15 காலை 8 16 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் :  முருகன் பாலசுப்பிரமணியர் கோயிலில் விளக்கேற்றுவது சஷ்டி கவசம் படிப்பது நன்மை தரும் செவ்வாய்க்கிழமைகளில் முருக நாமம் சொல்வது நன்மை உண்டாகும் மேலும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்ய வேண்டும் இது உங்கள் வம்சத்தை முன்னேற்றத்தையும்

 ரோகினி நட்சத்திர காரர்கள் உங்கள் நட்சத்திர நாயகன் சந்திரன் பலமாக (நீசபங்க ராஜயோகம்)  மாத ஆரம்பத்தில் இருக்கிறார் மேலும் சூரியன் அதிக நன்மைகளை உங்களுக்கு செய்கிறார் அதுபோல குருபகவான் மற்றும் ராகு கேது இவர்களும் அதிகப்படியாக நன்மை தருகின்றனர் மற்ற கிரகங்களும் ஓரளவுக்கு பரவாயில்லை என்று இருக்கிறது அதனால் இந்த மாதம் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் மகிழ்ச்சி உண்டாகும்

 சந்திராஷ்டமம்:  ஆகஸ்ட் 18 இரவு 12 13 மணி முதல் ஆகஸ்ட் 19 இரவு 10 55 மணி வரை மேலும் செப்டம்பர் 15 காலை 8 16 மணி முதல் செப்டம்பர் 16 காலை ஆறு ஐம்பத்தி ஆறு மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் அம்பாள் மதுரை மீனாட்சி அம்மனை மனதில் தியானித்து கோயிலில் விளக்கேற்றி அம்பாள் நாமத்தை உச்சரித்து வந்தால் பெரிய துன்பங்கள் இருக்காது முயற்சிகள் வெற்றியடையும் முடிந்தவரை தான தருமங்கள் செய்வது நல்லது

 மிருகசீரிடம் 1,2 பாதங்கள் “: உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய் பலமாக இருக்கிறார் அவருடைய சஞ்சாரம் நன்றாக இருக்கிறது மேலும் சூரியன் நாளில் ஆட்சியாக இருந்து பத்தாமிடம் நோக்குவதால் அங்கு குரு வக்கிரமாக இருப்பதும் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை தரும் உங்கள் உத்தியோகத்தில் மாற்றம் வரும் சொந்தத் தொழில் செய்வோர் நல்ல ஏற்றம் பெறுவர் வங்கி உதவிகள் அரசு உதவிகள் எளிதாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள் மேலும் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது சிலருக்கு வீடு வாகன யோகம் அமையும் கேதுவும் மற்றும் ராகு பாப மாற்றத்தினால் உங்களுக்கு நன்மை செய்கின்றனர் மருத்துவரீதியான செலவு குறைய ஆரம்பிக்கும் இந்த மாதம் மிக நல்ல மாதம்

 சந்திராஷ்டமம்  ஆகஸ்ட் 19 இரவு 10 55 மணி முதல் ஆகஸ்ட் 20 இரவு 9 55 மணி வரை செப்டம்பர் 16 காலை 6 56 மணி முதல் செப்டம்பர் 17 காலை 4 53 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விளக்கு ஏற்றுவது சகஸ்ரநாமம் படிப்பது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நல்லது 

மிதுனம் : (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய) :

இந்த மாதம் உங்கள் ராசிநாதனும் வலுவாக இருக்கிறார் 3 மற்றும் 4ல் செல்கிறார் சூரியன் மூன்றில் ஆட்சியாக இருப்பது அதே போல பெரும்பாலான கிரகங்கள் மிகுந்த நன்மை செய்கிறது கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும் மேலும் அஷ்டம சனி என கவலை கொள்ள வேண்டாம் சனி வக்கிர ஆட்சியாக இருக்கிறது அதனால் கெடுதலுக்கு பதில் நன்மை உண்டாகும் இந்த மாதம் பணத்தட்டுப்பாடு நிச்சயமாக உங்களுக்கு இல்லை உங்கள் பொருளாதாரம் ஏற்றம் அடையும் மேலும் உங்கள் எண்ண ஓட்டங்கள் செயல்பாடுகள் நிறைவேறும் மாதம் இது புதிய முயற்சிகள் வேலை சொந்த தொழில் திருமணம் வீடு வாகன யோகங்கள் இப்படி எல்லாமே நன்மையாக எதிர்பார்த்ததுபோல் அமையும் அதேபோல உங்களுக்கு உடல்ரீதியான மருத்துவச் செலவுகள் குறையும் இருந்தாலும் தந்தை வழி அல்லது மனைவி மூலம் சில மருத்துவ செலவுகளும் அதேபோல சில உறவுகளின் பிரிவுகள் உங்களை கொஞ்சம் சங்கடப்படுத்தும் இருந்தாலும் இயல்பாகவே மன உறுதி மிக்கவர்கள் நீங்கள் அதனால் சமாளித்துவிடுவீர்கள் சிலருக்கு புதிய வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும் அதற்கான முயற்சிகள் ஆரம்பமாகும் அதேபோல புதிய உத்தியோகம் தேடுபவர்கள் மற்றும் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்கள் எண்ணங்கள் இந்த மாதம் நிறைவேறும் அதற்கான வாய்ப்புகள் தேடி வரும் பொதுவாக இந்த மாதம் மிகுந்த நன்மைகள் கொஞ்சம் குறைவாக சில சங்கடங்கள் அதேபோல வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்யோசனையுடன் செயல்படுவது பெரிய கஷ்டங்களை தவிர்க்க உதவும் இருந்தாலும் தெய்வ அனுகூலம் உங்களுக்கு இந்த மாதம் நிறையவே இருக்கிறது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும்

 மிருகசீரிடம் 3, 4 : உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய் மூன்று மற்றும் நான்கில் இந்த மாதம் சஞ்சாரம் அது வலுவான நிலை அதனால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் மற்ற கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் உங்கள் செயல்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் மேலும் ஆறில் இருக்கும் கேது சில மருத்துவ செலவுகளை வைக்கும் அதேபோல சிந்திக்கும் திறனை குறைக்கும் ஆகவே முன்யோசனையுடன் அல்லது பெரியவர்களின் ஆலோசனைப் படி நடப்பது கஷ்டங்களை குறைக்கும் இந்த மாதம் நன்மை தரும் மாதம்

சந்திராஷ்டமம்  ஆகஸ்ட் 19 இரவு 10 55 மணி முதல் ஆகஸ்ட் 20 இரவு 9 55 மணி வரை செப்டம்பர் 16 காலை 6 56 மணி முதல் செப்டம்பர் 17 காலை 4 53 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விளக்கு ஏற்றுவது சகஸ்ரநாமம் படிப்பது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நல்லது 

 திருவாதிரை : நட்சத்திர அதிபதி ராகு வலுவாக இருக்கிறார் அதாவது அவர் லாபத்தை நோக்கி செல்கிறார் அதனால் இந்த மாதம் சுப விரயங்கள் அதிகம் திருமணம் குழந்தை பாக்கியம் வீடு வாகன யோகங்கள் என்று நன்றாகவே இருக்கும் மற்ற கிரகங்களும் நன்மை அதிகம் செய்வதால் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் இந்தமாதம் திருமணத்துக்கு காத்திருந்தவர்களுக்கு அது கைகூடும் வரன் தேடி வந்து அமையும் அதேபோல குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான சாத்தியங்களும் உள்ளது பொருளாதாரம் நன்றாக இருக்கும் கவலை வேண்டாம் இந்த மாதம் நல்ல மாதம்

 சந்திராஷ்டமம்:   ஆகஸ்ட் 20 இரவு 9 55 மணி முதல் ஆகஸ்ட் 21 இரவு 9 15 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் :  துர்க்கை காளி அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றுங்கள் துர்கா ஸ்லோகம் சொல்லவும் முடிந்தவரை தான தர்மங்கள் செய்வது நல்லது

 புனர்பூசம் 1,2,3 : உங்கள் நட்சத்திர நாயகர் குருபகவான் வக்கிர ஒன்பதில் இருக்கிறார் மேலும் மாதக்கடைசியில் எட்டாமிடம் செல்கிறார் பொதுவாக பெரும்பாலான கிரகங்கள் நன்மை செய்தாலும் சில குழப்பங்கள் மன தளர்வுகள் ஏற்படும் வகையில் சம்பவங்கள் இருந்துகொண்டிருக்கும் அதேநேரம் பொருளாதாரம் நன்றாக இருக்கும் மற்றும் புதிய முயற்சிகள் கொஞ்சம் கடுமை முயற்சிக்குப் பின் நிறைவேறும் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கொஞ்சம் தாமதமாகலாம் இருந்தாலும் மற்றவர்களால் அதாவது உறவுகளால் உங்களுடைய பொருளாதாரம் பாதிப்பு இல்லாமல் இருக்கும் பொதுவாக நன்மை இருந்தாலும் உங்களுக்கு சில சங்கடங்களும் இருக்கும் அதற்கு உங்கள் நட்சத்திர நாதன் குரு மற்றும் கேது பகவான் அதன் அதனால் பெரியோர்கள் ஆசைப்படி ஆலோசனைப்படி நடப்பது நன்மை தரும்

 சந்திராஷ்டமம்:  ஆகஸ்ட் 21  இரவு 9 15 முதல் ஆகஸ்ட் 22  இரவு 9 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  தக்ஷிணாமூர்த்தி அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம் சொல்வதும் குரு காயத்ரி சொல்வதும் நன்மை தரும் முடிந்தவரை தான தர்மம் செய்யுங்கள்

