மேஷ ராசி

மேஷ ராசி (அஸ்வினி, பரணி, க்ருத்திகை 1ம் பாதம் முடிய)  – 65/100

கடந்த காலங்களில் அதாவது கடந்த 2-1/2 ஆண்டுகளில் சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சரித்து பலவிதமான கலந்த பலன்களை தந்திருப்பார். மேலும் குருபகவான் நவம்பர் 2019 வரை ராசிக்கு 8 ல் இருந்து கசப்பான அனுபவங்களை தந்திருப்பார். இனி நல்ல காலம். இந்த முறை சனிபகவான் 3 ஆண்டு காலம் சஞ்சரிக்கிறார் இந்த மூன்றாண்டில் ராசிக்கு 10,11,12 இடங்களிலும் சஞ்சரிக்கிறார்.மேலும் சனி பகவான் நன்மை தீமை கலந்துதான் செய்வார் இருந்தாலும் மற்ற கிரஹங்களின் சஞ்சாரங்கள் மிகுந்த நண்மையை தரும். குருபகவான் இந்த 3 வருடங்களில் நிச்சயம் நல்ல பலனை தருவார். வருமானம் பெருகும். பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். வங்கி கடன் போன்று கிடைக்கும், நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். மனதில் தெம்பு உண்டாகும். வீட்டில் சுப நிக்ழ்ச்சிகள் இருக்கும். பொதுவா உத்தியோகம் / தொழிலில் ஏற்றம் இருக்கும். புதிய வேலை கிடைக்கும் சொந்த தொழில் தொடங்குவர். மொத்தத்தில் நல்ல பலன்கள் நிறைய இருக்கும்.

உடல் நலம் ஆரோக்கியம்:

மனம் உடல் இரண்டும் மிக நன்றாக இருக்கும், குருபகவானின் பார்வை மனத்தெம்பை கொடுத்து சரியான மருத்துவ சிகிச்சையை பெற வைக்கும், ஜூலை 2022 வரை நல்ல ஆரோக்கியம் இருக்கும். அதன் பின் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் பெரிய உடல் பிரச்சனைகள் இருக்காது. சனி பகவான் சஞ்சாரம் பரவாயில்லை என்று இருந்தாலும் ஜூலை 2022 முதல் ராகுவின் சஞ்சாரம் உடல் பாதிப்பை தரும் முக்கியமாக பெற்றோர்கள் குடும்ப அங்கத்தினர் உடல் நிலையில் பாதிப்பு இருக்கும். ஜாதகத்தில் சனியும் ராகுவும் பகையில்லாத இடத்தில் இருந்தால் உடல் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும்.

குடும்பம் மற்றும் உறவுகள்:

பத்தில் வரும் சனிபகவான் 4ம் இடத்தை நேராக பார்ப்பதால் குடும்ப உறவுகளில் சில பிரச்சனை வரும். கணவன் மனைவிக்குள் சிறு ஊடல்கள் வரும், பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மனஸ்தாபம் வரும். இருந்தாலும் இந்த சனிப்பெயர்ச்சி 3 ஆண்டு காலத்தில் குரு பகவான் ராசிக்கு 10,11,12 ராசிகளில் வருவதால் முன்னேற்றம்இருக்கும். நல்லநிலையும் உண்டாகும். பிள்ளையால் சங்கடம் வந்தாலும் குரு பார்வையால் சரியாகிவிடும். கூடுமானவரையில் விட்டுக்கொடுத்து போவது நல்லது, உறவினர்களை அனுசரித்தும் அல்லது விட்டுக்கொடுத்தும் அரவணைத்து செல்வதும் பெரிய கஷ்டத்திலிருந்து விடுபடவைக்கும். பொதுவில் இந்த 3 ஆண்டுகளில் புதிய உறவுகள் சேர்க்கையும், இருக்கின்ற உறவினர்களுடன் பகையும் இருந்தாலும் மற்ற கிரஹநிலைகள் சாதகமாய் இருப்பதால் ஓரளவு ஒற்றுமை இருக்கும்.

வேலை/உத்தியோகம் :

என்னப்பா வளர்ச்சியே இல்லையே என்று ஏங்கி கொண்டிருந்த மேஷ ராசி அன்பர்களே இந்த சனி பகவான் பெயர்ச்சி ஒரு நல்ல மாற்றத்தை தரும். மேலும் குரு பகவானின் சஞ்சாரம் உடல் ஆரோக்கியத்தையும், வேலையில் உற்சாகத்தையும் தந்து, 2020 ஆரம்பம் மற்றும் 2022 ஆரம்பம் ஒரு உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு அல்லது நல்ல வேலை கிடைத்தல் என்று மிக நன்றாகவே இருக்கும் மேலும் இந்த 3 ஆண்டுகளில் ராகுவின் 2ம் இடம் ஜென்ம ராசி சஞ்சாரமும் ஓரளவு நன்மை தரும். எனவே கவலை வேண்டாம். புதிய வேலைக்கு வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்கள் நன்மையை அடைவர் என்பது உறுதி. இந்த ஆண்டு ஆரம்பம் வெளிநாட்டில் குடிபுக எண்ணினால் அதுநிறைவேறும். வேலையில் இருக்கும் அரசியலை முறியடித்து முன்னேறுவீர்கள். எல்லாமே சாதகமாக இருப்பதால் எளிதில் 3 ஆண்டை கடந்து நல்ல வளர்ச்சிப்பாதையில் செல்வீர்கள்

