மகர ராசி

மகரம் ராசி(உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் முடிய)–60/100

உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார் சனிபகவான். அங்கிருந்து 3,7,10ம் இடத்தை பார்க்கிறார் ஏழரை சனியின் ஜென்ம சனி எனப்படும் காலம், இதுவரை தடைப்பட்டுவந்த அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும், புதிய தொழில், புதிய வேலை, திருமணம் கைகூடல் என்று நன்றாகவே இருக்கும், பண வரவு மிக தாராளம், உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும், சமூக அந்தஸ்து கூடும், விரய குரு கேது சில சங்கடங்களை இந்த வருட கடைசி வரை தருவார் அதன் பின் ராகு/கேது பெயர்ச்சி ஒரு நன்மையை தரும், குரு ஜென்ம ராசியில் சஞ்சாரிக்கும் ஏப்ரல், மே, ஜூன் 2020 மற்றும் நவம்பர் 2020 முதல் ஜூலை 2021 வரையிலும் சிறு சிறு தொந்தரவுகள் பொருளாதார சிக்கல், உடல் ரீதியான படுத்தல் என்று இருக்கும். மற்ற காலங்களில் நன்மை அதிகம் இருக்கும், பொதுவில் நன்மை அதிகமும் கெடுதல் குறைவாகவும் இந்த சனி பெயர்ச்சியில் இருக்கும்.

உடல்நலம் /ஆரோக்கியம்:

பொதுவாக பெரிய பாதிப்புகள் இருக்காது எனினும் குரு ஜென்மத்தில் சஞ்சரிக்கும் காலங்கள் கொஞ்சம் பாதிப்பை தரும், பெரும்பாலும் குழந்தைகளுக்கு தலை வலி, வயதானோருக்கு குளிர், மூட்டுவலி போன்ற தொல்லைகளும், மற்றவர்களுக்கு, கண் தொந்தரவு, மன உளைச்சல்கள் வீண் சங்கடங்கள் என்று இருக்கும், கவன சிதறல்கள் இருந்து கொண்டிருக்கும், வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, குடும்ப உறுப்பினர்களுக்கு அடிக்கடி தொல்லைகள் வரும் மருத்துவ செலவு வைக்கும், ஆகார வகையில் கவனமாய் இருத்தல், பயணத்தின் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் எச்சரிக்கையாய் இருந்தால் போதும் பெரிய பிரச்சனைகள் ஏதும் வராது.

குடும்பம்/ உறவுகள்:

கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும், பெற்றோர்களுடன் நல்ல உறவு இருக்கும், குழந்தைகளால் பெருமை இருக்கும், குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ஏப்ரல்,மே,ஜூன் 2020 மற்றும் நவம்பர் 2020 முதல் ஜூலை 2021 வரையிலும், சனி வக்ர சஞ்சார காலங்களிலும்(முன்னுரையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது) கொஞ்சம் அனுசரித்து போகுதலும் விட்டுக்கொடுத்து போகுதல், நிதானம் வார்த்தைகளை அளந்து பேசுதல் என்று இருந்தால் பெரிய பிரிவு பிரச்சனை இருக்காது. மற்ற காலங்களில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும், பிரிந்தவர் ஒன்று சேருவர், இந்த சனி பெயர்ச்சி முழுவதும் பெரிய அளவில் உறவுகளுடன் பிரச்சனை இருக்காது. புதிய உறவினர் சேர்க்கையும் உண்டாகும்.

வேலை/உத்தியோகம்:

எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைக்கும், புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள், வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்கள் இந்த சனிப்பெயர்ச்சியில் வேலை கிடைக்க பெறுவார்கள். அலுவலகத்தில் வைத்த நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறும், வேலையில் உற்சாகம் இருக்கும், உடன் வேலை செய்வ்வோர், மேலதிகாரி இவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், அதே நேரம் சனி வக்ர சஞ்சாரகாலங்கள், ஜென்மத்தில் குரு சஞ்சரிக்கும் காலங்கள் அதிக வேலை பளு, வேண்டாத இட மாற்றம் சிலருக்கு வேலை பறிபோதல் என்று சங்கடங்களும் இருக்கும், எப்பொழுதும் நிதானமாக யோசித்து செயல்படுவது நன்மை தரும். பொதுவில் இந்த சனிப்பெயர்ச்சி அதிக நன்மை தரும்

தொழிலதிபர்கள்:

தொழிலாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். சக கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.பணப்புழக்கம் தாராளம். புதிய தொழில் விஸ்தரிப்பு நன்றாக இருக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். புதிதாக தொழில் ஆரம்பிக்க விரும்பும் மகர ராசிகாரர்களுக்கு ஏற்ற காலம் இது. வங்கி கடன் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சனிவக்ர காலங்கள், குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் காலங்கள் மட்டும் கொஞ்சம் அவஸ்தை கொடுக்கும். எதிரி தொல்லை, அரசாங்க தொல்லை, கணக்கு வழக்குகளில் குளறுபடி என்று இருக்கும். கொஞ்சம் கவனம் எடுத்து நிதானத்துடன் செயல்பட்டால் தொல்லை இல்லை. பெரும்பாலும் நன்மை என்று இருப்பதனால் துணிச்சலுடன் செயல்படவும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருக்கவும்.யாரிடமும் வார்த்தைகளைவிட வேண்டாம். நிதானம் முக்கியம்.

மாணவர்கள்:

மிதமாக படித்து வந்த மாணவர்கள் நன்கு படிக்க ஆரம்பிப்பார்கள், விரும்பிய பாடம் விரும்பிகல்லூரி, நினைத்த இடம் என்று நன்றாகவே இருக்கும் உயர்கல்வி படிக்க ஏதுவாக இந்த பெயர்ச்சி அமையும், வெளிநாட்டு படிப்பு, போட்டிப்பந்தயங்களில் வெற்றி, ஆசிரியர் பெற்றோர்கள் பாராட்டை பெறுதல், எதிலும் ஒரு வேகம் உற்சாகம் என்று இருக்கும், நடுவில் குரு சஞ்சார காலங்கள் மனம் தடுமாற்றம் ஏற்படும் தியானப்பயிற்சி, மனதை ஒருமுகப்படுத்தல் என்று இருந்தால் நன்றாக இருக்கும்.

கலைஞர்கள்/அரசியல்வாதிகள்/விவசாயிகள்:

பொதுவாக கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். புகழ்வரும் ரசிகர்கள் பாராட்டு கிடைக்கும். சேமிப்பு பெருகும். சொத்துக்கள் சேரும். இருந்தாலும் வக்ர சஞ்சார காலங்கள், ஜென்ம குரு வாசகாலங்கள் கொஞ்சம் கவனமாயும் இருக்க வேண்டும். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். எதிலும் ஒரு நிதானம் தேவை. அரசியல்வாதிகள் தங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்ள அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். பொதுமக்கள் பாராட்டு,கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் இருக்கும்.பண புழக்கம் தாராளம். செல்வாக்கு உயரும். அதே நேரம் நிதானமும், பேச்சில் கனிவும் இருக்க வேண்டும். குரு சஞ்சார காலங்கள் கொஞ்சம் கடுமையாக இருக்கும்.கவனம் தேவை. விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி பணபுழக்கம் தாராளமாக இருக்கும். இல்லத்தில் சுபநிகழ்வுகளால் மனம் குளிரும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகம். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் காலம் கவனம் தேவை, கொஞ்சம் அவசரப்படாமல் யோசித்து எதையும் செய்வது நன்று, வழக்குகளில் சிக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

பெண்கள்:

இறைவன் அள்ளிக் கொடுக்கிறான்.எல்லாவிதங்களிலும் சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை நிறைந்திருக்கும். திருமணத்தை எதிர்பார்த்தோருக்கு திருமணம் கைகூடும். உழைக்கும் மகளிர் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவர். குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஒரு பொறுப்புணர்வு நிதானம் வார்த்தையில் இனிமை, சிக்கனம் இவற்றை கடைபிடித்தால் பெரிய துன்பம் ஏதும் இருக்காது. பொதுவாக இந்த சனிப்பெயர்ச்சி அதிக அளவில் நன்மை செய்கிறது.

ப்ரார்த்தனைகளும் வணங்க வேண்டிய தெய்வமும்:

வேங்கடஜாலபதி பெருமாள் அல்லது நின்ற திருக்கோல ஸ்ரீனிவாசபெருமாளை சேவித்துவாருங்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு புதன், சனிக்கிழமைகளில் திருவோண நக்ஷத்திர நாளில் சென்று நெய் விளக்கேற்றுங்கள். முடிந்த அளவு தான,தர்மங்களை செய்யுங்கள். சரீரத்தினால் பிறருக்கு நன்மை பயப்பதை செய்யுங்கள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.