விஹாரி வருட மாசி மாத பலன்கள்

விஹாரி வருட மாசி மாத பலன்கள் கீழே தரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுப் பலன்களே.

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

கும்ப மாத (மாசி மாத)  ராசி பலன்கள் (13.02.2020 முதல் 13.03.2020 வரை)

கிரஹ நிலைகள் 13.02.2020 அன்று. சூரியன் கும்ப ராசிக்கு 13.02.2020 பகல் 2.35 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார்

மேஷ ராசி :

ராசி நாதன் 9ல் கேது, குருவுடன், சூரியன்,புதன் லாபத்தில் மாத ஆரம்பம் மிக நன்றாக இருக்கும். பொருளாதாரம் மேம்படும், சுக்ரன் விரயத்தில் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்பு வீண் விரயம் இவை உண்டாகும், கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் ஏற்படலாம் விட்டுக்கொடுத்து போவது நல்லது, புதன் வக்ர சஞ்சார காலங்களில் உத்தியோகத்தில் அல்லது தொழிலில் சிறு பின்னடைவு அல்லது வேலை பளு இருந்து கொண்டிருக்கும். இருந்தாலும் 10ல் இருக்கும் சனி பகவான் உழைக்கும் வர்க்கத்துக்கு உறுதுணையாய் இருப்பார் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், சொந்த தொழில் கைகொடுக்கும், மாணவர்கள் நன்றாக படிப்பார், சிலருக்கு இடமாற்றம் இருக்கும், பொதுவாக இந்த மாதம் அனைத்து பிரிவினருக்கும் நன்மை தீமை கலந்து இருக்கும்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 16,17,18. உக்ரமில்லா அம்மன் சாந்தஸ்வரூபியான கற்பகாம்பாள் , ராஜேஸ்வரி தெய்வத்தை கெட்டியாக பிடித்துகொண்டால் இந்த மாதம் சங்கடங்கள் குறைந்து இன்பம் பெருகும்.

ரிஷப ராசி :

ராசிநாதன் 11ல் உச்சமாய், பத்தில் சூரியன் புதன், மேலும், சனிபகவான் 9ல் ஆட்சி, இதுவரை இருந்துவந்த துன்பங்கள் பறந்து போய் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும், தடை பட்ட திருமணம் கைகூடும். பொருளாதாரம் நன்றாக இருக்கும், கேது குரு இணைவால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், சூரியன் புதன், சனி சுக்ரன் அவற்றை சமாளித்து முன்னேறச்செய்துவிடுவர். உத்தியோகம் தொழில் நன்றாக இருக்கும், தடைபட்டுவந்த பதவி உயர்வு விரும்பிய இடமாற்றம் இந்த மாதம் கைகூடும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அனைத்து பிரிவினருக்கும் நல்லமாதம்.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 18,19,20

மஹாலக்ஷ்மியை வணங்குங்கள் அஷ்டோத்ரம் ஸ்துதி போன்றவற்றை சொல்லுங்கள் நல்ல பலன் மேலும் அதிகமாகும்.

மிதுன ராசி :

ராசி நாதன் புதனுடன், சூரியன், செவ்வாய் குரு சனி மிகுந்த நல்ல பலன்களை மாதம் முழுவதும் தருகின்றனர். வக்ர புதனால் ஞாபக மறதி ஏற்பட்டு கொஞ்சம் சிரமம் உண்டாகும். கேது தீமையை செய்கிறார் உத்தியோகத்தில் தேவையில்லாத தொல்லை வரலாம்.  இருந்தாலும் குரு பார்வையில் மிகுந்த நற்பலன்கள் உண்டாகிறது, சுக்ரன் ஆடை ஆபரண சேர்க்கை ஆன்மீகத்தில் ஈடுபாடு என்று செய்கிறான். வழக்கு வியாஜிதங்கள் இருப்போர் அதிலிருந்து விடுதலை பெறுவர். வீட்டில் அமைதி இருக்கும், உழைக்கும் வர்க்கத்தினருக்கு நல்ல பலன் மாத ஆரம்பத்திலேயே கிடைக்கும், அனைத்து பிரிவினருக்கும் பொருளாதார தடை நீங்கும், எடுத்த முயற்சிகள் பலனை தரும். மொத்தத்தில் நண்மை தரும் மாதம்

