மே 2 ராசிபலன்

*️மேஷம்*

மே 02, 2021

பிள்ளைகளிடம் அன்பாக பழகவும். கேளிக்கைகள் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஏற்றுமதி சார்ந்த வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும்.

பரணி : பொறுமை வேண்டும்.

கிருத்திகை : கருத்துக்களை தவிர்க்கவும்.
—————————————
*️ரிஷபம்*

மே 02, 2021

தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் நேரிடும். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்படும். தாயின் உடல் நிலையில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் காலதாமதமாக கிடைக்கும். குடும்ப பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்கும்போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

கிருத்திகை : செலவுகள் நேரிடும்.

ரோகிணி : காலதாமதம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————
*️மிதுனம்*

மே 02, 2021

சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டார்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.

திருவாதிரை : நம்பிக்கை அதிகரிக்கும்.

புனர்பூசம் : மனவருத்தங்கள் குறையும்.
—————————————
*️கடகம்*

மே 02, 2021

எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஓரளவு குறையும். பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தொழில் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாக்குவன்மையால் காரியசித்தி ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் : அனுகூலமான நாள்.

பூசம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————
*️சிம்மம்*

மே 02, 2021

மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் புதிய அணுகுமுறைகளை கையாளுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். செய்தொழிலில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : எண்ணங்கள் நிறைவேறும்.

பூரம் : முயற்சிகள் மேம்படும்.

உத்திரம் : திருப்தியான நாள்.
—————————————
*️கன்னி*

மே 02, 2021

வியாபாரம் தொடர்பான பணிகளில் வேலையாட்களிடம் இருந்துவந்த அனுகூலமற்ற சூழ்நிலைகள் நீங்கி மேன்மை ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வழக்கு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வீடு மற்றும் வாகனப் பராமரிப்பு செலவுகள் நேரிடும். மாணவர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : ஆசைகள் நிறைவேறும்.

அஸ்தம் : பொறுமை வேண்டும்.

சித்திரை : அனுபவம் கிடைக்கும்.
—————————————
*️துலாம்*

மே 02, 2021

மனதில் இருந்துவந்த பதற்றங்கள் குறையும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சேமிப்புகளை அதிகரிப்பது தொடர்பான முயற்சிகள் மேம்படும். வாழ்க்கைத்துணைவரின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சிறு தொழில் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : பதற்றங்கள் குறையும்.

சுவாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
—————————————
*️விருச்சகம்*

மே 02, 2021

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.

கேட்டை : அலைச்சல்கள் ஏற்படும்.
—————————————
*️தனுசு*

மே 02, 2021

உடல் ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் உதவிகள் மூலம் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மூலம் : மேன்மையான நாள்.

பூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
—————————————
*️மகரம்*

மே 02, 2021

வெளியூர் தொடர்பான பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படவும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உங்களது பணிகளை செய்து முடிப்பதில் ஆர்வம் உண்டாகும். வாகனங்களில் விவேகம் அவசியம். பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : கவனம் வேண்டும்.

திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் : அறிமுகம் உண்டாகும்.
—————————————
*️கும்பம்*

மே 02, 2021

திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கையுடன் எந்தவொரு காரியத்திலும் செயல்படுவீர்கள். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சதயம் : ஆதரவான நாள்.

பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
—————————————
*️மீனம்*

மே 02, 2021

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : போட்டிகள் குறையும்.

உத்திரட்டாதி : சாதகமான நாள்.

ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.
—————————————

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.