மேஷ ராசி

மேஷ ராசி (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய) :

3ல் இருக்கும் ராகுவும், 9ல் இருக்கும் குருவும், 10க்கு போகும் சனியும் மாதம் முழுவதும் நல்ல பலன்ககளை தருவார்கள். 10ல் இருக்கும் புதன், 11ல் இருக்கும் சுக்ரன், மாத ஆரம்பத்திலும் , ராசி நாதன் செவ்வாய் மாத கடைசியிலும் நன்மை செய்வர். பொதுவாக பெரிய கஷ்டங்கள் பொருளாதார பிரச்சனைகள் இல்லாமல் நன்றாகவே இருக்கும். வருகின்ற சனிப்பெயர்ச்சியால் தொழிலில்/உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும், நல்ல நிலை உண்டாகும் பணப்புழக்கம் மிக தாராளமாக இருக்கும், இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நீடிக்கும், பிரிந்த உறவுகள் ஒன்று சேருவர், செவ்வாயின் பார்வை 2ம் இடத்துக்கு இருப்பதால் சிலருக்கு வீடுவாங்கும் யோகமும், புதிய வீடு குடிபோகுதலும் இருக்கும். எல்லா பிரிவினருக்கும் நன்மை அதிகம் இருக்கும், 7க்குடைய சுக்ரன் லாபத்தில் இருப்பதாலும் மேலும் கேதுவின் பார்வை பெறுவதாலும் திருமணத்தை எதிர்பார்த்து இருந்தோருக்கு திருமண்ம கைகூடும், குருவின் பார்வையால் புத்திர ப்ராப்தி சிலருக்கு உண்டாகும், ஆடை ஆபரண சேர்க்கைகளும், பொழுது போக்கு, கேளிக்கைவிருந்து என்று பங்குபெறுதல் மிக சந்தோஷமான ஒரு நிலையை தரும். ராசி நாதன் செவ்வாய் தனூருக்கு பெயர்ச்சியாகும்போது சிலருக்கு புனித யாத்திரைகள் தெய்வ வழிபாடுகளில் பங்கு பெறும் பாக்கியம் உண்டாகும். பொதுவாக இந்த மாதம் மிக நன்றாக இருக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 20,21,22

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.