கடகம் : (புனர்பூசம் 4ம்பாதம், பூசம், ஆயில்யம் முடிய) :

உங்கள் ராசிநாதன் சந்திரன் சுமாரான பலத்துடன் இருக்கிறார் உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் நன்மை தரக்கூடிய கிரகங்கள் ராகு மற்றும் சுக்கிரன் மற்றவை கொஞ்சம் சங்கடங்களை தருகிறது செப்டம்பர் ஆறாம் தேதி முதல் செவ்வாய் பெயர்ச்சி நன்மை தருகிறது பொதுவாக குருவும் சங்கடத்தை கொடுக்கிறார் எட்டில் வகிரியாக இருப்பதால், சனி பகவான் கெடுதல் செய்யாமல் இருக்கிறார் அதனால் ஓரளவு சுமாராக பலன் தருகிறது பொதுவாக இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் கடும் உழைப்புக்கு பின்னர் நிறைவேறுவதாக இருக்கிறது ராகுவால் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் மேலும் சுக்கிரனும் சில மகிழ்ச்சிகளை தருகிறார் இல்லத்தில் சுப விரயம் உண்டாகும் அதுபோல செப்டம்பர் 6 முதல் ஓரளவு எண்ணங்கள் நிறைவேறும் அதேநேரம் புதன் மற்றும் சூரியன் உடல்ரீதியான படுத்தல்கள் மருத்துவ செலவுகள் , குடும்ப அங்கத்தினர்களுக்கு மருத்துவ செலவுகள் கொடுத்துக் கொண்டிருக்கும் அதேபோல இடமாற்றம் தொழில் மாற்றம் சில பாதிப்புகள் ஏற்படும் எதையும் யோசித்து செயல்படுவது பெற்றோர் பெரியோர் ஆலோசனைப்படி நடப்பது நன்மை தரும் பொருளாதார ரீதியாக பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் மற்ற சங்கடங்கள் உங்களை வருத்தப்பட செய்யும் பொதுவாக இந்த மாதம் சுமார் மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம் வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது

 புனர்பூசம் 4 : உங்கள் நட்சத்திர அதிபதி குரு பகவான் வகிரியாக எட்டில் இருக்கிறார் மேலும் பெரும்பாலான கிரகங்கள் நன்மை தராததால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது மேலும் பொருளாதாரம் பரவாயில்லை என்பதால் சிக்கனமாக இருப்பது நன்மை தரும் குடும்ப அங்கத்தினரோடு அல்லது தொழில் செய்யுமிடத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்ல பலனை தரும் இந்த மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம் பணம் வந்தாலும் எதிர்பார்ப்புகள் முயற்சிகள் வெற்றி அடைவதில் தாமதம் ஏற்படும் அல்லது வருத்தத்தை தரும்படி நிறைவேறாமல் போகலாம் யோசித்து செயல்படுவது நல்லது

சந்திராஷ்டமம்:  ஆகஸ்ட் 21  இரவு 9 15 மணி முதல் ஆகஸ்ட் 22,  இரவு 9 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  தக்ஷிணாமூர்த்தி அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம் சொல்வதும் குரு காயத்ரி சொல்வதும் நன்மை தரும் முடிந்தவரை தான தர்மம் செய்யுங்கள்

 பூசம் : உங்கள் நட்சத்திர நாயகர் சனி பகவான் வகிரியாக  ஏழில் ஆட்சி பெற்று உங்கள் ராசியை பார்க்கிறார் பதினொன்றில் இருக்கும் ராகு பகவான் வருமானத்தை தருவதால் இந்த மாதம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் அதேபோல் திருமண முயற்சிகள் புதிய வேலைவாய்ப்புகள் சொந்தத் தொழில் உயர்கல்வி அரசியல் முன்னேற்றம் இப்படி அனைத்து துறையினருக்கும் அவர்களுடைய முயற்சிகள் வெற்றியடைய ராகுவும் சுக்கிரனும் பாடுபடுகிறார்கள் மற்ற கிரகங்கள் ஓரளவு பரவாயில்லை என்பதால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும் இந்த மாதம் உங்களுக்கு பரவாயில்லை முயற்சிகள் நன்மை தரும் ஆனாலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது சில கிரகங்கள் குரு கேது புதன் மனதைக் குழப்பி விட்டு விடும் தெளிவில்லாத நிலை கொடுக்கும் அதனால் யோசித்து பெரியோர் ஆலோசனைப்படி செய்வது நல்லது இந்த மாதம் பரவாயில்லை மாதம்

 சந்திராஷ்டமம்  ஆகஸ்ட் 22, இரவு 9 மணி முதல் ஆகஸ்ட் 23,  இரவு 9 12 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் :  ஹனுமான் மற்றும் ராமர் அருகில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் ஹனுமான் சாலிசா மற்றும் ராமநாமம் படிப்பது நல்லது முடிந்தவரை அன்னதானம் வஸ்திர தானம் ஏழை குழந்தைகள் படிக்க உதவி இவை நன்மை தரும்

 ஆயில்யம் : உங்கள் ராசி நட்சத்திர நாதன் புதன் இரண்டிலும் மூன்றிலும் சஞ்சாரம் செய்கிறார் இவர் ஓரளவு உங்கள் தேவையை பூர்த்தி செய்கிறார் மற்றும் ராகு சுக்கிரர் இவர்கள் பொருளாதாரம் நன்றாக இருக்கும்படி செய்வதால் உங்களுக்கு பணத்தட்டுப்பாடு வராது இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும் எட்டில் குரு வக்கிரம் அதனால் மன சஞ்சலங்கள் மேலும் ஏழாம் இடத்தை கேது பார்ப்பது ஐந்தில் இருப்பது மனைவி மற்றும் குழந்தைகள் மூலம் சில மனக்கஷ்டங்கள் அல்லது மருத்துவ செலவுகள் வைக்கும் அதேபோல திருமண முயற்சிகள் கொஞ்சம் தாமதத்துக்கு பின் நிறைவேறும் வீட்டில் சுப நிகழ்வுகள் கடும் முயற்சிக்குப் பின் ஈடேறும் இந்த மாதம் மிகுந்த கவனத்துடன் முன்யோசனையுடன் செயல்படுவது நன்மை தரும்

 சந்திராஷ்டமம்:   ஆகஸ்டு 23 இரவு 9 12 மணி முதல் ஆகஸ்ட் 24 இரவு 09.53 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் : பெருமாள் மகாலட்சுமி அருகிலுள்ள கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது முடிந்தவரை நாராயணன் பெயரை உச்சரிப்பது நன்மை தரும் அன்னதானம் வஸ்திர தானம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல் இவை நன்மை தரும் 

சிம்மம் : (மஹம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய) :

உங்கள் ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருந்தாலும் அவரைக் காட்டிலும் புதனும் சுக்கிரனும் பத்தில் இருக்கும் ராகுவும் மிகுந்த நன்மையை செய்கின்றனர் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை தருகிறார்கள் பணத் தட்டுப்பாடு இருக்காது முயற்சிகள் வெற்றியடைய சுக்கிரன் உதவுகிறார் மேலும் உங்கள் பகைவர்களை வெல்லும் திறனையும் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் ஆறில் இருக்கும் சனிபகவான் செயல்படுகிறார் அவரும் மிகுந்த நன்மை செய்கிறார் எதிரிகளை அழிக்கிறார் உங்கள் புகழை உயர்த்துகிறார் மறைமுக வருமானத்தையும் தருகிறார் மற்ற கிரகங்கள் அவ்வளவு நன்மை செய்யவில்லை பொதுவாக உத்தியோகத்தில் அல்லது சொந்தத் தொழிலில் வருமானம் வந்து கொண்டிருக்கும் சில முயற்சிகள் வெற்றியடையும் அரசு வகையில் நன்மை உண்டாகும் இல்லத்தில் சுப நிகழ்வுகள் திருமணம் குழந்தை பாக்கியம் வீடு வாங்குதல் போன்ற முயற்சிகள் வெற்றி அடையும் அதேபோல மற்ற கிரகங்களில் செப்டம்பர் ஆறாம் பேதிக்கு பின் செவ்வாயும் நல்ல பலனைத் தருகிறது பொதுவாக இந்த மாதம் உங்களுக்கு கெடுபலன் என்றால் ஒரு மருத்துவ செலவு அல்லது எதிர்பாராத வீண் விரையம் அல்லது சில மனக்கசப்புகள் இவை மட்டும்தான் இதையும் கொஞ்சம் கவனமாக வாக்குவாதங்களை தவிர்த்து பிறருடன் அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அவர்களோடு பேசுவதை குறைத்து செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்தால் இந்த மாதம் மிக நன்றாக இருக்கும் சேமிப்புகள் அதிகமாகும் புதிய திட்டங்கள் வீடு வாங்குவது அல்லது வாகனம் வாங்குவது அல்லது இடமாற்றம் செயல்படுவது இப்படி உங்கள் முயற்சிகள் வெற்றியடைய புதன் சுக்கிரன் சனி ராகு மற்றும் செவ்வாய் இவர்கள் உதவியாக இருப்பதால் கவலைப்படாமல் இந்த மாதத்தை நீங்கள் கடந்துவிடலாம் நன்மை தரும் மாதம்

