மத்தியபிரதேசம் – என் பயணத்தில்

தமிழ்நாடு ,டெல்லிக்கு சமமாக நான் விரும்பிய  மாநிலம் மத்திய பிரதேசம். அதைப்பற்றி கேள்வி பட்டு படிக்க ஆரம்பித்த  இருந்தே அங்கே போக வேண்டிய ஆசை இருந்தது.முதல் முறை செல்ல பல வருடங்கள் பிடித்தது. மத்திய பிரதேசம் இந்தியாவின் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாநிலம் ஆனால் ஹிந்து மதம் வளர அதன் பங்கு  முக்கியமானது.

இயற்கை அன்னை விளையாடும் இடம் வனங்கள் ,சராணலயங்கள் ,  கட்டிடகலை என பெரிய கலாச்சார பின்பலம் பெற்றுள்ளது. தலைநகர் போபால் அருகில் உள்ள பிம்ப்டிகா குகைகளில் 10,000 ஆண்டுகள் முன்பு  மனிதன் வாழ்ந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளது.25 சரணாலயங்கள் ,9 தேசிய பூங்காக்கள் , 6 புலி சராணலயங்கள் உள்ளன. பன்முகத்தன்மை கொண்ட நிலம்.ஒரு பக்கம் செழிப்பான காடுகள் இருந்தாலும் வரண்ட பகுதிகள் நிறையாகவே உள்ளது.விவசாயத்தை விட அதிக தொழிற்சாலை அதிகரித்து உள்ளது.

இந்தோர் ஒரு முக்கியமான தொழில்சாலை மற்றும் தூய்மையான நகரம் கூட. முதலில் பார்த்த இடம் ஓர்ச்சா ,இரண்டாவது குவாலியர் ,மோரேனா மற்றும் கடைசியாக கஜூராஹோ . இரண்டு விதமான நிலப்பரப்புகளை பார்க்க முடிந்தது. உஜ்ஜயின் போன்ற முக்கிய வாய்ந்த ஆன்மீக இடங்கள்.கும்ப மேளா நடைப்பெறும் ஸ்தலம்.நர்மதை நதிக்கரையில் அமைந்த ஊர் ஓம்கரேஷ்வரர் .இளமை ஆதிசங்கரர் இங்கு உள்ள குகையில் தான் குருவான கோவிந்த பாகவதபாதாவை சந்தித்து கற்றார் .

ஞானத்தில் உச்ச  நிலைக்குசென்றார். அரசாங்கம் ஆதிசங்கரருக்கு சிலை வைக்க உள்ளது.இங்கு தான் 12 வது ஜோதிர்லிங்கம் உள்ள இடம்.பச்மடி அழகான மலைபிரதேசம்.சாஞ்சி ,உதயகிரி குகைகள்  என்று பல இடங்கள் உள்ளன.ஒவ்வொரு இடங்களும் வரலாறு  ,இந்திய மதம் ,இயற்கை. என்ற பல விதமான கலவைகள் உள்ள மாநிலம் . சாதாரண மக்களிடம்  இப்போது தான் பிரபலம் ஆகி வருகிறது.Incredible India என்ற ஸ்லோகன் மத்திய பிரதேசத்தை வைத்தே இயற்றப்பட்டது. மறந்துவிட்டேன்.

இராமயணத்தில் 14 வருட வனாவாசத்தில் சித்ரகூட்டிற்கும் இடம் உண்டு .இராமன் குகனை சந்தித்த இடம் என்று நினைக்கிறேன்.சீதை உருவாக்கிய குளம் இருப்பதாக  உள்ளது.நீர்வீழ்ச்சி என்ற இயற்கை சூழ உள்ள இடம்.ஜபல்பூர் ,காண்டுவா ,சத்னா என பல இடங்கள் எழுதி கொண்டே போகலாம். துறவிகள் ,இயற்கை விரும்பிகள் ,ஆன்மிகவாதிகள் , adventures ஈடுபாடு உள்ளவர்கள் என பலருக்கு ஆன இடம் தான் மத்திய பிரதேசம்.பச்மடி அழகான மலைபிரதேசம். சாஞ்சி ,உதயகிரி குகைகள்  என்று பல இடங்கள் உள்ளன.ஒவ்வொரு இடங்களும் வரலாறு  ,இந்திய மதம் ,இயற்கை. என்ற பல விதமான கலவைகள் உள்ள மாநிலம் .நம்மைப் போல்  சாதாரண மக்களிடம்  இப்போது தான் பிரபலம் ஆகி வருகிறது.

துறவிகள் ,இயற்கை  விரும்பிகள் ,ஆன்மிகவாதிகள் , adventures ஈடுபாடு உள்ளவர்கள் என பலருக்கு ஆன இடம் தான் மத்திய பிரதேசம்.நானே இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள நிறையாகவே உள்ளது. அத்தனை எளிதும் கிடையாது.
திரு.அடல்பிஹாரி வாஜ்பாய் , இந்தியாவின் சிறந்த பிரதமர்  பிறந்த ஊர் குவாலியர்.ஆனால் தேர்தல் தொகுதி லக்கனோ.

About Author

One Reply to “மத்தியபிரதேசம் – என் பயணத்தில்”

  1. சிறப்பான கட்டுரை. கட்டுரை ஆசிரியர் சொல்வது போல மத்தியப் பிரதேசம் நல்லதொரு மாநிலம். நானும் இரண்டு முறை அம்மாநிலத்திற்குப் பயணித்து இருக்கிறேன். இரண்டு பயணக் கட்டுரை நூல்களும் வெளியிட்டு இருக்கிறேன். மத்தியப் பிரதேசம் அழைக்கிறது மற்றும் பாந்தவ்கர் வனம் என்ற தலைப்பிலும் இணையத்தில் இருக்கின்றன. முதலாவது http://www.freetamilebooks.com தளத்திலும் இரண்டாவது அமேசான் தளத்திலும் கிடைக்கிறது.

Comments are closed.