விருச்சிக ராசி

விருச்சிகம் ராசி(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய): – 85/100

எத்தனை துன்பங்களை அனுபவித்து விட்டீர்கள் அப்பாடா ஈசனே கோடி நமஸ்காரம் என்று சொல்லி விட்டு மேலே படியுங்கள். சனிபகவான் ஏழரை ஆண்டுகாலம் உங்களை ஆண்டுவிட்டு 3ம் ராசிக்கு செல்கிறார் தைரியஸ்தானம் அது, இனி ஒரு புது தைரியம் உண்டாகிவிடும், 2ல் இருக்கும் குருபகவான் முழுமையாக நன்மை செய்யும் நேரம் இது, வாழ்க்கையில் லக்ஷியங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேற ஆரம்பிக்கும், ஏக்கங்கள் தீரும், சனிபகவான் உங்கள் பூர்வபுண்ய ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும், சுபம் மோக்ஷம் விரயம் இவற்றை குறிக்கும் 12ம் வீட்டையும் பார்க்கிறார். துணிச்சல் அதிகமாகும், எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை தரப்போகிறார் சனிபகவான். புதிய வீடு வாகனம் சொத்துக்கள் வாங்குவீர்கள் இருக்கின்றா கடன் தொல்லை எல்லாம் தீரும், புத்திரர்களால் மகிழ்ச்சி உண்டாகும், செப்டம்பர் 2020ல் ராகு கேது ஜென்மத்திலும் 7லும் வருவதால் இன்னும் நல்ல பலன்கள் குவியும், சமூக அந்தஸ்து பிரிந்தவர் கூடுதல், வழக்குகளில் வெற்றி என்று நன்றாகவே இருக்கும். சொத்து மற்றும் பிற காரணங்களுக்காக பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேருவர். குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.

உடல்நலம் / ஆரோக்கியம்:

மனஉளைச்சல், நாள்பட்ட வியாதி என்று அவஸ்தைகளிலிருந்து விடுதலை. இனி மனதில் உற்சாகம், வியாதிகள் பூரண குணம், ஆரோக்கியம் மேம்படும். கணவன்/மனைவி ஆரோக்கியம் மற்றும் பெற்றோர்கள், குழந்தைகள் என்று குடும்ப அங்கத்தினர்களின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும்.மனச்சோர்வு முற்றிலும் நீங்கிவிடும்.

குடும்பம் மற்றும் உறவுகள்:

கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிணக்கு நீங்கி அந்யோந்யம் வளரும், பெற்றோர்கள், பிள்ளைகள் சகோதரவகை என்று அனைத்து உறவுகளிடமும் நெருக்கம் அதிகரிக்கும், வேலை அல்லது வேறு காரணங்களுக்காக பிரிந்த உறவுகள் ஒன்று சேரும், புதிய உறவுகள் வந்து சேரும். வழக்குகள் இருந்தால் அதை திரும்ப பெற்று உறவுகளை புதிப்பித்து கொள்வீர்கள், பிள்ளையால் மகிழ்ச்சி உண்டாகும். வாக்கு இனிமையாகும்.

வேலை/உத்தியோகம்:

ப்ரமோஷனுக்காக காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும், வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும், வெளிநாட்டு உத்தியோகம் கைகூடும், பொதுவாக இந்த 3 ஆண்டுகளும் மற்ற கிரஹ நிலைகளும் சாதகமாய் இருப்பதால் வேலையில் உற்சாகம் கூடி வருமானத்தை பெருக்கி கொள்வீர்கள். அலுவலகத்தில் வைத்திருந்த நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேறும் காலம், உங்கள் செல்வாக்கு உயரும், சிலருக்கு திடீர் அதிகாரமும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு நன்கு கிடைக்கும்

தொழிலதிபர்கள்:

