ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி

ஒரு நாள் கார்த்தால சீக்கிரமே கிளம்பி திருவெண்ணைநல்லூர் போறதா ப்ளான். ஆஹா என்னமோ திருவெண்ணெய் நல்லூராம்ன்னு ஜாலியா கிளம்பி போனா….. கழுதை பரதேசம் போனாப்புல கார் போயிண்டே இருக்கு. டிஃபன் ப்ரேக், காஃபி ப்ரேக், மூச்சா ப்ரேக், இன்ன பிற ப்ரேக் எல்லாம் எடுத்துண்டு போய்ச் சேர்ந்தப்போ சுத்தமா 11:30 மணி. புழுதி பறக்கும் பாருங்கற பாட்டு தான் என் காதுல ஒலிச்சுது.

கொளுத்தும் வெயில். ரொம்பவே அமைதியான சிவஸ்தலம். இங்கே தான் சுந்தரர் கிட்டே ஏதோ தகராறு பண்ணியிருக்கார் சிவபெருமான். நீ எனக்கு அடிமை, உங்க தாத்தா எழுதிக்கொடுத்த பத்திரம் பாரு, நீ எப்படி கல்யாணம் பண்ணிண்டு கிருஹஸ்தன் ஆகலாம்ன்னு கேட்டு, இங்கே கூட்டிண்டு வந்து, அவரை தடுத்தாட்கொண்டாராம்.

ஊர்க்காரா பஞ்சாயத்து பண்ணி மூல பத்திரம் காமிச்சு அதெல்லாம் கிடையாதுன்னு லீகல் டாக்குமெண்டேஷன் காமிச்சு ஏக களேபரம் நடந்திருக்கு இந்தூர்ல.

ஊர்ல நுழைஞ்சப்போ கடைத்தெருவை கடந்தப்புறம் யாரையும் காணோம். அமைதியோ அமைதி!

சின்னக்கோவில். ஆனா ரொம்ப முக்யத்துவம் வாய்ஞ்ச ஊர். மெதுவா சுத்தி ஒவ்வொரு சன்னிதியா பார்த்துண்டு நடந்தோம். கோவிலுக்கு வந்த ஒரு வயசான உள்ளூர் பெண்மணி, ”இவ்ளோ தூரம் வந்தது வந்துட்டீங்க, அடுத்து பக்கத்துல ஒரு பெருமாள் கோவில் இருக்கு பார்த்துட்டு போய்டுங்க”ன்னு சொல்லிண்டு இருந்தா.

பெருமாள் கோவிலா? என்னமோ தெரியலை எனக்கு திருவண்ணாமலை போய்ட்டு வந்ததுலேந்து சிவஸ்தலங்களுக்கு போகத்தான் ஆசை. பெருமாள் கோவில்லாம் வேண்டாம்ன்னு நினைச்சுண்டேன்.

மஹாமண்டபத்தை தாண்டும் போது சிவபக்த குடும்பத்தை சந்திச்சோம். ”பக்கத்துல தான் 22 கிலோமீட்டர், திருக்கோயிலூர் இருக்கு போய்ட்டு வாங்க”ன்னு சஜஷன் சொன்னா. திருக்கோயிலூர் !!! ஹை பேரே சூப்பரா இருக்குன்னு எனக்கு ஒரே சந்தோஷம்.

அந்த உள்ளூர் பெண்மணி தொடர்ந்து வந்தா. விடமாட்டா போலிருக்கு பிரகாரம் பூரா சுத்தி வந்துட்டு, நமஸ்கரிச்சுட்டு வெளியேறும் போது, மறுபடியும் வந்து ரீஐட்ரேட் பண்ணினா. அடுத்த தெருவே பெருமாள் கோவில் தான். கண்டிப்பா போங்க. போவீங்கல்ல? எனக்கென்ன சந்தேகம் வந்ததுன்னா, ஒரு வேளை இந்த பெண்ணுக்கு பெருமாளுக்கும் எதாவது கமிஷன் பிசினஸ் இருக்குமோ? எதுக்கு இப்படி பின்னாடியே வந்து கம்ப்பல் பண்ணணும்?

கோபுரத்துக்கு வெளீல வந்ததும் இப்படீப்போங்க, திரும்பினீங்கன்னா பெருமாள் கோவில் தான். இவர் வண்டி ஓட்டி டயர்ட். ஒண்ணும் தோணலை. போகலாம்ன்னார். ”நீங்க போய்ட்டு வாங்கோ, நானொண்ணும் வர்ல பெருமாள் கோவிலுக்கு எல்லாம்”

”கார்ல உட்கார்ந்துக்கறையா?”
“இல்லே, வேண்டாம், வாங்கோ போகலாம்” ஏதோ மனசை சரி பண்ணிண்டு போனேன்.

