மீன ராசி (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ) :
ராசிநாதன் பத்தில் இருக்கிறார், சனிபகவான் 11ம் இடம் செல்கிறார், அங்கு புதன் சூரியன், 9ல் செவ்வாய் இவர்கள் அனைவரும் இந்த மாதம் நன்மைகளை வாரி வழங்குகின்றனர். மேலும் சந்திரன் 7ம் இடம், 9ம் இடம், 10, 11ம் இடம், 2ம் இடம் என்று வரும்போது பண புழக்கத்தை தாராளமாக தருவார், எடுத்த செயல்கள் யாவிலும் வெற்றி உண்டாகும் புதன் மாத ஆரம்பத்தில் நிலையான புத்தியை கொடுத்து நேர்வழியில் செல்ல செய்வார். மாத பிற்பகுதியில் சஞ்சலம் உண்டாகும் இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள், வீடு வாகன யோகம் சிலருக்கு உண்டு, செவ்வாயால் சிலருக்கு சொத்து வந்து சேரும், குடும்பத்தில் குதூகலம், கணவன் மனைவிக்குள் நெருக்கம், குழந்தைகளால் சந்தோஷம், பெற்றோர்களின் ஆரோக்கியம் என்று எல்லாமே நன்றாக இருக்கும், உத்தியோகம்/தொழிலில் மேன்மை உண்டாகும் சிலருக்கு புதிய உத்தியோகம் கிடைக்கும், சிலர் சொந்த தொழில் தொடங்குவர். செலவுகளை கட்டுப்படுத்தி சிக்கணமாய் இருந்தால் வரும்மாதங்களில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பொதுவில் இந்த மாதம் அதிக நன்மை தருவதாக அமையும்.
சந்திராஷ்டமம்: ஜனவரி 18,19