மே 22 ராசி பலன்

🕉️மேஷம்
மே 22, 2021

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உறவுகள் மேம்படும். வாரிசுகளின் செயல்பாடுகளால் பெருமை கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.
பரணி : உறவுகள் மேம்படும்.
கிருத்திகை : சுபச்செலவுகள் ஏற்படும்.


🕉️ரிஷபம்
மே 22, 2021

தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து
செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : ஆர்வம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.


🕉️மிதுனம்
மே 22, 2021

எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக்கொண்டு செயல்களில் ஈடுபடுவது நன்மையளிக்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். எதிர்பாராத சில சந்திப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : துணிச்சல் அதிகரிக்கும்.
திருவாதிரை : முதலீடுகள் உண்டாகும்.
புனர்பூசம் : மாற்றமான நாள்.


🕉️கடகம்
மே 22, 2021

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். புது ஏஜென்சி தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : வசதிகள் மேம்படும்.
பூசம் : ஆதாயம் உண்டாகும்.
ஆயில்யம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


🕉️சிம்மம்
மே 22, 2021

பழைய சிந்தனைகளின் மூலம் சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : விவாதங்கள் நீங்கும்.
உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.


🕉️கன்னி
மே 22, 2021

இழுபறியான வேலைகளை விரைந்து செய்து முடிப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வாக்குவன்மையால் தொழிலில் லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : துரிதம் உண்டாகும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.
சித்திரை : லாபம் உண்டாகும்.


🕉️துலாம்
மே 22, 2021

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். சகோதரர்களின் வகையில் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.
விசாகம் : தனவரவுகள் உண்டாகும்.


🕉️விருச்சகம்
மே 22, 2021

வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுவீர்கள். செய்யும் முயற்சிகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களின் நலனில் அதிக அக்கறை
காட்டுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்

விசாகம் : வசதிகள் மேம்படும்.
அனுஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.


🕉️தனுசு
மே 22, 2021

சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : தீர்வு கிடைக்கும்.
பூராடம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திராடம் : சிந்தனைகள் தோன்றும்.


🕉️மகரம்
மே 22, 2021

வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : தடைகள் விலகும்.


🕉️கும்பம்
மே 22, 2021

முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழப்பதற்கான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். எந்த செயல்களிலும் பக்குவமாக செயல்படுவது நன்மையளிக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் காலதாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : கோபத்தை தவிர்க்கவும்.
சதயம் : காலதாமதம் ஏற்படும்.
பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.


🕉️மீனம்
மே 22, 2021

உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் பேசுவார்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : இழுபறிகள் அகலும்.
ரேவதி : புரிதல் மேம்படும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.