ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
சனி பெயர்ச்சி ராசி பலன்கள் (23.01.2020 முதல் 16.01.2023 வரை)
23.01.2020அன்று காலை 09.24 மணிக்கு சனி பகவான்மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குறிப்பு: சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக ஏப்ரல் 28, 2022 முதல் ஜூலை 14, 2022 வரைசென்றுவருகிறார்.
சனிபகவான் உத்திராடம் நக்ஷத்திரத்தில்: ஜனவரி 23, 2020 முதல்மே 11, 2020
சனிபகவான் (வக்கிரம்) உத்திராடம் நக்ஷத்திரத்தில்: மே 11, 2020 முதல்செப்டம்பர் 29, 2020
சனிபகவான் உத்திராடம் நக்ஷத்திரத்தில்: செப்டம்பர் 29, 2020 முதல்ஜனவரி 21, 2021
சனிபகவான் திருவோணம் நக்ஷத்திரத்தில்: ஜனவரி 21, 2021 முதல்மே 23 2021
சனிபகவான் (வக்கிரம்) திருவோணம் நக்ஷத்திரத்தில்: மே 23 2021 முதல்அக்டோபர் 11, 2021
சனிபகவான் திருவோணம் நக்ஷத்திரத்தில்: அக்டோபர் 11, 2021 முதல்பிப்ரவரி 17, 2022
சனிபகவான் அவிட்டம் நக்ஷத்திரத்தில்: : பிப்ரவரி 17, 2022 முதல்ஏப்ரல் 28, 2022
சனிபகவான் அவிட்டம் நக்ஷத்திரத்தில்: ஏப்ரல் 28, 2022 முதல்ஜூன் 05, 2022 [கும்பராசி]
சனிபகவான் (வக்கிரம்) அவிட்டம் நக்ஷத்திரத்தில்: ஜூன் 05, 2022 முதல்ஜூலை 14, 2022 [கும்பராசி]
சனிபகவான் (வக்கிரம்) அவிட்டம் நக்ஷத்திரத்தில்: ஜூலை 14, 2022 முதல்அக்டோபர் 23, 2022
சனிபகவான் அவிட்டம் நக்ஷத்திரத்தில்: அக்டோபர் 23, 2022 முதல்ஜனவரி 16, 2023
சனிபகவானின் விஷேஷங்களை பார்த்து விட்டு ராசிபலனை தொடர்ந்து படியுங்கள்.
எல்லோருமே பயந்துநடுங்குவர் இவர் பெயரை கேட்டாலே காரணம் இவர் தரும் தண்டனை அப்படி.
நீதிமான். நியாயவாதி. அதனால்தான் தராசுசின்னம் கொண்ட துலாம் ராசியில் உச்சமாகிறார்.
சனி பகவான் என்பவர் யார்?
சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலா தேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும்பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலா தேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள். அந்த பெண்ணுக்கு சாயா தேவி என்று பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறிவிட்டு தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும்பிறந்தனர். இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனி பகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார்.
கரிய நிறம் கொண்ட சனி பகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுள்காரகன் என்ற அதிமுக்கியமான பதவியில்இருப்பவர்.
பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர்சனியே. சர்வமுட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக் கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனிபகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வவல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்து விட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியை போல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.
வழிபாடு மற்றும் நற்செயல்கள்
பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடினஉழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனிஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். நவதிருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகாரஸ்தலமாகும்.
சனிக்கிழமை வரும் பிரதோஷதினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம். சங்கடஹரசதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கிதரலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திரதானம் செய்வது சிறப்பு.
சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக்கூடிய முக்கியத்தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வரபகவான் ஆலயம்.
இங்கே கோயில் கொண்டு அருள்புரியும் சனிபகவானை வழிபடுபவர்களுக்கு சனிதோஷ நிவர்த்தி கிடைக்கப்பெற்று எல்லாத்துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.
உங்களுக்கு ஏழரை சனியா? அஷ்டம சனியா? இந்த மந் திரத்தை சொல்லுங்க. சனிபகவானின் கருணை உங்களுக்கு கிடைக்கும்.
சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனிதசை அல்லது சனி அந்தர்தசையின்போது சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபட வேண்டும். தினசரி அனுமன்சாலிசா அல்லது அனுமான் ஸ்தோத்திரம் படிக்கவேண்டும்.
திருநள்ளாறு தவிர மற்ற இடத்தில் இருக்கும் சனீஸ்வரர் கோவில்
*அகஸ்தீஸ்வரர்கோயில், பொழிச்சலூர்சென்னை
ஸ்ரீசனீஸ்வரர்ஆலயம் ,ஆதம்பாக்கம்சென்னை
ஸ்ரீபொங்குசனிஸ்வரர்ஆலயம், திருக்கொள்ளிக்காடு, திருவாரூர்
ஸ்ரீவிக்னேஸ்வர, சனீஸ்வரஆலயம், மேற்குமாம்பலம், சென்னை
ஸ்ரீசனீஸ்வரார்ஆலயம், அரக்கோணம்
ஸ்ரீசனீஸ்வரபகவான்கோவில், குச்சனூர், தேனி
ஸ்ரீகந்தாஸ்ரமம், சனீஸ்வரர்சன்னதி, சேலையூர், சென்னை
சனி மூல மந்திர ஜபம்:
“ஓம் ப்ரம்ப்ரீம் ப்ரௌம் ஷக்சனைச்சராய நமஹ”, – 40 நாட்களில் 19000 முறைசொல்லவேண்டும்.
சனி காயத்ரி மந்திரம்:
காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலாகாண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனிஸ்தோத்திரம் ஒருசிறந்த தீர்வாக உள்ளது.
சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்ஜனஸமாபாஸம்
ரவி புத்ரம்யமாக்ரஜம்!
ச்சாயாமார்த்தாண்டஸம்பூதம்
தம்நமாமிசனைச்சரம்!!
தமிழில்:
சங்கடந்தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகாநெறியில்
இச்சகம் வாழ இன்னருள்தாதா!!
தொண்டு:
சனிக்கிழமையன்று நன்கொடையாக ஒரு எருமை அல்லது எள் விதைகள் கொடுக்கவேண்டும்.
நோன்புநாள்: சனிக்கிழமை.
பூஜை: அனுமான்பூஜை.
ருத்ராட்சம்: 14 முக ருத்ராட்சம்அணியவேண்டும்.
அன்புடன்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌமஜோதிடநிலையம்
D1, I Block, Alsa Green park, Near MIT Gate
Nehru Nagar, Chrompet, Chennai – 600 044
Email: mannargudirs1960@gmail.com
Phone: 044-22230808 / 8056207965
Skype ID: Ravisarangan