உங்கள் நட்சத்திர நாயகன் கேது பகவான் 4ல் இருந்து பெரிய நன்மை செய்யவில்லை ஆனால் அவருடைய சஞ்சாரம் மூன்றை நோக்கி இருப்பதால் ஓரளவுக்கு நன்மை உண்டாகும் அதே போல ராகு பகவான் பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிய கஷ்டங்கள் இருக்காது பண ரீதியாக மற்றும் உத்தியோகத்தில் கொஞ்சம் தாமதமாக முன்னேற்றம் ஏற்படலாம் அல்லது விரும்பிய இடமாற்றம் கிடைக்க தாமதம் ஆகலாம் இருந்தாலும் செப்டம்பர் 6ஆம் தேதி அதற்குப்பின் நல்ல நிலை உண்டாகும் மற்றவர்களுக்கும் இந்த மாதம் நன்மை அதிகம் இருக்கு மருத்துவ ரீதியாகவோ அல்லது எதிர்பாராத செலவினங்கள் விரைவாக இருக்கும் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும் எவருடனும் வாக்குவாதம் செய்வது நல்லதல்ல அது மன துயரத்தைத் தரும்

சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 24 , 21:33 முதல் ஆகஸ்ட் 25, இரவு 11 05 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் பிள்ளையார் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி விநாயகர் அகவல் படிப்பது வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது அதேபோல் ஏழை எளியோருக்கு சரீர உதவி மற்றும் உணவு உடை இவை தருவது நன்மை தரும்

உங்கள் நட்சத்திர நாதர் சுக்கிரன் இந்த மாதம் முழுவதுமே மிகுந்த நன்மை தருகிறார் அவரோடு ராகு புதன் மற்றும் சனி நன்மை செய்கிறது மாதக்கடைசியில் செவ்வாய் நன்மை தருகிறார் ஆக இந்த மாதம் பொருளாதாரம் வேலைவாய்ப்பு திருமணம் சுப நிகழ்வுகள் என்று உங்களுக்கு எல்லாமே எதிர்பார்த்தபடி முன்னேற்றமான நிலை இருந்துகொண்டிருக்கும் உங்கள் முயற்சிகள் அதிக வெற்றியைத் தரும் அதேநேரம் குரு வக்கிர நிலையில் எட்டில் சஞ்சரிப்பது மன வருத்தங்கள் அல்லது உறவுகள் நண்பர்கள் மூலம் சில பிரச்சனைகள் அல்லது எதிர்பாராத செலவினங்கள் இவற்றை கொடுக்கும் சனிபகவான் வழக்கைத் தீர்த்து வைப்பதால் பெரிய அளவு பாதிப்பு கிடையாது முயற்சிகள் வெற்றி அடையும்

 சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 25, இரவு 11 05 மணி முதல் ஆகஸ்ட் 26 இரவு 12 44 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது தேவி ஸ்லோகங்கள் சொல்வது முடிந்தவரை தான தர்மங்கள் செய்வது நன்மை தரும்

 உங்கள் நட்சத்திர நாதர் சூரியன் ஆட்சியாக இருக்கிறார் ஆனாலும் அவர் கெடுபலன் செய்ய வில்லையே தவிர பெரிய நன்மை தரவில்லை அதேநேரம் சுக்கிரன் புதன் ராகு சனி செவ்வாய் இவர்கள் அள்ளித் தருவதால் உங்கள் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும் எதிலும் கொஞ்சம் நிதானமும் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும் குருபகவானும் கேதுவும் கொஞ்சம் கெடுதலையும் உடல் மருத்துவ ரீதியான செலவுகளையும் கொடுக்கும் கவனம் தேவை பெரும்பாலும் நன்மையே

 சந்திராஷ்டமம் ஆகஸ்டு 26, இரவு 12.44மணி முதல் ஆகஸ்ட் 27, இரவு 02.49மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் பரமேஸ்வரன் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது பிரதோஷ வேளையில் நந்தி வழிபாடு மற்றும் தினமும் ஓம் நமச்சிவாய என்று உச்சரித்துக் கொண்டே இருப்பது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நல்ல பலனைத் தரும்

கன்னி (உத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய):

இந்த மாதம் உங்கள் ராசிக்கு சுக்கிரனும் கேதுவும் மட்டுமே மிகுந்த நன்மைகளை செய்கிறார்கள் மற்ற கிரகங்களில் சனி ஓரளவு நன்மை தருகிறது அனைத்து கிரகங்களும் சுமாரான பலன்கள் அல்லது கெடுதல்களை செய்வதாக அமைகிறது அதனால் எதையும் யோசித்து செயல்படுவது பெரியோர்களின் ஆலோசனை கேட்டபின் செயல்படுவது என்று இருப்பது நன்மை தரும் பொருளாதார ரீதியாக நன்மை இருக்கும் பணத் தட்டுப்பாடு இருக்காது உத்யோகத்தில் சொந்தத் தொழிலில் மந்தமாக அல்லது சாதாரணமாக செல்லும் புதிய வேலை முயற்சிகள் கொஞ்சம் தாமதத்துக்கு பின் கிடைக்கலாம் ஆனால் அது ஒருவிதமான விரக்தியை தருவதாக இருக்கும் இந்த மாதம் பயணங்கள் அலைச்சல்கள் அதிகம் இருக்கும் பொதுவாக சூரியன் 12ல் இருப்பதால் உடல்ரீதியான மருத்துவ செலவுகள் குடும்ப அங்கத்தினர்களின் உடல் பாதிப்புகள் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது மேலும் குரு வக்கிரம் ஆறில் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம் தாமதமாகிக்கொண்டிருந்த  திருமணம் அல்லது எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது அதனால் முயற்சிகள் கொஞ்சம் தாமதமாகுமே தவிர வெற்றியைத் தரும் செப்டம்பர் 6 முதல் ஓரளவு நிம்மதி மூச்சு விடுவது இருக்கும் இந்த மாதம் சிக்கனம் தேவை செலவுகளை குறைப்பது கணவன் மனைவி கலந்து ஆலோசித்து செயல்படுவதும் குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் வெளி மனிதர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும் பொதுவாக பணப் பிரச்சனைகள் இல்லை எனினும் செலவுகளும் இருப்பதால் யோசித்து செயல்படுவது நன்மை தரும் குடும்பத்தில் பெரியோரின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதும் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும் குழந்தைகளால் சில மருத்துவ செலவு அல்லது வேறு செலவுகள் வரலாம் கவனம் தேவை சுமாரான மாதம்

 உத்திரம் 2,3,4 :  உங்கள் நட்சத்திர அதிபர் சூரியன் 12ல் இருப்பது ஆட்சியாக இருக்கிறார் அது சில சுப விரயங்களை தரும் மேலும் உடல் ரீதியான மருத்துவ செலவுகள் வைக்கும் அதேபோல் ஒன்பதில் இருக்கும் ராகு தந்தைவழியில் செலவுகளை கொடுக்கும் மேலும் இல்லத்தில் ஒரு விரோதத்தை உண்டாக்கும் வாக்குகளை கவனமாக பிரயோகித்தால் நன்மை உண்டாகும் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும் உத்யோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் சற்று தாமதமாகும் மேலதிகாரிகள் உடன் வேலை செய்பவர் இவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது வெளியூர் பயணங்கள் அலைச்சலைத் தரும் யோசித்து செயல்படவும் திட்டமிடலை தள்ளிப்போடுவது நன்மை தரும்

 சந்திராஷ்டமம் ஆகஸ்டு 26, இரவு 12.44மணி முதல் ஆகஸ்ட் 27, இரவு 02.49மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் பரமேஸ்வரன் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது பிரதோஷ வேளையில் நந்தி வழிபாடு மற்றும் தினமும் ஓம் நமச்சிவாய என்று உச்சரித்துக் கொண்டே இருப்பது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நல்ல பலனைத் தரும்

 ஹஸ்தம் :  உங்கள் நட்சத்திர அதிபர் சந்திரன் மூன்றில் நீசபங்க ராஜயோகம் பெற்று சஞ்சரித்து மாத துவக்கம் ஓரளவுக்கு பரவாயில்லை என்பதாக இருக்கிறது சூரியன் ராகு குரு மற்றும் ராசிநாதன் புதன் விரயங்களை தருகிறார்கள் பணம் எவ்வளவு வந்தாலும் செலவு அதைவிட இரு மடங்காக இருக்கும் கவனம் தேவை சிக்கனமாக இருப்பது மற்றவர்களின் ஆலோசனை கேட்பது குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவுகளை எடுப்பது நன்மை தரும் புதிய முயற்சிகளை யோசித்த திட்டமிட்டு நேரம் பார்த்து செயல்படுத்துவது நன்மை தரும் பொதுவாக இந்த மாதம் சுமாரான மாதம் சிக்கனம் தேவை

 சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 27 இரவு 02 49 மணி முதல் ஆகஸ்டு 28 , அதிகாலை 05.10 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் அய்யனார் காளி தாத்தா போன்ற வெள்ளை தேவதைகள் கருப்பு போன்ற தேவதைகள் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது இறைவன் நாமத்தைச் சொல்வது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நன்மை தரும் 

சித்திரை 1,2 :  உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாய் பன்னிரண்டில் இருக்கிறார் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் ராசியில் வருகிறார் இரண்டுமே பெரிய நன்மை இல்லை ஆனால் 7-ஆம் இடத்தைப் பார்ப்பதும் மூன்றாம் இடத்தைப் பார்ப்பதும் நன்மையாக அமைகிறது அதனால் ஓரளவுக்கு உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் அதேபோல் சுக்கிரனும் கேதுவும் மற்றும் சனிபகவானும் ஓரளவுக்கு நன்மை தருகிறாள் பொருளாதார ரீதியாக பாதிப்புகள் இல்லை அதே நேரம் இருப்பதால் செலவுகளை யோசித்து செய்வது பிரயாணங்களை சரியாக முடிவு எடுத்து செயல்படுவது நன்மை தரும் அலைச்சலைக் குறைக்கும் பொதுவாக இந்த மாதம் உங்களுக்கு சுமாரான மாதம் சிக்கனம் குடும்பத்துடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பது இவை நன்மை தரும்

 சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 29 தேதி காலை 5 10 மணி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி காலை 07.43 மணிவரை

 வணங்க வேண்டிய தெய்வம் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சுவாமிமலை கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதும் வேல்மாறல் படிப்பதும் நன்மை தரும் செவ்வாய்க்கிழமைகளில் சஷ்டி கவசம் படிப்பது நன்மை தரும் மேலும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நலம் தரும்

துலாம்: (சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய):

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மிகுந்த நன்மை தரும் வகையில் இருக்கிறார் இந்த மாதம் முழுவதுமே நன்மை தருகிற பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் அதேபோல் லாபத்தில் இருக்கும் சூரியன் செவ்வாய் புதன் இவர்களை பல வகையிலும் உங்களுக்கு நன்மை செய்கிறார்கள் அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் அரசியல்வாதிகள் அரசு சம்பந்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் இவர்களுக்கு மிகப்பெரிய நன்மை உண்டாகும் இவர்களுடைய முயற்சிகள் எளிதாக வெற்றி பெறும் பொதுவாக அனைத்து துறையில் உள்ளவர்களுக்கும் இந்த காலம் ஏற்றமான காலமாக இருக்கிறது உங்களுடைய திட்டமிடல்களை செயல்படும் நேரம் இந்த மாதம் அதனால் உங்களுக்கு எதிலும் வெற்றிகிடைக்கும் பொதுவாக குருவானவர் 5-ல் இருக்கிறார்  அவர் பார்வையால் நன்மை செய்கிறார் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு அது கிடைக்கப் பெறும் அதேபோல் வீடு வாகன யோகங்கள் நிறைந்து காணப்படும் புதிய இடமாற்றம் ஒரு மன தெம்பை கொடுக்கும் வலுவான பொருளாதாரம் இருப்பதால் கடன்கள் அடைபடும் மேலும் மற்ற கிரகங்களும் ஓரளவு நன்மை செய்வதால் பெரிய பாதிப்புகள் இருக்காது இருந்தாலும் எட்டில் ராகுவும் 12-ல் வரும் செவ்வாயும் செப்டம்பர் 6ஆம் தேதிக்கு மேல் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது பயணங்கள் செய்யும்போது வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை பெரிய விபத்துகள் இருக்காது எனினும் அடிபடுதல் காயம் படுதல் இருந்துகொண்டிருக்கும் அதனால் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது மற்றபடி உடல் ஆரோக்கியம் நன்கு மேம்படும் குடும்ப அங்கத்தினர்களின் வைத்தியச் செலவுகளும் குறைய ஆரம்பிக்கும் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சுபநிகழ்ச்சிகள் அதிகம் இருக்கும் இந்த மாதம் உங்களுக்கான மாதம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்

 சித்திரை 3,4 : உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாய் செப்டம்பர் 6ஆம் தேதி வரை லாபத்தில் சஞ்சரிக்கிறார் மற்ற கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது அதனால் உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும் சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வும் சொந்தத் தொழிலில் விரிவும் நன்மையும் நடக்கும் இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் கூடிவரும் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் மேலும் முயற்சிகளில் தடைகள் இருக்காது அதே நேரம் பயணத்திலும் ஆயுதங்களை கையாள்வதிலும் வாகனங்களை ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை விபத்துகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது பொதுவாக இந்த மாதம் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றும் மாதமாக அமையும்

சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 29 தேதி காலை 5 10 மணி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி காலை 07.43 மணிவரை

 வணங்க வேண்டிய தெய்வம் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சுவாமிமலை கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதும் வேல்மாறல் படிப்பதும் நன்மை தரும் செவ்வாய்க்கிழமைகளில் சஷ்டி கவசம் படிப்பது நன்மை தரும் மேலும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நலம் தரும்

ஸ்வாதி : உங்கள் நட்சத்திர நாதன் ராகு பகவான் மேலோட்டமாக பார்த்தால் எட்டில் இருப்பதாக தோன்றினாலும் அவர் பாக்கியத்தை நோக்கி நகர்வதால் உங்களுடைய செயல்பாடுகள் மிக நன்றாக இருக்கும் சுக்கிரனும் சூரியனும் புதனும் செவ்வாயும் குருவும் அதிக நன்மை செய்கிறார்கள் உங்கள் உத்தியோகத்தில் உயர்ந்த நிலை பதவி உயர்வு மேலும் புதிய வேலைக்கான முயற்சிகளில் வெற்றி வெளிநாடு போன்ற வாய்ப்புகள் படிப்பில் முன்னேற்றம் சொந்த தொழிலில் முன்னேற்றம் தொழில் விரிவாக்கம் வெளியூர் பயணங்களால் நன்மை மனைவி குழந்தைகள் வகையில் நன்மை சந்தோஷம் இல்லத்தில் மகிழ்ச்சி புனித யாத்திரைகள் தீர்த்த யாத்திரைகள் கேளிக்கைகள் ஆடம்பரங்கள் ஆடை ஆபரணச் சேர்க்கை என்று மாதம் முழுவதுமே மகிழ்ச்சியாக இருக்கும் இருந்தாலும் செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமும் பயணத்தில் நிதானமும் தேவை உங்களுக்கு இந்த மாதம் நன்மை பயக்கும் மாதமாக இருப்பதால் கவலை வேண்டாம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் மாதம்

 சந்திராஷ்டமம் :  ஆகஸ்ட் 30, காலை 07.43 மணி முதல் ஆகஸ்ட் 31, காலை 10.17 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் லட்சுமி நரசிம்மர் யோக நரசிம்மர் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றுவது மேலும் தான தர்மங்களை செய்வது இயலாதவர்களுக்கு ஏழை எளியோருக்கு சரீர ஒத்தாசை செய்வது நன்மை பயக்கும் உங்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்

விசாகம் 1, 2,3 : உங்கள் நட்சத்திர நாதன் குருபகவான்  வக்கிரமாக ஐந்தாம் இடத்தில் இருக்கிறார் அவர் பார்வையால் சிலர் நல்ல பலன்களை தருகிறார் மேலும் சுக்கிரன் சூரியன் புதன் செவ்வாய் மற்றும் கேது ஓரளவு நன்மை தருகிறது இருந்தாலும் உங்களுக்கு சந்திரன் குரு சனி இவர்கள் சில விரயங்களை அல்லது சில சங்கடங்களை தருகிறார் எதிலும் கவனமாக இருத்தல் நன்மை தரும் பொதுவாக பொருளாதாரம் நன்றாக இருக்கும் ஜீவன வகையில் வருமானம் வந்துகொண்டே இருக்கும் உத்தியோகத்தில் கொஞ்சம் மந்தநிலை இருக்கும் ஆனாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும் சொந்தத் தொழிலும் ஓரளவு பரவாயில்லை என்பதாக இருக்கும் புதிய இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம் சிலருக்கு நன்மை தரும் அதேபோல இல்லத்தில் நடக்கும் சுப நிகழ்வுகள் மகிழ்ச்சியைத் தரும் இருந்தாலும் உங்களைப் பொறுத்தவரையில் நன்மைகளும் அதிகமாக இருக்கு கெடுதல்களும் அதே அளவு இருக்கு அதனால் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும் தகுந்த ஆலோசனை பெற்று எந்த முயற்சியும் தொடங்குவது நன்மை தரும்

 சந்திராஷ்டமம்:  ஆகஸ்ட் 31, காலை 10 17 மணி முதல் செப்டம்பர் 1 பிற்பகல் 12 42 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் அம்பாள் மற்றும் விநாயகர் ஞாயிற்றுக்கிழமைகளில் பிள்ளையார் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது மேலும்  முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நன்மை தரும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வதும் நன்மை தரும்

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை முடிய):

இந்த மாதம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் மற்றும் சூரியன் புதன் சுக்கிரன் கேது ரொம்ப சிறப்பாக சனிபகவான் இவர்கள் மிக அதிகமான அளவில் நன்மைகள் புரிவதால் மிகச் சிறப்பாக இருக்கும் பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும் கடந்த காலங்களை விட இந்த மாதம் மிக நன்றாக இருக்கும் காரணம் மூன்றாம் இடத்தில் இருக்கும் சனிபகவான் ஆட்சியாக இருப்பதால் அவர் தைரிய ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் உறுதி அதிகமாகும் அதேபோல சுக்கிரன் 11 மற்றும் 12ஆம் இடம் சஞ்சாரம் லாபத்தை தருகிறது புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை, கேளிக்கைகளில் பங்கு பெறுதல், இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடத்தல் அதேபோல சமூகத்தில் ஒரு அந்தஸ்து பிரிந்திருந்த உறவுகள் சேருதல்  இப்படி பல நன்மைகள் நடக்கும் இந்த மாதம் பத்தில் சூரியன் இருப்பதால் ஜீவன ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கிடைக்கும் பரதேச வாசம்  எனப்படும் வெளிநாட்டு வாழ்க்கை சிலருக்கு அமையும் பொருளாதார ரீதியாக நன்றாக இருப்பதால் நீண்ட காலமாக புதிய வீடு வாங்கும் யோகம் புது வாகன யோகம் சிலருக்கு அமையும் அதேநேரம் ஏழில் ராகு வாழ்க்கைத் துணைவரின் உடல் நலத்தில் பாதிப்பை செய்யும் நான்கில் இருக்கும் குரு சுகத்தை கொடுக்கும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது பிடிக்கவில்லை என்றாலும் அந்த இடத்துக்கு அது சரி என்றால் அதை ஏற்றுக் கொண்டு போய் விடுவது பெரிய தொந்தரவுகளை குறைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அதிகம் இருப்பதால் இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகள் வாக்குவாதங்களை தவிர்ப்பதாலும் மௌனமாக இருப்பதும் தவிர்க்க இயலும் பொதுவில் இந்த மாதம் உங்களுக்கு கிட்டத்தட்ட 80 சதவிகிதம் நன்மைகள் இருப்பதால் கவலை வேண்டாம் உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும்

