மார்ச் 26 ராசி பலன்

🕉️மேஷம்
மார்ச் 26, 2021

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மருத்துவம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். கலை தொடர்பான பணிகளில் நுட்பங்களை அறிவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களின் உண்மையை அறிந்து முடிவெடுப்பது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரணி : நுட்பங்களை அறிவீர்கள்.

கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.

🕉️ரிஷபம்
மார்ச் 26, 2021

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடுகள் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிரும் பொழுது உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.
ரோகிணி : தாமதங்கள் அகலும்.
மிருகசீரிஷம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
மார்ச் 26, 2021

செயல்பாடுகளில் நிதானமும், பொறுமையும் வெளிப்படும். எழுத்து தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். தடைபட்டு வந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அவ்வப்போது சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். திடமான சிந்தனையுடன் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
திருவாதிரை : குழப்பங்கள் மறையும்.
புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.


🕉️கடகம்
மார்ச் 26, 2021

மதிநுட்பமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் தனவரவுகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எழுத்துத்துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். நெருக்கமானவர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.
பூசம் : தனவரவுகள் மேம்படும்.
ஆயில்யம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


🕉️சிம்மம்
மார்ச் 26, 2021

வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தனிப்பட்ட பயணங்களின் மூலம் புரிதலும், மாற்றங்களும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூரம் : மனம் மகிழ்வீர்கள்.
உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும்.


🕉️கன்னி
மார்ச் 26, 2021

சிறு தூர பயணங்களின் மூலம் வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பாகப்பிரிவினைகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : புரிதல் மேம்படும்.
அஸ்தம் : லாபம் அதிகரிக்கும்.
சித்திரை : சாதகமான நாள்.


🕉️துலாம்
மார்ச் 26, 2021

கனிவான பேச்சுக்களின் மூலம் காரிய வெற்றி அடைவீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டு மறையும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

சித்திரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.


🕉️விருச்சிகம்
மார்ச் 26, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர்வு ஏற்படும். அரசு தொடர்பான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். இறைவழிபாடுகளின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்வீர்கள். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் உண்டாகும். இளைய சகோதரர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : உயர்வு ஏற்படும்.
அனுஷம் : குழப்பங்கள் குறையும்.
கேட்டை : மாற்றங்கள் உண்டாகும்.


🕉️தனுசு
மார்ச் 26, 2021

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களை பற்றி அறிந்து கொள்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : புரிதல் உண்டாகும்.
பூராடம் : முன்னேற்றமான நாள்.
உத்திராடம் : மேன்மை ஏற்படும்.


🕉️மகரம்
மார்ச் 26, 2021

எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். எளிதாக முடிய வேண்டிய பணிகள் சற்று காலதாமதமாக முடியும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். சபை தொடர்பான பணிகளில் மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்லது. செயல்பாடுகளில் ஈடுபாடு இல்லாமல் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு மறையும். மறைமுகமான தடைகளின் மூலம் விரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : சோர்வு ஏற்படும்.


🕉️கும்பம்
மார்ச் 26, 2021

கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு நன்மை ஏற்படும். நண்பர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். நெருங்கிய உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. வெளிப்படையான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : நன்மை ஏற்படும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.


🕉️மீனம்
மார்ச் 26, 2021

வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்ப்புகளின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கால்நடைகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மற்றவர்கள் பொருட்களின் மீதான ஆசைகளை குறைத்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.
ரேவதி : பொறுமை வேண்டும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.