🕉️மேஷம்
மார்ச் 20, 2021
பங்குனி 07 – சனி
வியாபாரத்தில் புதிய நபர்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகள் குறையும். பயணங்களால் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : லாபம் உண்டாகும்.
பரணி : ஆதரவான நாள்.
கிருத்திகை : எதிர்ப்புகள் குறையும்.
🕉️ரிஷபம்
மார்ச் 20, 2021
பங்குனி 07 – சனி
வேலையாட்களின் மூலம் எண்ணிய செயல்கள் ஈடேறும். புதிய இலக்கை நிர்ணயிப்பீர்கள். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். மனதில் தெளிவான எண்ணங்களால் செயல்களில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.
🕉️மிதுனம்
மார்ச் 20, 2021
பங்குனி 07 – சனி
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேம்படும். தேவையற்ற பேச்சுக்களை குறைப்பதன் மூலம் சாதகமான செயல்கள் நடைபெறும். அலைச்சல்களின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
🕉️கடகம்
மார்ச் 20, 2021
பங்குனி 07 – சனி
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். பயணங்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
ஆயில்யம் : முயற்சிகள் கைகூடும்.
🕉️சிம்மம்
மார்ச் 20, 2021
பங்குனி 07 – சனி
தொழில் சம்பந்தமான முக்கிய மாற்றங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான சூழல் ஏற்படும். எண்ணிய பணிகளை முடிப்பதற்கு சிறிது அலைச்சல்கள் உண்டாகும். அரசு அதிகாரிகளிடம் ஆதாயம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.
🕉️கன்னி
மார்ச் 20, 2021
பங்குனி 07 – சனி
திருமணம் சம்பந்தமான சுபச்செயல்கள் கைகூடும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த இடையூறுகள் மறையும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : இடையூறுகள் மறையும்.
அஸ்தம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
சித்திரை : ஆடைச்சேர்க்கை உண்டாகும்.
🕉️துலாம்
மார்ச் 20, 2021
பங்குனி 07 – சனி
புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமை வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
சுவாதி : காலதாமதம் உண்டாகும்.
விசாகம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
🕉️விருச்சிகம்
மார்ச் 20, 2021
பங்குனி 07 – சனி
நினைத்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : இழுபறிகள் நீங்கும்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : செல்வாக்கு உயரும்.
🕉️தனுசு
மார்ச் 20, 2021
பங்குனி 07 – சனி
உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் ஏற்படும். மனதை உறுத்திக்கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வர்த்தகத்தில் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : மாற்றமான நாள்.
பூராடம் : தீர்வு கிடைக்கும்.
உத்திராடம் : சுபமான நாள்.
🕉️மகரம்
மார்ச் 20, 2021
பங்குனி 07 – சனி
நண்பர்களின் ஆதரவால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : காரியங்கள் நிறைவேறும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
🕉️கும்பம்
மார்ச் 20, 2021
பங்குனி 07 – சனி
உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் அமைதியுடன் செயல்படவும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் சோர்வு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாகும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது. பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : சோர்வு உண்டாகும்.
பூரட்டாதி : மாற்றமான நாள்.
மார்ச் 20, 2021
பங்குனி 07 – சனி
பணியில் மேன்மைக்கான முயற்சிகள் சாதகமாகும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். அரசு பணிகளில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
உத்திரட்டாதி : மனக்கசப்புகள் குறையும்.
ரேவதி : ஆதாயம் உண்டாகும்.