விசாகம் 4ஆம் பாதம் :   உங்கள் நட்சத்திர நாதன் குரு வக்கிரமாக 4ல் இருப்பதால் அது உங்கள் எண்ணங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கும் அதேபோல ஏழில் இருக்கும் ராகுவும் உங்களுடைய வாழ்க்கை துணைவர் அல்லது கூட்டாளிகள் உடன் வேலை செய்பவர்கள் வியாபாரக் கூட்டாளிகள் என்று இவர்களால் துன்பத்தைத் வரவழைக்கும் நிகழ்வுகள் ஏற்படும் கொஞ்சம் கவனமும் நிதானமான வார்த்தைகளாலும் அதைக் கையாள்வது நன்மை தரும் மற்ற கிரகங்கள் நன்மை செய்வதால் பொருளாதார பாதிப்பு இருக்காது அதே நேரம் புதிய முயற்சிகள் தடை ஆவதன் காரணம் இந்த குரு மற்றும் ராகு மற்றும் ஜென்மத்தில் இருக்கும் கேது இவர்கள் முயற்சிகளை தடை செய்கிறார்கள் உங்கள் வார்த்தை பலனில்லாமல் போகிறது அதனால் கோபம் ஆத்திரம் வார்த்தைகள் இவற்றை கட்டுப்படுத்துவது நன்மைதரும் பெரும்பாலும் நம்மை இருந்தாலும் சில சமயங்கள் உங்களுடைய அலட்சியம் உங்களை காயப்படுத்தும் கவனம் தேவை நிதானமாக செயல்படுவது நன்மை தரும்

சந்திராஷ்டமம்:  ஆகஸ்ட் 31, காலை 10 17 மணி முதல் செப்டம்பர் 1 பிற்பகல் 12 42 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் அம்பாள் மற்றும் விநாயகர் ஞாயிற்றுக்கிழமைகளில் பிள்ளையார் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது மேலும்  முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நன்மை தரும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வதும் நன்மை தரும்

அனுஷம் : உங்கள் நட்சத்திர அதிபதி சனி பகவான் தைரிய ஸ்தானத்தில் ஆட்சியாக இருப்பதால் உங்கள் பலம் கூடும் எதிரிகள் அடங்குவர் உங்களுடைய முயற்சிகள் மிகுந்த வெற்றியை தரும் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் எதிர்பார்த்து இருந்த அனைத்தும் நிறைவேறும் காலம் ஆகும் மேலும் உங்களுக்கு சாதகமாக சுக்கிரன் சூரியன் புதன் மற்றும் செவ்வாய் இவர்கள் இருப்பதால் நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் பயணங்களின் போது கவனம் தேவை அதேநேரம் எவரையும் குறைத்து மதிப்பிட்டு வார்த்தைகளை கொட்டி விடுவது நல்லது அல்ல உங்கள் கவனச் சிதறல்கள் உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும் ஆத்திரப்படுவது கோபப்படுவது அதனால் வார்த்தைகளை கொட்டுவது இது தீமையை தரும் அதனால் தகுந்த ஆலோசனைப்படி உங்கள் முயற்சிகளை செய்வது மௌனமாக இருப்பது இந்த மாதத்தை சிறப்பாக கொண்டு செல்லும்

 சந்திராஷ்டமம்:  செப்டம்பர் 1 பிற்பகல் 12 42 மணி முதல் செப்டம்பர் 2 பிற்பகல் 02.49 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் :  முனீஸ்வரன் அல்லது எல்லை தேவதை கிராம தேவதைகளை வழிபட்டால் நன்மை உண்டாகும் அதேபோல வாயில்லா ஜீவன்களுக்கு  உணவளிப்பது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள் ஏழை எளியோர் அவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்வது நன்மை தரும்

 கேட்டை:  உங்கள் நட்சத்திர நாதன் புதன் 10 சஞ்சரிக்கிறார் 26 ஆகஸ்ட் முதல் பதினொன்றில் சஞ்சரிக்கிறார் உச்சமாக அதனால் உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் மேலும் சுக்கிரன் சனி சூரியன் செவ்வாய் இவர்களும் உங்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்வதால் பணப்புழக்கம் தாராளமாக பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் தொழில் விரிவாக்கம், அரசு உதவிகள் என்று பலவும் உங்களுக்கு கிடைக்கும் அதனால் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலை ஏற்படும் அதேநேரம் குரு பகவான் ராகு இவர்கள் உடல் ரீதியான செலவுகள் அல்லது பயணத்தினால் அசவுகரியங்கள் வீண் விரயங்கள் இவற்றை கொடுப்பார்கள் எதிலும் கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் நன்மை உண்டாகும்

 சந்திராஷ்டமம்:  செப்டம்பர் 2 பிற்பகல் 02.49 மணி முதல் செப்டம்பர் 3, மாலை 4 34 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  திரிவிக்கிரம பெருமாள் உலகளந்த பெருமாள் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வணங்குவது முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது மற்றும் ஏழைக்குழந்தைகள் படிக்க உதவுவது நன்மை தரும்

தனூர்: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய):

உங்கள் ராசிநாதன் குருபகவான் மூன்றில்  வக்கிரமாக இரண்டாம் இடத்தை நோக்கியபடி இருப்பதால் ஓரளவுக்கு நன்மைகள் இருக்கும் மேலும் 12ல் இருக்கும் கேதுவும் ஆறில் இருக்கும் ராகுவும் அதேபோல் சுக்கிரன் மற்றும் செப்டம்பர் 6ஆம் தேதிக்கு பின் புதன் செவ்வாய் இவர்களும் அதிக அளவில் நன்மை செய்கின்றனர் வாக்கில் இருக்கும் சனிபகவான் பார்வையால் நன்மை செய்கிறார் அதேநேரம் வார்த்தைகளை விடுவதில் கவனம் தேவை குடும்ப உறுப்பினர்களோ அல்லது நண்பர்களோ அல்லது வெளி ஆட்களோ எவரிடமும் கோபமாக அல்லது மூர்க்கத்தனமாக வார்த்தைகளை கொட்ட வேண்டாம் இது சில கெடுதல்களை கொண்டுவரும் பொதுவில் இந்த மாதம் உங்களுக்கு பரவாயில்லை அப்படிங்கற மாதிரி இருக்கும் காரணம் பெரும்பாலான கிரகங்கள் நன்மை தீமைகளை கலந்தே செய்கிறது இரண்டு சேர்த்து செய்கிறது அதனால் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமும் இருக்கும் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் உத்யோகத்தில் ஜீவனம் வந்து கொண்டிருக்கும் அதேநேரம் வீண் பழியும் தேவையில்லாத இடமாற்றம் அல்லது முயற்சிகளில் தொய்வு ஏற்படலாம் பயணத்தில் களைப்பு ஏற்படலாம் உடல் ரீதியான பாதிப்புகள் செலவுகள் இருக்கலாம் கேதுவின் மூலமும் ராகுவின் மூலமும் கடன் தொல்லை எதிரி தொல்லை நீங்கினாலும் மற்ற கிரஹ  பாதிப்புகளால் சில சமயம் மனம் சங்கடப்படும் பொதுவாக இந்த மாதத்தில் எதைச் செய்தாலும் நன்கு யோசித்து ஆலோசித்து செய்வது நல்லது புதிய முயற்சிகள் வீடு வாகனம் வாங்க அல்லது வேறு உத்யோகம் தேட அல்லது புதிய தொழில் தொடங்க அல்லது படிப்பு விஷயமாக அல்லது திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு முயற்சி செய்வது இவற்றில் தகுந்த நபருடன் கலந்தாலோசித்து நல்ல நேரமாக பார்த்து செயல்படுவது நன்மை தரும் அவசரம் காட்டுவது சரியல்ல அதனால் இந்த மாதம் உங்களுக்கு சுமாரான மாதம்

மூலம் :  உங்கள் நட்சத்திர நாதன் கேது பகவான் பன்னிரண்டில் இருந்து அதிக அளவில் நன்மை செய்கிறார் உங்களுடைய கடன்கள் நீங்க வழி உண்டாகும் அதேபோல் உங்களின் எதிரிகள் விலகுவர் சுப விரயங்கள் இருந்துகொண்டிருக்கும் ஆறில் இருக்கும் ராகுவும் அதிகப்படியான நன்மைகளை செய்கிறார் மேலும் சுக்கிரன் செவ்வாய் புதன் இவர்கள் அதிக அளவில் நன்மை தருகின்றன உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும் புதிய வேலை தேடுவோருக்கு அது கிடைத்து நன்மை உண்டாகும் தொழில் விரிவாக்கம் நன்றாக இருக்கும் பணவரவு தாராளம் இருந்தாலும் சனி இரண்டில் இருப்பதாலும் ராசிநாதன் மூன்றில் வக்கிரமாக இருப்பதால் சில கெடுதல்கள் அதாவது வார்த்தைகளை விடுவதால் அல்லது வாக்குவாதம் செய்வதால் அல்லது நம்பி சில விஷயங்களை சொல்வதால் அது கெடுதல் முடியும் அதனால் எங்கும் எதிலும் கவனமாக இருந்தால் இந்த மாதம் நன்மைகள் கிடைக்கச்செய்யும்

