ஆர்வமான விஷயத்தில் வேலை கொடுப்பதில் சிலர் மிகச் சமர்த்தர்கள்
அதில் என் போலிஸ் நண்பர் ராம்கி மிக மிக சமர்த்தர்.
தொடக்கத்தில் அல்ஜீப்ரா, பின்னர் தமிழ் இலக்கணம், அப்புறம் லாஜிக், பின்னர் ஊர்களைக் குறித்த குறிப்புகள் தேடுதல் என அவர் எனக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருப்பார்
இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டாலும், முக்கிய காரணமாக எக்ஸ்டென்ஷன் தந்திருக்கின்றார்கள்.
லோகமே கொரோனா ஒழிப்பு தொற்று பரவாமல் தடுப்பதில் இருக்கிறது
ராம்கியும் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.
வீட்டு விசேஷத்துக்கு கூட நாலு மணி நேரம் பர்மிஷன் தான் தந்தார் எங்க ஐ ஜி என சந்தோஷமாகக் குறைபட்டுக் கொள்கிறார்
இத்தனை வேலைக்கு மத்தியிலும் தவறாமல் போன் பேசுகின்றார்
“மௌளீ.. ரொம்ப பெரிசா இருக்கக் கூடாது ஆனால் இரண்டு மத்திம சைஸில் paragraph இருக்கணும். நூறு ஜோதிஷ வார்த்தைகளுக்கு glossary மாதிரி தமிழில் எழுதுங்களேன்”
“Sir Have a heart .. ஏற்கனவே நட்சத்திரம், பாவக படலம், ராசி பலன் இப்படி எழுதறேன். கந்த புராணம், விஷ்ணு சஹஸ்ர நாமம், தேவார தரிசனம் தனியா எழுதிட்டு இருக்கேன். இன்னொரு series எப்படி சார்”
“நல்லா யோசிங்க சின்னதான் இரண்டு paragraph எழுத எத்தனை நேரம் ஆகும். கமான் சார். எழுதுங்க. நீங்கள் எழுதும் பதிவுகளில் இருக்கும் சில ஜோதிஷ வார்த்தைகளுக்கு அர்த்தமாக இருக்கட்டுமே”
”சரி எழுதறேன்.. ஆசையைத் தூண்டி விட்டுட்டீங்க. நீங்களே எந்த வார்த்தை என்பதை whatsapp ல் மெசேஜ் பண்ணுங்க.. நான் எழுதுகிறேன்”
நூறு ஜோதிஷ வார்த்தைகள் என # tag போட்டு எழுதுகிறேன் என்று சொன்ன பதினைந்து நிமிஷம் கழித்து அவரிடம் இருந்து வந்த சொல் ஷட்பலம்
ஷட்பலம்
ஷட்வர்க்கம், ஷண்முக என்பதில் இருக்கும் ஷட் / ஷண் என்பது ஆறு என்ற எண்ணைக் குறிப்பது. ஷட்பலம் என்பது கிரஹங்களின் பலங்களைக் கணக்கிடும் ஆறுமுறைகளைக் குறிக்கும்
அவை வருமாறு
ஸ்தானபலம் : – கிரஹங்கள் அமைந்திருக்கும் இடத்தின் வழியே கிரஹங்களுக்கும் கிடைக்கும் positional strength
திக் பலம் : கிரஹங்கள் அமைந்திருக்கும் இடங்களை நான்கு திக்குகளை அதாவது திசைகளைக் கொண்டு அளவிடும் முறை. அதாவது லக்ன கேந்திரம் என்பது முதல் இடம், சதுர்த்த கேந்திரம் என்பது நான்காம் இடம் , சப்தம கேந்திரம் என்பது, பத்தாமிடமாகிய தசம கேந்திரம். இதில் கேந்திர ஸ்தானத்தில் அல்லது அதன் அருகே எந்த கிரஹம் இருந்தால் அதன் பலம் என்ன எனும் கணக்கு உண்டு
கால பலம் என்பது தற்காலிகமானது. இதிலும் ஒன்பது விதமான பலங்கள் உண்டு. அதாவது ஹோரை பலம், தினசரி பலம், வருஷ பலம்,மாத பலம்அயன பலம், , பட்ச பலம் , த்ரி பாக பலம், யுத்த பலம், நதோ உன்னத பலம் என்பவை
சேஷ்ட பலம் இது transitional strength
நைசார்க்கிக பலம் : இது தான் இயல்பாக அமைந்த பலம்
த்ரிக் பலம் : பார்வைகளினால் வரும் பலம்
இந்த ஆறு பலங்களும் கணக்கிடப்பட்டு முதல் இரண்டு இடங்களில் வரும் கிரஹங்கள் அந்த ஜாதகருக்குப் பலமான கிரஹங்கள்.
இப்படி பல வரிசையில் இருக்கும் கிரஹங்கள் தங்கள் தசா புத்தி காலங்களில் பலத்துக்கு ஏற்ப பலன்களைத் தரும்
இதே போல ஒரு பாவகத்துக்கான பலனைச் சொல்லும் போது தொடர்புடைய கிரஹங்களின் ஷட்பலம் பார்த்தே பலன் சொல்ல வேண்டும்
( குறிப்புதவி எடுக்க உதவிய நூல் : Grahas and Bhava Balas by BV Raman)
9840656627