ராகு கேது பெயர்ச்சி தொடர் – 1

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் எழுதுகிறேன் என்று சொன்னவுடன் பலருக்கு ஆர்வமும், அழுத்தமும் அதிகரித்திருக்கிறது

நம் ராசிக்கு என்ன பலன் , இத்தனை நாள் கஷ்டம் தீருமா என்று நிறைய ஆர்வம், டென்ஷன். சிலர் whatsapp லும், inbox லும் மெயில் மூலமாகவும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிருக்கின்றனர்

அனைத்து கேள்விகளுக்கும் பதில் உண்டு. முதலில் ராகு கேது என்றால் என்ன என புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

நான் ரொம்ப நேரம் வானியல் கணிதம் பேசப் போவதில்லை.

அதே சமயம் அதைச் சொல்லாமல் விடப் போவதும் இல்லை .

அது போலவே பொது பெயர்ச்சி பலன்களும் சொல்லப் போகின்றேன்

இது தான் formula ஒவ்வொரு பதிவிலும் கொஞ்சம் ராகு கேது தொடர்பான வானியல் கணிதம் & ஏதாவது ஒரு ராசி அன்பர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பொது பலன்கள்

வானியல் கணிதம் (Astronomy ) மற்றும் ஜோதிடத்தின் தொடர்பை புரிந்து கொள்ள கீழ்க் கண்ட point களை அவசியம் படிக்கவும்

1. நமது பூமி உட்பட செவ்வாய், புதன் , வியாழன் ( குரு), வெள்ளி ( சுக்கிரன்) சனி ஆகிய கிரஹங்கள் சூரியனைச் சுற்றுகின்றன

2. நமது பூமியைச் சுற்றும் சந்திரனும் அப்படிச் சுற்றும் காரணத்தால் சூரியனையும் மறைமுகமாக சுற்றுகிறது

3. இந்த கிரஹ இயக்கங்கள் ( சுழற்சி) சுற்றுப் பாதைக்கு வெகு வெளியே இருக்கும் நட்சத்திர மண்டலங்கள் எனும் imovable ராசிகளின் வழியே பயணிப்பதாக பூமியில் இருந்து பார்த்தால் தெரிகிறது

4 ஜோதிடம் என்பது இப்படி சுற்றும் கிரஹங்களில் பூமியிலிருக்கும் ஒருவர் ( ஜாதகர்) தனது ஜனன காலத்தில் ( date and time of birth) பிறந்த ஊரிலிருந்து (place of birth ) கவனித்தால் அந்த நேரத்தில் கீழ்வானத்தில் எந்த ராசி மண்டலம் உதயமாகின்றது என்பது லக்னம் . அந்த நேரத்தில் அந்த இடத்திலிருந்து கவனித்தால் வான் மண்டலத்தில் எந்த கிரஹம் எந்த ராசியில் இருப்பது போல தோற்றமளிக்கிறது என்பது தான் ஜாதகத்தில் குறிக்கப்படும் கிரஹ இருப்பிடங்கள்

5. பூமியிலிருந்து கவனிப்பதால் அப்படியான கிரஹங்களில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஏழு கிரஹங்கள்

அதாவது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்(குரு), வெள்ளி ( சுக்கிரன்) சனி இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு மேலே ராகு கேது எனும் நிழல் கிரஹங்களைத் தெரிந்து கொள்வோம்

பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றும் நீள்வட்டப் பாதையும் இரண்டு இடங்களில் ஒன்றை ஒன்று வெட்டுமல்லவா அப்படி வெட்டும் இடங்கள் ( Nodes ) தான் ராகுவும் கேதுவும்.

ராகு கேது பெயர்ச்சி

மீண்டும் அதே படம் இணைப்பு

நமது ஜோதிட மரபில் இவை சந்திரனை சூரியனை விழுங்கும் நாகங்கள் எனும் ஐதீகம் கொண்டு ராகுவை நாகத்தின் தலையெனவும் கேதுவை நாகத்தின் வால் எனவும் ஐதீகப்படுத்திக் கொண்டனர் முன்னோர் இப்படி விழுங்குவது கிரஹணமாகிறது
( Eclispse )

ஏனைய பெயர்ச்சிகளை விடவும் ராகு கேது பெயர்ச்சி ஏன் முக்கியம் ஏனைய கிரஹங்களின் இயக்கம் நாம் கோச்சாரத்தில் ( பெயர்ச்சியில் ) கவனிக்கும் போது பூமியிலிருந்து கவனிக்கும் போது செய்யப்படும் observation என்றாலும் ராகு கேது பெயர்ச்சியோடு பூமியின் இயக்கம் தொடர்பு கொண்டிருப்பது போல் அவை அத்தனை நெருக்கம் இல்லை

இப்போது கணக்குக்கு வருவோம் . சந்திரனின் சுழற்சி இயக்கத்தைக் கொண்டு. நாளொன்றுக்கு ஒரு நட்சத்திரம் வீதம் கணக்கிட 27 நாளில் ஒரு சுழற்சி என்பதை வானியல் கணிதம் synodic month என்று சொல்லுகிறது

இப்படி சந்திரன் பூமியைச் சுற்றும் போது , பூமியும் சூரியனைச் சுற்றுகின்றதா. அதனால் சந்திரனும் நகர்ந்து கொண்டே பூமியைச் சுற்ற வேண்டுமல்லவா இப்படி நகர்ந்து கொண்டே சுற்றுவதால் அந்த ”வெட்டுமிடங்களும்” நகரும் தானே. இது தான் ராகு கேது பெயர்ச்சி.