 சந்திராஷ்டமம்:  செப்டம்பர் 3 மாலை 4 34 மணி முதல் செப்டம்பர் 4 மாலை 5 52 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  பிள்ளையார் மற்றும் சிவன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது தினமும் காலை வேளையில் விநாயகர் அகவல் படிப்பது முடிந்தவரையில் ஓம் நமசிவாய என்று சொல்லிக் கொண்டிருப்பது நன்மைதரும் அதேபோல் தான தர்மங்கள் அன்னதானம் முதலியவை மிக தாராளமாக செய்தாள் நன்மை உண்டாகும்

 பூராடம்:  உங்கள் ராசிநாதன் இருந்தாலும் உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பதாலும் மற்றும் ராகு கேது செவ்வாய் இவர்கள் நன்மை செய்வதால் உங்கள் எண்ணங்கள் எளிதில் ஈடேறும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும் பணப்புழக்கம் தாராளமாக செலவு கடன் அடைதல் புதிய வாகன யோகம் சிலருக்கு புதிய உத்தியோகம் புது வீடு குடி போகுதல் இல்லத்தில் சுப நிகழ்வுகள் அதேபோல் கேளிக்கைகள் விருந்துகள் என்றும் ஆடை ஆபரணச் சேர்க்கை இவைகளும் இந்த மாதம் உண்டாகும் அதேநேரம் குருவும் சனியும் மற்றும் சூரியனும் சில சங்கடங்களை கொடுத்துக் கொண்டிருப்பார்கள் வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது அதேபோல் நம்பி சிலருக்கு கையெழுத்து போன்ற செய்கைகள் இவற்றை தவிர்ப்பது நல்லது அது பிற்கால பாதிப்பை தடுக்கும் மேலும் அவசரப்படுதல் ஆலோசனையின்றி செய்தல் கெடுதலை தரும் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும்

 சந்திராஷ்டமம் செப்டம்பர் 4 மாலை 5 52 மணி முதல் செப்டம்பர் 5 மாலை 06.40 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  காஞ்சி காமாக்ஷி அம்மன் மற்றும் புவனேஸ்வரி அம்மன் அருகில் உள்ள கோயிலில் விளக்கு ஏற்றுவது மற்றும் தான தர்மங்கள் செய்வது அம்மன் சுலோகங்கள் சொல்வது வயோதிகர்களுக்கு தவிர ஒத்தாசை செய்வது மற்றவர் மகிழும்படி இனிமையான வார்த்தைகளை பேசுவது நன்மை தரும்

 உத்திராடம் 1ஆம் பாதம் :  உங்கள் ராசிநாதன் பலவீனமாக இருந்தாலும் நட்சத்திர நாதன் சூரியன் 9ல் இருப்பது மற்றும் சுக்கிரன் ராகு கேது செப்டம்பர் 6 க்கு பின் செவ்வாய் இவர்கள் அளப்பரிய நன்மை செய்வதால் பெரும்பாலும் உங்களுக்கு நன்மையே நடக்கும் நினைத்த காரியங்கள் செயல்படும் அதேநேரம் தந்தை வழியில் மருத்துவ செலவுகள் மற்றும் இல்லத்தில் சிறு சிறு சலசலப்பு இருந்து கொண்டே இருக்கும் கொஞ்சம் நிதானம் செயல்பாடுகளில் யோசனையும் இருந்தால் வெற்றி உண்டு அதே போல வாக்கில் சனி இருப்பதால் வார்த்தைகளை விடுவதில் கவனம் தேவை பெரும்பாலும் ஜீவன வகையில் கஷ்டமில்லை உத்தியோகம் நன்றாக இருக்கும் சொந்தத் தொழில் நன்மை தரும் இருந்தாலும் பெரிய முன்னேற்றம் இல்லை நிதானப் போக்கு வரும் மாதங்களில் செலவுகளை குறைக்கும் தன்மை அதிகமாகும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்

 சந்திராஷ்டமம்:  செப்டம்பர் 5 மாலை 6.40  மணி முதல் செப்டம்பர் 6  மாலை 06.58 மணி வரை

 வணங்கவேண்டிய தெய்வம்:  சூரிய பகவான் மற்றும் சனீஸ்வரர் ஆஞ்சநேயர் கோயிலில் விளக்கு ஏற்றி வழிபடுவதும் ராம நாமத்தைச் சொல்வதும் காலையில் சூரிய வணக்கத்தைக் செய்வதும் நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்

மகரம்: (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய):

உங்கள் ராசிநாதன் ஆட்சியாக வக்ரமாக இருக்கிறார் மேலும் மேலோட்டமாக பார்த்தால் எட்டில் சூரியன் புதன் செவ்வாய் என்று நன்மை தரவில்லை ஐந்தில் ராகுவும் நன்மை தரவில்லை குரு இரண்டில் இருக்கிறார் அதுவும் நன்மை இல்லை ஆனால் இவை எல்லாமே இங்கு நன்மையாக மாறுகிறது எப்படி என்றால் எட்டில் இருக்கும் சூரியன் ஆட்சியாக இருப்பதால் பெரிய கெடுதல்கள் எதுவும் இல்லை அதுவே நன்மையாகும் மேலும் எட்டில் புதன் இருந்தால் பெயர் புகழ் மற்றும் தெய்வ அனுகூலம் உண்டாகும் எட்டில் இருக்கும் செவ்வாய் நட்பு வீட்டில் இருப்பதால் உங்களுக்கு செப்டம்பர் 6 வரை நன்மை செய்கிறது பெரிய கெடுதல்கள் இல்லை அதன் பிறகும் அதில் செவ்வாய் தந்தைவழியில் கொஞ்சம் மருத்துவ செலவுகள் போன்றவற்றை வைக்கும் பொதுவாக இந்த மாதம் பல கிரகங்கள் நன்மை தான் செய்கின்றன குரு பார்வையால் நன்மை செய்கிறார் பொருளாதார ஏற்றம் நன்றாக இருக்கும் வாழ்க்கை துணைவர் மூலம் உங்களுடைய வருமானம் பெருக ஆரம்பிக்கும் மேலும் உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறும் புதிய வேலை அல்லது புதிய தொழில் அல்லது கல்வி வளர்ச்சி திருமணம் இப்படி பல விஷயங்கள் சாதகமாக அமையும் செல்வம் பெருகும் காரணம் சுக்கிரன் மற்றும் கேது மிகுந்த நன்மை தருகிறது அதனால் உங்களுடைய எதிரிகள் விழுகின்றனர் மேலும் இந்த மாதம் உங்களுக்கான யோகங்கள் கிடைக்கக்கூடிய மாதமாக அமைகிறது பொதுவாக மற்ற கிரகங்கள் ஓரளவு பலன் தந்தாலும் சில கிரகங்கள் கெடுதல் தந்தாலும் சுக்கிரனும் புதனும் கேதுவும் தடைகளை அகற்றி நன்மையை செய்வதால் பணம் பொருள் ஆடை ஆபரணம் புதிய வீடு வாகனம் இப்படி எல்லாமே நடக்கிறது கெடுதல்கள் என்று பார்த்தால் எதிரிகளாலும் அல்லது உடன் வேலை செய்பவர்களாலும் சங்கடங்கள் உண்டாகலாம் சில உறவுகள் உங்களுக்கு சங்கடத்தை தரும்படி பேசலாம் அது மனதை பாதிக்கலாம் மற்றபடி இந்த மாதம் நன்மைகள் அதிகமாகும்

 உத்திராடம் 2 3 4 பாதங்கள்:  உங்கள் நட்சத்திர நாதன் சூரியன் ஆட்சியாக இருக்கிறார் அதனால் உங்கள் பலம் கூடும் மேலும் சுக்கிரனும் புதனும் மாதக்கடைசியில் செவ்வாயும் அதேபோல் கேதுவும் நன்மைகளை தருவதால் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் பொருளாதாரம் நன்றாக இருக்கும் செலவுகளும் கட்டுப்பாட்டில் இருக்கும் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போகிறவர்கள்  என்பதால் உங்கள் செயல்கள் எதிரிகளை அழித்து விடும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் நம்மை அதிகமாக இருக்கிறது இந்த மாதத்தில்

 சந்திராஷ்டமம்  செப்டம்பர் 5 மாலை 06.40 மணி முதல் செப்டம்பர் 6,  மாலை 06.58 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்:  சூரிய பகவான் மற்றும் சனீஸ்வரர் ஆஞ்சநேயர் கோயிலில் விளக்கு ஏற்றி வழிபடுவதும் ராம நாமத்தைச் சொல்வதும் காலையில் சூரிய வணக்கத்தைக் செய்வதும் நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்

 திருவோணம்:   உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரன் மாதத் துவக்கத்தில் நீசபங்க ராஜயோகம் பெற்று பதினொன்றில் இருப்பதால் அங்கு கேதுவும் இருப்பதால் நன்மைகள் அதிகம் அதேபோல்  எட்டாம் வீட்டில் சூரியன் ஆட்சி மேலும் சுக்கிரன் கேது புதன் செவ்வாய் இவர்கள் நன்மை அதிகம் செய்வதால் உங்கள் எதிர்பார்ப்புகள் ஈடேறும் இந்த மாதத்தில் உங்களுடைய முயற்சிகள் அது வேலையாக இருக்கட்டும் சொந்தத் தொழில் கல்வி வெளிநாட்டு வாய்ப்பு திருமணம் எதுவாக இருந்தாலும் அது வெற்றியைத் தரும் உங்களுக்கு சாதகமாக கிரக அமைப்புகள் இருக்கு அதே நேரம் சில தடைகள் வரலாம் குருவாலும் ராகுவால் ஆனாலும் உங்களுடைய நம்மை கருதும் நபர்களால் அது முறியடிக்கப்பட்டு வெற்றியைத் தேடித்தரும் அதனால் இந்த மாதம் உங்களுக்கு நன்மை தரும் மாதம்

