மார்ச் 15 ராசி பலன்

🕉️மேஷம்
மார்ச் 15, 2021
பங்குனி 02 – திங்கள்

பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்து முன்னேறுவீர்கள். தேவையற்ற செலவுகளை குறைக்க முயல்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : மதிப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


🕉️ரிஷபம்
மார்ச் 15, 2021
பங்குனி 02 – திங்கள்

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவு கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : அறிவு வெளிப்படும்.


🕉️மிதுனம்
மார்ச் 15, 2021
பங்குனி 02 – திங்கள்

வீடு மற்றும் வாகனப் பராமரிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகளை களைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களிடம் புரிதல் உண்டாகும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️கடகம்
மார்ச் 15, 2021
பங்குனி 02 – திங்கள்

விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான எண்ணங்கள் தோன்றும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். புதிய முதலீடுகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
பூசம் : பயணங்கள் சாதகமாகும்.
ஆயில்யம் : மாற்றங்கள் உண்டாகும்.


🕉️சிம்மம்
மார்ச் 15, 2021
பங்குனி 02 – திங்கள்

வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் காலதாமதமாக கிடைக்கும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செலவுகளும், நெருக்கடியான சூழலும் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : காலதாமதம் உண்டாகும்.
பூரம் : அனுசரித்து செல்லவும்.
உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️கன்னி
மார்ச் 15, 2021
பங்குனி 02 – திங்கள்

செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகளில் சற்று சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிரியமானவர்களிடம் எதையும் எதிர்பார்த்து இருப்பதை குறைத்து கொள்ளவும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️துலாம்
மார்ச் 15, 2021
பங்குனி 02 – திங்கள்

தொழிலில் செய்யும் சில மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். விடாப்பிடியாக எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு பயணங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சித்திரை : லாபம் அதிகரிக்கும்.
சுவாதி : அன்பு அதிகரிக்கும்.
விசாகம் : தடைகள் நீங்கும்.


🕉️விருச்சிகம்
மார்ச் 15, 2021
பங்குனி 02 – திங்கள்

உறவினர்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பணி தொடர்பான வெளியூர் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.


🕉️தனுசு
மார்ச் 15, 2021
பங்குனி 02 – திங்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமாக இருந்துவந்த திறமைகள் வெளிப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவார்கள். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் தோன்றும் தேவையற்ற பய உணர்வால் பதற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : திறமைகள் வெளிப்படும்.
பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


🕉️மகரம்
மார்ச் 15, 2021
பங்குனி 02 – திங்கள்

தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். புதிய லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். முயற்சிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : உயர்வான நாள்.


🕉️கும்பம்
மார்ச் 15, 2021
பங்குனி 02 – திங்கள்

குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை கூறுவதை தவிர்க்கவும். மனதில் தேவையற்ற அஞ்ஞான எண்ணங்கள் தோன்றும். வாக்குவாதங்களால் லாபம் உண்டாகும். நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் சுபச்செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
சதயம் : லாபம் உண்டாகும்.
பூரட்டாதி : சுபச்செலவுகள் ஏற்படும்.


🕉️மீனம்
மார்ச் 15, 2021
பங்குனி 02 – திங்கள்

புதிய நண்பர்களின் ஆதரவின் மூலம் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும்போது கவனம் வேண்டும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.