அதாவது 223 synodic months கொண்டது ஒரு முழு சுழற்சி அதாவது அந்த வெட்டுமிடங்கள் ( ராகு & கேது) ஒரு முழு சுற்று சுற்றி வருவது போல பூமியில் இருந்து கவனித்தால் தெரிவதற்கு 223 synodic months ஆகும்

இது உத்தேசமாக 18 வருஷங்கள் 11 நாட்கள். அதாவது அந்த வெட்டுமிடங்கள் ( ராகு & கேது) ராசி மண்டலங்களின் வழியே நகர்ந்து ( பெயர்ந்து ) ஒரு முழு சுற்று 12 ராசிகளின் வழியே வருவதற்கு 18 வருடங்கள் 11 நாட்கள்

இந்த சுழற்சி காலத்தை 12 ராசிகளுக்கு பிரித்தால் ஒரு ராசிக்கு 18 மாதங்கள் அதாவது ஒன்றரை வருஷங்கள் ஒரு ராசியில் வேகமாகக் கணக்குப் போட சிரமம் என்று சொல்பவர்களுக்கு 18 வருஷம் என்பது வருஷத்துக்கு 365 நாள் எனக் கொண்டு 6570 நாட்கள்.

அதோட 11 நாள் சேர்த்தால் 6581 நாட்கள் இதை 12 ல் ( ராசிகள் பன்னிரெண்டு) வகுத்தால் ஒரு ராசிக்கு 549 நாள் வருகிறது. 549 நாள் என்பதை மாதம் 30 நாள் எனும் கணக்கில் வகுத்தால் 18 மாதம் வருகிறது அதாவது ஒன்றரை வருஷம்

அதெப்படி 223 synodic months எனும் அடுத்த step வானியல் கணக்கை ( celestial arithmetic ) அடுத்த பதிவில் எளிமையாகப் புரிய வைக்கின்றேன்

இப்போது ராகு கேது பெயர்ச்சி பலன்

கடக ராசியில் தொடங்குகிறேன்

விரையஸ்தானமான மிதுனத்தில் இருந்து ராகு லாபஸ்தானமான ரிஷபத்துக்குப் பெயர்ச்சி

ருணரோக சத்ரு ஸ்தானமான தனுசு ராசியில் இருந்து கேது பூர்வ புண்ணிய ஸ்தானமான விருச்சிகத்துக்குப் பெயர்ச்சி


1. சுப காரியங்களில் இருந்த சுணக்கம் / தடை நீங்கி இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்

2. லாபம் பெருகும். புதிய வருமானங்கள் கிடைக்கும். இருந்த கடன் அடைந்து நிம்மதி கிடைக்கும்

3. வீடு வாகனம் அமையும்

4. பிரிந்தவர்கள் சேர்வார்கள். இல்லத்தில் மூத்த சகோதர சகோதரிகளுடன் இருந்த உறவு சுணக்கம் நீங்கும். வழக்கு வரை சென்ற மனஸ்தாபம் கொண்டவர்கள் புரிந்து கொண்டு திரும்ப வருவார்கள்

5. மரியாதை உயரும்

6. பொழு போக்கு உல்லாசம் அதிகரிக்கும்

7. நிறைய பயணங்களுக்கான வாய்ப்பு அமையும்

கவனமாக இருக்க வேண்டிய அம்சங்கள்

1. பிள்ளைகள் விஷயத்தில் சரியான ஆலோசனையுடன் செயல்படவும்

2. பங்குச் சந்தை போன்ற speculation market ல் மிகுந்த கவனம் தேவை. சிறிய அளவிலான அலட்சியமும், பெரும் நஷ்டத்தைக் கொண்டு வரும்

பொதுவில் பெரும் நன்மைகள் கொண்ட பெயர்ச்சி, மகிழ்ச்சி அதிகரிக்கும் பெயர்ச்சி, லாபம் பெருகும் பெயர்ச்சி, நிதி நிலைமை சீராகி தனவந்தராகும் பெயர்ச்சி

#ராகு_கேது_பெயர்ச்சி
#கடகம்
#ஜோதிடம்

முருகனருள் முன்னிற்கும்

சந்திரமௌளீஸ்வரன்.வி
தொடர்பு எண் : 98406-56627 whatsapp also
Email : vcmowleeswaran@gmail.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.