 சந்திராஷ்டமம்  செப்டம்பர் 6 , 06.58 மணி முதல் செப்டம்பர் 7,  மாலை 06 48 மணி வரை 

வணங்க வேண்டிய தெய்வம்:  அலர்மேல் மங்கை தாயார் மகாலட்சுமி அருகில் உள்ள கோயிலில் தாயார் சன்னதியில் விளக்கேற்றி வழிபடுவது லக்ஷ்மி அஷ்டோத்திரம் செல்வது முடிந்த வரையில் தான தர்மங்களை செய்வது குலதெய்வ வழிபாடு இவை நன்மை தரும் ஏழு குழந்தைகளை படிக்க வைப்பது பலன் தரும்

 அவிட்டம் 1 2 பாதங்கள்:   உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாய் ராசிக்கு எட்டில் இருக்கிறார் செப்டம்பர் 6 க்கு பின் ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சியாகிறார் பொதுவாக இந்த மாதம் அவரும் ராசிநாதன் சனியும் மற்றும் சுக்கிரன் சூரியன் புதன் கேது என்று அனைவருமே நன்மை தருவதால் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் பணப்புழக்கம் தாராளம் செலவுகளும் இருந்துகொண்டிருக்கும் விரும்பிய உத்தியோகம் இடமாற்றம் பதவி உயர்வு சொந்தத் தொழிலில் முன்னேற்றம் கல்வியில் நல்ல நிலை வெளிநாடு வாய்ப்பு புதிய வீடு வாகன யோகங்கள் இல்லத்தில் சுப நிகழ்வுகள் என்று நம்மை அதிகமாக இருக்கிறதோ அதே நேரம் சில தொல்லைகள் உடன் வேலை செய்பவர் ஆல் அல்லது நெருங்கிய உறவுகளால் ஏற்படலாம் மனதில் துக்கம் வரலாம் எதிலும் கவனமாக இருத்தல் நன்மை தரும்

 சந்திராஷ்டமம்  செப்டம்பர் 7, 06 48 மணி முதல் செப்டம்பர் 8 , மாலை 06.13 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  வைத்தீஸ்வரன் அல்லது வைத்திய வீரராகவன் அருகில் மருந்தீஸ்வரர் வைத்தியநாதன் என்ற பெயருள்ள சிவன் கோயில்கள் இருந்தால் அல்லது திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் இந்த கோயில்களுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் வைத்தியநாதாஷ்டகம் படிப்பது மற்றும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நன்மை தரும்

கும்பம்: (அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய):

உங்கள் ராசிநாதன் பன்னிரண்டில் ஆட்சியாக இருந்தாலும் பெரிய நன்மையும் அல்லது கெடுதலும் செய்யவில்லை பார்வையால் ஒரு அளவுக்கு நன்மை தருகிறார் ஆனால் உங்களுக்கு பக்கபலமாக இருப்பது புதனும் கேதுவும் மட்டுமே மாத முற்பகுதியில் சுக்கிரன் நன்மை செய்கிறார் பொதுவாக இந்த மாதம் நீங்கள் கவனமாக அடி எடுத்து வைக்க வேண்டிய மாதம் பொருளாதாரம் ஓரளவுக்கு பரவாயில்லை வருமானம் நன்றாகவே இருக்கும் இருந்தாலும் செலவுகளும் அதிகமாக இருக்கும் ராசியில் இருக்கும் குரு பகவான் 12-ஆம் இடம் நோக்கி சஞ்சரிப்பதால் அது விரயச் செலவுகளை கொடுத்துக்கொண்டிருக்கும் மேலும் ராகு 4ல் தாயார் வழியில் மருத்துவச் செலவுகள் அல்லது தாய்வழி உறவு பிரிவு மற்றும் கல்வியில் தொய்வு அதேபோல சுகம் கேடுகள் என்று சில சங்கடங்களை கொடுத்துக்கொண்டிருக்கும் ஆனால் கேது பகவான் 10ல் இருந்து வருவாய் தருவதால் உத்தியோகத்தில் நல்ல நிலை இருந்துகொண்டிருக்கும் வருமானம் பெருகும் சொந்த தொழிலிலும் நன்மை உண்டாகும் மேலும் சுக்கிரன் ஓரளவுக்கு நன்மை செய்வதால் ஆடை ஆபரணச் சேர்க்கை வாகனயோகம் புதிய வீடு வாங்குதல் பயணத்தினால் நன்மை என்று இருக்கும் சூரியன் ஏழில் இருப்பது வாழ்க்கை துணைவர் உடல்நலம் பாதிப்படையலாம் அதேநேரம் ஆட்சியாக இருப்பதால் வாழ்க்கை துணைவர் மூலம் வருமானமும் வரலாம் மேலும் செவ்வாய் எட்டில் பயணிக்கும்போது செப்டம்பர் 6 க்கு பின்னால் பிரயாணத்தில் வாகன விபத்துகள் அல்லது உடல் ரீதியான பாதிப்புகள் பொதுவாக இதயம் ரத்தம் தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆரம்பமாகும் உணவு பழக்கங்களும் சரியான வைத்திய முறைகளும் இருந்தால் இவை தவிர்த்து விடலாம் மேலும் பொதுவாக நன்மைகள் என்றால் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும் அதே போல ஜீவன வகையில் உத்தியோகத்தில் அல்லது சொந்த தொழில் முன்னேற்றம் சுமாராக இருந்தாலும் வருமானம் வந்து கொண்டிருக்கும் ஆனால் செலவுகள் எந்த வகையிலாவது கட்டுக்கடங்காமல் இருக்கும் சிக்கனத்தை கடைபிடிப்பது சேமிப்பை செய்வது நன்மை பயக்கும் கூடுமானவரையில் உங்கள் விஷயங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்வது சரியல்ல அது சில கெடுதல்களை செய்யும் கொஞ்சம் கவனமா இருக்கணும் இந்த மாதம் நன்மைகளும் தீமைகளும் கலந்தாற்போல் சுமாரான மாதமாக இருக்கிறது

 அவிட்டம் 3 ,4 பாதங்கள்:  உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாய் ஏழாம் வீட்டில் செப்டம்பர் 6 வரை இருக்கிறார் அப்போது சில நன்மைகள் நடக்கும் வாழ்க்கை துணைவரால் தொழில் கூட்டாளிகள் என்று நண்பர்களால் நல்லது நடக்கும் அதே நேரம் அவர் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது பயணத்தில் வாகனத்தில் அடிபடுதல் அல்லது உடல் ரீதியான படுத்திருக்கும் கொஞ்சம் கவனம் தேவை மேலும் ராகு சுகத்தைக் எடுப்பதால் எதிர்பாராத சங்கடங்கள் மனவருத்தங்கள் வரும் அதனால் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுவது நன்மை தரும் பொருளாதார ரீதியாக பெரிய பாதிப்புகள் வராது புதன், கேது வருவாயை தருவார்கள்  சிக்கனமாக இருந்தால் செலவுகள் கட்டுப்படும் இந்த மாதம் உங்களுக்கு சுமாரான மாதம்

சந்திராஷ்டமம்  செப்டம்பர் 7, 06 48 மணி முதல் செப்டம்பர் 8 , மாலை 06.13 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  வைத்தீஸ்வரன் அல்லது வைத்திய வீரராகவன் அருகில் மருந்தீஸ்வரர் வைத்தியநாதன் என்ற பெயருள்ள சிவன் கோயில்கள் இருந்தால் அல்லது திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் இந்த கோயில்களுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் வைத்தியநாதாஷ்டகம் படிப்பது மற்றும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நன்மை தரும்

 சதயம் :  உங்கள் நட்சத்திர நாதன் ராகு பலம் குறைவாக  இருப்பதால் செயல்பாடுகள் கொஞ்சம் மந்தமாக இருக்கும் அதே நேரம் கேது, சுக்கிரன் செவ்வாய் புதன் இவர்கள் நன்மை செய்வதால் பொருளாதார நிலை மேம்படும் உத்யோகத்தில் சொந்த தொழிலில் வருமானம் வந்து கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகள் பதவி உயர்வு போன்றவை சற்று தாமதம் ஆகலாம் ஆனால் முயற்சி வெற்றியைத் தரும் குருவால் சில விரயங்கள் அதிகமாக இருக்கும் கவனம் தேவை உடல் ஆரோக்கியத்திலும் பயணத்தின்போது வாகனங்களை கையாளும்போது ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை விபத்துகள் ஏற்படலாம் அதன் மூலம் மருத்துவ செலவுகள் வைக்கலாம் பெரிய சங்கடங்கள் இல்லை இருந்தாலும் இந்த மாதம் சுமாரான மாதம்

 சந்திராஷ்டமம்: செப்டம்பர் 8 இரவு 6ம் பதிமூன்று முதல் செப்டம்பர் 9 மாலை 5 16 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  காளி, பைரவர்,  அஷ்டமி நாளில் காலபைரவரை அல்லது சொர்ண ஆகர்ஷன பைரவரை வணங்கினால் நன்மை உண்டாகும் மேலும் தான தர்மங்கள் செய்வதும் உடலால் இயலாதவர்களுக்கு சரீர  உதவிகளை செய்வதும் நன்மை தரும்

