ராகு கேது பெயர்ச்சி தொடர் – 2

நமஸ்காரம்

சென்ற பதிவில் ராகு கேது என்றால் என்ன. அவர்கள் ஏன் நிழல் கிரஹங்கள் என எழுதியிருந்தேன். மேலும் அதன் சுழற்சி, பெயர்ச்சி கால அளவு குறித்தும் எழுதியிருந்தேன் . அவை எல்லாம் astronomy and celestial artithmetic

இவை ஒரு ஜோதிடருக்குத் தெரிந்திருப்பது மிகுந்த அனுகூலம்

அத்துடன் ஜோதிட ரீதியாக கடக ராசி அன்பர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பொது பலன்கள் கொஞ்சம் எழுதியிருந்தேன்

இன்று இன்னமும் கொஞ்சம் astronomy and celestial artithmetic அதுவும் ராகு கேது நிழல் கிரங்களைக் கொண்டே கவனிப்போம்.

அது மட்டுமில்லை இறுதியில் ஒரு ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி பொது பலன்களும் கவனிக்கலாம்

மீண்டும் நினைவுக்கு கொண்டு வர ( memory recall ) , பூமி சூரியனை சுற்றும் பாதையும் சந்திரன் பூமியைச் சுற்றும் பாதையும் வெட்டுமிடங்கள் தான் ராகு கேது எனும் கிரஹங்கள் எனும் அடிப்படையினை நினைவுக்கு கொண்டு வாருங்கள்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

இப்போது astronomy and celestial artithmetic

சந்திரனின் சுழற்சியைக் கொண்டு மூன்று விதங்களில் மாதங்கள் கணக்கிடலாம். அதாவது திதியைக் கொண்டு.

திதி என்பது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இருக்கும் தூரத்தை குறிக்கும். அதாவது அமாவாசையின் போது சந்திரனும் சூரியனும் 0 டிகிரி இடைவெளியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் நிலவும் சூரியனும் ஒருவருக்கு ஒருவர் 12 டிகிரி விலக திதிகள் வளர்பிறையில் பிரதமை ,துவிதியை, த்ரிதியை , சதுர்த்தி, பஞ்சமி , ஷஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி ,ஏகாதசி, துவாதசி, திரயோதசி சதுர்த்தசி என பதினான்கு நாட்கள் முடிந்து பதினைந்தாம் நாள் பௌர்ணமி பதினைந்தாம் நாள் 180 டிகிரி வித்தியாசத்தில் சூரியனும் சந்திரனும் இருக்கும் அதாவது நாள் ஒன்றுக்கு 12 டிகிரி வீதம், 15 நாட்களுக்கு 180 டிகிரி.,

அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இருக்க பௌர்ணமி அன்று சூரியனின் முழு பார்வையும் சந்திரனின் மீது இருக்கும் படி சூரியனிலிருந்து சந்திரன் ஏழாவது ராசியில் இருக்கும்

பௌர்ணமியில் இருந்து அமாவாசை எனும் தேய்பிறை காலத்திலும் அதே பதினான்கு திதிகளின் பெயர் கொண்டே அழைக்கின்றோம்

இது 15 + 15 நாட்கள் என பொதுவாகச் சொன்னாலும் சரியான கணக்கு 29.53059 நாட்கள் அதாவது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிஷங்கள், 2.8 விநாடிகள். இதற்கு வானியல் சாஸ்த்திரத்தில் synodic month என்று பெயர்

சந்திரனைக் கொண்டு இன்னுமொரு மாத முறை அதாவது சந்திரனின் சுற்றுப் பாதை, பூமி சூரியனை சுற்றும் பாதையினை வெட்டுகிறது என கவனித்தோமே . அப்படி வெட்டுமிடத்தை குறித்துக் கொண்டு ஒரு வெட்டு வெட்டுவதற்கும் இன்னொரு வெட்டு வெட்டுவதற்குமான கால அளவு இது 27.21222 நாட்கள் இதற்கு வானியல் சாஸ்திரத்தில் draconic month, என்று பெயர்.

இன்னுமொரு முறை சந்திரனின் சுழற்சியைக் கொண்டு சந்திரன் பூமியைச் சுற்றுவது நீள்வட்டப் பாதை தானே அதனால் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் மாறும் அல்லவா. இதில் அதிகபட்ட தூரம் குறைந்தபட்ச தூர்ம் என்பதைக் கொண்டு சராசரி தூரத்தினைக் கண்டுபிடித்து அந்த சராசரி தூரத்தில் நிலவு ஒரு முறை வருவதற்கும் அதே இடத்துக்கு இன்னொரு முறை வருவதற்கும் உள்ள காலம் இது 27.55455 நாட்கள். இதற்கு வானியல் அறிவியலில் anomalistic month என்று பெயர்

இந்த மூன்று மாதக் கணக்கீடுகளை நினைவில் வைத்திருங்கள் இதைக் கொண்டு தான் சென்ற பதிவில் ராகு கேது பெயர்ச்சி ஒரே ராசியில் நிகழ் எப்படி 18 ஆண்டுகள் ஆகின்றன என சொன்னதைக் கணக்கிட இந்தக் மாத அளவுகள் உதவும்..

அது சிக்கல் இல்லாத கணக்கு தான் அடுத்த பதிவில் பார்ப்போம்

இப்போது ராகு கேது பெயர்ச்சி மிதுன ராசிக்கு பொது பலன்கள் பார்க்கலாம்

ராகு ஜன்ம ராசியிலிருந்து விலகுகிறார் ..

கேது ராசிக்கு ஆறாம் வீட்டுக்குப் போகின்றார்

1. மூச்சு முட்டும் அளவுக்கு இருந்த பிரச்சனைகள் மெல்ல மெல்ல விலகும். நிம்மதி நன்கு தெரியும்

2. வெளிநாட்டுப் பயணங்கள் அமையும்

3. எதிர்பாராத பொறுப்புகள் கைகூடும்

4. அரசாங்கத்தில் பெரிய மனிதர்களின் தொடர்பும் பாராட்டும் கிடைக்கும்

5. தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் கொஞ்சம் வந்து போகும்

6. மூடி மறைத்துப் பேசாமல் வெளிப்படைத் தன்மை கடைபிடித்தால் நல்லது. வெளிப்படைத் தன்மைக்கு ஆபத்து வரும் ஆகவெ உஷாராகவும் இருக்க வேண்டும்

7. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜீரண உறுப்புகள் தொடர்பான நோய்கள் தாக்கும்

8. கடன் கொடுக்கல் வாங்கலில் உஷாராக இருக்கவும்

மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சி மிதுனத்திற்கு கொஞ்சம் நிவாரணமும் கொஞ்சம் சோதனையும், கொஞ்சம் மனோ திடம் வழங்குவதாகவும் இருக்கும்

#ராகு_கேது_பெயர்சி
#மிதுனம்
#ஜோதிடம்

முருகனருள் முன்னிற்கும்

சந்திரமௌளீஸ்வரன்.வி

தொடர்பு எண் : 98406-56627 whatsapp also

Email : vcmowleeswaran@gmail.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.