மார்ச் 04 ராசி பலன்

🕉️மேஷம்
மார்ச் 04, 2021
மாசி 20 – வியாழன்

குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️ரிஷபம்
மார்ச் 04, 2021
மாசி 20 – வியாழன்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும்.


🕉️மிதுனம்
மார்ச் 04, 2021
மாசி 20 – வியாழன்

தொழில் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : புரிதல் ஏற்படும்.


🕉️கடகம்
மார்ச் 04, 2021
மாசி 20 – வியாழன்

உறவினர்களால் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
ஆயில்யம் : ஒத்துழைப்பு மேம்படும்.


🕉️சிம்மம்
மார்ச் 04, 2021
மாசி 20 – வியாழன்

கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : திருப்திகரமான நாள்.
பூரம் : சிந்தனைகள் தோன்றும்.
உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


🕉️கன்னி
மார்ச் 04, 2021
மாசி 20 – வியாழன்

நண்பர்களின் ஆலோசனைகள் மற்றும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு மறையும். வாக்குவன்மையின் மூலம் நன்மை உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : போட்டிகள் குறையும்.


🕉️துலாம்
மார்ச் 04, 2021
மாசி 20 – வியாழன்

உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கால்நடைகளால் லாபம் மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : லாபம் மேம்படும்.
சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


🕉️விருச்சிகம்
மார்ச் 04, 2021
மாசி 20 – வியாழன்

எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தனவரவுகள் அதிகரிப்பதற்கான எண்ணங்களும், முயற்சிகளும் மேம்படும். சுற்றுலா பயணங்களை மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : இடமாற்றம் உண்டாகும்.
அனுஷம் : ஆர்வம் ஏற்படும்.
கேட்டை : மாற்றமான நாள்.


🕉️தனுசு
மார்ச் 04, 2021
மாசி 20 – வியாழன்

மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மற்றும் நட்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.


🕉️மகரம்
மார்ச் 04, 2021
மாசி 20 – வியாழன்

பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவுகள் கிடைக்கும். தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : லாபம் கிடைக்கும்.
திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.


🕉️கும்பம்
மார்ச் 04, 2021
மாசி 20 – வியாழன்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தடைபட்ட பாக்கிகள் வசூலாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். அறிமுகமில்லாதவர்களின் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகளும், ஆதரவுகளும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.


🕉️மீனம்
மார்ச் 04, 2021
மாசி 20 – வியாழன்

உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில் தொடர்பான முடிவுகளில் பொறுமை வேண்டும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். தேவையற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : சோர்வு உண்டாகும்.
உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.
ரேவதி : சேமிப்புகள் குறையும்.

‐————————————–

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.