*️மேஷம்*
மே 07, 2021
எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். கண்பார்வை மற்றும் உஷ்ணம் தொடர்பான சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். எந்தவொரு செயலிலும் கர்வமின்றி செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : உபாதைகள் மறையும்.
பரணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
கிருத்திகை : தடைகள் அகலும்.
—————————————
*️ரிஷபம்*
மே 07, 2021
புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். குடும்ப பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செயல்படுத்துவதற்கான வல்லமை உண்டாகும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பொதுப்பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.
—————————————
*️மிதுனம்*
மே 07, 2021
நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்கால சிந்தனைகள் மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்களும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.
திருவாதிரை : லாபம் உண்டாகும்.
புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
—————————————
*️கடகம்*
மே 07, 2021
புதிய வேலை தேடுபவர்களுக்கு முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சம வயதினரின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————
*️சிம்மம்*
மே 07, 2021
எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————
*️கன்னி*
மே 07, 2021
பலவிதமான குழப்பங்கள் நீங்கி மன அமைதி உண்டாகும். நினைத்த காரியங்கள் எண்ணியபடி நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் உயரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : மன அமைதி உண்டாகும்.
அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.
சித்திரை : சேமிப்புகள் உயரும்.
—————————————
*️துலாம்*
மே 07, 2021
தாய்மாமன் உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை தரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத செலவுகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். எண்ணெய் விற்பனையாளர்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : முயற்சிகள் மேம்படும்.
சுவாதி : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
—————————————
*️விருச்சகம்*
மே 07, 2021
உரையாடலின்போது வார்த்தைகளில் கவனம் தேவை. செய்யும் பணியில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புத்திரர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். விவசாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : ஆசிகள் கிடைக்கும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : ஆதாயம் ஏற்படும்.
—————————————
*️தனுசு*
மே 07, 2021
வாக்குவன்மையால் லாபம் உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள். கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும். செய்தொழிலில் முன்னேற்றம் சம்பந்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : லாபம் உண்டாகும்.
பூராடம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
—————————————
*️மகரம்*
மே 07, 2021
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற அலைச்சல்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் தடைகள் இன்றி நிறைவேறும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
திருவோணம் : செலவுகள் ஏற்படும்.
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.
—————————————
*️கும்பம்*
மே 07, 2021
கலகலப்பான செயல்பாடுகளால் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள் அமைதியுடன் செயல்படவும். கால்களில் அவ்வப்போது வலிகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : தனவரவுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : அமைதியுடன் செயல்படவும்.
—————————————
*️மீனம்*
மே 07, 2021
பணிகளில் பொறுப்புகளும், அதிகாரமும் அதிகரிக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். எந்தவொரு செயலிலும் அவசரமும், பதற்றமும் இன்றி நிதானமாக செயல்படவும். சகோதரர்களின் மூலம் ஆதரவான பலன்கள் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்கள் சிலரால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : நிதானமாக செயல்படவும்.
ரேவதி : நன்மை உண்டாகும்.