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 21,22,23

ஓம் நமசிவாய என்று சொல்லுங்கள், ப்ரதோஷத்தில் சிவன் வழிபாடும் ந்ருஸிம்ஹன் வழிபாடும் நன்மையை தரும். நரசிம்மர் யோகமாய் அமர்ந்திருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள் ஞாயிற்று கிழமை மற்றும் செவ்வாய் கிழமை & ப்ரதோஷ நாளில்

கடக ராசி :

ராசி நாதனும் பாதிநாள் அனுகூலம் பாதிநாள் அனுகூலமற்ற நிலை என்று மாறி மாறி செய்ய 9ல் இருக்கும் சுக்ரன் மாத ஆரம்பத்தில் நன்மை செய்கிறார் ஆடை ஆபரண சேர்க்கை, பண வரவு தொழிலில் ஒரு முன்னேற்றம் என்று இருந்தாலும் பெரும்பாலான கிரஹங்கள் சாதகமில்லை அதனால் மாதம் முழுவதும், பெண்களால் அதிருப்தியும் இருக்கும் ஆதாயமும் இருக்கும். விபத்துகள் நடக்கலாம் கவணம் தேவை, பிரயாணத்தின் மூலம் அலைச்சல் , சிறு விபத்து போன்றவை நடக்கலாம்,மனைவி வழி உறவுகளால் சங்கடம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்ற தடை இருக்கும்.

மொத்தத்தில் சுமார்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 23,24,25

துர்க்கை கோவிலுக்கு செல்லுங்கள், காளிகாம்பா கோவிலுக்கு செல்லுங்கள், நீயே கதி என்று பற்றி கொள்ளுங்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

சிம்ம ராசி :

ராசி நாதனும் அருளில்லை, மற்ற கிரஹங்களும் சுமார், முற்பகுதியில் சுக்ரன், புதன் மட்டுமே அனுகூலம். பொருளாதாரம் பரவாயில்லை, முன் யோசனை செயல்படும். செவ்வாய், கேது இணைவு, பொருள் இழப்பு, நண்பர்களால் சதி அதிக பாதிப்பு, வியாதிகளால் தொல்லை, மன கிலேசம், சுயகௌரவம் பாதிப்பதுபோல சம்பவம் இருக்கும். இருந்தாலும் சந்திரன் சில நாட்கள் நன்மையும் சின்ன சின்ன சந்தோஷத்தையும் தருவார் மாத பிற்பகுதியில் சுக்ரன் கெடுதலை உண்டு பண்ணுவார். அனைத்து பிரிவினருக்கும்  மிக சுமாரான மாதம் உஷாராக இருக்க வேண்டும் இல்லையெனில் வழக்கு வியாதி என்று கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 26,27,28

காவல் தெய்வங்கள் அய்யனார் சாஸ்தா போன்றவற்றையோ கருப்பு போன்ற தெய்வங்களையோ மனதில் ஜபித்து கொண்டிருங்கள், முடிந்தால் அந்த கோவில்களில் விளக்கேற்றுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

கன்யா ராசி :

இந்த மாதம் நல்லா இருக்கு உங்களுக்கு சூரியன் சுக்ரன் புதன் சனி நற்பலன்களை தருகிறார்கள் சுப நிகழ்வுகளால் மனம் மகிழும் , சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வு அல்லது ஊதியத்தில் உயர்வு உண்டாகும். தொழில் துறையில் இருப்போர் சினிமா ஊடகம் போன்றவற்றில் பணிபுரிவோருக்கு இரட்டிப்பு சந்தோஷம் உண்டாகும். கலை கேளிக்கைகள் என்று மாதம் முழுவதும் சிலருக்கு கொண்டாட்டம் இருக்கும். சனியால் அதிக அனுகூலம் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், முயற்சிகள் வெற்றியை தரும், பணப்புழக்கம் தாராளம் நல்ல மாதம் இது.

சந்திராஷ்டமம் :  பிப்ரவரி 28,29 , மார்ச் 1

அதே திருவேங்கடமுடையானை தியானித்து பெருமாள் கோவில் செல்லுங்கள். கோவிலில் ப்ரசாதம் வாங்கி உண்ணுங்கள். நன்றாக இருப்பதால் அன்னதானம் செய்யுங்கள்.