அங்கே போய்ட்டு அந்த வயசான பெண்ணுக்கு நூறு தேங்க்ஸ் சொன்னேன். விஸ்வரூப பெருமாள். அழகுன்னா என்னன்னு டெஃபனிஷன் தெரிஞ்சுக்கலாம். அப்படி ஒரு கோவில்.

நிறைவா தரிசனம் முடிஞ்சு வெளீல வந்தப்போ திருக்கோயிலூர் போகலாம்ன்னு அடம் பிடிச்சேன்.
நோக்கு ஜ்யாக்ரஃபி தெரியாது, ரூட் டீவியேட் பண்ணி ரொம்ப தூரம் போய்டுவோம்ன்னார். முடியவே முடியாது போய்த்தான் ஆகணும்ன்னு அடம் பிடிச்சேன் (எதுக்குன்னு தெரியலை) சில சமயம் கண் போன போக்குல கால் போகணும். மனம் போன போக்குல போயிண்டே இருக்கணும்ங்கறது என் கனவு.

புழுதி பறக்கும் ரோட்டில் 20 கிலோ மீட்டர் கடந்ததும், ”பெரிய சிவன் கோவிலா திருக்கோவிலூர்?”ன்னு ரொம்ப அப்பாவியா இவரை பார்த்து கேட்டேன்.
ஸ்லோ மோஷன்ல ரோட்லேந்து கண்ணை எடுத்துட்டு, என்னைத் திரும்பி பார்த்தார்.


”திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளாக்கும். திவ்ய தேசம்”
”எது? பெருமாள் கோவிலா? திருப்புங்கோ வண்டியை.வேண்டாம்”
“இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் தான், பாரு எப்படி இருக்கார்ன்னு”
”அட ராமா”
”அட ராமா இல்லே, அட த்ரிவிக்ரமா”

22 கிலோ மீட்டர் டீவியேட் பண்ணினதுக்கு துளி கூட ரிக்ரெட் பண்ணறதுக்கில்லாமல் பார்த்துண்டார் பெரு. அப்படி ஒரு அழகு கோவில். பிரும்ம்மாண்டம். கோவிலைச்சுத்தி ஊரும் அப்படி ஒரு அழகு. கடைத்தெரு சலசலப்பு, ஐயப்ப சமாஜம் ஊர்ப்பந்தி இத்யாதி. வெண்ணை நல்லூர் அமானுஷ்யத்தை பார்த்துட்டு திருக்கோவிலூர் விழாக்கோலமா தான் எப்போதுமிருக்கும்ன்னு தோணித்து.

”என்ன கொழுப்பா உனக்கு? என்னை பார்க்க வரமாட்டே? என்ன கொள்ளை உனக்கெல்லாம்?”ன்னு என் மண்டையில் குட்டி பெரு என்னை ஒரு மணிக்கூர் காக்க வைச்சார். ஆப்ஸலூட்லி நோ வொர்ரீஸ். அதுக்குள்ளே சீலிங் எம்மா உயரம்ன்னு அங்கலாய்ச்சுண்டு இருந்தேன்.

தூண் சிற்பங்களை கவனிச்சேன். இவங்க எல்லாம் எவ்ளோ லக்கி இல்லேன்னு லோக்கலைட்ஸை பார்த்து பொறாமைப்பட்டுண்டேன். வெளவ்வால் இருக்கான்னும் செக் பண்ணிண்டேன். எந்த மன்னன் கட்டிருப்பான் இந்த கோவிலைன்னு கூகிள் பண்ணணும்ன்னு நினைச்சுண்டேன்.

கர்ப்பக்கிரஹத்தில் மூலவரை பார்த்தப்போ மிரண்டுதான் போனேன். எம்மாம்பெரிய பெருமாள்? ப்ளூக்கலர் உருண்டை முகம். அழகான தாடை. அதென்ன இந்த கோவில்ல மூலவர் மட்டும் நீலக்கலர்ல இருக்கார்? திரிவிக்ரம அவதாரம். என்ன அழகு! இவரையா பார்க்க வேண்டாம்ன்னு சொன்னோம்? வாட் எ கொலோஸ்ஸல் டேமேஜ்? நல்ல வேளை இவர் கூட்டிண்டு வந்தார் இப்படி நிறைய ஃப்ளாஷ் தாட்ஸ் வந்துண்டு போயிண்டு இருந்தது.
வெளீல வந்துட்டு கொஞ்ச நேரத்துக்கு பிரமிப்பு சுத்தமா அடங்கலை.

அதே மிரட்சியோட ஊருக்கு திரும்பினோம்.

என்னைப்பார்த்து பெருமாள் சிரிச்சார். என்னையா வந்து பார்க்கமாட்டேன்னு சொல்றே?


எப்படி உன்னை வரவைச்சேன் பார்த்தியா?

சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் ப்ரதிகச்சதி

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.