நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல செயலிகள் பாதுகாப்பானதா எனத் தெரியாமல் நாம் உபயோகித்து வருகிறோம். ஆனால் மிக பிரபலமான செயலிகளும் அவற்றில் அடக்கம் எனும் பொழுது கொஞ்சம் அதிர்ச்சிதான். இந்தியர்கள் உபயோகப்படுத்தும் செயலிகளில் டாப் 5 செயலிகளில் ஒன்று வாட்ஸப்(Whatsapp). இதில் தகவல்கள் என்க்ரிப்ட் செய்து பகிரப்படுவதால் இது பாதுகாப்பானது என பலரும் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் இதில் உள்ள ஒரு சிறு பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வாட்ஸப் க்ரூப்
வாட்ஸப் குழுக்களில் இணைய ஒன்று நம்மை யாரவது அந்த குழுவில் நேரடியாக இணைக்க வேண்டும் அல்லது அவர்கள் கொடுக்கும் க்ரூப் இன்வைட் லிங்க் மூலம் நாமே இணையலாம். இரண்டாவது வழியான க்ரூப் இன்வைட்தான் இப்பொழுது பிரச்சனைக்கு காரணம். ஒரு வாட்ஸப் க்ரூப் தனிப்பட்ட பிரைவேட் குரூப்பாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை ஆனால் அந்த க்ரூப்பின் இன்வைட் லிங்க் பொது வெளியில் வெளியிடப்படும் பொழுதே பிரச்சனை ஆகிறது.
கூகிள் சர்ச் பல்வேறு வகையான வெப்சைட்களை இன்டெக்ஸ் செய்யும். ஒரு வெப்சைட் தேடுபொறியில் இன்டெக்ஸ் ஆகியிருந்தால் மட்டுமே நீங்கள் தேடும்பொழுது அது காட்டப்படும். இப்பொழுது வாட்ஸப் க்ரூப் பிரச்சனைக்கும் இந்த இன்டெக்ஸ் செய்தலே காரணம். பொதுவில் பகிரப்படும் க்ரூப் இன்வைட்களும் இப்படி கூகிள் தேடுபொறியில் இன்டெக்ஸ் ஆகிவிட்டன. எனவே பல க்ரூப் இன்வைட் லிங்க் இப்பொழுது பொதுவெளியில்.
இதை உறுதி செய்ய நானும் சில பல முறை தேடி பார்த்தேன். பல வாட்ஸப் க்ரூப் இன்வைட்கள் கொட்டிக்கிடக்கின்றன. உங்கள் வாட்ஸப் க்ரூப் அட்மினிடம் பொதுவில் ( in FB / Twitter etc) க்ரூப் இன்வைட் லிங்க் போடவேண்டாம் என சொல்லுங்கள். அறிமுமில்லாத நபர்கள் உங்கள் க்ரூப்பில் இணையும் பொழுது உங்கள் நம்பர் அவர்களுக்கு கிட்ட வாய்ப்புள்ளது.
பாதுகாப்பான செயலி என்று எதுவும் இல்லையோ ??
News Source : https://www.news18.com/news/tech/whatsapp-group-invitation-links-indexed-by-google-may-leave-no-room-for-privacy-2510911.html