துலா ராசி :

இந்த மாதம் குருவின் பார்வை, 5ல் இருக்கும் சூரியன், புதன் மற்றும் அவ்வப்போது சந்திரன் நல்ல பலன்களை தருகிறார்கள், பொருளாதாரம் மேம்படும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் தடைபட்ட திருமணம் கைகூடும், உத்தியோகத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்களால் நன்மை உண்டாகு. வழக்கில் வெற்றி பந்துக்களால் பாராட்டும் உண்டாகும். கௌரவம் உயரும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும், பந்தங்கள் ஒன்று சேரும், நாள்பட்ட வியாதிகள் குணமாகும், பொதுவில் இந்த மாதம் நன்மைகள் அதிகம் இருக்கும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 1,2,3

விநாயகர் அகவல், லக்ஷ்மி அஷ்டோத்ரம் போன்றவற்றை சொல்லுங்கள், தாயார் /அம்பாள் சன்னதிமுன் அமர்ந்து அவள் பெயரை ஜபம் செய்யுங்கள் வருகின்ற கொஞ்ச கஷ்டங்களும் விலகிடும்.

விருச்சிக ராசி :

சனி பகவானும், 2ல் இருக்கும் ராசிநாதன் மற்றும் குரு, சுக்ரனால் இந்த மாதம் அதிக அனுகூலம், எழுத்து துறையில் இருப்பவருக்கு ஆற்றல் வாக்கு வண்மை கூடும். பணப்பெருக்கு உண்டாகும்.  குடும்பத்தில் குதூகலம் இருக்கும், இதுவரை தடைபட்டு வந்த முயற்சிகள் வெற்றியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை தரும், வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும் தொழில் உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபங்கள் இருக்கும், புதுவீடு குடிபோகும் பாக்கியம் சிலருக்கு இருக்கும். கேதுவால் கொஞ்சம் தொல்லை இருக்கும், வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவேண்டும், பொறுமை நன்மைதரும், 8ல் இருக்கும் ராகுவும் சிரமத்தை தரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை  மொத்தத்தில் நன்மைகள் அதிகமாயும் கஷ்டங்கள் குறைவாகவும் இருக்கும் மாதம்.

சந்திராஷ்டமம் : மார்ச் 4,5,6

வைத்ய நாத ஸ்வாமியை வணங்க வேண்டும். ராம ஆஞ்சநேயரையும் வணங்க வேண்டும். வில்வ இலையால் வைத்ய நாதனுக்கு அர்ச்சனை செய்யுங்கள் கோவிலுக்கு வில்வ மாலை கிடைத்தால் வாங்கி சாற்றுங்கள்.

தனூர் ராசி:

சூரியன், சனி, புதன்,சுக்ரன் மற்றும் ராகு அனுகூல நிலையில் உள்ளனர். பணவரவு உண்டாகும், நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். செய்கின்ற தொழில் உத்தியோகத்தில் அதிக ஆதாயம் கிடைக்கும், ஜென்ம கேதுவால் உஷ்னத்தினால் பாதிப்பு வரும்,  ரத்த அழுத்த வியாதி உள்ளவர்களுக்கு வியாதி கொஞ்சம் கடுமையாக இருக்கும். கைகால் குடைச்சல் இருக்கும். செவ்வாய் நல்ல வாக்கு திறன் பிறருடைய பழிப்பை பொருட்படுத்தாத நிலையும் இருக்கும். வக்ர புதனால் கொஞ்சம் சிரமம் தொல்லை உண்டாகும். பொருளாதாரத்தில் கொஞ்சம் தேக்கம் இருக்கும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல தோன்றும். ஆனாலும் மற்ற கிரஹங்களினால் வீட்டில் சந்தோஷம், நண்பர்கள் உறவினர்களுடன் விருந்துண்ணல் போன்றவை ஆடல் பாடல் என நிம்மதியாக ஓடும் வாழ்க்கை மொத்தத்தில் பரவாயில்லை என்பது போல இந்த மாதம் இருக்கும்.

சந்திராஷ்டமம் :  மார்ச் 6,7,8

தக்ஷிணா மூர்த்தியை வழிபடுங்கள், கொண்டைகடலை மாலை சாற்றுங்கள், சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். நல்லதும் நடப்பதால் அன்னதானம் செய்யுங்கள்.