ரியல் எஸ்டேட் , தரகு, பங்குவர்த்தகம், மோட்டர் உதிரிபாகங்கள் வாகனம், சுற்றுலா போன்ற துறையில் இருப்போருக்கு நல்ல வருவாய் வந்து சேரும் அனைத்து தொழில் முனைவோருக்கும் ஏற்றகாலம் இது உங்கள் தொழிலை விஸ்தீகரிக்க வங்கி கடன் கிடைக்கும், வாடிக்கையாளர் பெருகி வருமானம் இரட்டிப்பாகும், இதுவரை இல்லாத வகையில் பெயர் புகழ் பரவும் எதிரிகள் சுத்தமாக மறைந்துவிடுவர் எதிரிகள் இருந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருக்கும். போட்டிகள் இருந்தாலும் நீங்கள் ஜெயித்துவிடுவீர்கள். புதிய தொழில் தொடங்க நினைக்கும் விருச்சிகராசிக்காரகளுக்கு இது ஏற்ற காலம்.

மாணவர்கள்:

படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறி, மனதில் உற்சாகம் பிறக்கும். வெளிநாட்டு படிப்பு கை கூடும், மேல்படிப்பு, அதிகார வர்க்கத்தினருக்குண்டான படிப்பு படிப்பவர்கள் நல்ல நிலையில் முன்னேற்றம் அடைவர். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். பெற்றோர்,ஆசிரியர் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். புதிய பாடங்களை தேர்ந்தெடுத்து படிப்பதில் நாட்டம் செல்லும்.

கலைஞர்கள் / அரசியல்வாதிகள்/விவசாயிகள்:

கலைஞர்கள் புதியவாய்ப்புகளை பெற்று மகிழ்வர்.வருமானம் பெருகும். ரசிகர்களை தக்க வைத்து கொள்வார்கள் . அரசாங்க பாராட்டுகள்கிடைக்கும்.விருதுகள் கிடைக்கும். சேமிக்கும் எண்ணம் வரும், விருந்து கேளிக்கைகள் அதிகம்இருக்கும். அரசியல்வாதிகள் புதிய பதவியை பெறுவர். செல்வாக்கு உயரும். கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் இருக்கும். தொண்டர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வார்கள்.பணப்புழக்கம் தாராளம். சிலருக்கு தலைமை பதவி தேடி வரும். விவசாயிகள் விளைச்சல் பெருகி வருமானம் இரட்டிப்பாகும். கால்நடையாலும் வருமானம் வரும். வீட்டில் சுபநிகழ்வுகளால் மனம் மகிழும். வழக்குகள் சாதகமாகி சந்தோஷத்தை தரும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகி புதிய நிலம்/வீடு வாங்குவீர்கள்.இந்த சனிப்பெயர்ச்சிஅதிக சந்தோஷத்தை தரும்.

பெண்கள்:

மகிழ்ச்சியான சனிப்பெயர்ச்சி உங்களுக்கு. மேற்சொன்ன பலன்களுடன் ஆரோக்கியம் கூடும்.புதிய முயற்சிகள் வெற்றியை தரும், எங்கும் எதிலும் சந்தோஷம் என்ற நிலை இருக்கும். நினைத்ததை சாதித்து கொள்ள சந்தர்ப்பங்கள் உருவாகும். எல்லோருடனும் நல்ல உறவு, நல்ல பெயரும் இருக்கும். பக்தி அதிகரிக்கும். புனித யாத்திரைகள்,விருந்து கேளிக்கைகள் என்று சென்று வருவீர்கள். உழைக்கும் மகளிர் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கும்.நல்ல நிலை உண்டாகும்.அனைத்து துன்பங்களும் விலகும்.

ப்ரார்த்தனைகளும் வணங்க வேண்டிய தெய்வமும்:

நல்லகாலம் தொடங்கிவிட்டதால் உங்கள் இஷ்ட தெய்வத்தையும், முருகப் பெருமானையும் வணங்குங்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று தினம் விளக்கேற்றுங்கள், முடிந்தால் அறுபடை வீடுகளுக்கு செல்லுங்கள், நிறைய தான தர்மங்களை செய்யுங்கள்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.