பூரட்டாதி 1,2,3 பாதங்கள் :  உங்கள் நட்சத்திர நாதர் ராசியில் 12-ஆம் இடம் நோக்கி நகர்கிறார் அதனால் சுபவிரயங்கள் சில கட்டுக்கடங்காத செலவுகள் இருந்துகொண்டிருக்கும் ஆனால் 5-ஆம் பார்வையாக ராசிக்கு 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால் கல்வி பேர் புகழ் செல்வம் செல்வாக்கு அதிகாரம் குழந்தைகளால் நன்மை இப்படி சில விஷயங்கள் நன்றாக இருக்கும் அதே போல சூரியன் ஆட்சியாக இருப்பதால் வாழ்க்கை துணைவர் மூலம் நன்மைகள் அதிகம் நடக்கும் பொருளாதார ரீதியாக நன்மை அதிகம் எட்டில் புதன் செல்வது தெய்வ அனுகூலத்தை கொடுக்கும் அதனால் கெடுதல்கள் குறைய வாய்ப்புண்டு அதே நேரம் சிக்கனம் தேவை எதையும் யோசித்து செய்வது நலம் தரும் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் இருந்து கொண்டிருந்தாலும் பெரிய அளவுகள் பாதிப்பு இல்லை பொதுவாக ஓரளவு நன்மை அதிகம் என்றே சொல்லலாம் வருமானத்திற்கு குறைவு இருக்காது சொந்த தொழில் உத்தியோகம் எல்லாம் வருமானத்தை தந்துகொண்டிருக்கும் முன்னேற்றம் கொஞ்சம் மெதுவாக இருக்கும் எவரிடமும் ரகசியங்களை பரிமாறாமல் இருந்தால் கெடுதல்கள் குறையும் இந்த மாதம் பரவாயில்லை என்று சொல்லும் படியாக இருக்கும்

 சந்திராஷ்டமம்   செப்டம்பர் 9 மாலை 5 மணி முதல் செப்டம்பர் 10 மாலை 04.02 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  பார்வதி  பரமேஸ்வரன்  திங்கள் கிழமைகளில் சிவனுக்கு அபிஷேகத்திற்கு பால் கொடுப்பது கோவிலில் விளக்கு ஏற்றுவது நன்மை தரும் முடிந்த அளவு அன்னதானம் ஆடை தானம் ஏழை குழந்தைகள் படிக்க உதவி இவற்றைச் செய்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும்

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய):

உங்கள் ராசிநாதன் பன்னிரண்டில் இருந்தாலும் 11-ஆம் இடத்தை நோக்கி திரும்புவதால் இந்த மாதம் நன்மைகள் அதிகம் இருக்கும் அவர் நல்லதைச் செய்கிறார் அதுபோல ஆறில் இருக்கும் சூரியன் ஆட்சியாக அமைவதால் இதுவரை இருந்து வந்த வியாதிகள் குணமடையும் எதிரிகள் நீங்குவர் முன்னேற்றம் இருக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் அதேபோல மற்ற கிரகங்கள் சுக்கிரன் புதன் செவ்வாய் இவர்களும் நன்மை தருகிறார்கள் முக்கியமாக மூன்றில் இருக்கும் ராகு பகவான் வருவாயை பெருக்கி வளத்தை உண்டு பண்ணுகிறார் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் சொந்த தொழிலில் வளர்ச்சி இருக்கும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள் இல்லத்தில் சுப நிகழ்வுகள் இருந்துகொண்டிருக்கும் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் சுக  ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் தேவைகள் பூர்த்தியாகும் இல்லத்தில் நடக்கும் சுப நிகழ்வுகளுக்காக செலவுகள் அதிகம் இருக்கும் அதை சமாளித்து விடும்படி வருவாய் இருக்கும் .கெடுதல்கள் என்றால் ஒன்பதில் இருக்கும் கேது தந்தை வழியில் வைத்திய செலவுகள் மற்றும் சில முன்னேற்றத் தடைகளை செய்வார் இருந்தாலும் உங்களுடைய ராசிநாதன் மட்டுமல்லாமல் 11ஆம் வீட்டில் இருக்கும் சனிபகவானும் அதை சமாளித்து வெற்றியைத் தருகிறார் முன்னேற்றம் நன்றாகவே இருக்கும் உங்களுடைய திட்டங்கள் செயல்படும் சேமிப்பு அதிகமாகும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் பெயர் புகழ் அந்தஸ்து உண்டாகும் இல்லத்தில் அன்பும் ஒற்றுமையும் உண்டாகும் சமூக அந்தஸ்து கிடைக்கும் புதிய வீடு வாகன யோகங்கள் சிலருக்கு உண்டாகும் திருமணம் போன்ற ஏற்பாடுகள் நிறைவேறும் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் இந்த மாதம் நன்மை தரும் மாதம்

 பூரட்டாதி 4ஆம் பாதம்:   நட்சத்திர நாதன் குருபகவான் 11ஆம் வீடு நோக்கி நகர்வதால் உங்கள் எதிர்பார்ப்புகள் தேவைகள் பூர்த்தியாகும் ராகு சூரியன் சனி சுக்கிரன் புதன் என்று அனைவரும் நன்மை செய்வதால் பொருளாதாரம் நன்றாக இருக்கும் உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் விரும்பிய இடமாற்றம் உண்டாகும் பிரயாணத்தில் நன்மை உண்டாகும் சொந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும் இல்லத்தில் சுப நிகழ்வுகளால் அன்பும் ஒற்றுமையும் நிறைந்திருக்கும் இந்த மாதம் மிக நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

சந்திராஷ்டமம்   செப்டம்பர் 9 மாலை 5 மணி முதல் செப்டம்பர் 10 மாலை 04.02 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  பார்வதி  பரமேஸ்வரன்  திங்கள் கிழமைகளில் சிவனுக்கு அபிஷேகத்திற்கு பால் கொடுப்பது கோவிலில் விளக்கு ஏற்றுவது நன்மை தரும் முடிந்த அளவு அன்னதானம் ஆடை தானம் ஏழை குழந்தைகள் படிக்க உதவி இவற்றைச் செய்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும்

 உத்திரட்டாதி  உங்கள் நட்சத்திர நாதன் சனி பகவான் லாபத்தில் இருக்கிறார் மேலும் சூரியன் ஆறில் ஆட்சி உங்களுக்கு மூன்றில் ராகு 78 சுக்கிரன் மற்றும் புதன் செவ்வாய் இவர்களும் அதிகப்படியாக நன்மை தருவதால் வருமானம் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் தேவைகள் பூர்த்தி ஆகும் உடல் ரீதியான படுத்தல் என்பது அலர்ஜி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம் ஆனாலும் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் அதனால் பிணிகள் நீங்கும் இல்லத்தில் உள்ளோருக்கும் வைத்திய செலவு என்பது குறைய ஆரம்பிக்கும் பொதுவாக இந்த மாதம் சேமிப்பு அதிகரிக்கும் நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகும்

 சந்திராஷ்டமம்: செப்டம்பர் 10 , மாலை 04.02 மணி முதல் செப்டம்பர் 11,  பிற்பகல் 02 36 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  கோதண்டராமர் அருகில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது ராமநாமத்தை சொல்வது நன்மை தரும் மேலும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நன்மை உண்டாகும் ஏழை எளியோருக்கு அவர்கள் தேவையை பூர்த்தி செய்வது இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கச் செய்யும்

 ரேவதி:  உங்கள் நட்சத்திர நாதன் புதன் பகவான் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்க போகிறார் ஆட்சியாக ஆகஸ்ட் 26ம் தேதி முதல் அதிலிருந்து உங்கள் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக பூர்த்தி அடையும் மேலும் ராசிநாதனும் பதினொன்றாம் வீடு நோக்கி நகர்வதால் நன்மைகள் அதிகம் உண்டாகும் மேலும் சனி ராகு சுக்கிரன் சூரியன் செவ்வாய் என்று பல கிரகங்கள் நன்மை செய்கின்றது பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் இருக்கும் பணத்தேவைகள் விரைந்து பூர்த்தியாகும் உத்தியோகத்தில் உயர்ந்த நிலை கிடைக்கும் விரும்பிய இடமாற்றம் பதவி உயர்வு வேறு நல்ல வேலை வெளிநாடு யோகம் இப்படி என்று நன்றாக இருக்கும் விரும்பிய பாடங்கள் கல்வியில் உயர்ந்த நிலை வெளிநாட்டுப் படிப்பு என்று இருக்கும் சொந்த தொழில் செய்வோர் அதில் மேம்பட வாய்ப்புகளும் அரசாங்க உதவிகளும் வங்கிக் கடன்களும் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தினால் சொந்த தொழிலில் விரிவாக்கம் செய்ய ஏதுவான காலமாக அமையும் பொதுவில் இந்த மாதம் அதிக நன்மை இருக்கு அதே நேரம் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கைத் தேவை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம் வரலாம் தகுந்த வைத்திய சிகிச்சைகள் குடும்ப அங்கத்தினரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை என்று இருந்தால் அது பெரிய பாதிப்புகளை தராது பொதுவில் நல்ல மாதம்

 சந்திராஷ்டமம்:  செப்டம்பர் 11,  பிற்பகல் 02.36 மணி முதல் செப்டம்பர் 12 , பிற்பகல் 01.02 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  ஹயக்ரீவர் மற்றும் தன்வந்திரி பகவான் அருகில் உள்ள கோயில்களில் விளக்கேற்றி வழிபடுவது முடிந்தவரை தான தர்மங்கள் செய்வது இறைவன் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதே மாற்றுத்திறனாளிகளுக்கு சரீர ஒத்தாசை செய்வது மிகுந்த நன்மையை தரும்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.