தொழில் செய்வோர்:

கடந்த ஆண்டுகளை விட நல்ல முன்னேற்றம் இந்த சனிப்பெயர்ச்சியால் உண்டாகும். புதிய தொழில் வளர்ச்சியை தரும், வங்கி கடன்கள் தாராளமாக கிடைக்கும் பெண் பங்குதாரர்களை கொண்ட நிறுவனங்கள் வளர்ச்சியடையும், ஜூலை 2022 முதல் டிசம்பர் 2023 வரை வரவு செலவுகணக்கை சரியாக வைத்து கொள்ளுங்கள் அரசாங்கத்தால் தொல்லை வரும். பெரும்பாலும் நன்மையாகவே இருக்கும். புதிதாய் தொழில் தொடங்குவோருக்கு வங்கி கடன்கள் கிடைக்கும். லாபங்கள் அதிகரிக்கும். ஊழியர்கள் விஸ்வாசமாய் இருந்து தொழில் முன்னேற்றத்தை தருவார்கள், போட்டிகள் குறையும். பகைவர்கள் ஜூலை 2022 வரை விலகி இருப்பர் அதன் பின் 2022 ஜூலை முதல் தொழில் போட்டிகள் விரோதிகள் என்று கொஞ்சம் சிரம்பப்பட வேண்டி இருக்கும். பொதுவில் சனிப்பெயர்ச்சி நன்மையை தரும்.

மாணவர்கள்:

பொதுவாக உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த சாதகத்தை தருகிறது. குறிப்பாக டிசம்பர் 2021 முதல்ஜூலை 2022 வரையிலான காலகட்டம், வெளிநாட்டுபடிப்பு, தேர்ச்சியில் முதலிடம், பலரின் பாராட்டுகள், மேலும் அனைத்து மாணவர்களுக்கும் கடந்த காலசங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல்ல படிப்பும், பெரியோர்களின் ஆஸிகளும், விரும்பிய பாடத்திட்டம், விரும்பிய கல்லூரி கிடைத்தல் என்று மகிழ்ச்சியாக இருப்பர். பெரிய சங்கடங்கள் இருக்காது. போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பொதுவில் சனி பகவான் பூரண சாதகத்தை மாணவர்களுக்கு தருகிறார்.

கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள், விவசாயிகள்:

கடந்த 2019 முடிய மந்தமாக இருந்த உங்கள் வாழ்க்கை இந்த சனிப்பெயர்ச்சி முதல் ப்ரகாசிக்க தொடங்கும். கலைஞர்கள் போட்டிகளை வென்று வாய்ப்புகளை பெறுவார்கள், எதிரிகள் மறைவர் அரசியல் சதிகள் முறியடிப்பீர்கள், முன்னேற்றம் பேர் புகழ் இருக்கும், வருமானம் இரட்டிப்பாகும். அரசியல்வாதிகள் இதுவரை காணாத வளர்ச்சியை பெறுவர், எதிரிகள் விலகுவர், மேலிடத்தில் செல்வாக்கு உயரும் தொண்டர்கள் விசுவாசிகளாய் இருப்பர், பதவி தேடி வரும். இருந்தாலும் ஜூலை 2022 முதல் கொஞ்சம் கவனமாய் இருக்க வேண்டும். வழக்குகளில் சிக்கலாம், எதிரிகள் கை ஓங்கும். விவசாயிகள் விளைச்சல் அதிகம் காண்பர் வருமானம் பெருகி குடும்ப தேவைகள் பூர்த்தியாகும், இதுவரை இருந்து வந்த வழக்குகள் சாதகமாகும். ஜூலை 202 முதல் கொஞ்சம் கவனம் தேவை அக்கபக்கத்தாருடன் வாதம் வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்காமல் கவனமாயிருத்தல் வேண்டும்.

பெண்கள் :

மேலே சொன்ன பொதுவான பலன்கள் அனைத்தும் உண்டாகும். அதனுடன் குடும்ப வளர்ச்சி, பிள்ளைகளால் பெருமை, திருமணத்தை எதிர்பார்த்திருப்போருக்கு வரன் கைகூடல், தொழில் செய்வோருக்கு அபரிமிதமான வளர்ச்சி, யாத்திரைகள் செல்லுதல், மிகுந்த சந்தோஷமாய் இருத்தல் என்று நன்றாகவே இருக்கும். இந்த சனிப்பெயர்ச்சி

ப்ரார்த்தனைகளும் வணங்கவேண்டிய தெய்வமும் :

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்குதல், ஹனுமன் சாலிசா படித்தல், விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுதல் தான தர்மங்களை முடிந்த அளவு செய்தல் இவை நல்ல பலனை தரும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.