மே 11 ராசி பலன்

🕉️மேஷம்
மே 11, 2021

கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து சுமூகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.
பரணி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
கிருத்திகை : கலகலப்பான நாள்.


🕉️ரிஷபம்
மே 11, 2021

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். வேலை தொடர்பான முக்கிய முடிவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத செயல்களின் மூலம் அலைச்சல்கள் மேம்படும். பங்காளி வகை உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : மேன்மையான நாள்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் மேம்படும்.


🕉️மிதுனம்
மே 11, 2021

தொழில் மேன்மைக்கான உதவிகள் மற்றும் ஆதரவு கிடைக்கும். பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் லாபகரமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : ஆசைகள் நிறைவேறும்.
புனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.


🕉️கடகம்
மே 11, 2021

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகள் நிறைவடையும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். மனை தொடர்பாக எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூசம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.


🕉️சிம்மம்
மே 11, 2021

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செய்யும் பணியில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : திறமைகள் வெளிப்படும்.
பூரம் : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


🕉️கன்னி
மே 11, 2021

பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் நிதானமாக இருக்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : நிதானமாக இருக்கவும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.


🕉️துலாம்
மே 11, 2021

பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவேறும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை அடைவீர்கள். அந்நியர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : மேன்மையான நாள்.
விசாகம் : நட்பு கிடைக்கும்.


🕉️விருச்சிகம்
மே 11, 2021

நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : மனமகிழ்ச்சியான நாள்.


🕉️தனுசு
மே 11, 2021

உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல்நலம் சீராகும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.


🕉️மகரம்
மே 11, 2021

விவசாயம் தொடர்பான புதுவிதமான ஆலோசனைகளும், ஆதரவும் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். கோபம் கொண்ட பேச்சுக்களை தவிர்க்கவும். மனதில் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️கும்பம்
மே 11, 2021

தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்விற்கான சூழல் உண்டாகும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். புத்திரர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : முயற்சிகள் மேம்படும்.
சதயம் : அங்கீகாரம் கிடைக்கும்.
பூரட்டாதி : தடைகள் அகலும்.


🕉️மீனம்
மே 11, 2021

நவீன பொருட்கள் வாங்குவதற்கான எண்ணங்கள் நிறைவேறும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : பொறுமை வேண்டும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.