மார்ச் 28 ராசி பலன்

🕉️மேஷம்
மார்ச் 28, 2021

பழைய கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். கடையை மாற்றுவது குறித்து ஆலோசிப்பீர்கள். போட்டி, பொறாமைகள் குறையும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பரணி : போட்டிகள் குறையும்.
கிருத்திகை : துரிதம் உண்டாகும்.


🕉️ரிஷபம்
மார்ச் 28, 2021

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் உண்டாகும். தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : எண்ணங்கள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.


🕉️மிதுனம்
மார்ச் 28, 2021

சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : சிறப்பான நாள்.
திருவாதிரை : தடைகள் அகலும்.
புனர்பூசம் : பிரச்சனைகள் நீங்கும்.


🕉️கடகம்
மார்ச் 28, 2021

நண்பர்களுக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்த செயல்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நெருக்கடியான சூழல் மறைந்து பொருளாதாரம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : மனக்கசப்புகள் நீங்கும்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : ஒற்றுமை மேம்படும்.


🕉️சிம்மம்
மார்ச் 28, 2021

வாடிக்கையாளர்களிடம் அமைதி போக்கை கடைபிடிக்கவும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : தெளிவு பிறக்கும்.
பூரம் : தனவரவுகள் கிடைக்கும்.
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️கன்னி
மார்ச் 28, 2021

சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். புதிய வேலைக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் உண்டாகும். தர்க்க விவாதங்களினால் கீர்த்தி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : மேன்மையான நாள்.
அஸ்தம் : முயற்சிகள் ஈடேறும்.
சித்திரை : நெருக்கம் உண்டாகும்.


🕉️துலாம்
மார்ச் 28, 2021

நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளினால் சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். சகோதரர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : முடிவுகள் கிடைக்கும்.


🕉️விருச்சிகம்
மார்ச் 28, 2021

புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். வெளியூர் சம்பந்தமான வேலைவாய்ப்புகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த லாபம் மேம்படும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். கூட்டு வணிகத்தில் ஒத்துழைப்பு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அனுஷம் : லாபம் மேம்படும்.

கேட்டை : கீர்த்தி உண்டாகும்.

🕉️தனுசு
மார்ச் 28, 2021

தொழிலை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களின் வருகையினால் கலகலப்பான சூழல் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : கலகலப்பான நாள்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : இழுபறிகள் அகலும்.


🕉️மகரம்
மார்ச் 28, 2021

நீண்ட நாள் எண்ணிய திட்டங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். புதிய முயற்சிகளால் சுபவிரயங்கள் உண்டாகும். விளையாட்டு வீரர்கள் போட்டியில் கவனத்துடன் ஈடுபடவும். புதிய செயல்பாடுகளில் எண்ணிய லாபம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : தைரியமான நாள்.
திருவோணம் : சுபவிரயங்கள் உண்டாகும்.
அவிட்டம் : லாபம் ஏற்படும்.


🕉️கும்பம்
மார்ச் 28, 2021

உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். வாகனத்தில் மிதவேகத்தை கடைபிடிக்கவும். நினைத்த காரியங்கள் நிறைவேற காலதாமதமாகும். மனதில் தேவையற்ற குழப்பங்களால் சோர்வு உண்டாகும். வர்த்தகம் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : காலதாமதம் ஏற்படும்.
பூரட்டாதி : சோர்வு உண்டாகும்.


🕉️மீனம்
மார்ச் 28, 2021

பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : சுறுசுறுப்பான நாள்.
உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : எண்ணங்கள் தோன்றும்.


About Author