மகர ராசி :

இதுவரை நல்ல பலனாய் நடந்துவந்தது இந்தமாதமும் பரவாயில்லை. சூரியன்,சுக்ரன், புதன், சனி ஆதாய நிலையில் உள்ளனர்.சிலருக்கு நிலம் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரம் உத்தியோகம் மூலம் அதிக லாபம் உண்டாகும்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வாக்கு திறன் சில சமயம் நல்ல முன்னேற்றம் உண்டாகும்,அதே நேரம் கேது குரு,செவ்வாய் இணைவு சில செயல்களில் காரிய தடை, பிறரை நம்பி ஏமாறுதல், பொருளாதார நெருக்கடி போன்றவை இருக்கும். சந்திரனின் சஞ்சாரத்தால் பெண்கள் மூலம் ஆதாயம், இல்லத்தில் லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். நன்மை அதிகம் நடக்கும், முயற்சிகளில் வெற்றி உண்டாகும். திருமண தடை விலகும்.

சந்திராஷ்டமம் : மார்ச்சு 8,9,10

பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் ஓம் நமோ நாராயணா என்று சொல்லுங்கள் பெருமாள் பெயரை தியானம் செய்யுங்கள். அன்னதானம் செய்யுங்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுங்கள்.

கும்ப ராசி :

ரெண்டுமாதமாக கொஞ்சம் கஷ்டம் அதிகமா இருந்தது அது இந்தமாதம் கொஞ்சம் குறைந்திருக்கும். சுக்ரன் மற்றும் ராசியாதிபதி சனி பெருமூச்சு விடும்படி நன்மைகளை செய்வர். மேலும் லாபத்தில் இருக்கும் குருவும் செவ்வாயும் நன்மை செய்கின்றனர். உத்தியோகத்தில் உயர்வு வியாபாரத்தில் லாபம் கொஞ்சம் லக்ஷ்மீயின் அருள், பொருள் வரவு என்று மகிழ்ச்சி படுத்தும் அதே நேரம் 5ல் இருக்கும் ராகுவால் உடலில் ஏதோ ஒரு வியாதி தொடர்ந்துகொண்டே இருக்கும், உறவுகளிடம் நன்மை கிடைக்காது, குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படும், கடன் வழக்கு தொடரும், ஜீவன வகையில் இடையூறுகள் இருக்கும். இருந்தாலும் புதன், சுக்ரன் அதிக நன்மையை செய்வதால் இவற்றை சமாளித்து விடுவீர்கள் தைரியம் பிறக்கும். பொதுவில் நன்மை தீமை கலந்த மாதம்

சந்திராஷ்டமம் :  பிப்ரவரி 13,14  & மார்ச் 10,11,12

அம்பாளை வணங்குங்கள், லலிதா சகஸ்ரநாமம் போல சொல்லுங்கள், கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். சரீரத்தின் மூலம் அடுத்தவருக்கு உதவிகளை செய்யுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.

மீன ராசி :

குரு, சுக்ரன், சந்திரன், மற்றும் முற்பகுதியில் புதன், ஆகிய கிரஹங்கள் நன்மையை செய்கின்றன. குடும்பத்தில் குதூகலம், பொருளாதார வளர்ச்சி, விரய சூரியன் மற்றும் 4ல் இருக்கும் ராகு மூலம்  வியாதிகள் வந்தாலும் உடன் விலகும், ஆடம்பர வஸ்துகளால் நன்மை உண்டாகும் அதே நேரம் ஆடை ஆபரண வகையில் விரயம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். கேது நன்மையை செய்யவில்லை கடன் பெரும் சூழலும் உண்டாகும், திருட்டு பயம் களவு போகுதல் முதலியவை உண்டாகும், சிறு சிறு காயங்கள் ஏறபடலாம் உஷ்ண சம்பந்த நோய்கள் தாக்கலாம் கவணம் தேவை, வியாபாரம் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும் பலவித தொல்லைகளும் வலிய வந்து சேரும், மனக்குழப்பம் இருக்கும் இருந்தாலும் குருபார்வையால் நன்மை உண்டாகும். கவலை வேண்டாம்.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 14,15,16 & மார்ச் 12,13

முருகன்  கோவிலுக்கு செல்லுங்கள். கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் போன்றவற்றை படியுங்கள். தினம் நெற்றியில் திருநீறு இட்டுக்கொள்ளுங்கள் வரும் தொல்லை அகன்றுவிடும்.

உங்கள் அன்பன்
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)
ஜோதிடர்
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலயம்

D1, Block 1, அல்சா கிரீன் பார்க்

ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு, நேரு நகர்

குரோம்பேட்டை, சென்னை – 600 044
044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
mannargudirs1960@gmail.com

சனிப்பெயர்ச்சி பலன்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.