மே 12 ராசி பலன்

🕉️மேஷம்
மே 12, 2021

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் மேம்படும். நண்பர்களின் உதவிகளால் பொருளாதார ரீதியாக இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.
பரணி : லாபம் மேம்படும்.
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.


🕉️ரிஷபம்
மே 12, 2021

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். விரும்பிய ஆடம்பர பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றமான சிந்தனைகள் அதிகரிக்கும். பிரிந்து சென்ற நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : மனமகிழ்ச்சியான நாள்.


🕉️மிதுனம்
மே 12, 2021

திட்டமிட்ட சில காரியங்கள் காலதாமதமாக நடைபெறும். அவசரமின்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் கீழ்நிலை பணியாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.
புனர்பூசம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


🕉️கடகம்
மே 12, 2021

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் ஈடேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சனைகள் உண்டாகும். குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : லாபம் கிடைக்கும்.
பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.


🕉️சிம்மம்
மே 12, 2021

மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். எண்ணிய காரியங்களில் செயல்திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : செயல்திறன் அதிகரிக்கும்.


🕉️கன்னி
மே 12, 2021

மனதில் தோன்றும் விசித்திரமான செயல்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை அலைச்சலுக்கு பின்பு விற்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : இழுபறிகள் அகலும்.


🕉️துலாம்
மே 12, 2021

உங்களிடம் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். புதிய விஷயங்களுக்காக அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : புரிதல் ஏற்படும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


🕉️விருச்சிகம்
மே 12, 2021

வியாபாரம் தொடர்பான சில முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய அதிகாரிகளிடம் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களினால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.
கேட்டை : அன்பு அதிகரிக்கும்.


🕉️தனுசு
மே 12, 2021

நெருக்கமானவர்களுக்காக சில செலவுகளை செய்து மனம் மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


🕉️மகரம்
மே 12, 2021

எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் புதிய முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். இழுபறியான சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : மனவருத்தங்கள் குறையும்.


🕉️கும்பம்
மே 12, 2021

பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்களுக்கிடையே மரியாதைகள் அதிகரிக்கும். திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : நம்பிக்கை மேம்படும்.
சதயம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : திருப்பங்கள் நேரிடும்.


🕉️மீனம்
மே 12, 2021

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் விழிப்புணர்வு வேண்டும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி : தன்னம்பிக்கை மேம்படும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.